Tamil Islamic Media ::: PRINT
தன்னிகரற்ற தமிழகத்து உலமாபெருமக்கள் வரிசையில்

தன்னிகரற்ற தமிழகத்து
உலமாபெருமக்கள் வரிசையில்

ஹஸரத் அவர்களுக்கு ஹாங்காங்கில் சொற்பொழிவு நிகழ்ச்சி என்ன காரணமோ ஹாங்காங் விமான நிலையத்தோடு சென்னைக்கே திருப்பியனுப்பட்டார்கள்

சென்னை விமான நிலையத்திலிருந்து வீடுசெல்ல ஒத்தைரூபாகூட பாக்கெட்டில் இல்லை சிறுவயது முதலே யாரிடமும் தேவையாகாத ஹஸரத் விமான நிலைய வாசலிலே ஒரு ஓரமாக அமர்ந்துவிட்டார்கள் அப்போது வீடுசெல்ல மூன்றுரூபா இருந்தா போதும்

ஒரு சகோதர சமயத்தவர் வந்து பாய் உங்களுக்கு இறைவனிடம் கையேந்துங்கள் பாடல் தெரியுமா தெரிந்தால் அதை முழுமையாக எனக்கு எழுதித்தாருங்கள்
என்று கேட்கிறார் ஹஸரத் அவர்களும் எழுதித்தருகிறார்கள் அதை பெற்றுக்கொண்ட அந்த சகோதரர் ஹஸரத் அவர்களுக்கு நூறுரூபாய் அன்பளிப்பாக தருகிறார்

ஹஸரத் அவர்கள் நூறுரூபாயை அவரிடம் திருப்பித்தந்து நான் வாழ்நாளில் யாரிடமும் அன்பளிப்பு பெற்றதில்லை ஆகவே இதற்கு கூலியாக ஐந்துரூபா கொடுங்கள் போதும் என பெற்றுக்கொண்டு இல்லம் திரும்புகிறார்கள்

அந்த கண்ணியமிகு உலமா பெருந்தகை ஷைகுதப்ஸீர் மர்ஹூம் புரசைவாக்கம் நிஜாமுதீன் மன்ப ஈ ஹஸரத் அவர்கள்

நல்லோர்களை நேசிப்போம்
நல்லோர்களாய் மரணிப்போம்

The view points and opinion solely those of the author or source. TamilIslamicMedia.com is not responsible for the posted contents.
 


No rights reserved.