ஹிஜ்ரீ பிறந்த தியாகங்களின் வரலாறு !

அனைவருக்கும் புலம்பெயர்தல்தெரிந்திருக்கும். அதுதான் அரபு மொழியில் ஹிஜ்ரா. பிறமொழிகளில் migration, புலம்பெயர்தல் என்று யதார்த்தமாய்க் கையாளப்படுவதைப் போலன்றி ஹிஜ்ரா என்றதுமேஅந்த வார்த்தைக்கு இஸ்லாமிய வழக்கில் பெரும் முக்கியத்துவம், புனிதம் வந்துஒட்டிக் கொள்கிறது. காரணம் இருக்கிறது.

கையை இறுகப் பற்றிக்கொண்டால் சற்றேபின்னோக்கிச் சென்று மக்காவை எட்டிப்பார்த்துவிட்டு வந்துவிடலாம்.

அப்துல்லாஹ்வின் புதல்வர் முஹம்மதுக்குஅப்பொழுது 40 வயதிருக்கும். அனாச்சாரத்தில் மூழ்கிக் கிடந்தது அரேபியா. அவற்றையெல்லாம்பார்த்து வெறுத்து ஓதுங்கி,மனைவியும் மக்களுமாய்த் தன் வாழ்க்கையைவாழ்ந்து கொண்டிருந்தார்அவர். திடீரன்று ஒருநாள் வானத்திலிருந்து வந்திறங்கினார் வானவர் தலைவர் ஒருவர் -ஜிப்ரீல் (அலைஹிஸ்ஸலாம்). 'எல்லாரையும் எல்லாவற்றையும் படைத்தவன் யார்?' என்ற ஒற்றைக் கேள்விக்கான விடை தேடிக் குகையில் அமர்ந்திருந்த முஹம்மதுவைத்தட்டியெழுப்பி, கட்டிப்பிடித்து இறுக்கித் தழுவி,”இன்றிலிருந்து தாங்கள் இறைத்தூதர்” என்றசெய்தியையும் குர்ஆன் வசனங்கள் ஐந்தையும் அறிவித்துவிட்டுச் சென்றுவிட்டார்.


முஹம்மது, நபித்துவம்வழங்கப்பெற்ற தூதரானார்கள். ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். ஆரம்பித்தது மனித குலத்தில்ஒரு திருப்பம்.
சிலை வணக்கம், அது சார்ந்தசாஸ்திரம், சம்பிரதாயம் இது எதுவும் கிடையாது,ஒரே ஒருவன்தான் இருக்கிறான். அவன்தான்அனைத்தையும் படைத்தான்,பரிபாலிக்கிறான், முடித்துவைப்பான், தீர்ப்பு வழங்குவான்,மறுமை துவங்கும் என்றெல்லாம் பேசஆரம்பித்ததும், பலர் சிரித்தார்கள்,மிகச் சிலர் “அப்படியா? ஏக இறைவன்ஒருவன்தானா? நீங்கள்தான் அவனது நபியா?எனக்கு நியாயமாய்ப் படுகிறது, ஏற்றுக்கொண்டேன்,” என்றார்கள்.

சிரித்தவர்களுக்கு தூக்கிவாரிப் போட்டது.நாளாக நாளாகக் கோபம் பெருக்கெடுத்தது. “இதென்ன இந்த மனிதர் புதிதாய்க் குழப்பம்விளைவிக்கிறார்? இவரை ஏற்றுக் கொண்டவர்களைக் கொடுமைப் படுத்தினால் வழிக்கு வருவார்கள்,” என்றுதுவங்கியது கொடுமை. அது எழுத்தில் எழுதி மாளாத கொடுமை!

“ஒரே இறைவன், முஹம்மதே இறுதிநபி,” என்று சொன்ன காரணத்திற்காக ஒருவரை,அதுவும் ஒரு பெண்ணை, அவருடையபிறப்புறுப்பிலேயே ஈட்டி செருகிக் கொல்லுமளவுப் பெருங்கொடுமை தலைவிரித்தாடியதுமக்காவில்.
இஸ்லாத்தை ஏற்ற சின்னஞ்சிறுக் கூட்டம், மக்கா நகரில்வாழ்ந்து கொண்டிருந்த பென்னம்பெரிய கூட்டத்தினரிடம் மிதி, உதை பட்டது.பொறுத்துப் பொறுத்துப் பார்த்தார்கள். பொறுமையின் எல்லைக்கு விரட்டப்பட்டஅவர்களில் சிலர், நபியவர்கள் அனுமதியின் பேரில் சொத்து,சுகம்,நிலம் ஆகியனவற்றை மக்காவில் விட்டுவிட்டு, எடுத்துச் செல்லமுயன்ற சுமையோடு அபீஸீனியா நாட்டிற்கு புலம்பெயர்ந்தார்கள். இஸ்லாமிய வரலாற்றில்அன்றுதான் ஆரம்பித்தது ஹிஜ்ரா. முதல் ஹிஜ்ரா.

நாமறிந்த புலம் பெயர்தலெல்லாம் இன்றும் சர்வசாதரணமாய் நடப்பதுதான். தொழிலுக்காக,வேலைக்காக, சொகுசுக்காக, திருமணத்திற்காகஇப்படியான ஏதோ ஒரு காரணத்திற்காக நாள்தோறும் ஊர்தோறும் புலம்பெயர்தல் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. இதிலெல்லாம் ஏதும் விசேஷமில்லை.

ஆனால் இஸ்லாத்தில் ஹிஜ்ரா என்பது மட்டும்சிறப்பு! தனிச் சிறப்பு!
இறைவன் ஒருவனே என்று ஏற்றுக்கொண்டு அவனைத்தொழ, வழிபட என்று ஆரம்பிக்கும்போது தனிமனித சுதந்தரம் என்பதெல்லாம் கெட்ட சொல்லாய்மாறி, அட்டூழியம் நிகழ்கிறதே,வழிபாட்டு உரிமையெல்லாம் தடுக்கப்படுகிறதே, அதற்குஇணங்கிவிடாமல், இறைவனுக்காகத் தனது அனைத்தையும் துறந்து அந்தத் தனிமனிதன், தனது உறவுகள், உடமைகள், சொத்துகள் எனஅனைத்தையும் துறந்து,தான் பிறந்த மண்ணிலிருந்து வெளியேறுவதுதான்ஹிஜ்ராவிற்கு தனிச் சிறப்பைப் பெற்றுத் தருகிறது. அவனுக்காக, அந்த ஒரேஇறைவனுக்காக, சட்டென்று அனைத்தையும் உதறிவிட்டுக் கிளம்பிவிடுவதுதான், உலக மகாச்சிறப்பைப் பெற்றுத் தருகிறது.
எந்த அளவிற்கு?

குழந்தையாய், பிறந்த பச்சிளங்குழந்தையாய் புதிதாய் ஆகிவிடுகிறான் அம்மனிதன். அப்படியானால் அதுவரை அவன்செய்திருக்கக்கூடிய பாவம்,தீங்கு?அதெல்லாம் துடைத்து எறியப்பட்டு, புதிசாய், புத்தம்புதிசாய் அவனுக்கு மறுபிறப்புத் தொடங்குகிறது. அதனால்தான் ஹிஜ்ரா புனிதம். ஏகஇறைவன் நிர்ணயித்த புனிதம்.

முதலில் ஒரு குழு அபீஸீனியாவிற்கு ஹிஜ்ராமேற்கொண்டது என்று பார்த்தோமா?அதற்கடுத்து முஸ்லிம்கள் மற்றொரு குழுவாய்க்கிளம்பி மதீனாவுக்குச் சென்றார்கள். அந்த முஸ்லிம்களுக்கெல்லாம் அது மிகப்பெரும்சிறப்பையும் தரத்தையும் அளித்தது. பட்டமாய் ஒட்டிக்கொண்டது. ஹிஜ்ரா அவர்களின் தரச்சான்றிதழாய் மின்னியது. ஆஸ்கர்,நோபல்,இத்தியாதி என்று எதுவும் அதற்கு நிகரில்லை.

