ஷஹீத் இமாம் ஹஸனுல் பன்னாவின் 10 அறிவுரைகள்
1. எந்தச் சந்தர்ப்பமாயிருந்தாலும் பாங்கொலி கேட்டவுடன் தொழுகைக்காக எழுந்து செல்லுங்கள்.
2. அல்குர்ஆனை ஓதுங்கள்; அல்லது அதனைச் செவிமடுங்கள்; அல்லது அல்லாஹ்வை திக்ர் செய்யுங்கள். உங்களது நேரத்தின் ஒரு பகுதியைக் கூட பயனின்றிக் கழித்துவிடாதீர்கள்.
3. அரபி மொழியைக் கற்பதற்கும் பேசுவதற்கும் முயற்சி செய்யுங்கள். ஏனெனில், அது இஸ்லாத்தின் மூலாதார நூல்களின் மொழியாகும்.
4. எந்தவொரு விஷயத்திலும் தர்க்கம்புரியாதீர்கள். ஏனெனில், தர்க்கம் புரிவதால் எந்த நன்மையும் விளையாது.
5. அதிகமாகச் சிரிக்காதீர்கள். ஏனெனில், அல்லாஹ்வுடன் தொடர்புள்ள மனிதன் எப்போதும் அமைதியாகவும் கண்ணியமாகவுமே நடந்து கொள்வான்.
6. யாரையும் பரிகாசம் செய்யாதீர்கள். ஏனெனில், வெற்றியை இலக்காகக் கொண்ட சமூகம், எதையும் இலக்கோடுதான் பார்க்கும்.
7. தேவையைவிட அதிகமாகக் குரலெழுப்பாதீர்கள். அது பிறருக்கு விகாரமாகவும் தொல்லையாகவுமே இருக்கும்.
8. தனிமனிதர்களைப் பற்றிப் புறம் பேசுவதையும் அமைப்புகளைக் குறை கூறுவதையும் தவிர்த்துக்கொள்ளுங்கள். நல்லவற்றைத் தவிர வேறெதையும் பேசாதீர்கள்.
9. நீங்கள் சந்திக்கின்ற ஒவ்வொரு சகோதரருடனும் அறிமுகமாகிக் கொள்ளுங்கள். அவர்கள் அதனை உங்களிடம் எதிர்பார்க்காவிட்டாலும் சரியே. ஏனெனில், நமது அழைப்புப் பணியின் அடிப்படையே பரஸ்பர அறிமுகம்தான்.
10. நேரத்தைவிட கடமைகள் அதிகம். பிறர் தமது நேரத்தைப் பயனுள்ளதாக்க உதவுங்கள். பிறரிடம் உங்களுக்கு ஏதாவது தேவையிருந்தால் அதைச் சுருக்கமாக முடித்துக்கொள்ளுங்கள். |