Tamil Islamic Media ::: PRINT
தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-1/3)

சென்னை நகரை நோக்கி பல முறை பயணித்த பிரயாணங்களில் ஒன்றில்:

விமானம் புறப்பட சுமார் ஒரு மணி நேரத்திற்கு முன் விமான நிலையத்திற்கு புறப்பட எண்ணினேன் ஆனால் வழியின் நெரிசல் மற்றும் சோதனைச்சாவடிகள் என்னை உரிய நேரத்தில் சென்றடைவதை விட்டு சற்று தாமதப்படுத்திவிட்டன எனவே நான் அவசரத்திற்கு  கைதியாகிவிட்டேன்.

கார் நிறுத்துமிடத்தின் வாயிலை அடைந்து அதற்கான அனுமதிச் சீட்டை எடுத்துக் கொண்டு காரை ஓரங்கட்டினேன், நான் கார் நிறுத்திய இடம் விமானநிலையப் பணியாளர்களுக்குரியதா? அல்லது பயணிகளுக்குரியதா? என்று கூட எனக்கு தெரியாது.

எதுவாக இருக்கட்டும்!

எனது பெட்டியை கையில் எடுத்துக்கொண்டு நான் காரைவிட்டு அவசரமாக இறங்கினேன் இதுபோன்ற இடங்களில் அவசரமாக செல்வது என்பது ஆச்சர்யப்படுவதற்கல்ல ஏனெனில் இது எல்லோராலும் ரசிக்கின்ற காட்சி,

நான் புறப்பாடு கூடத்தில் நுழைந்த பின் சோதனையறையை அவசரமாக வந்தடைந்து எனது பாக்கெட்டில் உள்ளதை இறக்கிவைத்து  சோதனையறையைக் கடந்தேன், திடீரென ஒரு ஓசை ஒலித்தது, கொண்டுசெல்ல அனுமதிக்கப்படாத ஏதோ ஒன்று என்னுடன் இருப்பதாக உணர்ந்தேன் சிறு குழப்பம் ஏற்பட்டது, அதே நேரத்தில் என்னுடன் எனது கைக்கெடிகாரம் இருப்பதாக தெரிந்து கொண்டு அதையும் இறக்கி வைத்துவிட்டு சோதனையறையை விட்டு அமைதியாக வெளியேறி, விமானநிலைய அதிகாரியிடம் அவசரமாக வந்து சேர்ந்து அவரிடம் :

'நான் விமானம் எண் 546ல்  சென்னை செல்லும் பயணி' என்றேன்,

அதற்கு அந்த அதிகாரி :  போர்டிங் குளோஸ் ஆயிடிச்சு என்றார், ப்ளீஸ் ப்ளீஸ்!! இன்று இரவு ஒரு நிகழ்ச்சியில் அவசியம் அங்கு கலந்து கொள்ள வேண்டும் என்று அவரிடம் மன்றாடினேன்

அதற்கவர் : ரொம்ப பேசாதே! போர்டிங் குளோஸ் ஆயிடிச்சு, யாராலும் உன்னை அனுமதிக்க முடியாது என்றார்.

நான் : உன் விஷயத்தில் அல்லாஹ் போதுமானவன் என்றேன்

அதிகாரி: ஆச்சரியத்தோடு நான் என்ன செய்வது என்றார்.

எப்படியோ அங்கிருந்து நான் வெளியாயிட்டேன் வேறு ஏதாவது விமானம் கிடைக்குமா? என்று பார்த்தேன், அல்லாஹ்வுடைய வழியைத்தவிர வேறு எதற்கும் வழியில்லை, பிரயாணத்தை கேன்சல் பண்ணிருவோமா?  என் காரிலேயே போயிருவோமா ? இல்ல.. தனி கார் புடிச்சு போயிருவோமா? ஏன்றெல்லாம் எனது தலையில் சிந்தனைகள் வேகமாக சுழல ஆரம்பித்தன,

என் சிந்தனைகள்  ஒருவிதமா கன்ட்ரோல்-லெ வந்துடிச்சு, தனி கார் புடிச்சே போயிடுவோம்னு முடிவுக்கு வந்து அவசரமாக கார் பார்க்கிங்கு வந்தேன்

அங்கெ பார்த்தால்: பள பள என்று ஒரு புதிய இன்னோவா காரோட ஒருத்தர் நின்றிருந்தார், சென்னைக்கு போரதுக்கு எவ்வளவு என்று அவர்கிட்ட கேட்டேன்.