மக்காவிலோ நாளொரு வேதனையும், பொழுதொருசோதனையுமாகத்தான் முஸ்லிம்களுக்கு வாழ்க்கை கழிந்து கொண்டிருந்தது. 13 ஆண்டுகள்ஆகியும் அது முடிவிற்கு வரவில்லை. மாறாய்,குரைஷிகளின் அட்டகாசம் பெருகிக் கொண்டுஇருந்தது.

இந்நிலையில் மதீனாவில் உள்ள மக்கள்நபியவர்களுடன் அகபா உடன்படிக்கை ஏற்படுத்திக் கொண்டு அங்கு இணக்கமான சூழ்நிலைஉருவானதும் சிறுகச் சிறுக முஸ்லிம்கள் அந்நகருக்கு ஹிஜ்ரத் மேற்கொள்ளஆரம்பித்தனர். நபியவர்கள் மட்டும் காத்திருந்தார்கள். ஆனால் நிலைமை நாளுக்குநாள்மோசமாகி, அவர்களைக் கொல்வதற்கே குரைஷிகள் தயாராகிவிட, நபியவர்களுக்குஇறைவனிடமிருந்து அனுமதி வந்தது. “புலம்பெயருங்கள்!”

அபூபக்ருவின் இல்லத்திற்குக் காலையிலோமாலையிலோ நபியவர்கள் வருகை என்பது தவறாத வழக்கம். அந்தளவு தோழமை. மிகவும் அலாதியானதோழமை. இருவருக்கும் இடையே இருந்த அணுக்கம் ஓர் அழகிய உன்னதம். ஆனால் அன்றுநண்பகல் நேரம். மக்காவில் மக்கள் வீட்டினுள் அடங்கிக் கிடந்தனர். உச்சி வெயில்மண்டையைப் பிளக்கும் அந்நேரத்தில் அபூபக்ருவின் வீட்டிற்கு வந்தார்கள் நபியவர்கள்.அந்நேரம் அங்கு அவரின் இரு மகள்கள் அஸ்மா,ஆயிஷா - ரலியல்லாஹு அன்ஹுமா - மட்டுமேஇருந்தனர்.

'விஷயம் வெகுமுக்கியம் போலிருக்கிறது.இல்லையெனில் இந்நேரத்தில் அல்லாஹ்வின் தூதர் வரமாட்டார்களே' என்றுஆச்சரியத்துடன் அவரை வரவேற்றார் அபூபக்ரு.
அவரது கட்டிலில் அமைதியாக அமர்ந்து'உங்களுடன் உள்ள இவர்களை ஒதுங்கிக் கொள்ளச் சொல்லுங்கள்' என்றார்கள்நபியவர்கள்.
'அல்லாஹ்வின் தூதரே! என்னுடைய தந்தையும்தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும். இவர்கள் என்னுடைய மகள்கள்தாம். என்ன விஷயம்?'
'நான் புலம்பெயர எனக்கு அனுமதிகிடைத்துவிட்டது'


'அல்லாஹ்வின் தூதரே, தோழமை?' நானும் உங்களுடன் வர அனுமதியுண்டா என்பதை அப்படிக் கேட்டார்அபூபக்ரு.'ஆம்! தோழமை'
அழுதார் அபூபக்ரு; ஆனந்தத்தால்அழுதார்! மகிழ்ச்சியிலும் இப்படி அழமுடியுமா என்பதை ஆச்சரியத்துடன் பார்த்தார்

ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா.


'அல்லாஹ்வின் தூதரே! இதோ என்னுடைய இருஒட்டகங்கள். இத்தருணத்திற்காகவே நான் தயார்ப்படுத்தி வைத்திருந்தேன்'


'அவற்றிக்கான விலைக்கே நான் பெற்றுக்கொள்வேன்' என்றார்கள் முஹம்மது நபி.

இதென்ன பேச்சு? அப்படியெல்லாம்இல்லை, 'இது நான் தங்களுக்கு அளிக்கும் நன்கொடை'என்றார் அபூபக்ரு.
'ஓ அபூபக்ரு! இந்தப் பயணம் அல்லாஹ்விற்காகமேற்கொள்ளப்படும் பயணம். அதற்கு உண்டாகும் செலவை நான் எனது பணத்திலிருந்த அளிக்கவேவிரும்புகிறேன். ஏனெனில் எனது செலவிற்கு உண்டான வெகுமதியை நான் இறைவனிடம் ஈட்டவிரும்புகிறேன்'

இறைவனின் தூதர், இறைவனுக்காகத்தான் அடைந்த துன்பம்,மேற்கொள்ளப் போகும் அசாத்தியச் சோதனைகள்என்பதையெல்லாம் பொருட்படுத்தவில்லை. இறைவனின் அளவற்ற வெகுமதி – அதைஎவ்வகையிலெல்லாம் ஈட்ட முடியுமோ அவ்வகையிலெல்லாம் ஈட்டுவதற்கு முன்நின்றார் அந்தமாமனிதர் - ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்!

பயணத்திற்குத் தேவையான ஏற்பாடுகளைக்கிடுகிடுவென செய்தார்கள் அஸ்மாவும் ஆயிஷாவும். உணவை எடுத்து வைத்து உண்பதற்கானவிரிப்பு அடங்கிய பயண மூட்டை தயாரானது. அந்த மூட்டையின் பையை எதைக் கொண்டுகட்டுவது என்று யோசித்த அஸ்மா தமது இடுப்பு வார்த்துணியை இரண்டாகக் கிழித்து அதில்ஒன்றைக்கொண்டு கட்டினார். அன்றிலிருந்து அவருக்கு, 'தாத்துந்நிதாக்கைன் - வாரிரண்டு வனிதை' என்று பட்டமே ஏற்பட்டுவிட்டது.

மக்காவில் தன்னைக் காணவில்லை என்றதும்குரைஷிகளுக்கு நிச்சயமாய் மதீனா நினைவிற்கு வரும்; மதீனாவுக்குச்செல்வோர் அனைவரும் பயணிக்கும் பாதையைத் தவிர்ப்பதே உசிதம்; அதற்குமாற்றுவழி தெரியவேண்டும். அதற்கென அப்துல்லாஹ் இப்னு உரைகத் என்பவரை நியமனம்செய்து கொண்டார்கள் நபியவர்கள். அப்துல்லாஹ் ஒரு மிகத் தேர்ந்த வழிகாட்டி.முஸ்லிம் அல்லன் என்றபோதிலும் நம்பிக்கைக்கு உரியவன். அவனிடம் இரு ஒட்டகங்களையும்ஒப்படைத்து, 'இதைப் பாதுகாப்பாக பராமரிக்கவும் குறிப்பிட்டநாளன்று குறிப்பிட்ட இடத்திற்கு இவற்றை ஓட்டிக் கொண்டு வரவும்' என்றும் தகவல்அறிவிக்கப்பட்டது.

நபியவர்கள் புலம்பெயர்ந்து மதீனாவுக்குச்செல்ல உருவான திட்டம் அலீ,அபூபக்ரு மற்றும் அவர் குடும்பத்தினர் -ரலியல்லாஹு அன்ஹும் - தவிர வேறு யாருக்கும் தெரிவிக்கப்படவில்லை.

