வீட்டுப் பெண்களின் வீடியோ போஸ்

- Rafeek A.R

ஆஹா! இதோ பார்! சூப்பர் ஃபிகர்! ஸ்டில் போடப்பா என்று ஒருவர் சொல்கின்றார். மற்றொருவர் ரீவைண்ட் பண்ணப்பா! தூள் பரத்துகிறது என்கிறார். ஏ இது யாரப்பா? இவர் சம்சுகனி சம்சாரம். அது யாரப்பா? ஆள் அசத்தலா இருக்கே? இது நம்ம காதர் தங்கச்சி! தங்களுக்கு முன்னால் ஓடிக் கொண்டிருக்கும் வீடியோ காட்சிகளுடன் மேற்கண்ட வீடியோ கமென்டரி உரையாடல்களும் கலகலப்பாக ஓடிக் கொண்டிருக்கும். இவை எல்லாம் எங்கு நடக்கின்றன என்கிறீர்களா? சாதி சமய பேதமற்று எம்மதமும் சம்மதம் என்ற கோட்பாட்டின்படி சர்வ சமயத்தவரும் சங்கமமாகி தங்கியிருக்கும் அரபு நாட்டின் அறைகளில் தான்.

(அரபு நாடு என்றவுடன் அங்கு பணிபுரியும் எல்லோருமே இப்படித் தான் என்று விளங்கிக் கொள்ளக் கூடாது. மார்க்கப் பணிகளுக்காகவும், மார்க்கப் பிரச்சாரத்தைக் கேட்பதற்காகவும் மட்டுமே தங்கள் விடுமுறை நாட்களை அர்ப்பணிக்கும் சகோதரர்களும் அரபகத்தில் இருக்கின்றார்கள். இங்கு நாம் குறிப்பிடும் சங்கதிகளும் அரபகத்தில் நடக்காமல் இல்லை. வீடியோவில் பெண்கள் போஸ் கொடுப்பதால் ஏற்படும் விளைவுகளைச் சுட்டிக் காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கம்)

ஆக அந்த அறையே ஒரு சிறிய வீடியோ திரையரங்காக மாறி நிற்கும். இந்த வீடியோ படப்பிடிப்பு எங்கு நிகழ்ந்தவை? எல்லாம் நம் வீட்டுத் திருமணத்தில் எடுக்கப்பட்ட வீடியோ தான்.

நம் வீட்டில் கல்யாணம் என்றதும் வீடு களைகட்டி நிற்கின்றது. வீடியோ இல்லாத திருமணமா? என்று கேட்கும் அளவுக்கு வீடியோ கலாச்சாரமும் அநாச்சாரமும் கொடி கட்டிப் பறக்கின்றது.

வீதியில் உலாவரும் வீடியோ கேமரா கல்யாணம் வீட்டில் நடந்தாலும் முதன்முத­ல் காட்சியாவது முச்சந்தியில் நிற்கும் பள்ளிவாசல் அல்லது தர்ஹா மற்றும் ஊரின் புகழைச் சொல்கின்ற புராதனச் சின்னங்கள் தான். இதன் பின் காலையில் கல்யாண வீட்டுக்குள் கேமரா நுழைந்து டீ காப்பி சப்ளை, டிபன், மணமகன் மணமகள் அலங்காரம் என்று மணமகனும் மணமகளும் மணவறையில் நுழைகின்ற வரை கேமரா பின் தொடர்ந்து சென்று ஒரு வழியாக்கி விட்டுத் தான் வெளியேறும்.

மணமகன் இல்லத்தி­ருந்து துவங்கி, வீதி வீதியாகச் சென்று மணமகள் இல்லத்திற்கு அல்லது மண்டபத்திற்குச் சென்று திருமண ஒப்பந்தம் முடியும் வரையிலும் அத்தனையும் படமாக்கப்படுகின்றன. குறிப்பாக இந்தக் கேமரா, பெண்கள் விருந்து பரிமாறும் போது, அங்க அசைவுகள் அனைத்தையும் கிளிக் செய்யத் தவறுவதில்லை. அதாவது அங்கிங்கு அசைந்து, வந்த விருந்தாளிகளை விழுந்தடித்துக் கவனிக்கும் பெண்களை கேமராமேன் குறி தவறாது பார்த்துக் கொண்டிருக்கின்றான். பற்றாக்குறைக்கு அவனுக்குப் பக்க துணையாக லைட் பிடிக்க இன்னொரு எடுபிடியாள் வேறு!

வேலை செய்கின்ற பெண்களுக்கு நிர்ப்பந்தமாக ஆடை விலகல் நடைபெறத் தான் செய்யும். ஆனால் இவையெல்லாம் ஒளிப்பதிவாகிக் கொண்டிருக்கின்றன என்பது தான் வேதனைக்குரிய விஷயமாகும். திருமணத்தில் கலந்து கொள்ளும் பெண்கள் முத­ல் கேமரா மேன்களின் பார்வைகளுக்கு செழிக்க செழிக்க விருந்தாகின்றனர்.

அதன் பின்னர் துவக்கத்தில் நாம் கூறியது போல் அறைகளில் பலரும் உட்கார்ந்து கிரிக்கெட் கமென்டரியைப் போன்ற வர்ணனையுடன் ரசித்துப் பார்க்கும் ஆடவர்களின் பார்வைக்கு இப்பெண்கள் விருந்தாகின்றனர். இவ்வாறு பார்வைகளில் படரவும் தொடரவும் இந்த வீடியோப் பதிவுகள் வகை செய்கின்றன. இவை எல்லாவற்றிற்கும் மேலாக திருமணம் செய்து கொள்ளப் போகும் மணமகன் கூட பெண்ணைப் பார்த்திருக்க மாட்டான். அதற்கு முன்பாகவே கேமராமேன் மணப்பெண்ணை ரசித்துப் பார்த்து விடுகின்றான். பவுடர் பூசி, நகைகள் அணிந்து, வண்ண ஆடைகளுடன் முழு நிலவைப் போல் அமர வைக்கப்பட்டிருக்கும் இந்த மணப்பெண்ணை நோக்கித் தான் கேமரா நிலைகுத்தி நிற்கின்றது.

