பிறகு” “பிறகு” என்று ஒத்தி வைக்க நேரம் காலம் கைவசம் உள்ளவர்கள் நிகழ்காலத்தை நிராகரிக்கிறார்கள். பலருக்கும் இது புரிவதில்லை. ஒத்தி வைத்து ஒத்தி வைத்து வாழ்க்கை உங்களை ஒத்தி வைக்க அனுமதிக்கவும் வேண்டாம். தலைவர்கள் மரணத்திற்கு அஞ்சலி தெரிவித்த பின்னர் சபை ஒத்திவைக்கப்பட்டது என்றும் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் மதிய உணவு வேளை வரை அவையை ஒத்தி வைத்தார் என்றும் அடிக்கடி பத்திரிகைகளில் படிக்கிறோம். ஒத்திவைப்பு என்பது சின்ன சம்பவம் அல்ல. முன்னேற்றத்தை, வளர்ச்சியை, வெற்றியை, உயர்வைத் தள்ளிப்போடும் கசப்பான நிகழ்ச்சி. அவமானப்பட வேண்டிய அக்கிரமம். பதைபதைக்க வேண்டிய பயங்கரம். ஆனால், பலருக்கும் இது புரிவதில்லை.
காலை ஐந்து மணிக்கு அலாரம் அடிக்கிறது. எழுந்திருக்க வேண்டியவர் அலாரம் அடிக்கும் கடிகாரத்தை ஓங்கி அடிக்கிறார். கடிகாரம் கப்.. சிப். வாய் மூடிக்கொண்டது. உண்மையில் அலாரம் மீது அடி விழவில்லை. அவரது முன்னேற்றம் என்கிற முதுகெலும்பின் மீது விழுந்த அடி அது. படுக்கையை விட்டு எழுகின்ற நேரத்தை அவர் தள்ளிப்போடவில்லை. தமது தோல்வியை விட்டு எழுகின்ற முயற்சியை அவர் தள்ளிப் போட்டிருக்கிறார். இன்னும் கொஞ்ச நேரம் தூங்கலாமே… பிறகு எழுத்திருக்கலாமே என்று எழுவதை ஒத்தி வைக்கிறவர்கள் எழுச்சியை ஒத்தி வைக்கிறார்கள்.
நேரம் குறைவாக இருக்கிறது என்று கவலைப்படுகிறவர்கள் முழுமையாக அதனைப் பயன்படுத்துகிறார்கள். நிறைய நேரம் கைவசம் உள்ளவர்கள் நேரம் தான் இருக்கிறதே பிறகு பார்ப்போம் பிறகு பார்ப்போம் என்று எதையுமே முழுமையாகப் பாராது வீணாக்கி விடுகிறார்கள்”
“பிறகு படித்துக் கொள்ளலாம்… அப்புறம் வேலை பார்க்கலாம்… கடைசியாகச் செய்து விடலாம்” என்று பேசுகிறவர்கள்… நினைக்கிறவர்கள் சுய துரோகிகள். சொந்த விரோதிகள். காரணம் “நிறைய நேரம் இருக்கிறது பிறகு செய்து கொள்ளலாம் என்று நினைத்தவர்கள் எதையுமே செய்ய முடியாது என்பது அதிசயமான உண்மை.
“பிறகு” “பிறகு” என்று ஒத்தி வைக்க நேரம் காலம் கைவசம் உள்ளவர்கள் நிகழ்காலத்தை நிராகரிக்கிறார்கள். எதிர்காலத்தைப் பாழாக்குகிறார்கள்.
நிறைய வாய்ப்புகள் இருக்கும் போது பலரும் அதனைப் பயன்படுத்துவதே இல்லை. கொஞ்சம் தான் வாய்ப்பு என்றால் அதனை முழுதாகப் பயன்படுத்தி விடுவார்கள். நிறைய நேரம்… நிறைய வாய்ப்புகள்… என்று நிரம்பி வழிகிறவர்கள் நிச்சயம் வாழ்க்கையை வீணாக்கி விடுகிறார்கள்.
கொஞ்சம்தான் நேரம்… கொஞ்சம்தான் வாய்ப்பு… கொஞ்சம்தான் பணம்… கொஞ்சம்தான் ஆயுள்… என்று கைவசம் கொஞ்சமாக வைத்திருக்கிறவர்கள் நிச்சயம் ஜெயிக்கிறார்கள். நாளை… நாளை என்று நாளை ஒத்திப் போடுகிறவர்களே நாளை நாள் நமது நாளா? யார் அறிவார். எனவே ஒத்திப்போடாமல் இன்றே… இப்போதே… இந்த கணமே கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்த ஆரம்பிப்போம்.