இரவு கவிழ்ந்தது. முஹம்மது நபியை அவரதுவீட்டில் புகுந்து கொலை புரிய குரைஷிகளின் கூட்டணிக் கூட்டம் பதுங்கிவர, அலீயைத் தமதுகட்டிலில் உறங்க வைத்து,குரைஷிகளின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டுத்தமது வீட்டிலிருந்து வெளியேறினார்கள் நபியவர்கள். அபூபக்ருவின் வீட்டிற்கு வர, அவர் தயாராய்க்காத்திருந்தார். அவரது வீட்டின் பின்புறமிருந்த ஒரு சிறு வாயிலின் வழியே இருவரும்வெளியேறினார்கள். அங்கிருந்து உடனே மதீனா கிளம்பாமல் மக்காவிலிருந்து மதீனாநகருக்குச் செல்லும் பாதையின் நேரெதிர்த் திசையில் - யமனுக்குச் செல்லும் வழியில்- இருவரும் பயணித்து தவ்ருக் குகையை அடைந்து,பதுங்கிக் கொண்டார்கள்.

குகை என்றவுடன் நம் கற்பனையில் மலை, மலையில் ஒருபொந்துதான் தோன்றும். தவ்ருக் குகை அப்படியில்லை. ஒரு குழிபோல் ஆழமாயிருக்கும்.அங்குதான் மறைந்திருந்தார்கள் முஹம்மது நபியும் அபூபக்ரும்.
நபியவர்கள் தப்பித்துவிட்டார்கள் என்பதை அறிந்தகுரைஷிகள் கூட்டம்

மக்காவெங்கும் தேடிப்பார்த்து அவர்களைக்காணவில்லை என்றதும் வழித்தட வித்தகர்களையெல்லாம் திரட்டிக் கொண்டு முஹம்மது எந்தப்பாதையில் தப்பித்திருப்பார் என்று தேடத் துவங்கியது. தேடித்தேடி பின்பற்றி, சரியாகத்தவ்ருக் குகை அமைந்துள்ள மலையின் அடிவாரம்வரை வந்துவிட்டது அக்குழு.
அபூபக்ரு நிமிர்ந்து பார்த்தால்அங்குமிங்கும் நடந்து கொண்டிருக்கும் அவர்களுடைய கால்கள் தெரிந்தன. திகிலில்வருந்தி கண்ணீர் விட்டார் அபூபக்ரு.
'ஏன் அழுகை?' என்பதுபோல் அவரைஇதமாய்ப் பார்த்தார்கள் நபியவர்கள். அபூபக்ரு கிசுகிசுப்பான குரலில் கூறினார்.

'அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மேல்ஆணையாகக் கூறுகிறேன். நான் எனக்காக அழவில்லை. தங்களுக்கு எந்தத் தீங்கும்ஏற்பட்டுவிடக் கூடாது என்பது மட்டுமே என் அச்சம்'
திடமான ஆறுதல் வார்த்தைகள் வெளிப்பட்டனநபியவர்களிடமிருந்து 'வருந்தாதீர்கள். அல்லாஹ் நம்முடன் இருக்கிறான்'அல்லாஹ் அபூபக்ரின் உள்ளத்திற்கு சாந்தியை அருளினான்.
மேலே நின்று கொண்டிருந்தவர்களின் கால்களைப்பார்த்தபடி மெல்லிய குரலில் கூறினார்,'அல்லாஹ்வின் தூதரே! அவர்களில் யாராவதுஅவர்களது கால்களைக் குனிந்து பார்த்தாலே போதும், நம்மைக் கண்டுவிடுவார்கள்'
'இருவருடன் துணைக்கு மூன்றாவதாக அல்லாஹ்இருக்க என்ன கவலை அபூபக்ரு?'எத்தகைய உறுதி அது? எத்தகைய ஆழ்மனநம்பிக்கை அது?
இதற்குள் மேலே நின்று கொண்டிருந்த ஒருவன்கூறினான், 'நாம் இந்தக் குகைக்குள் இறங்கி அங்கு என்னஇருக்கிறது என்று பார்த்துவிடுவோம்.'
அதைக் கேட்ட உமைய்யா இப்னு ஃகலஃப் ஏளனமாய்ச்சிரித்து, 'இங்கே பார், குகையின் வாசலைஒரு சிலந்தி வலை அலங்கரித்துக் கொண்டிருப்பதை. அந்த வலைக்கு முஹம்மதைவிட வயதுஅதிகம் இருக்கும்' படு இலேசான படைப்பினத்தைக் கொண்டு, ஆளரவமற்றபாழடைந்த குகை என்ற எண்ணத்தை பராக்கிரம எதிரிகளின் மனதில் ஏற்படுத்தி, வெகு சுலபமாய்அற்புதம் நிகழ்த்தினான இறைவன். யார் அறிவார் அவன் வீரர்களை?
ஆனால் அபூஜஹ்லுக்கு மட்டும் குறுகுறுப்புஇருந்து கொண்டேயிருந்தது. 'அல்-லாத் மற்றும் அல்-உஸ்ஸாவின் மீது சத்தியமாகச்சொல்கிறேன், முஹம்மது இங்குதான் எங்கேயோ இருக்கிறார். நம்மைப் பார்த்துக் கொண்டும் நாம்பேசுவதைக் கேட்டுக் கொண்டும் இருக்கிறார். அவருடைய மந்திர வித்தைதான் நாம் அவரைக்காணமுடியாமல் நம் கண்களைக் கட்டிப் போட்டுவிட்டது'
அபூபக்ருக்கு அப்துல்லாஹ் என்றொரு மகன்இருந்தார். சிறப்பான புத்திக் கூர்மையுள்ளவர். இந்த நிகழ்வின்போது அவர் பதின்மவயதுச் சிறுவர்.

பிரமாதமான உளவுவேலை புரிந்தார் அப்துல்லாஹ்.பகலெல்லாம் குரைஷியர்களுடனேயே வலம் வந்து அடுத்து அவர்கள் என்ன செய்யப்போகிறார்கள், அவர்களுடைய திட்டம் என்ன,எவ்வளவு குடைச்சலில் இருக்கிறார்கள்என்பதையெல்லாம் அறிந்து கொள்வது அவர் வேலை. இரவு படர்ந்ததும் குரைஷியர் கண்களில்படாமல் தவ்ருக் குகைக்கு வந்துவிடுவார். மக்காவின் நிகழ்வுகளையெல்லாம் அவர்களுக்குஅறிவித்துவிட்டு இரவு முழுவதும் அவர்களுடனேயே குகையில் தங்கிக் கொள்வார். பிறகுபொழுது புலரும் முன்னரே கிளம்பி தனது வீட்டிற்கு வந்துவிடுவார். இவருக்கு இந்தப்பணி என்றால், ஆமிர் இப்னு ஃபுஹைரா என்பவருக்கு வேறொரு பணி இருந்தது.
அபூபக்ரிடம் பணியாளாக இருந்தார் ஆமிர் இப்னுஃபுஹைரா. அவரும்

இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டிருந்த தோழர்.இரவானதும் ஆட்டு மந்தையொன்றை மேய்ச்சலுக்கு ஓட்டுவதுபோல் ஓட்டிக் கொண்டு தவ்ருக்குகைக்கு வந்துவிடுவார். ஆட்டுப்பால் நபியவர்களுக்கும் அபூபக்ருக்கும்உணவாகிவிடும். பிறகு விடிந்ததும் அப்துல்லாஹ் கிளம்பிச் சென்றவுடன் தமது மந்தையைஓட்டிக்கொண்டு ஆமிர் மக்கா வந்துவிடுவார். அதிலொரு தந்திரமும் இருந்தது. வழித்தடவித்தகர்கள் இருந்தார்கள் என்று பார்த்தோமல்லவா? குரைஷிகளுக்குஏதேனும் சிறு சந்தேகம் ஏற்பட்டு அப்துல்லாஹ்வின் வழித்தடத்தைப் பின்பற்றிவிட்டால்? எனவேஅப்துல்லாஹ் குகைக்கு வந்து திரும்பிய வழித்தடத்தையெல்லாம் வீடுதிரும்பும் ஆடுகள்கலைத்துக் கொண்டே வந்துவிடும். இத்தகைய எளிய உத்திகள் ஆத்திரத்தில் புத்திமட்டுப்போன எதிரிகளை அலைக்கழித்துக் கொண்டிருந்தன.