இப்படி மணப்பெண் முதற்கொண்டு, நமது மனைவி, மக்கள், சகோதரிகள், கொழுந்தியாக்கள் என்று அனைவர் மீதும் பாயும் கேமராவைப் போன்றே இந்த கேமராமேனின் பார்வையும் வளைத்து நிற்கின்றது. இதில் மிகமிக வேதனைக்குரிய விஷயமும் வெட்கக்கேடான விஷயமும் என்னவென்றால் இந்த வீடியோக்களுக்கு நம் வீட்டுப் பெண்கள் கூச்ச நாச்சமின்றி போஸ் கொடுப்பது தான்.

ஆரம்ப கால முஹாஜிர் பெண்களுக்கு அல்லாஹ் கருணை புரிவானாக! ”(நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக!) தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும்” என்ற (24:31) வசனத்தை அல்லாஹ் அருளிய போது, அவர்கள் தங்கள் கீழாடை(யின் ஒரு பகுதி) யைக் கிழித்து அதைத் துப்பட்டா ஆக்கிக் கொண்டார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ர­லி), நூல்: புகாரி 4758

இதே கருத்தைக் கொண்ட செய்தி அபூதாவூதில் 3577வது ஹதீஸாகப் பதிவாகியுள்ளது. அதில் ஆயிஷா (ர­லி) அவர்கள் அன்சாரிப் பெண்களைப் பாராட்டுவதாக இடம் பெற்றுள்ளது.

தன்னை மறைத்துக் கொள்வதில் முன்னணியில் நின்ற அந்த நபித்தோழியர் எங்கே? இன்று வீடியோவுக்குப் போஸ் கொடுக்கும் இந்தப் பெண்கள் எங்கே?

ஒரு காலத்தில் ஒரு பெண் சினிமாவில் காட்சியளிக்கின்றாள் என்றால் சமூகம் அவளைக் காறித் துப்பியது. ஆனால் இன்றோ நடிகைகளுக்கெல்லாம் சமூக அந்தஸ்து வழங்கப்பட்டது போல் ஒரு போ­லித் தோற்றம் ஏற்படுத்தப் பட்டுவிட்டது. இப்படி ஒரு போ­லித் தோற்றம் இருந்தாலும் மற்ற சமுதாய மக்களிடத்தில் கூட, ஒரு பெண் பல பேர் முன்னிலையில் நேரிலோ அல்லது வீடியோவிலோ காட்சியளிப்பது வெறுப்பிற்குரிய காரியமாகவே கருதப்படுகின்றது. இவர்களிடத்திலேயே வெட்கம் தன் வேலையைக் காட்டும் போது ஒரு முஸ்­லிமிடத்தில் இந்த வெட்க உணர்வு எப்படி இருக்க வேண்டும்?

ஈமான் (இறை நம்பிக்கை) அறுபதுக்கும் மேற்பட்ட கிளையாக உள்ளது. வெட்கம் என்பது ஈமானின் ஒரு கிளையாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர­லி), நூல்: புகாரி 9

இந்த ஹதீஸின் அடிப்படையில் ஓர் இறைநம்பிக்கை கொண்ட பெண் அடுத்தவர் முன் காட்சியளிக்க முன்வர முடியுமா? இப்படிப்பட்ட பெண்களுக்கு நபி (ஸல்) அவர்கள் சுவனத்தின் வாடை கூட நுகர முடியாது என்று எச்சரிக்கை செய்கின்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரண்டு சாராரை (இன்னும்) நான் கண்டதில்லை. ஒரு சாரார், அவர்களிடம் மாட்டு வால்களைப் போன்ற சாட்டைகள் இருக்கும். அவற்றைக் கொண்டு மக்களை அடித்துக் கொண்டிருப்பர். இன்னொரு சாரார் பெண்கள் ஆவர். இவர்கள் ஆடை அணிந்தும் நிர்வாணமாக இருப்பார்கள். தளுக்கு நடை போட்டு ஆண்களை வளைத்துப் போடுவார்கள். அவர்களின் தலைகள் ஒட்டகத்தின் திமில்களைப் போன்று (கொண்டை போடப்பட்டு) இருக்கும். எவ்வளவோ தொலைவுக்கு சொர்க்கத்தின் நறுமணம் வீசும். ஆனால் இவர்கள் அதன் வாடையைக் கூட நுகர மாட்டார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர­லி), நூல்: முஸ்­லிம் 3971 பெண்கள் ஆண்களின் முன்னால் காட்சிப் பொருளாகத் தோன்றுவதன் மூலம் சுவனத்தில் நுழையும் பாக்கியத்தை இழந்து விடக் கூடாது. இப்படி வீடியோவில் பதிவாகி காட்சிப் பொருளாகும் பெண்கள் ஒரு தடவை மட்டும் பாவம் செய்யவில்லை. அந்த வீடியோ கேஸட்டுகள் எப்போதெல்லாம் ஆண்களால் பார்க்கப்படுகின்றதோ அப்போதெல்லாம் பாவம் பதியப்படும் நிலையை அடைகின்றார்கள்.

ரோஷம் இழந்த ஆண்கள் இஸ்லாம் மனிதர்களுக்கு ரோஷ உணர்வை ஊட்டுகின்றது. பின்வரும் ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் இதைத் தெளிவாக உணர்த்துகின்றார்கள்.