இரண்டு நண்பர்கள். ஒருவர் தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றவர். மற்றவர் விஞ்ஞானத்தில்… இருவரும் ஒரே கல்லூரியில் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்தனர். அவரவர் துறைக்கு விரிவுரையாளராக நியமிக்கப்பட்டு உடனே பணியில் சேர உத்தரவு வந்தது. தமிழ் படித்தவர் இன்று சனிக்கிழமை… நாள் நன்றாக இல்லை… திங்கட்கிழமை சேருவோம்” என்று ஒரு நாளை (இடையில் உள்ள ஞாயிற்றுக் கிழமையை) ஒத்திவைத்தவர். மற்றவரோ சனிக்கிழமையே பணியில் சேர்ந்து விட்டார்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு கல்லூரி முதல்வர் பணித் தேர்வின்போது விஞ்ஞானப் பேராசிரியர் முதல்வர் ஆனார். மிக முக்கிய காரணம் பணிமூப்பு. ஒருநாள் தமிழ்ப் பேராசிரியருக்கு முன்பாகவே சேர்ந்துவிட்டதால் பணிமூப்பு என்ற காரணம் காட்டி முதல்வர் பதவி பெற்றார். பத்தாண்டுக் காலம் கல்லூரி முதல்வராக இருந்தார். ஒரு நாள் தாமதமாகச் சேர்ந்தவர் கடைசி வரை முதல்வராக முடியாமலேயே பணி ஓய்வு பெற்றார்.
ஒரு நாள் முன்னால் சேர்ந்த காரணத்தால் கல்லூரி முதல்வராகப் பத்தாண்டு இருக்க முடிந்தது. ஒத்திவைத்த ஒருவரைப் பதவியும் ஒத்தி வைத்து விட்டது. பரபரப்பும் படபடப்பும் வேண்டாம். ஆனால், ஓயாமல் ஒத்தி வைத்து ஒத்தி வைத்து வாழ்க்கை உங்களை ஒத்தி வைக்க அனுமதிக்கவும் வேண்டாம். --
சமீபத்தில் பெரியார்தாசன் அப்துல்லாஹ் ஆக இஸ்லாத்தில் இணைந்த செய்தி பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஓசைப்படாமலேயே இஸ்லாத்தை உணர்ந்து இணையும் நிகழ்வுகள் ஆங்காங்கே அவ்வப்போது நிகழ்ந்து கொண்டுதானிருக்கின்றன. பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூரைச் சேர்ந்தவர் சு. ராஜேஸ்வரன். திருச்சி தேசிய கல்லூரியில் M.Sc., (Geology) பயின்று சுய தொழிலாக மெடிகல் ஷாப் வைத்துச் சமூக சேவை ஆற்றி வருபவர். இவரது பெற்றோர் சுப்புசாமி அழகம்மாள் இந்து தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த விவசாயக் கூலிகள் ஆவர்.
தமிழகத்தில் மாற்றுத் திறனுடையோருக்கு தனித் துறை ஏற்படுத்தி அதனை தமிழக முதல்வர் தனிக்கவனம் செலுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பது மிகவும் பாராட்டத்தக்கது. மாற்றுத்திறன் என்பது உடல் ஊனமுற்றோர், பார்வையிழந்தோர், மனநிலை பாதிக்கப்பட்டோர், உடல் வளர்ச்சி குன்றியோர் போன்றோர் அடங்குவர்.
சோதனை செய்யும் முறையில் விஞ்ஞானிகள் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்த அகிலம் எவ்வாறு உருவாக்கப் பட்டிருக்குமென்று ஒரு ஆராய்ச்சியில் இறங்கினார்கள். ஐரோப்பிய வானவியல் விஞ்ஞானிகள் ஜெனிவாவில் அந்த ஆராய்ச்சி மையம் ‘செண்டர் ஃபார் நியூகிலியர் ரிசர்ச்’ ஆகும்.
