Tamil Islamic Media ::: PRINT
இஸ்லாமியரும்-எதிர் நீச்சலும்

AP,Mohamed Ali
(டாக்டர் ஏ.பீ. முகம்மது அலி.பி.எச்.டி. ஐ.பி.எஸ்(ஓ)

      உலக மக்களினை நல் வழிப்படுத்தி ஏக இறை தத்துவத்தினை எடுத்தியம்ப அனுப்பப்பட்ட நபிமார்கள் ழூசா, ஈசா, முகம்மது ஸல்லல்லாஹ்   அலைஹி வஸல்லம் அவர்களால் அடித்தளம் அமைக்கப்பட்ட மதங்கள் தான் ஜூடேயிஸமும், கிறித்துவமும், இஸ்லாமும் என நாம் அறிவோம். ஆனால் இஸ்ரேயிலர்கள் ழூசாவை கடவுளாகவும், கிறித்துவர்கள் ஈசாவை கடவுளின் மகனாகவும் நெறி தவறி அழைக்கின்றனர். ஆனால் இஸ்லாமியர் மட்டும் முகம்மது ஸல்லல்லாஹ்   அலைஹி வஸல்லம் அவர்களை  எந்த நேரத்திலும் கடவுளாகவோ அல்லது கடவுளின் மகனாகவோ நினைக்கவில்லை. பெருமானாருக்கு வஹி மூலம் இறக்கப்பட்ட குர்ஆனில் ழூசாவையும், ஈசாவையும் இறைத்தூதர்கள் என்றே அழைக்கப்பட்டுள்ளது.. அவர்களுக்கு இறக்கப்பட்ட தவ்ராத்-இன்ஜில் வேதத்தையும் குர்ஆனில் சொல்லப்பட்டுள்ளது.. இறைவனால் படைக்கப்பட்ட ழூசாவையும், ஈசாவையும் கடவுளாக அழைக்காது இஸ்லாமியர் நபிகளாக ஏன் அழைக்க வேண்டும் என்ற கோபத்தினாலோ என்னவோ முஸ்லிம்களை இஸ்ரவேலர்களும், கிறித்துவர்களும் எதிரிகளாக நினைக்கின்றனர்..
     
மக்கா நகரில் ரஸுலல்லாஹ் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் பாலகனாக இருந்தபோது நம்பிக்கைக்குப் பாத்திரமானவர் என்று அழைத்தபோதும் தனது 40 வயதில் தனக்கு அல்லாஹ்வால் வஹி இறக்கப்பட்டது என்று சொன்ன மாத்திரத்தில் யாரும் அதனை நம்பவில்லை. ஆனால் அவரது அன்புத் துணைவியார் கதிஜா பிராட்டியார் மட்டும் அவர்களை அரவணைத்து முதலில் ஏக இறை தத்துவத்தினை ஏற்றுக் கொண்டார்கள் என்பது வரலாறு. அன்னை கதிஜா ஒருவரே முதலில் இஸ்லாமை ஏற்றதிலிருந்து கல்லடியும், சொல்லடியும், மேலை நாடுகளின் நவீன பாஸ்பரஸ் குண்டடியும் பொருப்படுத்தாது அரேபியாவிலிருந்து-ஜிம்பாவே வரை 130 நாடுகளில் 130 கோடி மக்கள் ஏக இறை தத்துவத்தினை ஏற்று முஸ்லிம்களாக மாறி  இமய மலைபோல உயர்ந்து நிற்கவில்லையா இஸ்லாம்?
     