இவ்விதமாய் மூன்று இரவுகள் கழிந்தன. அதற்குஅடுத்தநாள் காலை முன்னரே பேசி வைத்துக் கொண்டபடி வழிகாட்டி அப்துல்லாஹ் இப்னுஉரைகத் ஒட்டகங்களை ஓட்டிக் கொண்டு தவ்ருக் குகைக்கு வந்துவிட்டான். அவர்களுடன்ஆமிர் இப்னு ஃபுஹைராவும் சேர்ந்து கொள்ள,இஸ்லாமிய வரலாற்றுப் பயணம் துவங்கியது -ஹிஜ்ரீ பிறந்தது.
ஆனால்,ஹிஜ்ரீ ஆண்டு புழங்கவில்லை.

oOo

​​



ஸஃபர் மாதம் 27இல் துவங்கியதுபயணம். ஏறக்குறைய ஒரு மாதத்திற்குப்பின் ரபீஉல் அவ்வல் 23ஆம் நாள் யத்ரிப்வந்தடைய அந்நகரம் மதீனத்துந் நபவீ - நபி புகுந்த பட்டணம் – என்றபுதுப்பெயருடன் புதுவரலாற்றிற்குத் தயாரானது. நவீன போக்குவரத்து இல்லாதகாலகட்டமில்லையா? தவிரவும் பின்தொடரும் மக்கத்துக் குரைஷிகளிடமிருந்து தப்பிக்க சுற்றுவழியில்பயணித்து அவர்கள் ஒட்டகத்தில் மதீனா வந்தடைய ஒருமாத காலம் ஆகிப்போனது.

ஹஜ்ஜுக்குச் செல்ல நேரிடும்போது, மக்கா-மதீனாநாலரை மணி நேர பஸ் பிரயாணத்தின்போது எட்டரை மணி நேரம் அதிகப்படியாகக் காத்திருக்கநேர்ந்தால், நபியவர்களின் அந்தப் பயணத்தை அசைபோட்டுக் கண்ணை மூடிக்கொண்டால் தூங்கிவிடலாம்.கனவில் ஓரிரு சொட்டு நீரும் சுரக்கலாம்.

அதன்பிறகு, மக்காவிலிருந்துஏனைய முஸ்லிம்கள் சிறுகச் சிறுக மதீனா வந்து சேர்ந்தார்கள். பிற்பாடு, அபீஸீனியாவிலிருந்தமற்ற முஸ்லிம்களும் மதீனாவிற்குக் கிளம்பி வந்துவிட்டார்கள்.

அப்பொழுதும் ஹிஜ்ரீ ஆண்டு புழங்கவில்லை.
நபியவர்களின் மறைவிற்குப் பிறகு அபூபக்கருரலியல்லாஹு அன்ஹு ஏறத்தாழ இரண்டரை ஆண்டு ஆட்சி செலுத்திவிட்டு மறைய, அப்பொழுதும்ஹிஜ்ரீ ஆண்டு புழங்கவில்லை.

பிறகு கலீஃபாவாய்த் தலைமை ஏற்றுக்கொண்டார்உமர் ரலியல்லாஹு அன்ஹு. இந்த முதல் இரண்டு கலீஃபாக்களின் ஆட்சிக் காலத்தில் இஸ்லாமும்அதன் ஆளுமையும் அரேபியா நாட்டு எல்லையைக் கடந்து பரவ ஆரம்பித்தன. இஸ்லாமியவரலாறும் வளர ஆரம்பித்தது! வரலாறு வளர்ந்தால் குறிக்கப்படவேண்டுமில்லையா? அப்பொழுதுஅவர்களிடம் தேதி உண்டு,மாதம் உண்டு. ஆண்டு?

அப்பொழுதும் ஹிஜ்ரீ ஆண்டு புழங்கவில்லை.

உமர் பின் கத்தாப் ஆட்சி செலுத்த ஆரம்பித்துஇரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டிருக்கும். ஒருநாள் அவருக்குக் கடிதம் ஒன்றுவந்தது. எழுதியவர் எத்துணைப் பெரிய ஒரு விஷயத்திற்குத் தனது கடிதம்வித்திடப்போகிறது என்பதை அப்பொழுது அறிந்திருக்க வாய்ப்பே இல்லை. கடிதத்தில் என்னஎழுதப்பட்டிருந்தது,அது வெறும் குசலம் விசாரிக்கும் கடிதமா, நிர்வாகம்சம்பந்தப்பட்டதா என்பதெல்லாம் இங்கு முக்கியமில்லை. ஷஅபான் மாதம் இத்தனாம் தேதிஎன்று குறிப்பிட்டு கடிதம் எழுதப்பட்டிருந்தது.

கடிதத்தைப் படித்த உமர், “ஷஅபான் மாதம்என்றால்? கடந்த ஷஅபானா?அடுத்த ஆண்டின் ஷஅபானா? இந்த ஆண்டின்ஷஅபானா?,” என்றார்.
எந்த ஆண்டு என்று தெரிய வேண்டாமா? எப்படிநிர்ணயிப்பது? மக்காவிலிருந்து மதீனா புலம்பெயர்ந்த முஹாஜிரீன் தோழர்களையும், மதீனாவின்அன்ஸாரீத் தோழர்களையும் ஆலோசனைக்கு அழைத்தார் உமர்.

“நம் மக்களுக்காக ஆண்டு நிர்ணயம் செய்யவேண்டும். எங்கிருந்து நம் வரலாற்றை ஆரம்பிப்பது? உதவுங்கள்.”
ஒருவர் ”ரோமர்களின்ஆண்டை உபயோகித்துக் கொள்ளலாமே”என்று தெரிவித்தார்.

”அட,அவர்கள் துல்கர்ணைன் காலத்திலிருந்து அல்லவாகணக்கு வைத்துள்ளார்கள். நமக்கு அது சரிபட்டு வராது,” என்று அந்தஆலோசனை நிராகரிக்கப்பட்டது.

மற்றொருவர் பாரசீகர்களின் ஆண்டைஉபயோகிக்கலாமே என்றதும்,”அது சரி, அவர்களுக்குஒவ்வொரு முறை ஒரு மன்னன் தேர்ந்தெடுக்கப்படும் போது, கர்மசிரத்தையாய் முந்தைய மன்னனின் ஆண்டுக் கணக்கை கழித்துக் கட்டுவதுதான் வேலை.அதெல்லாம் சரிப்படாது,”என்று சொல்லிவிட்டார்கள். நமது அரசியல்கட்சிகளை மெச்சிக்கொள்ளலாம் போலிருக்கிறது. முந்தைய அரசின் திட்டங்களைத்தான்சொதப்புகிறார்கள். நல்லவேளையாக காலண்டரில் கைவைப்பதில்லை!

”எதற்கு அங்கேயும் இங்கேயும் தேடிக்கொண்டு? நமக்கு வாழ்வும், வழிகாட்டலும்முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்த வந்தது. இதையும்அவர்களிடமிருந்து பெற வேண்டியதுதான்,”என்று ஆலோசிக்க ஆரம்பித்தார்கள்.

”ஆம்,அதுதான் சரி,” என்ற கருத்துவலுப்பெற்றதும் நபியவர்களின் வரலாற்றிலிருந்து நான்கு முக்கிய நிகழ்வுகளைத்தோழர்கள் குறிப்பிட்டனர்.
ஒன்று,நபியவர்கள் பிறந்த ஆண்டு, அடுத்ததுஅவர்கள் இஸ்லாமியப் பிரச்சாரத்தைத் துவங்கிய ஆண்டு, அடுத்ததுஅவர்களது ஹிஜ்ரா, கடைசியாக அவர்கள் இறந்த ஆண்டு. இதில் எந்த நிகழ்வை அடிப்படையாக அமைத்துக்கொள்வது என்று அடுத்தபடியாகத் தொடர்ந்தது விவாதம்.