”என் மனைவியுடன் ஓர் ஆண் இருக்கக் கண்டால் வாளின் முனையாலேயே அவனை நான் வெட்டுவேன்” என்று ஸஅத் பின் உபாதா (ர­லி) அவர்கள் கூறினார்கள். இந்தச் செய்தி நபி (ஸல்) அவர்களை எட்டிய போது, ”ஸஅதின் ரோஷத்தைக் கண்டு நீங்கள் வியப்படைகின்றீர்களா? அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அவரை விட அதிக ரோஷமுள்ளவன். அல்லாஹ் என்னை விடவும் அதிக ரோஷமுள்ளவன். அல்லாஹ் தன் ரோஷத்தின் காரணத்தால் தான் வெளிப்படையான மற்றும் மறைவான மானக்கேடான செயல்கள் அனைத்தையும் தடை செய்து விட்டான். (திருந்துவதற்கு வாய்ப்பளித்து) விட்டுப்பிடிப்பதை மிகவும் விரும்புபவர் அல்லாஹ்வை விட வேறெவரும் இல்லை. அதனால் தான் நற்செய்தி சொல்பவர்களையும் எச்சரிக்கை செய்பவர்களையும் அல்லாஹ் அனுப்பி வைத்தான். அல்லாஹ்வை விட மிகவும் புகழை விரும்புபவர்கள் வேறெவருமில்லை. அதனால் தான் அல்லாஹ் சொர்க்கத்தை அளிப்பதாக வாக்களித்துள்ளான்” என்று கூறினார்கள். அறிவிப்பவர்: முகீரா பின் ஷுஅபா (ர­லி), நூல்: புகாரி 6846, 7416 ஒரு மனிதனுக்கு ரோஷம் எவ்வளவு முக்கியம் என்பதை இந்த ஹதீஸ் தெளிவாக உணர்த்துகின்றது. ஆனால் இந்த விஷயத்தில் ஆண்கள் ரோஷமிழந்து நிற்கின்றார்கள். அதனால் தான் மணம் முடிக்கப் போகும் தானே சரியாகப் பார்த்திராத நிலையில் ஒரு கேமராக்காரன் பார்த்து அவளது அழகை ரசிப்பதற்கு அனுமதிக்கின்றான். இதுபோன்று தனது வீட்டுப் பெண்கள் அனைவரையும் காட்சிப் பொருளாக ஆக்கி, அதை அடுத்தவர்களின் பார்வைகளுக்கு விருந்தாகப் படைக்கின்றான்.

இது இவனது ரோஷ உணர்வு முற்றிலும் உலர்ந்து போய் செத்து விட்டது என்பதையே காட்டுகின்றது. இதில் ஏகத்துவவாதி என்று கூறுவோர் கூட விதிவிலக்காக இல்லை. அவர்களது வீட்டிலும் திருமண உரை என்ற பெயரில் வீடியோ எடுக்கப்பட்டு, அதில் குடும்பப் பெண்களை எல்லாம் அரங்கேற்றும் அவலத்தை நடத்தி விடுகின்றார்கள்.

திருமணங்களில் வீடியோ கலாச்சாரம், ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு இல்லாமல் இஸ்லாமிய சமூகத்தைத் தொற்றி நிற்கும் ஒரு கொடிய தொற்று நோயாகும். அந்நிய ஆடவர்களின் பார்வைகளில் நம்முடைய பெண்கள் விருந்தாகும் வீடியோ கலாச்சாரத்தையும் இதை அடிப்படையாகக் கொண்ட திருமணங்களையும் ஏகத்துவவாதிகள் புறக்கணிக்க வேண்டும். இத்தகைய கலாச்சார சீரழிவை விட்டும் நமது சமுதாயத்தைக் காக்க வேண்டும்.

போட்டோக்கள் கல்யாண வீட்டில் வீடியோ எடுப்பது சமீபத்தில் வந்த புதிய கலாச்சாரம் என்றால் போட்டோ எடுத்தல் என்பது புரையோடிப் போன ஒரு பழக்கமாக நீண்ட காலமாக நமது சமுதாயத்தில் உள்ளது. இங்கும் மணமகளை கேமராக்காரன் முதன்முத­ல் பார்த்து தனது கேமராவைப் போலவே கண் சிமிட்டிக் கொள்கின்றான். வீடியோ கேஸட்டாவது பிளேயரில் போட்டால் தான் படம் தெரியும். ஆனால் இந்த போட்டோக்களோ ஆல்பங்களில் சேகரிக்கப்பட்டு அவரவர் தங்கியிருக்கும் அறைகளிலுள்ள மேஜைகளில் பார்வைக்கு வைக்கப்படுகின்றது.

போட்டோக்கள் விஷயத்தில் பாஸ்போர்ட், அடையாள அட்டை, டிரைவிங் லைசன்ஸ் போன்ற அவசியத் தேவைகளுக்காகவும், ஆதாரங்களுக்காகவும் பயன்படுத்துவதில் தவறில்லை. ஆனால் இவையன்றி அநாவசியமாக போட்டோ எடுத்து அதைப் பாதுகாத்து வைப்பதன் மூலம் நாம் பாவமான காரியம் செய்தவர்களாகின்றோம். இத்தகைய உருவப்படங்கள் வீட்டில் இருக்கையில் மலக்குகள் வருவது கிடையாது. நாயோ உருவப்படமோ உள்ள வீட்டில் வானவர்கள் நுழைய மாட்டார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூதல்ஹா (ர­லி), நூல்: புகாரி 3322

ஆயிஷா (ர­லி) வீட்டுக்கு நபி (ஸல்) அவர்கள் வருகின்ற போது உருவப்படங்களைக் கண்டு உள்ளே பிரவேசிக்க மறுக்கின்றார்கள் என்பதை புகாரி 3226 ஹதீஸில் காண முடிகின்றது.