டிரைவர்: 5000 ரூபாய் என்று சொன்னார், ரொம்ப முயற்சி பண்ணினேன் ஆனால் அதைவிட 500  ரூபாய்தான் குறைக்க முடிஞ்சுது!!!

எப்படியோ!! நான் தனியா ஏறி உட்கார்ந்துகொண்டு டிரைவரிடம் சொன்னேன் : வேகமா போவனும் ப்பா!! இன்னைக்கு ராத்திரிக்கே அங்கு இருக்கனும் ஆனால் சில மணிநேரங்களுக்கு பின்னர் என் கதை முடியப்போவுதுன்னு எனக்கு தெரியல!!

டிரைவர் : கவலைப்படாதீங்க! ஃப்ளைட்டு போரது மாதிரி போயிடுறேன் என்றார், சொன்னது போல கடுமையான வேகமாகத்தான் போனார் ஏனெனில், இஷாவுக்கு முன்னாடி போயிட்டால் 1000 ரூபாய் சேர்த்துத் தருவேன் என்று சொல்லியிருந்தேன்!!

நாங்கள் சுவாரஷ்யமாக பேசிப்பேசி ரொம்ப நெருங்கிட்டோம், என் வேலையைப்பற்றி, என் குடும்ப நிலையைப்பற்றி டிரைவர் என்கிட்ட விசாரிச்சாரு, நானும் அதே மாதிரி டைம் பாஸ் பண்ண விசாரிச்சுக்கிட்டே போனேன்.

திடீரென என் உம்மாவுக்கு டெலிபோன் பண்ணலாம் என்று என் மனசிலெ பட்டிச்சு, என் மொபைலை எடுத்து தொடர்பு கொண்டேன் என் உம்மா டெலிபோனை எடுத்து ''அபூசாரா எங்க இருக்க' என்று கேட்டாங்க, நான் விமானத்தை மிஸ் பண்ணின எல்லாக் கதையையும் சொல்லி முடிச்சு.. நான் இப்ப வாடகைக்காரிலே வந்திக்கிட்டு இருக்கிறேன் என்பது வரை சொன்னேன்

திடீரென ஒரு நிமிடம் நிசப்தம் ஆயிட்டாங்க திரும்ப: மகனே!! கவனமா ப்பாத்து வா! அல்லாஹ் நமக்குத் தெரியாத கெடுதிகளை விட்டு காப்பாத்தட்டும்! என்று சொன்னாங்க.

நான் : வந்து சேர்ந்த உடனே இன்ஷா அல்லாஹ் டெலிபோன் பண்றேன் என்று  சொல்லிவிட்டு வேற ஏதாவது சொல்ரீங்களா என்று கேட்டேன் உம்மா : நீ நல்ல படியா வந்து சேரனும் அதான் என்றார்கள்

அதோடு பேச்சு முடிந்தது

ஆனால்  என் உள்ளத்திலே ஏதோ ஒரு கவலை சூழ்ந்து விட்டதாக உணர்ந்தேன், ஏதோ ஆச்சரியமான விஷயம் என்னை எதிர்பார்த்து இருக்கிறது என்றும் புரிந்து கொண்டேன்

இதன் பின் என் சம்சாரத்திற்கு டெலிபோன் பண்ணினேன்

என் மனைவி : என் உயிரு!! எத்தனை கி.மீ போய்ட்டீங்க? எனக் கேட்டாள்

நான் : 150 கி.மி தாண்டிட்டோம் என்றேன்

என் மனைவி : அல்லாஹ் மேல் சத்தியமா! நீங்கள் இல்லாத வீடு வீடாவே இல்லை என்றாள்

நான் : அல்லாஹ் உனக்கு பரகத் செய்யட்டும், இன்ஷா அல்லாஹ் சீக்கிரமா வந்து..ட்ரேன்,  மத்தியானமே திரும்பி வந்துட்ரேன், பிள்ளைகளை முக்கியமா நல்லா பாத்துக்கே, எனக்காக புள்ளை சூசுவிற்;கு முத்தம் கொடுத்துக்க அல்லாஹ் நல்ல புள்ளையா அவளை வளர்க்கனும் என்றேன்.