நபியவர்கள் எந்த ஆண்டு பிறந்தார்கள் என்பதில்தோழர்களிடையே ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. அதைப் போலவே அவர்கள் எந்த ஆண்டு தனதுபிரச்சாரத்தைத் துவக்கினார்கள் என்பதிலும் அவர்களிடையே கருத்து வேறுபாடு இருந்தது.

அவர்கள் இறந்த ஆண்டு என்றாலோ அதை அவர்களால்நினைத்தே பார்க்க முடியவில்லை. அது அவர்களுக்கு ஆற்றமாட்டா துயர். அவர்களின்இழப்பு அவர்களுக்கு சோகத்தை மீட்டெடுக்கும் ஒரு நிகழ்வு. அன்றைய நாள் அவர்களுக்குஉலகமே இருண்டு போனதைப் போலான ஒன்று. எனவே அந்த எண்ணம் கைவிடப்பட்டது.

“மக்காவிலிருந்து மதீனாவிற்கு நபியவர்கள்புலம் பெயர்ந்ததே நமக்கெல்லாம் மிக முக்கிய நிகழ்வு. நமது வரலாறு அங்கிருந்துதான்பெரிய திருப்புமுனையை அடைந்தது. அங்கிருந்து ஆரம்பிப்போம்,” என்று இறுதியில்ஒரு முடிவிற்கு வந்தார்கள்.

அலீ ரலியல்லாஹு அன்ஹுவிடம் கலந்தாலோசித்தார்உமர். “ஷிர்க்கில் மூழ்கியிருந்த நகரைவிட்டு நபியவர்கள் வெளியேறிய நாளிலிருந்தேமுஸ்லிம்களின் ஆண்டிற்கான ஆரம்பம் அமையவேண்டும், அதுவே சரியானதாகஇருக்கும்” என்பது அலீயின் ஆலோசனை.
அப்படியே முடிவானது!

ஆனால்,நபியவர்களின் ஹிஜ்ரா பயணம் துவங்கியதோ ஸஃபர்மாதம். அது இஸ்லாமிய ஆண்டின் இரண்டாம் மாதம். அவர்கள் மதீனாவில் நுழைந்ததோ ரபீஉல்அவ்வல். அது மூன்றாம் மாதம். பிறகு முஹர்ரம் எப்படி முதல் மாதமாகதேர்ந்தெடுக்கப்பட்டது?

இமாம் இப்னு ஹஜர் (ரஹ்) அதற்கான காரணத்தைவிவரித்துள்ளார்கள். ”ஸஃபர் மாதம் பிரயாணம் துவங்கியிருந்தாலும், புலம்பெயர்வதற்கானஉறுதியான தீர்மானம் முஹர்ரம் மாதமே உருவாகியது. ஹிஜ்ரா மேற்கொள்ள முன்னோடியாய்அமைந்த இரண்டாம் அகபா உடன்படிக்கை துல்ஹஜ் மாதம் நிகழ்வுற்றது. அதற்கடுத்த மாதமானமுஹர்ரமில்தான் ஹிஜ்ரா எண்ணம் உறுதியானது. எனவே அதுவே இஸ்லாமிய ஆண்டிற்குப் மிகப்பொருத்தமான முதல் மாதமாக இருக்கும் என்று நிர்ணயிக்கப்பட்டது.”
ஹிஜ்ரீ ஆண்டு புழக்கத்திற்கு வந்தது.

உமர் ரலியல்லாஹு அன்ஹு கலீஃபாவாக ஆட்சிசெலுத்திய காலகட்டம் இஸ்லாமிய வரலாற்றின் பொற்காலம். அதில் ஹிஜ்ரீ ஆண்டின்நிர்ணயம் மிக முக்கியத் தீர்மானம். எல்லை தாண்டி விரிவடைந்து கொண்டிருந்த இஸ்லாமியசாம்ராஜ்ஜியத்திலுள்ள முஸ்லிம்களை ஒருங்கிணைக்க அது பேருதவி புரிந்தது.

ஹிஜ்ரீ 1436ஆம் ஆண்டுஎன்றால் அது வெறும் எண் அல்ல. அதன் துவக்கத்தில் இஸ்லாமிய வரலாற்றின் வேர்படர்ந்திருக்கிறது;தியாகங்களின் வரலாறு ஒளிந்திருக்கிறது!

ஹ்ஜிரத்தின் பயணத்தின் நடந்த ஈமானியநிகழ்வுகளை நினைவு கூறுவோம். நமது ஈமானுக்கு வலுவேற்றிக் கொள்வோம்.

இந்த ஆண்டு ஹிஜ்ரி 1436 எனபதை நினைவில்கொள்வோம்.

Maasalam,
A.Mohamed Mansur.






1 அவளுக்காக நான் இதை மறக்கவே மாட்டேன்
  ஆறுதல் என்பது சில நேரங்களில் உலகத்திலுள்ள அனைத்து செல்வங்களை விடவும் மேலானதாக இருக்கும்
 
2 அவர்கள் என்னைத் துரத்திவிடுவார்களா?
  மொழியின் மூலைமுடுக்கெல்லாம் தேடினாலும், இதைவிட வலிமிகுந்த ஒரு கேள்வியை நீங்கள் காண முடியாது: "அவர்கள் என்னைத் துரத்திவிடுவார்களா?"
 
3 திருக்குர்ஆனின் அற்புதம் - வானமும் பூமியும் அழவில்லை - பிர்அவ்ன்
  முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பே இச்சம்பவங்கள் நிகழ்ந்துவிட்டன. அக்காலகட்டத்தில் எகிப்தின் மொழி அறபி அல்ல. கி.பி. ஏழாம் நூற்றாண்டில், கலீபா உமர் (ரலி) அவர்களின் காலத்தில் எகிப்து இஸ்லாமிய ஆட்சியின் கீழ் வந்த பிறகே அங்கு அறபு மொழி பரவத் தொடங்கியது.
 
4 ஒரு ஆறுதல் வார்த்தை, ஒருவரின் மறுமை வாழ்வையே மாற்றக்கூடும்.
  எவரையும் குறைத்து மதிப்பிடாதீர்கள். நீங்கள் காட்டும் ஒரு சிறு கருணை அல்லது சொல்லும் ஒரு ஆறுதல் வார்த்தை, ஒருவரின் மறுமை வாழ்வையே மாற்றக்கூடும்.
 
5 ரமலானை வரவேற்கும் துஆ
  நோன்பும் இரவுத் தொழுகையும் நிறைவேற்றும் சக்தியை எங்களுக்கு அருள்வாயாக. இம்மாதத்தை எங்கள் உள்ளங்களைத் தூய்மைப்படுத்தும் மாதமாகவும், தவறான எண்ணங்களை அழிக்கும் மாதமாகவும் ஆக்குவாயாக.
 
