Tamil Islamic Media ::: PRINT
விடுதலை போரில் நெல்லை மாவட்ட முஸ்லிம்கள்

இந்தியா எங்கள் தாய்நாடு
இஸ்லாம் எங்கள் வழிபாடு
தமிழே எங்கள் மொழியாகும்
தன்மானம் எங்கள் உயிராகும்.

 

உருவிய வாளுடனும், உறுதிமாறா நேர்மையுடனும் அரேபிய வெளிகளில் போராடிய பெருமானார் அண்ணல் நபிகள் (ஸல்) நிலை நாட்டிய இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றுக்கொண்ட இந்திய முஸ்லீம் பெருமக்கள் பரங்கியர் சைன்யங்களின் பீரங்கிகளுக்கும், துப்பாக்கிகளுக்கும் அஞ்சாமல் களங்கண்ட சம்பவங்கள் பல. அவற்றில் வெளிச்சத்திற்கு வந்தவைகள் மிகச்சில.

இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்களின் பங்கு மகத்தானது. ஆங்கிலேயர்கள் தங்களது சாம்ராஜ்யத்தை மூன்று முஸ்லீம் மன்னர்களின் - வடக்கே பகதூர்ஷா, வங்கத்தில் சிராஜ்-உத்-தௌலா, தெற்கே மைசூர் சிங்கம் திப்பு சுல்தான், இறந்த உடல்களின் மீதுதான் அமைக்க முடிந்தது. ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தது இம்மூவர் தான். இந்த மன்னர்களை கண்டு அஞ்சியதை போல், இந்தியாவில் ஆங்கிலேயர்கள் வேறு யாருக்கும் அஞ்சியதில்லை என்பது சரித்திரம் கூறும் உண்மை.

இவர்களை பற்றி எழுதுவதென்பது, இந்தக்கட்டுரையின் எல்லைக்கு அப்பாற்பட்டது. இந்தக் கட்டுரையின் நோக்கம் தமிழ் நாட்டில், அதுவும் திருநெல்வேலி மாவட்டத்து சுதந்திர போராட்ட தியாகிகளை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதுதான்.

விடுதலை போரில் நெல்லை மாவட்ட முஸ்லிம்கள்

திருநெல்வேலி பேட்டை முஹம்மது நயினார் பள்ளிவாசல் தெருவில் 1909-ல் பிறந்த வி. கே. அப்துல்ஹமீது 1929 போராட்டத்திலும் மதுரையில் கள்ளுக்கடை மறியலில் 1931 லும் கலந்து கொண்டு சிறை சென்றவர் திருநெல்வேலி நகர்மன்ற துணைத் தலைவராக இருந்தவர். 1-6-1959-ல் காலமானார்.

காதர்முகைதீன் நயினார் இராவுத்தர் புதல்வராக 1904-ல் பிறந்த அப்துல் ஹமீது முகம்மது ஒத்துழையாமைப் போரில் கலந்து கொண்டு திருச்சி சிறையில் வாடியவர்.

செங்கோட்டை மேலுரைச் சேர்ந்த சாகுல் ஹமீதுவின் மகனாக 1907-ல் பிறந்த அப்துல்மஜித் 1927 போராட்டங்களிலும் சட்ட மறுப்பு இயக்கப் போராட்டங்களிலும் கலந்து கொண்டவர்.

முகம்மது இஸ்மாயில் புதல்வராக 3-7-1904-ல் 175 நடுப்பேட்டைத் தெரு தென்காசியில் பிறந்த அப்துல்சலாம் 1922-ல் அந்நியத்துணி எதிர்ப்பு போரிலும் நாக்ப+ர் கொடிப்போரிலும் கலந்துக் கொண்டு ஒரு வருடத்திற்கு மேல் நாக்ப+ர் சிறையில் வாடியவர்.

திருநெல்வேலி பேட்டை ரகுமானியா பள்ளிவாசல் சன்னதி தெருவில் வாழ்ந்த அப்துல் ஹமீதுவின் புதல்வராக 1900-ல் பிறந்த முகம்மது இப்ராகிம் 1922 போராட்டத்தில் கலந்துக்கொண்டு கடலூர் சிறையில் வாடியவர்.

திருநெல்வேலி பேட்டை ரகுமானியா பள்ளிவாசல் மேலத்தெருவைச் சேர்ந்த முகம்மது இஸ்மாயில் 1897-ல் பிறந்தவர். 1921 போராட்டத்திலும்; நாக்ப+ர் கொடிப்போரிலும் கலந்துக் கொண்டு நாக்ப+ர் சிறையில் வாடியவர்.

கடையநல்லூர் எஸ.எம் அப்துல்மஜித் சுதந்திர தமிழகத்தில் மந்திரியாக இருந்தவர். இவரது குடும்பம் நாட்டு விடுதலைக்காக நல்ல தொண்டாற்றியிருக்கிறது.

தென்காசி எஸ்.எல்.எஸ் முஹம்மது முகையதீன் 1941-ல் போர் எதிர்ப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டு சிறைத்தண்டனை பெற்றவர்.

திருநெல்வேலி எம். முகையதீன் இப்ராகிம் மரைக்காயர் 1894-ல் பிறந்தவர். கற்றறிந்தவர் 1921 ஒத்துழையாமைப் போரிலும் 1922-23-ல் கள்ளுக்கடை மறியலிலும் கலந்துக் கொண்டு திருச்சி சிறையில் வாடியவர்.

25-11-1923ல் பிறந்த தூத்துக்குடி 47 ஜெயலானி தெருவைச் சேர்ந்த முகையதீன் n~ரீப் கற்றறிந்தவர் 1942 ஆகஸ்ட் புரட்சியில் பங்கேற்றவர்.