கையடக்க காமிராக்கள், மொபைல் வீடியோ காமிராக்கள், மறைமுகமாக பொருத்தி பதிவு செய்யும் மிகச் சிறிய காமிராக்கள் என்பது இன்றை நவீன உலகில் மிகப் பிரபலமாக மிக சாதாரணமானவர்களின் கைளில் கூட உலா வரக் கூடிய ஒன்றாகஇருக்கிறது. அறிவியல் புதிய கண்டுபிடிப்புகளை எல்லாம் நல்லபயன்பாடுகள் கருதி நமக்கு வழங்கினாலும் அதை எத்தனை பேர் நன்மையாக பயன்படுத்துகிறார்கள் என்பதுதான் கேள்விக்குறி.
பயணம் என்பதே சிரமங்கள் நிறைந்ததுதான். இதை அரபி பழமொழி கூறுவதாக ஆலிம்கள் கூறியுள்ளனர்., ஸஃபரு என்னும் அரபிச் சொல்லுக்குப் பயணம் எனப் பொருள் கூறப்படுகிறது. இந்தச் சொல்லில் இருந்துதான் ஆங்கிலச் சொல்லான suffer வந்தது எனக் கூறுவோரும் உள்ளனர். இதற்குச் சிரமப்படுதல் என்று பொருளாகும்.
இரவு 11-1 மணி உங்கள் செல்போனுக்கு ஒரே நொடியில் ரிங் வந்து கட் ஆகிறதா.அது உங்கள் வாழ்க்கையை சீரழித்து விடும் ஒரு நொடி எமன்ரிங் ஆக இருக்கலாம். இந்த மிஸ்டுகால் செக்ஸ் கொக்கு கால் என்று கூறுகிறார்கள்.
நோன்பு மாதத்தில் சேவல் கூவுவதிற்கு முன்பும்-கதிரவன் தன் செங்கதிர்களை புவியில் விரிக்கும் முன்பும் தூக்கத்தினை விட்டு எழுந்து
சகர் வைத்து அதன் பின்பு டி.வியில் வரும் மார்க்க சம்பந்தமான உலமாக்கள்-மைலவிகள்-இமாம்கள் ஆற்றும் பேருறைகள் கேட்க முற்படும்போது ......
என் இனிய முஸ்லிம் பட்டதாரிகளே! உங்களால் நாட்டின் உயர் பதவியினை எட்டமுடியாதா? உயர் பதவியான ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்ஸில் தமிழ் நாட்டில் முஸ்லிம்களின் பிரதிநித்துவம் மிகவும் குறைவாக இருக்கின்றது என்பதினை புள்ளி விபரம் பார்த்தால் அறிந்து கொள்ளலாம்.
ஒரு மதம் மூன்று முக்கிய மாற்றங்களினை ஏற்படுத்த வேண்டும்:
மூடநம்பிக்கை என்ற திக்குத் தெரியாக்காட்டில் திண்டாடிக் கொண்டிருப்பவனை நேர் வழிகாட்டி நேர்மைப் படுத்த வேண்டும்.
சமுதாயத்தில் மகிழ்ச்சியினை ஏற்படுத்த வேண்டும்
தனி மனித அடையாளத்திலிருந்து சர்வதேசம் என்ற விசாலமான உலகத்தில் சஞ்சரிக்கச் செய்ய வேண்டும்.
முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்தால் வல்லரசுகள் வல்லூராக மாறி ஆப்கானிஸ்தானிலும், இராக்கிலும் வேட்டையாடுவது ஏன்? அவர்களுக்குத் தெரியாது விளையாடும் பந்தினை சுவற்றிலோ-தரையிலோ எவ்வளவு வேகம் ஓங்கி அடிக்கிறோமோ அவ்வளவு தூரம் எழும்பும் என்பதினை பார்க்கிறோம். அதேபோல் இஸ்லாமியர் எவ்வளவு நசுக்கப்பட்டாலும் பீனிக்ஸ் பறவையாக எரியும் சாம்பலிருந்து சீறிப் பாய்வார்கள் என ஆதிக்க சக்திகள் அறிய மாட்டார்கள்.
ஏன் வறண்ட மாவட்டங்களில் காட்டுக் கருவை முள்மரத்தினை வெட்டி கரிமூட்டம் போட்டு அதனை விற்பனைக்கு வெளிய+ர்களுக்கு அனுப்புவது அந்த மாவட்டத்தினைச் சார்ந்தவர்கள் அறிவர். ஆனால் அந்தக் கரியினை பயன்படுத்தி மின்சாரம்;, கிராபைட,; பென்சில் எழுதும் பொருளுக்கும,; மில்களுக்கு எரி பொருளாகவும் உபயோகிக்கிறார்கள் என்பதினை அறிந்தவர் சிலரே.