6 ரமலான் நோன்பின் 10 முக்கிய நோக்கங்கள்
7 அவர்களும் சதித் திட்டங்களை தீட்டினார்கள். அல்லாஹ்வும் திட்டங்களை தீட்டினான் - 2 அற்புத உதாரணங்கள்
8 அல்லாஹ் நம்மை நேசிக்கிறானா இல்லையா என்பதை நாம் எப்படி நிர்ணயிப்பது?
9 எல்லா பிரச்சனைக்கும் தீர்வு - நடமாடும் குர்ஆனாக நாம் மாறவேண்டும் -
10 காசா! ஒரு துன்பம் மகிழ்ச்சியானது
11 தடுமாறாத குதிரை இல்லை. சறுக்காத பாதம் இல்லை.
12 ︎நேர்மை என்பது...
13 செய்யும் உதவிகளுக்காக, மனிதர்களின் பாராட்டை எதிர்பார்க்க வேண்டாம்
14 போட்டோ: பாலஸ்தீன குழந்தைகள் மீது இஸ்ரேலின் போர்
15 பாலஸ்தீனத்தின் பெருமை
16 திருச்சி சகோதரர்களின் கவனத்திற்கு: சோழ இளவரசி குந்தவை நாச்சியார்
17 இஸ்லாமிய வங்கி இயலின் தந்தை மறைந்தார்!
18 உணரப் படாத தீமை சினிமா
19 நான் ஏன் முஸ்லிம் ஆனேன்? - முன்னாள் கன்னியாஸ்திரி!
20 ஆறுதல் சொல்லச் சென்றோர் ஆறுதல் பெற்றுத் திரும்பிய அதிசயம்!
21 விரக்தி விஷத்தை விட கொடியது
22 பொறுத்தோம்! ஆனால் பொறுக்கமாட்டோம் யா ரஸூலுல்லாஹ்!
23 வாழ்க்கைக்கான பாடம் பாடப்புத்தகத்தில் அல்ல; போதிப்பவர்களின் வாழ்க்கையில் இருக்கிறது.
24 நரக மாளிகை - தாய் மண்ணின் மீது பற்று கொண்ட ஒவ்வொரு இந்தியனும் கட்டாயம் படிக்க வேண்டிய நூல்!
25 இங்கிலாந்தில் தப்லீக் ஜமாத் அனுபவங்கள்
26 அந்தப் பெண்களாக நாம்...
27 தன்னிகரற்ற தமிழகத்து உலமாபெருமக்கள் வரிசையில்
28 2021 ல் தமிழகம் இழந்த ஆலிம்கள்:
29 இமாம் அபுல் ஹஸன் நத்வி ரஹிமஹுல்லாஹ்
30 நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்ட 10 துஆக்கள்,
31 நோன்பும் மனக்கட்டுப்பாடும்
32 இவ்வளவு முரண்பாடுகளுடன் இறைவனிடம் கையேந்த வெக்கமாயில்ல!?
33 ஐரோப்பாவின் பிரபல்யமான அறிவுத் திருட்டுகள்.....
34 திருமணப் பதிவேடு எழுதுவதில் அக்கறையின்மை......!
35 நீ வரைந்த பாதை வழியே வாழ்க்கை ஓடுவதில்லை
36 முதியோர் பராமரிப்பு – இஸ்லாமிய கண்ணோட்டம்
37 இளையான்குடியில் உருது மக்கள்
38 கொண்டாடப்பட வேண்டிய ஆளுமைகள் : ஈரோடு மீ. கிபாயத்துல்லாஹ் பாகவி
39 மரணம் நோக்கி...
40 ஸிமம் தஃப்தரி (ZIMEM DEFTERI) - ஏழைகளின் கடனையடைத்தல்
41 மௌலானா சாத்(தா.ப) அவர்களுக்காக ஜரோப்பாவிலுள்ள ஒருதாயியின் அன்பான செய்தி
42 பேசாமல் இரு, கதவை அல்லாஹ் எப்படித் திறக்கிறான் என்று பார்
43 (புத்தாண்டு) கொண்டாட்டங்களை விட மனித உயிர்கள் அற்பமானவையா..?
44 அதுவென்ன சுன்னத் வல் ஜமாஅத்?
45 இறந்த பின் வாழ சந்தர்ப்பம்.
46 இங்கிலாந்து மசூதி வீடியோ சொல்லும் உண்மைகள்!
47 பாரதியும் இஸ்லாமும் - மாலன்
48 பயணியின் வாழ்க்கை - பேரா. ஹஸனீ
49 கண்ணாடி வாழ்கை - பேரா. ஹஸனீ
50 ஆடை அவிழ்ப்பு அழகாகுமா......
51 நபிகளாரும் காட்சிப்படுத்துதலும் (Visualization)
52 அன்றாட வாழ்வில் இஸ்லாம் - 02
53 அன்றாட வாழ்வில் இஸ்லாம் - 01
54 பெண்களிடம் மாற்றம் வேண்டும்
55 எம் சமூகம் இந்த உலகை ஆளும்
56 தவிர்ப்போம் நாற்காலி தொழுகைகளை...
57 வாய்ப்புகளை நழுவ விடாதீர்கள்!
58 பிரான்சால் நாடுகடத்தப் பட்டு பின்னர் பாராட்டப்பட்ட போராளி
59 மனம் திறந்த மடல் - மனம் திருந்திய தொண்டன்
60 ரமளானில் சமூக நலனுக்காக நாம் செய்ய வேண்டிய துஆ
61 புனித மிஃராஜ் இரவு அமல்கள்!
62 புனிதமான ரஜப் மாதத்தின் மிஃராஜ் இரவின் சிறப்புகள்
63 மனைவிக்காக துஆ செய்வதும் ஒரு சுன்னத்!
64 மனித உடம்பின் 99 இரகசியங்கள் !
65 தஹஜ்ஜூத் தொழுகையின் சிறப்பு
66 ஒவ்வொரு முஸ்லீமும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை
67 எது வணக்கம்..?
68 விஞ்ஞானிகளுக்கெல்லாம்- விஞ்ஞானி.... அல்ஹாசன்விஞ்ஞானி!
69 அன்பு மனைவிகளுக்கு ! அருமையான உபதேசங்கள்!!
70 தமிழ்க் கலாச்சாரத்தை ஆதரிப்போம்.இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பாதுகாப்போம்.
71 இமாம் அபூ ஹனீஃபா (ரஹ்)
72 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 5)
73 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 4)
74 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 3)
75 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 2)
76 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 1)
77 தாயாருக்கு மருந்து வாங்க பணமில்லை ஆனாலும் வேண்டாம் இந்த நான்கு கோடி - ஜுனைத் ஜம்சேத்
78 மீலாது விழா கொண்டாடுவது கூடுமா?
79 இஸ்லாத்தில் பெண்களின் சிறப்பு:
80 நாட்டங்கள் நிறைவேற ஸலாத்துன் நாரிய்யா ஓதுவோம்
81 வைரங்கள் நாங்கள்! - பொது சிவில் சட்டம் பற்றி ஓர் இஸ்லாமிய பெண்
82 அறிவமுதூட்டிய எங்கள் ஆன்மீக ஆசான் கமாலுத்தீன் ஹள்ரத் கிப்லா அவர்கள்......பற்றிய ஒர் மலரும் நினைவு
83 ஆண் மகனின் வாழ்வியல் சோதனை !!!
84 மனைவியை_நேசிங்கள்..
85 தாயுடன் வாழும் வாய்ப்புப் பெற்றவர்களே!
86 அம்மா! அம்மா!
87 அந்த_ஏழைப்_பெண்ணின்_ஜகாத்‬!
88 இந்திய சுதந்திர போராட்ட நாயகர்கள்
89 செருப்புத் தொழிலாளியின் ஹஜ் பயணம்
90 இமாம்களும் மத்கபுகளும்.
91 பெற்றோர்க்கு மரியாதை செய்யுங்கள்.
92 சொர்க்கத்தில் முதலில் நுழையும் ஏழைப் பெண்மணி..!
93 பராஅத் இரவின் சிறப்புகள்
94 வாப்பா!
95 ஆண்ட்ராய்டு போனும் அண்ணலாரின் உம்மத்தும்!