எனவே நமது வீட்டில் அருளைச் சுமந்து வரும் மலக்குகள் உள்ளே வருவதற்குத் தடையாக அமைகின்ற இந்த உருவப் படங்களை விட்டும் நாம் தவிர்ந்திருக்க வேண்டும்.

இது மட்டுமின்றி நாம் ஏற்கனவே குறிப்பிட்டபடி திருமண வீடியோவினால் ஏற்படும் அனைத்து தீமைகளும் திருமண போட்டோக்களாலும் ஏற்படும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே இது போன்ற தீமைகளை விட்டும் நாம் விலகியிருப்போமாக!

நன்றி: http://chittarkottai.com/general/homely_vedios.htm




1 பொறுத்தோம்! ஆனால் பொறுக்கமாட்டோம் யா ரஸூலுல்லாஹ்!
 

எங்களது நாடுகளை ஆக்கிரமிக்கிறார்கள்.  பொறுத்துக் கொண்டிருக்கின்றோம்!
எங்களது இல்லங்களை சூறையாடுகிறார்கள். பொறுத்துக் கொண்டிருக்கின்றோம்!
எங்களது குழந்தைளை கொல்கின்றனர். பொறுத்துக் கொண்டிருக்கின்றோம்!

 
2 வாழ்க்கைக்கான பாடம் பாடப்புத்தகத்தில் அல்ல; போதிப்பவர்களின் வாழ்க்கையில் இருக்கிறது.
  நம் காலத்து உரையாளர்கள் மணிக்கணக்கில் நிகழ்த்தும் உரைகளின் பலன் பெரும்பாலும் கேள்விக்குறிதானே!
 
3 நரக மாளிகை - தாய் மண்ணின் மீது பற்று கொண்ட ஒவ்வொரு இந்தியனும் கட்டாயம் படிக்க வேண்டிய நூல்!
  கோவிந் நிகலானி இயக்கிய த்ரோஹால் என்ற திரைப்படம் தமிழில் பிசி ஸ்ரீராம் இயக்கத்தில் 1995ம் ஆண்டு குருதிப்புனல்என்ற படமாகியது. இந்தியை விட தமிழில் அதிக வரேவற்பு கிடைத்த படம் இது. இப்படத்தில் வன்முறைக்காட்சிகள் அதிகம் அத்துடன் தீவிரவாதக்குழுவாக அடையாளப்படுத்தப்பட்ட குழு அரசு இயந்திரத்திற்குள் ஊடுறுவி செய்யும் குள்ளநரித்தனங்கள், இயக்கத்தின் பெண் உறுப்பினர்களை பாலியல் வன்புணர்விற்கு உள்ளாக்குவது உட்பட பல விஷயங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன
 
4 இங்கிலாந்தில் தப்லீக் ஜமாத் அனுபவங்கள்
  இறைவனின் உதவியை பெற்றுக் கொண்டிருக்கும் ஜமாத், தப்லீக் ஜமாத்.
 
5 அந்தப் பெண்களாக நாம்...
  "இந்த வெயில் காலத்தில் பர்தா அணிவது உங்களுக்கு அதிக உஷ்ணத்தையும் கஷ்டத்தையும் தரவில்லையா?" இந்தக் கேள்விக்கு அந்தப் பல்கலைக்கழக மாணவிகள் இப்படிப் பதில் சொன்னார்களாம்: "நரகத்தின் வெப்பம் இதை விடக் கொடியதாக இருக்கும்!"
 