என் மனைவி : கவலைப்படாதீங்கள்!! நீங்கள் போனதிலிருந்து என் வாப்பா எங்க எங்க..ன்னு கேட்கிறா,

நான் : பிள்ளையிடம் கொஞ்சம் கொடு என்றேன்

சூசு (என் புள்ளை) : வாப்பா எங்க இருங்கீங்க! என்றாள்

நான்: கொஞ்ச நேரத்தில் வந்துட்றேன் இன்ஷா அல்லாஹ் என்று சொன்னது ஏதோ புரிந்தது

சூசு : வழக்கம்போல வாப்பா! சாக்லட் என்றாள்

நான்: சிரிச்சிக்கிட்டு  உம்மாட்டே கொடு என்றேன்

உம்மா (என் மனைவி) டெலிபோனை வாங்கிpட்டாள்; ஏதாவது சொல்ல விரும்பிறியா என்று நான் அவளிடம் கேட்டேன் என் மனைவி: நீங்கள் நலமாத் திரும்பி வரணும் என்றாள்

கவலை ஏன் ரொம்ப  கூடிக்கிட்டே போவுதுன்னு எனக்கு ஒன்றும் புரியலை, சிந்தனை வேகமாக சுழன்று கொண்டே போவுது, டிரைவர் கேட்ட கேள்விதான் என்னை திசை திருப்பியது   டிரைவர்: என்னிடம் உங்களுக்கு எத்தனை பிள்ளைகள் என்றார்

நான் : இரண்டு ஆணும் இரண்டு பொண்ணும் ஆக நாளு என்று சொன்னேன்

டிரைவர் : அல்லாஹ் எல்லோரையும் நல்லவங்களாக ஆக்கட்டும்! என்றார்

நான் : ஆமீன் மேலும் உன் புள்ளைகளுக்கும் அவ்வாறே ஆகட்டும்! என்று சொன்னேன்

ரோட்டையும் பார்த்தேன் வானத்தையும் தலையை உயர்த்தி பார்த்தேன், சூரியனையும் பார்த்தேன் அது மறைய ஒரு மணிநேரம்தான் பாக்கி இருந்தது!!

நான் பெருமூச்சு விட்டுக்கிட்டே சொன்னேன் : யா அல்லாஹ் உன் கிருபை (ரொம்ப பெரிசு) யா ரஹ்மான் யா ரஹீம்!!

திடீர்னு டிரைவர் : ப்ளீஸ் நான் ஒரு சிகரெட் பத்திக்கிறவா? என்ற அமைதியான குரல்

நான் : தம்பி நீ ரொம்ப நல்ல ஆள், பாத்தால் நல்ல மனிசனாத் தெரியுது, உன்னையே எரிச்சுக்கிற விரும்புரியே அது எப்படி? இந்த சிகரட்..டினாலே உன் மார்க்கம் கம்மியாகிக் கிட்டே போவுது, இதிலே எந்த இலாபமும் இல்லை, உனக்கு கெடுதி-தானே? என்றேன்

டிரைவர் : இப்னுல் ஹலால் !! (நல்ல உம்மாவிற்கும் வாப்பாவிற்கும் பிறந்த மகனுக்கு அரபியர்கள் சொல்லும் வார்த்தை) எனக்காக துஆ செய்யுங்கள், சத்தியமா! போன ரம்ஜான் மற்றும் அதுக்கு முந்திய ரமஜான்லேயும் இதை விடுவதற்கு முயற்சி பன்னினேன் என்னாலே முடியலை!! என்றார் டிரைவர்

நான் : அல்லாஹ் உனக்கு சக்தியை கொடுத்திருக்கிறான், நீ ஒரு ஆண், ஒரு சிகரட்டை விடுகிற சக்தியில்லை!! என்றேன் அவரிடம், தொடர்ந்து அவரிடம் விவாதம் செய்துக்கிட்டே வந்தேன் அவர் வாய்பேசாமலே வந்தார் இறுதியாக தன் தப்பை ஏத்துக்கிட்டு  இனிமேல் இன்ஷா அல்லாஹ் (சிகரெட்) குடிக்கவே மாட்டேன் என்று சொன்னார்

நான் : அவர்ட்ட லாயிலாஹ இல்லல்லாஹு என்று சொல்லிக்கிட்டே : அல்லாஹ் எங்களையும் உங்களையும் மார்க்கத்தின் மேலே நிலைத்திருக்கச் செய்வானாக! என்று சொன்னேன்.