96 கிராமமோ... நகரமோ... அவர்களை கண்காணித்த​படி இருப்பதே பாதுகாப்பது
97 கருத்துக்குக் கருத்தால் பதிலளிப்போம்!
98 என் கேள்விக்கு இறைவனின் பதில்!
99 அரிய பண்புகளைக் கொண்ட அல்கமா (ரலி)வின் குழு
100 இதிலென்ன வெட்கம்?
101 தாய் மடி தேடும் குழந்தைகள்: (வல்லூரின் கரங்களில் நாம்)
102 பழையன கழிதலும் புதியன புகுதலும்
103 நொண்டிக் குதிரைக்குச் சறுக்கியதே சாக்கு !
104 கற்பில் கவனம் தேவை
105 வம்புக்கு இழுப்பதில் என்ன சுகம் இவர்களுக்கு?
106 புக்கூரும் (காலை நேரமும்) இறையருளும்
107 இஸ்திஃகாராவின் சிறப்பு
108 தஜ்ஜால் பற்றிய முன்னறிவிப்பும் பாதுகாப்பிற்கான வழிமுறையும்.
109 இஸ்லாத்தின் பார்வையில் கோபம்!!!
110 உங்களையும் தாக்கலாம் இந்த நோய்!
111 தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-3/3)
112 தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-2/3)
113 தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-1/3)
114 ஏழு குணங்களை தவிர்ந்து கொள்ளுங்கள்! நிம்மதி பெறுங்கள்!
115 கணவன் மனைவி – அற்புதமான விஷயங்கள்.
116 வீட்டுப் பெண்களின் வீடியோ போஸ்
117 எச்சரிக்கை: இப்போதாவது விழித்துக்கொள்வோம்.
118 இறுக்கமும் இரக்கமும்
119 இஷா தொழுகையும் இரவு உணவும்
120 கழிவறைகளில் கிப்லா முன்னோக்கப்பட கூடாது
121 மனிதன் உயிர்வாழ இன்றியமையாதது
122 தினமணி தலையங்கம்: 'இறைவா, எங்கே போகிறோம்?'
123 இறைவணக்கமும் இயலாமையும் (சேரில் அமர்ந்து தொழலாமா?)
124 மரணம் நம் கண்களை தழுவட்டுமே
125 முஸ்லிம் சமூகத்தின் வீட்டுமொழியாக வேண்டிய மொழி அறபு மொழி
126 பெயர்களை நினைவில் வைப்போம்
127 ஊடகங்கள் பரப்பிவரும் முன்ஜென்மபித்தலாட்டம்
128 இறை பிரியத்தோடு உலகில் தலைநிமிர்ந்து வாழ
129 ஹிஜ்ரீ பிறந்த வரலாறு
130 மனிதனுக்கான சுவனத்தை பரிந்துரைக்கும் இரண்டு விடயம்
131 சீனாவில் இஸ்லாம் அறிமுகம்
132 ஆட்சியை நாம் தேடவேண்டுமா? அல்லது ஆட்சி நம்மைத் தேடவேண்டுமா? (பாகம் 2/2)
133 முஸ்லீம் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் தொண்டு நிறுவனங்கள் !...
134 ஒரு 2.5 கதை
135 ஆட்சியை நாம் தேடவேண்டுமா? அல்லது ஆட்சி நம்மைத் தேடவேண்டுமா? (பாகம் ½)
136 இம்ரானா விவகாரம் மீடியாக்கள் நடத்திய மானபங்கம்
137 உலகத்தில் யாருமே ஏழை இல்லை
138 பராஅத் இரவு –நாம் பெற வேண்டிய படிப்பினைகள்பகைமையை முடிவுக்கு கொண்டு வருவோம்
139 வ.உ.சி க்கு 10 லட்சம் ரூபாய்க்கு கப்பல் வாங்கி கொடுத்த பக்கீர் முஹம்மதுவை தெரியுமா?
140 நம் துஆக்கள் ஏன் கபூலாவதில்லை?
141 நபிமொழியை மெய்ப்பித்தது இன்றைய விஞ்ஞானம்!!!
142 குறைகளை மறைத்தல்
143 உலகத்தூதர் கூறிய உண்மை சகோதரத்துவம்!
144 நல்ல பெண்மணி
145 பிஸ்மில்லாஹ் சொல்லியாச்சா...? பாரம்பரியமும் நாகரீகமும்
146 💥 யார் அந்த மாமனிதர்..?
147 ஈர்ப்பை விதைப்போம்!
148 ஒரே ஒரு கேள்வி 10 விதமான அற்புதமான பதில்கள்
149 யார் இந்த துலுக்கன்?
150 ஷஹீத் இமாம் ஹஸனுல் பன்னாவின் 10 அறிவுரைகள்
151 இவ்வுலகிலும் மறு உலகிலும் தன்னிறைவு தரக்கூடிய விஷயங்கள்
152 முஸ்லிம் உலகம் இஸ்லாத்தை தொலைத்து விட்டதா ?
153 உலமாக்களின் தகுதி… அந்தக் காலம் எப்போது வரும்
154 நிம்மதி - சிறுகதை
155 வாழும் இறைநேசர்களிடம் வாழ்த்துப் பெறுவோம் !
156    ஓ...மானிடனே,என்னை தெரிகிறதா?
157 சுலைஹாவின் தவறை உணர்த்திய கணவனின் கடிதம்!
158 நபி வழி வெற்றிக்கு வழி இஸ்லாத்தில் தெரிந்து கொள்ளவேண்டியவை.
159  வாழ்க்கை வாழ்வதற்கே !
160 உம்மதினரின் மீது பெருமானாரின் அளவு கடந்த அன்பு
161 விற்கப்படும் மார்க்கம்
162 அழகிய ஐம்பெருங் குணங்கள் !
163 தன்னம்பிக்கை கொள்ளுங்கள் !
164 பார்வைகள் பலவிதம் !
165 நேர மேலாண்மை / திட்டமிடல்
166 பள்ளிக்கு அருகில் வாழ்வோம்
167 எச்சரிக்கை: தொலைக்காட்சியில் போட்டி என்ற பெயரில் மோசடி
168 அந்நியப் பெண்ணுடன் ஆண் - அந்நிய ஆணுடன் பெண் கைகுலுக்கலாமா?
169 தந்தைகளே! கவனியுங்கள்
170 வரலாறு புகட்டும் பாடம்
171 அல்குர்ஆன் என்னும் மதுரம்
172 முஸ்லிம்கள் செய்ய வேண்டியது என்ன?
173 ஊருக்குள் விடாதீர்..விளம்பரமல்ல விபரீதம்!!
174 கஸ்டம்ஸில் எச்சரிக்கையாக இருங்கள்!
175 நாம் தான் முயல வேண்டும்.
176 குழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள்!
177 காசாகும் குடும்ப அந்தரங்கங்கள். எச்சரிக்கை!!
178 கற்பா? கல்லூரியா?
179 கசாப்புத் தொழில் சிறந்தது....
180 சுவர்க்கத்தை பரிசாக பெற்றுத் தரும் நற்கிரியைகள்
181 நான் ஏன் முஸ்லிம் ஆனேன் ?
182 ரகசிய கேமராக்கள்: பெண்களே எச்சரிக்கை!
183 இருளை நோக்கிச்செல்லும் வெளிச்சமுள்ள சமுதாயம்! தீர்வு என்ன? எப்படி செயல்படுத்துவது?
184 செல்வந்தர் மகனுக்கு கூறிய மரண சாசனம். (சிறுகதை)
185 மேற்கத்திய கலாச்சாரம் TO இஸ்லாம்- முஸ்லிம் பெண்ணியவாதியின் பயணம்
186 என் ஹிஜாப் என் உரிமை!!!
187 சபைகளில் கண்ணியம் தவறும் கணவர்கள்
188 முகமாகும் பெண்கள்!!
189 நற்குணமே இஸ்லாத்தின் அடையாளமாகும்!
190 இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்
191 உங்கள் தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுகிறது?!