6 தன்னிகரற்ற தமிழகத்து உலமாபெருமக்கள் வரிசையில்
7 2021 ல் தமிழகம் இழந்த ஆலிம்கள்:
8 இமாம் அபுல் ஹஸன் நத்வி ரஹிமஹுல்லாஹ்
9 நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்ட 10 துஆக்கள்,
10 நோன்பும் மனக்கட்டுப்பாடும்
11 இவ்வளவு முரண்பாடுகளுடன் இறைவனிடம் கையேந்த வெக்கமாயில்ல!?
12 ஐரோப்பாவின் பிரபல்யமான அறிவுத் திருட்டுகள்.....
13 திருமணப் பதிவேடு எழுதுவதில் அக்கறையின்மை......!
14 நீ வரைந்த பாதை வழியே வாழ்க்கை ஓடுவதில்லை
15 முதியோர் பராமரிப்பு – இஸ்லாமிய கண்ணோட்டம்
16 இளையான்குடியில் உருது மக்கள்
17 கொண்டாடப்பட வேண்டிய ஆளுமைகள் : ஈரோடு மீ. கிபாயத்துல்லாஹ் பாகவி
18 மரணம் நோக்கி...
19 ஸிமம் தஃப்தரி (ZIMEM DEFTERI) - ஏழைகளின் கடனையடைத்தல்
20 மௌலானா சாத்(தா.ப) அவர்களுக்காக ஜரோப்பாவிலுள்ள ஒருதாயியின் அன்பான செய்தி
21 பேசாமல் இரு, கதவை அல்லாஹ் எப்படித் திறக்கிறான் என்று பார்
22 (புத்தாண்டு) கொண்டாட்டங்களை விட மனித உயிர்கள் அற்பமானவையா..?
23 அதுவென்ன சுன்னத் வல் ஜமாஅத்?
24 இறந்த பின் வாழ சந்தர்ப்பம்.
25 இங்கிலாந்து மசூதி வீடியோ சொல்லும் உண்மைகள்!
26 பாரதியும் இஸ்லாமும் - மாலன்
27 பயணியின் வாழ்க்கை - பேரா. ஹஸனீ
28 கண்ணாடி வாழ்கை - பேரா. ஹஸனீ
29 ஆடை அவிழ்ப்பு அழகாகுமா......
30 நபிகளாரும் காட்சிப்படுத்துதலும் (Visualization)
31 அன்றாட வாழ்வில் இஸ்லாம் - 02
32 அன்றாட வாழ்வில் இஸ்லாம் - 01
33 பெண்களிடம் மாற்றம் வேண்டும்
34 எம் சமூகம் இந்த உலகை ஆளும்
35 தவிர்ப்போம் நாற்காலி தொழுகைகளை...
36 வாய்ப்புகளை நழுவ விடாதீர்கள்!
37 பிரான்சால் நாடுகடத்தப் பட்டு பின்னர் பாராட்டப்பட்ட போராளி
38 மனம் திறந்த மடல் - மனம் திருந்திய தொண்டன்
39 ரமளானில் சமூக நலனுக்காக நாம் செய்ய வேண்டிய துஆ
40 புனித மிஃராஜ் இரவு அமல்கள்!
41 புனிதமான ரஜப் மாதத்தின் மிஃராஜ் இரவின் சிறப்புகள்
42 மனைவிக்காக துஆ செய்வதும் ஒரு சுன்னத்!
43 மனித உடம்பின் 99 இரகசியங்கள் !
44 தஹஜ்ஜூத் தொழுகையின் சிறப்பு
45 ஒவ்வொரு முஸ்லீமும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை
46 எது வணக்கம்..?
47 விஞ்ஞானிகளுக்கெல்லாம்- விஞ்ஞானி.... அல்ஹாசன்விஞ்ஞானி!
48 அன்பு மனைவிகளுக்கு ! அருமையான உபதேசங்கள்!!
49 தமிழ்க் கலாச்சாரத்தை ஆதரிப்போம்.இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பாதுகாப்போம்.
50 இமாம் அபூ ஹனீஃபா (ரஹ்)
51 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 5)
52 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 4)
53 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 3)
54 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 2)
55 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 1)
56 தாயாருக்கு மருந்து வாங்க பணமில்லை ஆனாலும் வேண்டாம் இந்த நான்கு கோடி - ஜுனைத் ஜம்சேத்
57 மீலாது விழா கொண்டாடுவது கூடுமா?
58 இஸ்லாத்தில் பெண்களின் சிறப்பு:
59 நாட்டங்கள் நிறைவேற ஸலாத்துன் நாரிய்யா ஓதுவோம்
60 வைரங்கள் நாங்கள்! - பொது சிவில் சட்டம் பற்றி ஓர் இஸ்லாமிய பெண்
61 அறிவமுதூட்டிய எங்கள் ஆன்மீக ஆசான் கமாலுத்தீன் ஹள்ரத் கிப்லா அவர்கள்......பற்றிய ஒர் மலரும் நினைவு
62 ஆண் மகனின் வாழ்வியல் சோதனை !!!
63 மனைவியை_நேசிங்கள்..
64 தாயுடன் வாழும் வாய்ப்புப் பெற்றவர்களே!
65 அம்மா! அம்மா!
66 அந்த_ஏழைப்_பெண்ணின்_ஜகாத்‬!
67 இந்திய சுதந்திர போராட்ட நாயகர்கள்
68 செருப்புத் தொழிலாளியின் ஹஜ் பயணம்
69 இமாம்களும் மத்கபுகளும்.
70 பெற்றோர்க்கு மரியாதை செய்யுங்கள்.
71 சொர்க்கத்தில் முதலில் நுழையும் ஏழைப் பெண்மணி..!
72 பராஅத் இரவின் சிறப்புகள்
73 வாப்பா!
74 ஆண்ட்ராய்டு போனும் அண்ணலாரின் உம்மத்தும்!
75 கிராமமோ... நகரமோ... அவர்களை கண்காணித்த​படி இருப்பதே பாதுகாப்பது
76 கருத்துக்குக் கருத்தால் பதிலளிப்போம்!
77 என் கேள்விக்கு இறைவனின் பதில்!
78 அரிய பண்புகளைக் கொண்ட அல்கமா (ரலி)வின் குழு
79 இதிலென்ன வெட்கம்?
80 தாய் மடி தேடும் குழந்தைகள்: (வல்லூரின் கரங்களில் நாம்)
