Tamil Islamic Media ::: PRINT
ஜகாத் ஒரு எளிய அறிமுகம் - தமிழில் - ஹஸனீ
அன்புடையீர்
 
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
 
ஜகாத்,  இது ரமலான் காலங்களின் நாம் காதுகளில் அதிகமாக ரீங்காரமிடும் ஒரு வார்த்தை.
 
ஜகாத் என்பது  தொழுகையை போன்று கடமையாக்கப்பட்ட ஒன்றாக இருந்தாலும், நாம் ரமலானில் மட்டுமே அது பற்றி ஆலோசிக்கிறோம்.
 
பொதுவாக ஜகாத்தின் நோக்கத்தை இறைவன் கூறும் போது “ கை லா யகூன துவலத்தன் பைனல் அங்னியாஇ மின்கும் “ என்று கூறுகிறான்.
 
அதாவது “ உங்களின்  பணக்கார்களுக்கு மத்தியில் மட்டும் அவை சுற்றிக்கொண்டிருக்காமல் இருப்பதற்காக”.
 
இன்னும் ஜகாத் பற்றி குர்ஆனில் இறைவன் 82 இடங்களில் தொழுகையோடு இணைத்து சொல்கிறான்.
 
இதிலிருந்து இறைவன் மனிதர்களிடம் நிலைநாட்ட விரும்பும் பொருளாதார கட்டமைப்பு விளங்குகிறது.
 
ஆகையால், ஜகாத் என்பது கட்டாயம் கணக்கிட்டு கொடுக்கப்படவேண்டிய ஒன்றாகும்.
 
எந்த பொருளில் ஜகாத் கொடுக்கவேண்டும்?
 
எவ்வளவு கொடுக்கவேண்டும்?
 
எவ்வாறு கணக்கிட வேண்டு?
 
யாருக்கு கொடுக்கவேண்டும்?
 
யாருக்கு கொடுக்ககூடாது?
 
என்ற தகவல்களை நம்மில் உள்ள அனைவர்களும் விளங்குவதற்காக இந்த சிறு முயற்சி.
 
சத்தியத்தை சத்தியமாக விளங்கி அதை பின்பற்றுகிற அறிவை இறைவன் தருவானாக.
 
அசத்தியத்தை அசத்தியமாக விளங்கி அதிலிருந்து தவிர்ந்திருக்கும் அறிவை இறைவன் தருவானாக.
 
 

-------

பருவமடைந்த அறிவுள்ள ஒவ்வொரு முஸ்லிமும் பின்வரும் தகுதிகளை அடைந்தால் அவர் மீது ஜகாத் கடமையாக ஆகும்.

ஜகாத் கடமையானவர்கள்:

  1. பொருள் அவரின் கையில் இருக்க வேண்டும் (அதை செலவழிக்கும் முழுத்தகுதி இருக்க வேண்டும்) - Ownership.
  2. பொருள் ஜகாத் கடமையாகும் அளவை (நிஸாபை) அடைந்திருக்க வேண்டும் - Asset must be equivalent to Nisab.
  3. தன் அடிப்படைத் தேவைக்கு போக மீதம் இருக்க வேண்டும் (தான் பயன்படுத்தும் உடை, வீடு, வாகனம் ஆகியவற்றின் மீது ஜகாத் இல்லை) - Asset must be in excess of basic necessity.
  4. கடனில்லாமல் இருக்க வேண்டும் - Free from debts.
  5. பொருள் வளர்ச்சியடையக் கூடியதாக இருக்க வேண்டும். தங்கம், வெள்ளி எந்த நிலையில் இருந்தாலும் (ஆபரணமமாகவோ அல்லது பொருளாகவோ) ஜகாத் கடமையாகும் -  Potential of Growth. அதே போன்று விலை மதிக்க முடியாத கற்கள் (Precious Stones)  முத்து, மரகதம் போன்றவற்றில் வளர்ச்சி இல்லாததால் ஜகாத் கடமையாகாது. ஆனால், வியாபாரத்திற்காக இருந்தால் ஜகாத் கொடுக்க வேண்டும்.
  6. ஜகாத் கொடுக்க வேண்டிய நகையோ அல்லது பணமோ ஒருவரிடம் ஒரு வருடம் இருந்திருக்க
    வேண்டும் - One Year must elapse over the asset.
     