இன்று உலகில் அதிகமாக 210 கோடி கிறித்துவர் கொண்ட கிறிஸ்துவ மதமிருந்தாலும், அதனுடைய வளர்ச்சி 1900 ஆண்டிலிருந்து 2000 வரை 26.9சதவீதத்திலிருந்து 29.9 சதவீதம் தான்;. அதாவது வெறும் மூன்று சதவீதம் தான். ஆனால் இஸ்லாமியர் வளர்ச்சி 12.4 சதவீதத்திலிருந்து 19.2 சதவிதத்தினை எட்டி, ஏழு சதவீத வளர்ச்சி அடைந்திருக்கிறது என்றால் ஆச்சரியமாக இல்லையா? இத்தனைக்கும் இஸ்லாமிய நாடுகள் வளர்ச்சியடைந்த வல்லரசாக இல்லையே! ஆனால் முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்தால் வல்லரசுகள் வல்லூராக மாறி ஆப்கானிஸ்தானிலும், இராக்கிலும் வேட்டையாடுவது ஏன்? அவர்களுக்குத் தெரியாது விளையாடும் பந்தினை சுவற்றிலோ-தரையிலோ எவ்வளவு வேகம் ஓங்கி அடிக்கிறோமோ அவ்வளவு தூரம் எழும்பும் என்பதினை பார்க்கிறோம். அதேபோல் இஸ்லாமியர் எவ்வளவு நசுக்கப்பட்டாலும் பீனிக்ஸ் பறவையாக எரியும் சாம்பலிருந்து சீறிப் பாய்வார்கள் என ஆதிக்க சக்திகள் அறிய மாட்டார்கள்.
      
வரலாற்று இடைக்காலத்தில் இஸ்லாமிய அரசர்களால் இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது என்று ஒரு வாதத்திற்காக வைத்துக் கொண்டாலும் இன்று உலகத்தினையே தனது ஆயுத பலத்தால் மிரட்டும் அமெரிக்காவினாலேயோ அல்லது நேட்டோ கிறித்துவ நாடுகளினாலேயோ வலுக்கட்டாயமாக மக்களை கிறித்துவ மதத்திற்கு மாற்றம் செய்ய முடியுமா? கிறித்துவ சேவை மையங்கள் கூட ஏழை மக்களை கவர கல்வி, உணவு, வீடு, சுகாதாரம் போன்ற அன்பின் அடையாங்களை மக்களிடையே அள்ளி வீசித்தானே அவர்களை கிறித்துவ மதத்திற்கு இழுக்கிறார்கள். பின் எப்படி இஸ்லாமிய மன்னர்கள் மட்டும் வரலாற்று இடைக்காலத்தில(;மெடீவல்) மக்களை கட்டாயப்படுத்தி இஸ்லாத்தில் இணைத்திருப்பார்கள் என்று ஏன் அவர்கள் சிந்திக்க மறுக்கிறார்கள்?
     
வரலாற்று இடைப்பட்ட(மெடீவல்) காலத்தில் நடந்தது என்ன? ய+தர்கள், கிறித்துவர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் புண்ணிய தலமாக கருதப்படும் ஜெரூசலம்  முஸ்லிம்கள் ஆட்சி செய்த பாலஸ்தீன நாட்டில் இருந்தது. முஸ்லிம்களிடமிருந்த ஜெரூசலத்தினை கைப்பற்ற நீண்ட (குருசேட்)�புனிதப்போர�; என்று பெயரிட்ட பெரியதோர் போரினை ஐரோப்பிய துணைக் கண்டத்தில் நடத்தினர். ஆனால் முஸ்லிம்கள் ஈமானை கேடயமாகவும், ஏக இறைத்தத்துவத்தினை வாளாகவும் கையிலெடுத்து பல உயிர்களை பறிகொடுத்ததால் ஜெரூசலத்தினை தங்களுடன் தக்க வைத்தனர் எனறால் எப்படி அவர்களால் அன்று மட்டும் முடிந்தது? இறைவனால் இறைக்கட்டளைகளை இஸ்ரவேலர்கள் மீறியதால் பழிக்கப்பட்டது மட்டுமல்ல, முதலாவது-இரண்டாவது உலகப்போர்களில் பந்தாடப்பட்டனர். கிறித்துவ-இஸ்ரேயிலக் கூட்டுப்படை இரண்டாம் உலகப் போரில் வெற்றியடைந்த களிப்பில் பாலஸ்தீனர்களுக்கிடையே இஸ்ரேயில் என்ற நாட்டினை உருவாக்கி பாலஸ்தீனர்களுக்கு நாடு என்ற அமைப்பே இல்லாமல் அகதிகளாக ஆக்கப்பட்டனர்.
     
