தனிமனிதனையும் சமுதாயத்தையும் ஒழுக்கமுள்ளவர்களாக உருவாக்குவது பண்படுத்துவது அவர்களுக்கு வழிகாட்டுவது ஆகியவைதான் இஸ்லாத்தின் முதன்மை நோக்கம்.
ஹுதூத்-கிஸாஸ்- உகூபாத் எனும் தண்டனைகள், இஸ்லாத்தின் பரந்த சட்ட அமைப்பில் ஒரு சிறிய பகுதிதான்.
ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட வசனங்களைக் கொண்ட திருக்குர்ஆனில் தண்டனைகள் குறித்த வசனங்கள் பத்தைவிட அதிகமாக இல்லை என்பது அனைவரும் அறிந்ததே.
மேலும் தண்டனை என்பது நெறிதவறிய மனிதர்களுக்காக மட்டுமே. இவர்கள் பெரும்பான்மையோர் அல்ல. இவர்கள் சமூகத்தின் அடிப்படையல்ல. விதிவிலக்கானவர்களே.
அடிப்படையாக இஸ்லாம், நெறிதவறியவர்களை சீர்திருத்துவதற்காக வரவில்லை. நேர்மையானவர்களை வழிநடத்தவும் அவர்கள் நெறிதவறாமல் பாதுகாக்கவுமே வந்தது.
தண்டனைகள் மட்டுமே குற்றச்செயல்களை ஒழிக்கும் அதிமுக்கிய காரணி என்பது இஸ்லாத்தின் பார்வை அல்ல. குற்றம் உருவாகும் காரணங்களை தடுத்து குற்றங்கள் நிகழாமல் காப்பதே மிக முக்கியம்.
ஏனெனில் ‘வந்த பின் சிகிச்சை’ என்பதை விட வருமுன் காப்பதே சிறந்தது.!
📖: மத்ஃகல் லி மஃரிஃபத்தில் இஸ்லாம். பக்கம்:113.
🖊️: பேரறிஞர் டாக்டர் ஷெய்ஃக் யூசுப் அல் கர்லாவி
தமிழில்:- இல்யாஸ் ரியாஜி
நன்றி : தம்பி லஃபீஸ்

 |