எனக்கு ஞாபகம் இருக்கிறது : காரின் கதவில் தலையை வைத்து ஏன் ஒரு விதமான பீதி என்னைப்பிடித்திருச்சு என சிந்தித்தவாரே இருந்தேன், காரணம் ஒன்றும் புரியலை ஆனால் இதற்கிடையிலே பயங்கரமான பயத்தை உணர்ந்தேன், திடீரென காரில் கடுமையான ஒரு அடி விழுந்த சப்தத்தைக் கேட்டேன், எனக்கும் டிரைவருக்கும் ஒரு வித மன உளைச்சல் ஏற்பட்டது

டயர் வெடிச்சிருச்சு என்று தெரிஞ்சுகிட்டேன்

நான் : வேகத்தைக் குறைச்சிக்கே! காரை பாத்து ஓட்டு! என்று டிரைவரிடம் சொன்னேன், அவர் (டிரைவர்) எதுவுமே பேசலை, ஸ்டேரிங்கை பிடிச்சமாதிரியே இருந்தார், அவர் மூஞ்சில் ஒரு பயம் தெரிந்தது.

அதன்பின்னர் : கார் வலது புறமாக வேகமாக புரண்டுகொண்டே போனது, அல்லாஹுதஆலா  أشهد إن لا إله إلا الله وأن محمداً رسول الله (அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹு வ அஸ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ்ஹ) என்ற கலிமாவைச் சொல்வதற்கு என் மனசில் போட்டான், சப்தத்தை நன்றாக உயர்த்தி சொல்கிறமாதிரி தெரியுது, அதன் பின் என் தலையில் நல்ல அடி விழுந்துள்ளதும்; அந்த இடம் நெருப்பு பட்டமாதிரி எரிவதும் தெரிந்தது. கார் பல தடவை பல்டிகள் அடிச்சு வெளியே ஒரு இடத்திலே போய் நின்றது, எழுந்திருக்கலாம் என்று முயற்சிப் பண்ணினேன் ஆனால் என் உடம்பிலிருந்து எந்த பகுதியையும் அசைக்க முடியவில்லை.

அது மாதிரி என் வாழ்க்கையிலே நடக்கவேயில்லை, பேச நினைக்கிறேன் ஆனால் பேச முடியலை, கண்கள்; திறந்து இருக்கு ஆனால் பார்க்க முடியலை, பார்வை மங்கி இருளாகிக் கொண்டே போவுது, ரொம்ப பேர் பக்கத்திலே வர்றது போறது காதிலே கேட்குது, அவர் தலையை அசைக்காதீங்க, ரத்தம் ஓடுது மேலும் அவருடைய இரண்டு காலும் உடைந்திருச்சு என்று அவங்க பேசுறதெல்லாம் கேட்குது, நான் கஸ்டப்பட்டு மூச்சு விட்ரது புரியுது, உடம்பில் ஒரு வித பயங்கரமான உஷ்ணம் என் கால்களிலிருந்து  தலையை நோக்கி வர ஆரம்பமாயிடுச்சு.

டிரைவருக்கு என்ன ஆயிடுச்சு? என்று அவங்க பேசிக்கிறது என் காதிலே கேட்குது (தூரத்திலிருந்து ஒரு சப்தம்) மௌத்தாயிட்டார்-அசைவேயில்லை, அடுத்து என்ன செய்யனும் என்று சொல்லுங்கள் என்று ஒரு மனிதர் கேட்டார்.

 பார்க்க: தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-2)

- அபூ யஹ்யா

தமிழில்: மெளலவி இப்ராஹீம் அன்வாரி, தேவ்பந்தி.

 

The view points and opinion solely those of the author or source. TamilIslamicMedia.com is not responsible for the posted contents.
 


No rights reserved.