(கீழை ஜஹாங்கீர் அரூஸி)
இந்து சமுதாய மக்களின் கடவுள்களில் ஒருவரான விநாயகருக்கு ஒரு பாமரனின் மனம் திறந்த மடல்:
'பிள்ளையாரப்பா பெரியப்பா,புத்திமதியை சொல்லப்பா'என்ற சுலோகத்தை சொல்லிக்கொண்டே உங்களது உருவம் பதித்த களிமண்ணால் செய்யப்பட்ட சிறு,சிறு சிலைகளை கையிலேந்தி தத்தமது ஊர்களில் இருக்கும் குளங்கள்,ஏரிகளில் கொண்டு போய் எறிந்து விட்டு வந்த காலங்கள் மாற்றப்பட்டு,
தற்போது பிரமாண்டமான உயரங்களில் லட்சக்கணக்கான ரூபாய்கள் செலவழிக்கப்பட்டு செய்யப்படும் சிலைகளை கடல்களிலும்,குளங்களிலும்,ஏரிகளிலும் வீசி விட்டு வரும் உங்களது பக்தர்களின் செயலை கண்டிக்காமல் இருப்பது நியாயமா?
நீராதாரத்தில் வாழ்ந்து வரும் மீன் இனங்கள் வருடம் தோறும் செப்டம்பர் மாதங்களில் உங்களது சிலை கரைப்பால் செத்து மடிவது உங்களது கவனத்திற்கு வருவதில்லையா?
முன்னொரு காலத்தில் நீங்கள் இளைஞராய் இருந்தபோது அரச மரத்திற்கு பின்னால் ஒளிந்து கொண்டு குளக்கரையில் குளிக்க வரும் பெண்களை ரசித்த கொடுமையை சகித்து கொள்ள முடியாத அன்றைய பெரியவர்கள் உங்களை செருப்பாலும்,விளக்குமாற்றாலும் அடித்து,துவைத்து அதே குளக்கரையில் தூக்கி எறிந்த நாளை நினைவு படுத்தும் விதமாகவே,
இன்று வரை உங்கள் சிலைகளை கொண்டு போய் செருப்பாலும்,விளக்குமாற்றாலும் அடித்து நீர் நிலைகளில் எறிந்து வரும் உங்களது பக்த கோடிகளின் செயல்கள் உங்கள் மனதை புண்படுத்த வில்லையா?
உங்களது புத்தி சாதுரியத்தால்... உலகமே அம்மை,அப்பன் தான் என்ற தத்துவத்தை வெளிப்படுத்தி அம்மை,அப்பனை சுற்றி வந்து ஞானப்பழத்தை பெற்றுக்கொண்ட நீங்கள் குளக்கரையில் குளித்துக்கொண்டிருந்த பெண்களை நோட்டம் விட்ட கதையை என்னால் நம்ப முடியவில்லையே?..
கடவுளாய் இருந்த உங்களுக்கு அந்த நேரத்தில் தப்பிக்க கூடவா வழி தெரியாமல் போய்விட்டது?பாவம் நீங்கள் அன்று செய்த தவறை உங்களது பக்தர்கள் இன்றுவரை அதை நினைவுபடுத்தி உங்களை கேவலப்படுத்துவதை என்னால் சகித்து கொள்ள முடியாத போது,உங்களால் எப்படி சகித்து கொள்ள முடிகிறது?
உண்மையிலேயே உங்களை உங்களது பக்தர்கள் வணங்குகிறார்களா? அல்லது இழிவு படுத்துகிறார்களா?அவர்களுக்கு ஏன் நீங்கள் புத்திமதி சொல்வதில்லை?
எந்த மதமும் பிற சமுதாய மக்களின் உரிமையை பறிக்க சொல்லாத போது,உங்களது பக்தர்கள் மட்டும் உங்களது சிலை ஊர்வலத்தின் போது திட்டமிட்டே பிற சமுதாய மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாக கோஷம் போடுவதும்,வழியில் இருக்கும் இறையாலயங்கள்,வீடுகள் என சகட்டு மேனிக்கு அடித்து நொறுக்குவதும் தான் நீங்கள் அவர்களுக்கு காட்டி கொடுத்த வழியா?
உங்களின் பெயரால் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வரும் வன்முறைகளுக்கு தீர்வே கிடையாதா?
வன்முறையாளர்களை போலீஸ் வேனில் ஏற்றினால் அதில் ஒரு நியாயம் இருக்கிறது.அவர்களுடன் உங்களையும் சேர்த்து போலீஸ் வண்டியில் ஏற்றுவது கொடுமையில்லையா?
அமைதியாய் இருக்கும் தமிழகத்தை உங்களின் பெயரால் யுத்த பூமியாய் மாற்ற துடிக்கும் உங்களது பக்தர்களுக்கு தகுந்த புத்திமதியை சொல்லி இனிவரும் காலத்திலாவது உங்களையும் அசிங்கப்படுத்தாமல்,
பிற சமுதாய மக்களுக்கும் இடையூறு செய்யாமல் நல்லவர்களாய் வாழ்வதற்கு உங்களது பக்த கோடிகளுக்கு தகுந்த நல்லுபதேசம் செய்ய வேண்டுமென்ற கோரிக்கையை 'பிள்ளையாரப்பா பெரியப்பா புத்திமதியை சொல்லப்பா'என்று சொல்லி முடிக்கிறேன |