81 பழையன கழிதலும் புதியன புகுதலும்
82 நொண்டிக் குதிரைக்குச் சறுக்கியதே சாக்கு !
83 கற்பில் கவனம் தேவை
84 வம்புக்கு இழுப்பதில் என்ன சுகம் இவர்களுக்கு?
85 புக்கூரும் (காலை நேரமும்) இறையருளும்
86 இஸ்திஃகாராவின் சிறப்பு
87 தஜ்ஜால் பற்றிய முன்னறிவிப்பும் பாதுகாப்பிற்கான வழிமுறையும்.
88 இஸ்லாத்தின் பார்வையில் கோபம்!!!
89 உங்களையும் தாக்கலாம் இந்த நோய்!
90 தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-3/3)
91 தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-2/3)
92 தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-1/3)
93 ஏழு குணங்களை தவிர்ந்து கொள்ளுங்கள்! நிம்மதி பெறுங்கள்!
94 கணவன் மனைவி – அற்புதமான விஷயங்கள்.
95 எச்சரிக்கை: இப்போதாவது விழித்துக்கொள்வோம்.
96 இறுக்கமும் இரக்கமும்
97 இஷா தொழுகையும் இரவு உணவும்
98 கழிவறைகளில் கிப்லா முன்னோக்கப்பட கூடாது
99 மனிதன் உயிர்வாழ இன்றியமையாதது
100 தினமணி தலையங்கம்: 'இறைவா, எங்கே போகிறோம்?'
101 இறைவணக்கமும் இயலாமையும் (சேரில் அமர்ந்து தொழலாமா?)
102 மரணம் நம் கண்களை தழுவட்டுமே
103 முஸ்லிம் சமூகத்தின் வீட்டுமொழியாக வேண்டிய மொழி அறபு மொழி
104 பெயர்களை நினைவில் வைப்போம்
105 ஊடகங்கள் பரப்பிவரும் முன்ஜென்மபித்தலாட்டம்
106 இறை பிரியத்தோடு உலகில் தலைநிமிர்ந்து வாழ
107 ஹிஜ்ரீ பிறந்த வரலாறு
108 மனிதனுக்கான சுவனத்தை பரிந்துரைக்கும் இரண்டு விடயம்
109 சீனாவில் இஸ்லாம் அறிமுகம்
110 ஆட்சியை நாம் தேடவேண்டுமா? அல்லது ஆட்சி நம்மைத் தேடவேண்டுமா? (பாகம் 2/2)
111 முஸ்லீம் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் தொண்டு நிறுவனங்கள் !...
112 ஒரு 2.5 கதை
113 ஆட்சியை நாம் தேடவேண்டுமா? அல்லது ஆட்சி நம்மைத் தேடவேண்டுமா? (பாகம் ½)
114 இம்ரானா விவகாரம் மீடியாக்கள் நடத்திய மானபங்கம்
115 உலகத்தில் யாருமே ஏழை இல்லை
116 பராஅத் இரவு –நாம் பெற வேண்டிய படிப்பினைகள்பகைமையை முடிவுக்கு கொண்டு வருவோம்
117 வ.உ.சி க்கு 10 லட்சம் ரூபாய்க்கு கப்பல் வாங்கி கொடுத்த பக்கீர் முஹம்மதுவை தெரியுமா?
118 நம் துஆக்கள் ஏன் கபூலாவதில்லை?
119 நபிமொழியை மெய்ப்பித்தது இன்றைய விஞ்ஞானம்!!!
120 குறைகளை மறைத்தல்
121 உலகத்தூதர் கூறிய உண்மை சகோதரத்துவம்!
122 நல்ல பெண்மணி
123 பிஸ்மில்லாஹ் சொல்லியாச்சா...? பாரம்பரியமும் நாகரீகமும்
124 💥 யார் அந்த மாமனிதர்..?
125 ஈர்ப்பை விதைப்போம்!
126 ஒரே ஒரு கேள்வி 10 விதமான அற்புதமான பதில்கள்
127 யார் இந்த துலுக்கன்?
128 ஷஹீத் இமாம் ஹஸனுல் பன்னாவின் 10 அறிவுரைகள்
129 இவ்வுலகிலும் மறு உலகிலும் தன்னிறைவு தரக்கூடிய விஷயங்கள்
130 முஸ்லிம் உலகம் இஸ்லாத்தை தொலைத்து விட்டதா ?
131 உலமாக்களின் தகுதி… அந்தக் காலம் எப்போது வரும்
132 நிம்மதி - சிறுகதை
133 வாழும் இறைநேசர்களிடம் வாழ்த்துப் பெறுவோம் !
134    ஓ...மானிடனே,என்னை தெரிகிறதா?
135 சுலைஹாவின் தவறை உணர்த்திய கணவனின் கடிதம்!
136 நபி வழி வெற்றிக்கு வழி இஸ்லாத்தில் தெரிந்து கொள்ளவேண்டியவை.
137  வாழ்க்கை வாழ்வதற்கே !
138 உம்மதினரின் மீது பெருமானாரின் அளவு கடந்த அன்பு
139 விற்கப்படும் மார்க்கம்
140 அழகிய ஐம்பெருங் குணங்கள் !
141 தன்னம்பிக்கை கொள்ளுங்கள் !
142 பார்வைகள் பலவிதம் !
143 நேர மேலாண்மை / திட்டமிடல்
144 பள்ளிக்கு அருகில் வாழ்வோம்
145 எச்சரிக்கை: தொலைக்காட்சியில் போட்டி என்ற பெயரில் மோசடி
146 அந்நியப் பெண்ணுடன் ஆண் - அந்நிய ஆணுடன் பெண் கைகுலுக்கலாமா?
147 தந்தைகளே! கவனியுங்கள்
148 வரலாறு புகட்டும் பாடம்
149 அல்குர்ஆன் என்னும் மதுரம்
150 முஸ்லிம்கள் செய்ய வேண்டியது என்ன?
151 ஊருக்குள் விடாதீர்..விளம்பரமல்ல விபரீதம்!!
152 கஸ்டம்ஸில் எச்சரிக்கையாக இருங்கள்!
153 நாம் தான் முயல வேண்டும்.
154 உணரப் படாத தீமை சினிமா
155 குழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள்!
156 காசாகும் குடும்ப அந்தரங்கங்கள். எச்சரிக்கை!!
157 கற்பா? கல்லூரியா?
158 நான் ஏன் முஸ்லிம் ஆனேன்? - முன்னாள் கன்னியாஸ்திரி!