ஜகாத் கடமையாகும் அளவு:


தங்கம்:

எவர் ஒருவரிடம் 85 கிராம் தங்கம் (10½ பவுன்) அல்லது அதற்கு மேல் இருந்தால், அவர் அதற்கு முழுமையாக ஜகாத் கொடுக்க வேண்டும். (இன்றைய விலைப்படி 10½ பவுனின் விலை 2,52,280 ரூபாய்கள் ஆகும்.

உதாரணத்திற்கு ஒருவரிடம் 15 பவுன் இருந்தால் கீழ்க்கண்ட முறைப்படி கொடுக்க வேண்டும்.

1 பவுன் - ரூ. 24,026.66

15 பவுன் - 15 X ரூ. 24,026.66 = ரூ. 3,60,400.01

கொடுக்க வேண்டிய தொகை = ரூ. 3,60,400.01 ÷ 40 = ரூ. 9010.0003

1 கிராம் - ரூ. 24,026.66 ÷ 8 =  ரூ. 3003.33

வெள்ளி:

612 கிராம் (76½) அல்லது அதற்கு மேல் இருந்தால் அவர் அதற்கு முழுமையாக ஜகாத் கொடுக்க வேண்டும் (இன்றைய நிலவரப்படி 612 கிராம் வெள்ளியின் விலை 32,208.94 ரூபாய்கள் ஆகும்).

உதாரணத்திற்கு ஒருவரிடம் 700 கிராம் வெள்ளி இருந்தால் கீழ்கண்ட முறைப்படி கொடுக்க வேண்டும்.

1 கிராம் - ரூ. 52.629

700 கிராம் - 700 X ரூ.52.629 = ரூ. 36,840.30

கொடுக்க வேண்டிய தொகை = ரூ. 36,840.30 ÷ 40 = ரூ. 921

வங்கித் தொகை அல்லது கையில் இருக்கும் பணம்:

ஒருவர் வங்கியிலோ அல்லது கையிலோ ஓர் ஆண்டு கீழ்க்கண்ட அளவு பணம் வைத்திருந்தால் அவர் மீது ஜகாத் கடமையாகும். ஆதாரப்ப+ர்வமான ஹதீஸ்கள் அடிப்படையில் பண வி~யத்தில் ஜகாத் வெள்ளியைக் கொண்டே கணக்கிடப்படுகிறது. ஆக, இன்றைய நிலவரப்படி 36,840 ரூபாய்கள் ஒருவரிடம் இருந்தால் அவர் ஜகாத் கொடுக்க தகுதியுள்ளவர் ஆகிவிடுவார். ......2


உதாரணத்திற்கு ஒருவரிடம் 1 லட்சம் இருந்தால் கீழ்கண்ட முறைப்படி கொடுக்க வேண்டும்.

வங்கித் தொகை ஸ்ரீ ரூ. 1,00,000

கொடுக்க வேண்டிய தொகை = ரூ. 1,00,000 ÷ 40 = ரூ. 2,500

 ஜகாத் வாங்க தகுதி உடையவர்கள்:

  1. ஃபக்கீர்; - ஜகாத் கொடுக்கும் தகுதியில்லாதவர்;.
  2. மிஸ்கீன்; - செல்வம் ஏதும் இல்லாதவர்.
  3. ஜகாத் வசூலிப்பவருக்கு அவருக்கு கூலியாக அதிலிருந்தே கொடுக்க வேண்டும்.
  4. எவர்களின் இதயம் இஸ்லாத்தின் பக்கம் ஈர்க்கப்பட்டுள்ளதோ : இதன் கருத்து முஸ்லிம்களில் பலகீனமாக உள்ளவர்கள். அவர்களுக்கு ஜகாத் கொடுத்தால் அதன் மூலம் அவர்கள் பலப்பட்டு அவர்கள் ஈமான் உறுதி பெறும் என்றிருந்தால். முஸ்லிம் அல்லாதவர்களுக்கு ஜகாத் கொடுப்பது கூடாது.
  5. அடிமைகள் : அவர்களின் விடுதலைக்காக ஜகாத் கொடுக்கலாம். ஆனால் இன்றைய நிலையில் அவர்கள் இல்லை. ஆனால் இப்படியான நிலையில் உள்ளவர்கள் இன்றைக்கு இருந்தால் அவர்களுக்கு கொடுக்கலாம்.
  6. கடன்பட்டவர்கள் : ஜகாத் தொகையை ஃபக்கீருக்கு கொடுப்பதை விட கடன்பட்டவர்களுக்கு கொடுக்கலாம்.
  7. அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோர்.
  8. வழிபோக்கர்;.


 

ஜகாத் கொடுக்க தகுதியில்லாதவர்கள்:

  1. காஃபிர் (இறைமறுப்பாளர்)
  2. பணக்காரன்
  3. நபிகளாரின் குடும்பத்திற்கு
  4. தந்தை, பாட்டனார்
  5. மகன், பேரன்
  6. மனைவி (அது போன்று மனைவி தன் கணவனுக்கு ஜகாத் கொடுக்க முடியாது.) இவர்கள் அல்லாத மற்ற உறவினர்கள் ஜகாத் வாங்க தகுதி உடையவர்களாக இருந்தால்
    அவர்களுக்கு கொடுப்பதே சிறந்த்து.
  7. பள்ளிவாசல் கட்டுவதற்கு, மதரஸா கட்டுவதற்கு, ரோடு போடுவதற்கு, பாலம் கட்டுவதற்கு ஜகாத்
    கொடுப்பது கூடாது.


மைய்யத்தை அடக்கம் செய்வதற்கு ஜகாத் செலவு செய்யக்கூடாது. ஏனெனில், “பெற்றுக்கொள்வது”
என்பது மேலே உள்ள சூழ்நிலைகளில் இல்லாத காரணத்தால் ஜகாத் கொடுக்க முடியாது.

(ஜகாத்தை பெறுபவர் அதை தன் முழு இஷ்டப்படி செலவு செய்ய தகுதியுடையவராக
இருக்கவேண்டும். அது இல்லாத இடத்தில ஜகாத் கொடுக்க அனுமதியில்லை- இது ஒரு விதி)

உறவினர்களே ஜகாத் கொடுக்க முழுதகுதியுள்ளவர்கள் அவர்கள் மேலே சொல்லப்பட்ட ஜகாத்
வாங்கும் தகுதியில் இருந்தால்.

அதன் பின் முஹல்லா வாசிகள், ஊர் வாசிகள். இந்த அடிப்படையில் ஜகாத் கொடுக்கப்பட்டால்
ஏழைகள் இருக்க மாட்டார்கள்.

தன் ஊர், நாட்டில் உள்ளவர்களை விட மற்ற நாடுகளில் உள்ளவர்கள் மிகவும் தேவையுடைய
முஸ்லிம்களாக இருந்தால் அவர்களுக்கு கொடுப்பது கூடும்.

 

- பேரா. இஸ்மாயீல் ஹஸனீ

 
- நன்றி : அச்சு வடிவமைப்பு : மவ்லவி கலீல் பாகவி குவைத்.
The view points and opinion solely those of the author or source. TamilIslamicMedia.com is not responsible for the posted contents.
 


No rights reserved.