1945 ஆம் ஆண்டு சர்வதேச சபையான ஐ.நா அமையப்பட்டாலும், 1948 ஆம் ஆண்டு சரவதேச மனித உரிமை சாசனம் எழுதப்பட்டாலும் பாலஸ்தீனர்களுக்கு இன்று வரை தனிநாடு என்று பிரகடனம் செய்ய உரிமை இல்லை. இன்றைய முஸ்லிம் உலகின் கொந்தளிப்பிற்கு காரணமே பாலஸ்தீனத்தின் பரிதாப நிலையே என்று  உலக ஊடகங்கள் சொல்கின்றன. ஆகவே முஸ்லிம் நாடுகளான ஈரானோ, ஈராக்கோ, பாகிஸ்தானோ இஸ்ரேயிலுக்கு எதிராக பலம் வாய்ந்ததாக மாறக்கூடாது என்பதால் தான் கிறித்துவ கூட்டமைப்பு ஈராக்கை சின்னாபின்னமாக்கி, பாக்கிஸ்தானின் அணு ஆயிதத்தினை கண்காணித்து அந்த நாட்டில் ரகசியமாக ஊடுருவி ஆளில்லா விமானங்கள் மூலம் நிர்மூலமாக்குகின்றனர். பாலஸ்தீன குழந்தைகளோ அல்லது ஈராக் அல்லது ஆப்பானிஸ்தான் குழந்தைகளோ பள்ளிக்கூடங்களுக்குக்கூட  செல்ல முடியாது பரிதவிக்கின்றனர். இவ்வளவிற்கும் 1989 ஆம் ஆண்டு ஐ.நா வின் சர்வதேச குழந்தைகள் ஆண்டு என்று அறிவித்து அவர்களுக்கான உரிமை 20 ஆண்டுகளாகியும் பறிக்கப்டுகிறதே வேதனையாக இல்லையா?
     
அமெரிக்காவின் இரட்டைக்கோபுரங்கள் 2001 ஆம் ஆண்டு தாக்கப்பட்டதிற்கு ஆப்கானிஸ்தானின் தாலிபான்கள் தான் காரணம் என்று அந்த நாட்டில் படையெடுத்து தாலிபான்களை விரட்டிய பின்பு அந்த நாட்டை விட்டு வெளியேராமால் ஊழல் நிறைந்த அமெரிக்காவில் வசித்த டாக்டர் கரசாய் ஆட்சியினை நிறுவி அதற்கு ஆதரவு கொடுத்ததோடு மட்டுமல்லாமல், உயிர் கொல்லி ஆயுதங்கள் ஈராக் ஜனாதிபதி வைத்திருக்கிறார் என்று 2003 ஆம் ஆண்டு ஈராக்கில் படையெடுத்த கூட்டுப்படை உயிர் கொல்லி ஆயுதங்கள் ஈராக்கில் இல்லை என்ற உண்மையினை ஒப்புக் கொண்டு வெளியேராமால் இன்னும் அட்டைபோல் ஒட்டி அந்த நாட்டின் எண்ணெய் வளத்தினை உறிஞ்சிக் கொண்டுள்ளது என்ற செய்திகள் நாள்தோறும் நாம் படிக்க வில்லையா? ஈரான் சிவில் உபயோகத்திற்காக அதாவது மின்சாரம் போன்றவைகளை தயாரிப்பதிற்காக அணுவினை பயன்படுத்துகிறோம் என்றாலும் அதற்கு பொருளாதார தடையேற்படுத்துவதா?
     
