Tamil Islamic Media ::: PRINT
இறைவணக்கமும் இயலாமையும் (சேரில் அமர்ந்து தொழலாமா?)

அன்புடையீர்,
தமிழக பள்ளிவாசல்களின் இன்று வயோதிகர்கள் உட்கார்ந்து தொழுகுவதற்கு வசதியாக நற்காலிகள் போடப்பட்டுள்ளன.
இதில் கவனிக்கப்படவேண்டிய விஷயங்களில் சில,

இமாம் புஹாரி அவர்கள் தன்னுடைய ஹதீஸ் புத்தகத்தில் இது சம்பந்தமான ஒரு ஹதீஸை இப்படி பதிவுசெய்கிறார்கள்.

இம்ரான் இப்னு ஹூஸைன் என்ற நபித்தோழர் அவர்கள் அறிவிக்கிறார்கள்  நான் மூல நோயினால் அவதிப்பட்டுக்கொண்டிருந்தேன், என் தொழுகைமுறை குறித்து நபியவர்களிடம் கேட்டேன்.


அவர்கள் கூறினார்கள்: நின்று தொழுகுங்கள், முடியாவிட்டால் உட்கார்ந்து, அதுவும் முடியாவிட்டால் படுத்து

இதன் மூலம் நமக்கு விளக்கம் அளிக்கும் இமாம்கள் கடமையாக்கப்பட்ட தொழுகைகள் நின்று தான் தொழவேண்டும். நோய் காரணமாக நிற்க முடியாத நிலையில் உட்கார்ந்து தொழலாம் என்ற சட்டத்தை நமக்கு வகுத்துத்தந்தார்கள்.

ஆனால், நிற்பதற்கு முழுமையாக ஆளுமை பெற்ற ஒருவர் உடகார்ந்து தொழுதால் அவர் தொழுகை பாதில் - வீணானதாக ஆகிவிடும்.
அது போன்றே ருகூஃ, ஸூஜுத் செய்ய முடிந்த ஒருவர் சேரில் அமர்ந்து தொழுவது கூடாது. அதிக நேரம் நிற்க முடியாத சூழல் இருந்தால் உட்கார்ந்து கொள்ளலாம், ஆனால் ருகூஃ, ஸுஜுதை அவர் அதன் முறைப்படிதான் நிறைவேற்றவேண்டும்.இப்படி அனுமதி தரப்படிருப்பது ஏனெனில் இயலாத ஒரு காரியத்தை ஒரு தொழுகையாளி செய்ய முற்படுகிறபோது அவரின் உள்ளச்சம் கெட்டுவிடும் என்ற காரணத்தினால் தான்.

இதில் குறிப்பான ஒரு விஷயம், சேரில் அமர்ந்து தொழுபவர் தன்னுடைய ருக்கூஃ, ஸுஜுத்களை சைக்கினையால் மட்டுமே செய்யவேண்டும்.
தனக்கு முன்னால் பள்ளிக்கூடங்களில் மாணவர்களுக்கு உள்ள டேஸ்குகள் போன்றவற்றை போட்டு அதில் ருகூஃ, ஸுஜுத போன்றவை செய்யக்கூடாது.

இது இன்று பரவலாக தமிழ பள்ளிவாசல்களில் பரவலாக காணப்படுகிற ஒரு செய்தியாக உள்ளது. இது சம்பந்தப்பட்ட பத்வாக்கள் பரவலாக தமிழகத்தில் பரப்பட்ட பின்பு, சில மஸ்ஜித் நிர்வாகத்தினர் அதை நீக்குவதற்க்கு முனையாத நிலை உள்ளது.

ஆகையால், கடல்கடந்து குவைத், துபாய் போன்ற இடங்களில் வாழும் சகோதர்கள், அங்குள்ள ஊர் அமைப்புகளிடம் இவைப்பற்றி ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தி , வயதான காலத்தில் முதுமையை பொருட்படுத்தாமல் தொழுகும் அந்த தொழுகையாளிகளின் தொழுகைகள் முழுமையாக அங்கிகரிக்கப்பட உதவூவோமாக.

- ஹஸனீ

The view points and opinion solely those of the author or source. TamilIslamicMedia.com is not responsible for the posted contents.
 


No rights reserved.