159 கசாப்புத் தொழில் சிறந்தது....
160 சுவர்க்கத்தை பரிசாக பெற்றுத் தரும் நற்கிரியைகள்
161 நான் ஏன் முஸ்லிம் ஆனேன் ?
162 ரகசிய கேமராக்கள்: பெண்களே எச்சரிக்கை!
163 இருளை நோக்கிச்செல்லும் வெளிச்சமுள்ள சமுதாயம்! தீர்வு என்ன? எப்படி செயல்படுத்துவது?
164 செல்வந்தர் மகனுக்கு கூறிய மரண சாசனம். (சிறுகதை)
165 மேற்கத்திய கலாச்சாரம் TO இஸ்லாம்- முஸ்லிம் பெண்ணியவாதியின் பயணம்
166 என் ஹிஜாப் என் உரிமை!!!
167 சபைகளில் கண்ணியம் தவறும் கணவர்கள்
168 முகமாகும் பெண்கள்!!
169 நற்குணமே இஸ்லாத்தின் அடையாளமாகும்!
170 இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்
171 உங்கள் தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுகிறது?!
172 அன்புச் செல்வங்களுக்கு....(நமக்கும்) - கேள்வி பதில்கள்
173 செல்போன்கள்... ஜாக்கிரதை!
174 இணையதளத்தில் கனவன்-மனைவி அந்தரங்க உரையாடல் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்
175 வெற்றியடைய 10 சுலபமான வழிகள் !
176 ஒரு வழிப்போக்கனின் வாழ்க்கைப் பயணம்!
177 மிஸ்டு காலா... பெண்களே எச்சரிக்கை!
178 ஈமானே-உன் விலையென்ன?
179 இஸ்லாமியரும்-எதிர் நீச்சலும்
180 நாளை நமதா? - ஏ.பி. முஹம்மது அலி ஐ.பி.எஸ். (ஓய்வு)
181 அமைதியாக இருந்தால் அமைதி வருமா ?
182 அமர்ந்தது போதும் எழுந்து வாருங்கள் பயணிப்போம்
183 பயங்கரவாதிகள் எல்லாம் முஸ்லிம்களா?
184 ஒளிரட்டும் பண்மைமிகு மீலாது விழாக்கள் ! ஒழியட்டும் வன்மையிலிருந்து மீளாத விழாக்கள் !!
185 கட்டாய மத மாற்றத்திற்கு இஸ்லாத்தில் இடமில்லை
186 மக்தப் மதரஸா ... ஒரு அமைதிப் புரட்சி
187 யுக முடிவின் இறுதிக்கட்டமா நெருங்கிவிட்டது?
188 "ஜம் ஜம்” தண்ணீர் தோன்றிய வரலாறு
189 மெட்ராஸ் ஐ - குறித்த உண்மைகள் :
190 ஹிஜ்ரீ பிறந்த தியாகங்களின் வரலாறு !
191 தாமிரபரணியை உறிஞ்ச வரும் 'பெப்சி' நிறுவன ஆலை
192 பிள்ளைகளை பாதுகாப்பாக வளர்க்க பெற்றோர்களுக்கு சில அழகிய வழி முறைகள்:
193 அறிவைத் தேடுவோம்!
194 தமிழ் மண்ணில் வேர் கொள்ள முடியவில்லை!
195 ஒரு மகன் தன் அப்பாவைப்பற்றி என்ன நினைக்கிறான்?
196 பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா? ஏதிர்த்தாரா?
197 இந்திய முஸ்லிம்களின் முதல் எதிரி அல் காய்தா:
198 பிள்ளையாரப்பா பெரியப்பா,புத்திமதியை சொல்லப்பா
199 அவ்வளவு ஈமானா? அல்லாஹ்வின் மேல் அவ்வளவு நம்பிக்கையா?
200 என் மகனிடம் சொல்லுங்கள்:-ஒரு தாயின் மனக்குமுறல்!
201 சமூக நலத்திற்கு உகந்த சட்டம் எது?
202 “வேர்கள்” வரலாறு!
203 கருத்து வேறுபாடு சம்பந்தமாக சட்டங்கள்
204 என் மகனிடம் சொல்லுங்கள்:-ஒரு தாயின் மனக்குமுறல்!
205 கலீல் அஹ்மத் கீரனூரி (ரஹ்) அவர்களின் அல்அஃப்லாக் வல்அவ்காத் நூல் அறிமுகம்
206 மனிதனின் தேவை ! – மன அமைதி
207 யா அல்லாஹ் ரஜப் ஷஃபான் மாதங்களில் எங்களுக்கு அருள் புரிவாயாக. இன்னும் ரமளானை அடையச் செய்வாயாக
208 அண்ணல் நபிகளாரின் பொன் மொழிகள்-மெளனம் கொள்ளுங்கள்.
209 அல்லாஹ் அறிவுறுத்தும் அமுதமொழிகள்
210 பிரார்த்தனைகள் ஏன் ஏற்கப்படவில்லை?
211 மஸ்ஜித் (பள்ளிவாசல்)
212 பேச்சு,மெளனம்
213 ஜனாஸா - மைய்யத்
214 கிலாஃஃபா மறைவு: இந்தியா தடுமாறியது.. எகிப்து கவலையுற்றது
215 ஹஜ் யாத்திரை - சில சிந்தனைகள் !!!
216 ஜெனரல் எர்வின் ரோமல் கண்ட காலித் இப்னு வலீத் (ரலி )
217 முஸ்லிம்களை ஏன் பயங்கரவாதிகளாக சித்தரிக்க முற்படுகிறார்கள்?
218 வெளிநாடுகளில் வேலை செய்யும் என் சகோதரர்களே!
219 அரிஸ்டாட்டில் முதல் நியூட்டன் வரை
220 இறை நேசர்கள்- தொடரும் விளக்கம்
221 வலிமார்கள் என்பவர்கள் யார்?
222 காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயீல் ஸாஹிப் அவர்களின் பதில் சொல்லும் பாங்கு
223 அமைதியாக இருந்தால் அமைதி வருமா ?
224 மனித குல விரோதி
225 எனது பெயர் ஜனாஸா!
226 பாபரா ராமர் கோயிலை இடித்திருப்பார்???
227 கடன் கொடுப்போரும் வாங்குவோரும் நடந்து கொள்ள வேண்டிய முறை
228 மோடியை விட்டு 2002 ஏன் விலகாது?
229 இஸ்லாம் வாள் முனையில் பரப்பப்பட்டதா?
230 வதைக்கும் விவாகரத்து வழக்குகள்