இதே போன்றுதான் 60 ஆண்டுகளுக்கு முன்பு சீனா நாட்டிற்கு தடை விதிக்கப்பட்டது. அது என்னவானது? வுpவசாய நாடான சீன நாட்டினை தொழிற்சாலை மிகுந்த நாடாக ஆக்கி இன்று ஏற்றுமதியினை 17.7 சதவீதம் அதிகரித்து ஜெர்மனி நாட்டினை பின்தள்ளி உலக ஏற்றுமதியின் முன்னணி நாடாக சீனாவினை மாசேதுங் உருவாக்கவில்லையா? ஏன் இஸ்லாமியர்களால் முடியாதா? ஏகாபத்திய நாடுகள் இஸ்லாமியர்களை நடத்தும் விதம் கோபமூட்டும் செயலானது தான் அதற்காக தீவிரவாதம் ஒரு வடிகாலாகுமா? இன்றைய இஸ்லாமியர் வாழ்வு கொந்தளிக்கும் கடலில் கப்பல் ஓட்டும் மாலுமியைப் போன்றது தான். நான் ஒப்புக் கொள்கிறேன். ஆனால் அதனை சமாளித்து திறம்பட வழி நடத்துபவனே சிறந்த மாலுமியாகக் கருதப்படும். தோல்வி-அவமானங்களை வெற்றியின் ழூலதனமாக எடுத்துக் கொண்டு உலகத்தில் தலை நிமிர்ந்து நிற்க சில யோசனைகளை சொல்லலாம் என நினைக்கிறேன்:

கிராம பொருளாதாரத்தினை மேன் படுத்தி-உற்பத்திற்கு உதவும் தொழில்களை தொடங்க வேண்டும். சீனர்  உலகில் எப்படி இவ்வளவு தூரத்திற்கு வளர்ச்சியடைந்த வல்லரசாக மாறியது என்று ஆராயும் போது வருடத்திற்கு 20 லட்சம் சீனர் ஆங்கிலக் கல்வி கற்கின்றனர் என்பது தெரிய வந்தது. அதன் ழூலம் ஆங்கிலம் பேசும் நாடுகளுடன் தொடர்பு கொண்டு அவர்கள் முன்னேற்றத்தின் ரகசியங்களை அறிந்து-அவர்களுக்கு மேலாக ஒரு படி உயர்துள்ளனர். அதே போன்று இஸ்லாமியரும் ஆங்கிலக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
இன கருத்து வேறுபாடுகளை களைய வேண்டும். அதாவது ஷியா-சன்னி என்ற வேறுபாடு களைந்து பிரிந்து நிற்கும் ஐக்கிய அரபு நாடுகள்-எகிப்து-சிரியா-ஜோர்டன்-அரேபியா-ஈரான்-பாகிஸ்தான ஆகியவை ஒரு குடையின் கீழ் நிற்க வேண்டும். அந்த அமைப்புகள் நாட்டோ போன்ற பாதுகாப்பு அமைப்பினை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
பொருளாதார ஏற்றுமதி-இறக்குமதியில் வரியில்லா வர்த்தகத்தினை எற்படுத்த வேண்டும். தங்களுக்கென்ற ஈரோ போன்ற நாணயம் உருவாக்க வேண்டும்.
அதே போன்று விஞ்ஞான-ஆராய்ச்சிகளை தங்களுடன் பரிமாற்றம செய்து கொள்ள வேண்டும்.

வறுமையில் தவழும் இஸ்லாமிய நாடுகளுக்கு பொருளுதவி கொடுக்க வேண்டும். எப்படி பொருளாதாரத்தில் சிக்கி தவிக்கும் துபாய் நாட்டிற்கு அபுதாபி நாடு கடன் கொடுத்து கை தூக்கியதோ அதேபோன்ற உதவிகளை செய்ய வேண்டும். இஸ்லாமிய ஏழை நாடுகளில் பசியாலும்-நோயாலும் உழலும் மக்களுக்கு கல்வி-மருத்துவம்-வீடு-வேலை வாய்ப்பினை வழங்க வேண்டும்.
 
உலக இஸ்லாமியர் நினைத்தால் வானத்தையும் வில்லாக முறித்து-கடலிலும் எதிர் நீச்சலடித்து, பூமியிலும் வல்லரசாக மாறி எதிர்கால சவால்களை முறியடிக்கலாம் என்று எதிர்பார்க்கலாமா?

The view points and opinion solely those of the author or source. TamilIslamicMedia.com is not responsible for the posted contents.
 


No rights reserved.