தென்காசி தாலுகா விசுவநாதபுரத்தைச் சேர்ந்த முகம்மது உசைன் புதல்வராக 1915ல் பிறந்த நாகூரப்பா இராவுத்தர் கல்வி பயின்றவர். 1936ல் கள்ளுக்கடை மறியலிலும், அந்நியத்துணி எதிர்ப்பு போரிலும் கலந்துக்கொண்டவர்.

வெள்ளை இராவுத்தரின் மகனாக 1906-ல் தென்காசியில் பிறந்த சாஹித் 1942 ஆகஸ்ட் புரட்சியில் பங்கேற்று வேலூரிலும், தஞ்சாவ+ர் சிறப்பு ஜெயிலிலும் வாடியவர்.

செய்யது மீராசாகிப் புதல்வராக 1918ல் பிறந்த பணகுடி செய்யது அகமது கபீர் 1942 ஆகஸ்ட் போரில் கலந்துக்கொண்டு அலிப்புறம் ஜெயிலில் வாடியவர்.

திருநெல்வேலியில் 11-7-1914ல் பிறந்த செய்யது ஜலால் 1932ல் கள்ளுக்கடை மறியலிலும், மேலும் அந்நியத் துணி எதிர்ப்பு, தனி நபர் சத்தியாக்கிரகம் ஆகியவற்றில் பங்கேற்றுப் பாளையங்கோட்டை ஜெயிலில் வாடியவர்.

மேலப்பாளையம் வி. எஸ். டி முகம்மது இப்ராகீம் 1942ல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில்; காங்கிரஸ் கமிட்டி சார்பில் தன் பங்களாவில் இரகசியமாக கே.பி.மரு~;வாலா வெளியிட்ட கிராம சுதந்திர பிரகடனத்தை சைக்ளோஸ்டைல் செய்து விநியோகம் செய்தார். ரிசர்வ் போலீசின் தடியடியால் மயக்கமடைந்த எம்.ஆர். உலகநாதனுக்குத் துணிந்து சிகிச்சை அளித்தவர். நகர காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும், ஜில்லா காங்கிரஸ் கமிட்டி உதவித் தலைவராகவும், திருநெல்Nலி ஜில்லா போர்டு மெம்பராகவும், மேலப்பாளையம் நகர் மன்றத் தலைவராகவும் பணியாற்றிய இவரது தேசியச் சேவை நிலைத்து நிற்கக் கூடியது.

செய்குத்தம்பி பாவலரால் ''கோவை'' பாடப்பெற்ற இவரது தந்தையார் சம்சுதாசீன் தரகனார் கிலாபத் போரில் தீவிரங்காட்டியவர்.

1926-ல் நெல்லை மாவட்டத்தில் சுதந்திரப் போரில் தீவிரப் பங்கெடுத்துக் கொண்டவர்களில் இராதாபுரம் தாலுகா பணகுடி அம்ஜியான் சாஹிப், கள்ளி;குளம் முகைதீன் ஆகியோர் முன்னணியில் நின்றவர்கள். நாங்குநேரி தாலுகா காங்கிரஸ் கமிட்டியில் தீவிர பணியாற்றி ஆற்றியவர்கள். அரசின் அடக்கு முறையை எதிர்த்து தேசியப் பிரச்சாரம் வெற்றிகரமாக நடைபெற கள்ளிகுளம் முகைதீன் துணிச்சலான செயல்களில் இறங்கியவர்.

முடிவுரை

இந்தத் தியாகிகள் வெளிச்சத்திற்கு வந்தவர்கள். திருவண்ணா மலையில் தந்தை பெரியார் தலைமையில் 15-11-1924ல் காங்கிரஸ் மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் கலந்துக் கொண்டவர்களில் முக்கியமானவர்கள் என்று 21-11-1924 நவசக்தி இதழ் செய்தி வெளியிட்டிருந்தது. அதில் இருந்த முதல் பெயர் யாகூப் ஹஸன். அவரைத் தொடர்ந்தே இராஜாஜி, எஸ்.சீனிவாச ஐயங்கார்இ டாக்டர். புp.வரதராஜலு நாயுடு, திரு.வி.கல்யாணசுந்தர முதலியார், மற்றும் பலரின் பெயர்களும் இருந்தன. ஆம் விடுதலைப் போரில் முன்னணியில் நின்றவர்கள் தமிழக முஸ்லீம்கள்.

16-11-1924ல் இரண்டாம் நாள் மாநாட்டில் நாமக்கள் உஸ்மான் சாகிப் தீர்மானம் கொண்டு வந்தார் என ''திரு வி.க. வாழ்க்கை குறிப்புகள்'' பக். 331ல் உள்ளது.

இவர்கள் யார்? இவர்கள் ஆற்றிய பணிகள் என்ன? இவர்களைப் போல் இன்னும் எத்தனை பேர்? - இன்னும் வெளிச்சத்திற்கு வரவில்லை.

நம் கண்ணறையின் ஒளிபடாமல் கல்லறையில் துயிலும் இந்தத் தியாகிகள், கால காலங்களுக்கும் முஸ்லீம்கள், இந்த மண்ணில் யாருக்கும் தாழாமல் தன்மானத்தோடு, நிமிர்ந்த தலையோடு வாழவும், ஜனநாயகத்தால் ஆளவும், நாளும் நாளும் உத்வேகம் தந்து கொண்டே இருப்பார்கள். அது உண்மைத் தியாகிகளை மீண்டும் உருவாக்கி புதிய வரலாறுகளைப் படைக்கும்

The view points and opinion solely those of the author or source. TamilIslamicMedia.com is not responsible for the posted contents.
 


No rights reserved.