Tamil Islamic Media ::: PRINT
இஸ்லாம் மிருக வதையை தூண்டுகின்றதா?

உழ்ஹிய்யா கடமையும், மிருக வதையும்


இன்றைய உலகில் அதிகம் விமர்சிக்கப்படும் ஒரு மார்க்கமாக இஸ்லாம் காணப்படுகின்றது. அதற்கெதிராக பல விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன, அவற்றுள் சமகாலத்தோடு பொருந்திச் செல்லக்கூடிய விமரசனமே; ‘இஸ்லாம் மிருகங்களைக் கொடுமைப் படுத்துகின்றது.’ என்ற விமர்சனம்.


குறிப்பாக இலங்கையை எடுத்துக்கொண்டால் இக்காலத்தில் அதிகமாக இதனை பேசுவார்கள். இன்று இலங்கையில் இஸ்லாத்தை விமர்சிப்பவர்கள் இதனையே ஆயுதமாகவும் பயன்படுத்துகின்றனர். அதனடிப்படையில் ‘இஸ்லாம் மிருக வதையை தூண்டுகின்றதா?’ என்ற அடிப்படையில் இந்த கட்டுரையை எழுத ஆசைப்படுகின்றேன்.
இஸ்லாத்தை விமர்சிக்கும் ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள வேண்டிய முதல் அம்சம் என்னவெனில் எம்மைப் படைத்து, எமக்கு இஸ்லாம் மார்க்கத்தை வாழ்க்கை நெரியாக தந்த அல்லாஹ் எதற்கும் தேவையற்றவனாகவே இருக்கின்றான். அதே நேரம் அவன் ஒன்றை செய்ய வேண்டும் என்று கூறியிருந்தால் அதனை மனிதனின் நலனுக்காகவே கூறியிருப்பான்.


மனிதர்களே! அல்லாஹ்வின் உதவி (எப்பொழுதும்) தேவைப்பட்டவர்களாக இருப்பவர்கள் நீங்கள்; ஆனால் அல்லாஹ் எவரிடமும் தேவைப்படாதவன்; புகழுக்குரியவன். (35:15)
(நபியே?!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே.அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.  (112:1,2)


عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” إِنَّ اللهَ عَزَّ وَجَلَّ يَقُولُ يَوْمَ الْقِيَامَةِ: يَا ابْنَ آدَمَ مَرِضْتُ فَلَمْ تَعُدْنِي، قَالَ: يَا رَبِّ كَيْفَ أَعُودُكَ؟ وَأَنْتَ رَبُّ الْعَالَمِينَ، قَالَ: أَمَا عَلِمْتَ أَنَّ عَبْدِي فُلَانًا مَرِضَ فَلَمْ تَعُدْهُ، أَمَا عَلِمْتَ أَنَّكَ لَوْ عُدْتَهُ لَوَجَدْتَنِي عِنْدَهُ؟ يَا ابْنَ آدَمَ اسْتَطْعَمْتُكَ فَلَمْ تُطْعِمْنِي، قَالَ: يَا رَبِّ وَكَيْفَ أُطْعِمُكَ؟ وَأَنْتَ رَبُّ الْعَالَمِينَ، قَالَ: أَمَا عَلِمْتَ أَنَّهُ اسْتَطْعَمَكَ عَبْدِي فُلَانٌ، فَلَمْ تُطْعِمْهُ؟ أَمَا عَلِمْتَ أَنَّكَ لَوْ أَطْعَمْتَهُ لَوَجَدْتَ ذَلِكَ عِنْدِي، يَا ابْنَ آدَمَ اسْتَسْقَيْتُكَ، فَلَمْ تَسْقِنِي، قَالَ: يَا رَبِّ كَيْفَ أَسْقِيكَ؟ وَأَنْتَ رَبُّ الْعَالَمِينَ، قَالَ: اسْتَسْقَاكَ عَبْدِي فُلَانٌ فَلَمْ تَسْقِهِ، أَمَا إِنَّكَ لَوْ سَقَيْتَهُ وَجَدْتَ ذَلِكَ عِنْدِي “

 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் மறுமை நாளையில் மனிதனைப் பார்த்து,; ‘ஆதமின் மகனே நான் நோய்வாய்ப்பட்டிருந்தேன், ஏன் நீ என்னை நோய் விசாரிக்க வரவில்லை?’ என்று கேற்பானாம், அதற்கு மனிதன்; ‘இறைவா! நீ உலகத்தவர்களின் நாயன், நான் எப்படி உன்னை நோய் விசாரிப்பது?’ என்று பதில் கூறும் போது, அல்லாஹ் கூறுவானாம்;’ உனக்குத் தெரியாதா என்னுடைய இன்ன அடியான் நோய்வாய்பட்டிருந்தான், நீ அவனை நோய் விசாரித்திருந்தால் அங்கு என்னை கண்டிருப்பாய்.’ என்று கூறுவானாம். மேலும் ‘ஆதமின் மகனே நான் உன்னிடம் உணவு கேட்டேன், நீ எனக்கு உணவளிக்கவில்லையே!’ என்று கேட்க, மனிதன்; ‘இறைவா! நீ உலகத்தவர்களின் நாயன், நான் எப்படி உனக்கு உணவளிப்பது?’ என்று பதில் கூறும் போது, அல்லாஹ் கூறுவானாம்;’ உனக்குத் தெரியாதா என்னுடைய இன்ன அடியான் உன்னிடம் உணவு கேட்டான், நீ அவனுக்கு உணவளித்திருந்தால் அங்கு என்னை கண்டிருப்பாய்.’ என்று கூறுவானாம். மேலும் ஆதமின் மகனே! நீ எனக்கு நீர் புகட்டவில்லையே! என்று அல்லாஹ் கூறுவானாம். அதற்கும் மனிதன் ‘இறைவா! நீ உலகத்தவர்களின் நாயன், நான் எப்படி உனக்கு நீர் புகட்டுவது?’ என்று பதில் கூறும் போது, அல்லாஹ் கூறுவானாம்;’ உனக்குத் தெரியாதா என்னுடைய இன்ன அடியான் உன்னிடம் நீர் கேட்டான், நீ அவனுக்கு நீர் பருக்கியிருந்த்திருந்தால் அங்கு என்னை கண்டிருப்பாய்.’ என்று கூறுவானாம்.  (முஸ்லிம்:6721)


இந்த ஹதீஸின் மூலம்

The view points and opinion solely those of the author or source. TamilIslamicMedia.com is not responsible for the posted contents.
 


No rights reserved.