231 ஹிந்து - குறித்து இஸ்லாம்!
232 தமிழரும் இசுலாமியரும்
233 குர்ஆன் மக்தப் - காலத்தின் தேவை!
234 இஸ்லாம் மிருக வதையை தூண்டுகின்றதா?
235 மில்லர் கண்ட குர்ஆனின் அதிசயங்கள்
236 முஹம்மது(ஸல்) எனக்கு நடுநிலையானவர்
237 முஸ்லிமல்லாதவர்களுக்கு ஒரு கடிதம்
238 அயோத்தி ராமன் அழுகிறான் -கவிஞர் வைரமுத்து
239 துருக்கி மன்னரின் விலை 10 பொற்காசுகளே!
240 கற்பனைகளும் இஸ்லாமும்
241 வணங்கி மகிழ்கிறோம் - ஆச்சிரியம் ஆனால் உண்மை.
242 சுத்தம் பேணுவோம்,நுரையீரலை காப்போம்!
243 நபிகள் நாயகத்தை வசைபாடிப் படம் எடுத்தவர்....
244 மது ஒரு பெரும் பாவம்
245 மகாத்மா காந்தி, பெரியார் சந்திப்பு
246 பெற்றோர்களைப் பேணுவோம்!
247 யார் இவர்? பேச்சாளர்..போர் வீரர்..இராணுவ தலைவர்..
248 சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-3)
249 உடல் உறுப்புகளை தானம் செய்வதுபற்றி இஸ்லாம்
250 தவ்பா என்னும் பாவமன்னிப்பின் சிறப்புகள்!
251 சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-2)
252 சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-1)
253 இதயத்தை கவனமா பாத்துக்கங்க!
254 இமாம்களை கண்ணியம் செய்வோம்!
255 உமர் (ரலி) அவர்களுக்கு நண்பர்கள் எழுதிய கடிதம்.
256 மறுமை வாழ்வை நேசிப்போம்!
257 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 8 - முடிவு)
258 சொல்லின் செல்வர் எம்.எம். பீர் முஹம்மது சாகிப்
259 சுதேசி சிந்தனைகள்.......
260 உள்ளத்தை தூய்மை படுத்துவோம்!
261 கல்வி நல்லோர்களின் சொத்து!
262 மனிதர்களுக்கு மீன்கள் சொல்லும் பாடம்!
263 வாழ்க்கைக்கு உதவும் வாய்மைமொழிகள்! (தொடர்- 1)
264 வாழ்க்கைக்கு உதவும் வாய்மைமொழிகள்! (தொடர்- 2)
265 பாராளுமன்ற தேர்தலும் முஸ்லிம்களின் நிலைபாடும்!
266 தொடர்பூடக ஒழுக்கவியல்: அல்குர்ஆனின் வழிகாட்டல்
267 உண்ணுவதிலும்,குடிப்பதிலும் தூய்மையை பேணுவோம்!
268 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 7)
269 செயற்கைக் கருத்தரிப்பும் வாடகைத் தாயும்!
270 அறிவைத் தேடுவோம்!
271 ஆக்காதீர் ஆசனங்களாக
272 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 5, 6)
273 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 3)
274 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 4)
275 மோதினார் அப்பாவின் கதை அல்ல நிஜம்
276 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 1)
277 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 2)
278 ஸுபுஹ் தொழுகையும் நாமும் ???
279 ஆஸாத் விசாவா?உஷார்,உஷார்!
280 அதிகாலை நேரமும் சுபுஹுத் தொழுகையும்
281 தன்பக்கமா? தன்னிகரற்ற கொள்கையின் பக்கமா?
282 சமுதாய தலைவர்களே சிந்தியுங்கள்!
283 படிப்பினையூட்டும் ஒரு நிகழ்வு!
284 உபதேசம் என்பது உலமாக்களின் தனி உடைமையா?
285 பெண் குழந்தை ஒரு பாக்கியம்
286 டாக்டர் ஜாகீர் ஹுசைன் – கல்வியுடன் சுகாதாரத்தையும், ஒழுக்கத்தையும் கற்றுத்தந்தவர்
287 வெப்கேமிரா...எச்சரிக்கை...!
288 நான் ஒருத்தனிடம் ஏமாந்தேன் நீ என்னிடம் ஏமாறு என்பதே மல்டி லெவல் மார்கெட்டிங் - AMWAY Products
289 மனமகிழ் குடும்பம்:நல்லதோர் குடும்பத்தலைவி!
290 மனமகிழ் குடும்பம்: நல்லதோர் குடும்பத் தலைவன்
291 விசுவரூபம் ஒரு விளக்கம்
292 விஸ்வரூபமும் முஸ்லீம்களும்.
293 மதுவை ஒழிப்போம்,மாதுவை காப்போம்!
294 வாழ்க்கைக்காக ஒரு மரணம்
295 கண்ணாடிகள் கவனம்
296 360 மூட்டுக்கள் (எலும்பு இணைப்புக்கள்) Bone Joints..! ( 7-ம் நூற்றாண்டு முன்னறிவிப்பு )
297 ஷைத்தானின் விரோதிகளும், நண்பர்களும்
298 ஹஜ்ரத் அலி (ரலி) அவர்களின் அறிவுரைகள்
299 துஆக்கள் ஏன் ஒப்புக்கொள்ளப் படுவதில்லை?
300 சிந்திக்க தவறும் ஆண்களுக்கு மட்டும்
301 கருத்து வேறுபாடுகள்.
302 நபியவர்கள் எங்கள் உயிருக்கு மேல்
303 ஹிஜாபுக்குப்பின் கண்ட வாழ்க்கை
304 யூத கிருத்துவ வக்கிரப்படமும் விமர்சனங்களை வென்ற விண்புகழ் வேந்தரும்
305 தஜ்ஜால் Vs டெலிவிஷன்
306 ஓ! என் இளைய சமுதாயமே!
307 இதயத்தை பாதுகாக்க யோசனைகள்!
308 வீண் செலவு வேண்டாமே