Tamil Islamic Media ::: PRINT
மறுமை

ஹஜரத் அம்ரு (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஒரு முறை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது பிரசங்கத்தில்,

'' கவனமாகக் கேட்டு கொள்ளுங்கள். உலகம் தற்காலிகமான வியாபாரப் பொருளாகும். (அதற்கு எவ்வித விலையும் மதிப்பும் கிடையாது) ஏனெனில், அதில் நல்லோர், தீயோர் அனைவருக்கும் பங்குண்டு. அனைவரும் அதிலிருந்து உண்கின்றனர். நிச்சயமாக மறுமையானது குறித்த நேரத்தில் வர இருக்கின்ற அந்தரங்கமான உண்மையாகும். அதில் சக்தி மிக்க அரசன் தீர்ப்பு வழங்குவான்.

கவனமாக கேட்டுக் கொள்ளுங்கள்! எல்லா நலவுகளும், அதன் அனைத்து வகைகளும் சொர்க்கத்தில் உள்ளன. சகலவித கெடுதிகளும், அதன் எல்லா வகைகளும் நரகத்தில் உள்ளன.

நன்றாக அறிந்து கொள்ளுங்கள். எதைச் செய்தாலும் அல்லாஹுத்தஆலாவை பயந்தவர்களாகச் செய்யுங்கள். நீங்கள் தத்தமது செயல்களுடன் அல்லஹுத்தஆலாவிடத்தில் கொண்டுவரப்படுவீர்கள்.

அணுவளவு நன்மையைச் செய்தவரும் அதைக் கண்டு கொள்வார். அணுவளவு தீமை செய்தவரும் அதைக் கண்டு கொள்வார்.'' என்று கூறினார்கள். (நூல்: முஸ்னத் ஷாபிஇய்யீ)

 

 

இன்னும் எவர் தங்கள் இறைவன் முன் (மறுமையில்) கொண்டு வரப்படுவது பற்றி பயப்படுகிறார்களோ அவர்களுக்கு (இவ்வேதத்தைக் கொண்டு) எச்சரிக்கை செய்யும் - (பாவத்திலிருந்து நீங்கி) அவர்கள் பயபக்தியுடையோராகும் பொருட்டு¢ அவனைத் தவிர அவர்களுக்குப் பாதுகாப்பளிப்பவரோ, பரிந்து பேசுபவரோ வேறு யாரும் இல்லை.  (குர்ஆன் 6:51)

இன்னும் அவர்களில் சிலர், 'ரப்பனா!(எங்கள் இறைவனே!) எங்களுக்கு இவ்வுலகில் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக¢ மறுமையிலும் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக¢ இன்னும் எங்களை(நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக!'' எனக் கேட்போரும் அவர்களில் உண்டு. (குர்ஆன் 2:201)

இவ்வாறு, (இம்மை-மறுமை இரண்டிலும் நற்பேறுகளைக் கேட்கின்ற) அவர்களுக்குத்தான் அவர்கள் சம்பாதித்த நற்பாக்கியங்கள் உண்டு¢ தவிர, அல்லாஹ் கணக்கெடுப்பதில் மிகத் தீவிரமானவன். (குர்ஆன் 2:202)

The view points and opinion solely those of the author or source. TamilIslamicMedia.com is not responsible for the posted contents.
 


No rights reserved.