192 அன்புச் செல்வங்களுக்கு....(நமக்கும்) - கேள்வி பதில்கள்
193 செல்போன்கள்... ஜாக்கிரதை!
194 இணையதளத்தில் கனவன்-மனைவி அந்தரங்க உரையாடல் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்
195 வெற்றியடைய 10 சுலபமான வழிகள் !
196 ஒரு வழிப்போக்கனின் வாழ்க்கைப் பயணம்!
197 மிஸ்டு காலா... பெண்களே எச்சரிக்கை!
198 ஈமானே-உன் விலையென்ன?
199 இஸ்லாமியரும்-எதிர் நீச்சலும்
200 நாளை நமதா? - ஏ.பி. முஹம்மது அலி ஐ.பி.எஸ். (ஓய்வு)
201 அமைதியாக இருந்தால் அமைதி வருமா ?
202 அமர்ந்தது போதும் எழுந்து வாருங்கள் பயணிப்போம்
203 பயங்கரவாதிகள் எல்லாம் முஸ்லிம்களா?
204 ஒளிரட்டும் பண்மைமிகு மீலாது விழாக்கள் ! ஒழியட்டும் வன்மையிலிருந்து மீளாத விழாக்கள் !!
205 கட்டாய மத மாற்றத்திற்கு இஸ்லாத்தில் இடமில்லை
206 மக்தப் மதரஸா ... ஒரு அமைதிப் புரட்சி
207 யுக முடிவின் இறுதிக்கட்டமா நெருங்கிவிட்டது?
208 "ஜம் ஜம்” தண்ணீர் தோன்றிய வரலாறு
209 மெட்ராஸ் ஐ - குறித்த உண்மைகள் :
210 தாமிரபரணியை உறிஞ்ச வரும் 'பெப்சி' நிறுவன ஆலை
211 பிள்ளைகளை பாதுகாப்பாக வளர்க்க பெற்றோர்களுக்கு சில அழகிய வழி முறைகள்:
212 அறிவைத் தேடுவோம்!
213 தமிழ் மண்ணில் வேர் கொள்ள முடியவில்லை!
214 ஒரு மகன் தன் அப்பாவைப்பற்றி என்ன நினைக்கிறான்?
215 பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா? ஏதிர்த்தாரா?
216 இந்திய முஸ்லிம்களின் முதல் எதிரி அல் காய்தா:
217 பிள்ளையாரப்பா பெரியப்பா,புத்திமதியை சொல்லப்பா
218 அவ்வளவு ஈமானா? அல்லாஹ்வின் மேல் அவ்வளவு நம்பிக்கையா?
219 என் மகனிடம் சொல்லுங்கள்:-ஒரு தாயின் மனக்குமுறல்!
220 சமூக நலத்திற்கு உகந்த சட்டம் எது?
221 “வேர்கள்” வரலாறு!
222 கருத்து வேறுபாடு சம்பந்தமாக சட்டங்கள்
223 என் மகனிடம் சொல்லுங்கள்:-ஒரு தாயின் மனக்குமுறல்!
224 கலீல் அஹ்மத் கீரனூரி (ரஹ்) அவர்களின் அல்அஃப்லாக் வல்அவ்காத் நூல் அறிமுகம்
225 மனிதனின் தேவை ! – மன அமைதி
226 யா அல்லாஹ் ரஜப் ஷஃபான் மாதங்களில் எங்களுக்கு அருள் புரிவாயாக. இன்னும் ரமளானை அடையச் செய்வாயாக
227 அண்ணல் நபிகளாரின் பொன் மொழிகள்-மெளனம் கொள்ளுங்கள்.
228 அல்லாஹ் அறிவுறுத்தும் அமுதமொழிகள்
229 பிரார்த்தனைகள் ஏன் ஏற்கப்படவில்லை?
230 மஸ்ஜித் (பள்ளிவாசல்)
231 பேச்சு,மெளனம்
232 ஜனாஸா - மைய்யத்
233 கிலாஃஃபா மறைவு: இந்தியா தடுமாறியது.. எகிப்து கவலையுற்றது
234 ஹஜ் யாத்திரை - சில சிந்தனைகள் !!!
235 ஜெனரல் எர்வின் ரோமல் கண்ட காலித் இப்னு வலீத் (ரலி )
236 முஸ்லிம்களை ஏன் பயங்கரவாதிகளாக சித்தரிக்க முற்படுகிறார்கள்?
237 வெளிநாடுகளில் வேலை செய்யும் என் சகோதரர்களே!
238 அரிஸ்டாட்டில் முதல் நியூட்டன் வரை
239 இறை நேசர்கள்- தொடரும் விளக்கம்
240 வலிமார்கள் என்பவர்கள் யார்?
241 காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயீல் ஸாஹிப் அவர்களின் பதில் சொல்லும் பாங்கு
242 அமைதியாக இருந்தால் அமைதி வருமா ?
243 மனித குல விரோதி
244 எனது பெயர் ஜனாஸா!
245 பாபரா ராமர் கோயிலை இடித்திருப்பார்???
246 கடன் கொடுப்போரும் வாங்குவோரும் நடந்து கொள்ள வேண்டிய முறை
247 மோடியை விட்டு 2002 ஏன் விலகாது?
248 இஸ்லாம் வாள் முனையில் பரப்பப்பட்டதா?
249 வதைக்கும் விவாகரத்து வழக்குகள்
250 ஹிந்து - குறித்து இஸ்லாம்!
251 தமிழரும் இசுலாமியரும்
252 குர்ஆன் மக்தப் - காலத்தின் தேவை!
253 இஸ்லாம் மிருக வதையை தூண்டுகின்றதா?
254 மில்லர் கண்ட குர்ஆனின் அதிசயங்கள்
255 முஹம்மது(ஸல்) எனக்கு நடுநிலையானவர்
256 முஸ்லிமல்லாதவர்களுக்கு ஒரு கடிதம்
257 அயோத்தி ராமன் அழுகிறான் -கவிஞர் வைரமுத்து
258 துருக்கி மன்னரின் விலை 10 பொற்காசுகளே!
259 கற்பனைகளும் இஸ்லாமும்
260 வணங்கி மகிழ்கிறோம் - ஆச்சிரியம் ஆனால் உண்மை.
261 சுத்தம் பேணுவோம்,நுரையீரலை காப்போம்!
262 நபிகள் நாயகத்தை வசைபாடிப் படம் எடுத்தவர்....
263 மது ஒரு பெரும் பாவம்
264 மகாத்மா காந்தி, பெரியார் சந்திப்பு
265 பெற்றோர்களைப் பேணுவோம்!
266 யார் இவர்? பேச்சாளர்..போர் வீரர்..இராணுவ தலைவர்..
267 சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-3)
268 உடல் உறுப்புகளை தானம் செய்வதுபற்றி இஸ்லாம்
269 தவ்பா என்னும் பாவமன்னிப்பின் சிறப்புகள்!
270 சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-2)
271 சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-1)
272 இதயத்தை கவனமா பாத்துக்கங்க!
273 இமாம்களை கண்ணியம் செய்வோம்!
274 உமர் (ரலி) அவர்களுக்கு நண்பர்கள் எழுதிய கடிதம்.
275 மறுமை வாழ்வை நேசிப்போம்!
276 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 8 - முடிவு)
277 சொல்லின் செல்வர் எம்.எம். பீர் முஹம்மது சாகிப்
278 சுதேசி சிந்தனைகள்.......
279 உள்ளத்தை தூய்மை படுத்துவோம்!
280 கல்வி நல்லோர்களின் சொத்து!
281 மனிதர்களுக்கு மீன்கள் சொல்லும் பாடம்!
282 வாழ்க்கைக்கு உதவும் வாய்மைமொழிகள்! (தொடர்- 1)
283 வாழ்க்கைக்கு உதவும் வாய்மைமொழிகள்! (தொடர்- 2)
284 பாராளுமன்ற தேர்தலும் முஸ்லிம்களின் நிலைபாடும்!
285 தொடர்பூடக ஒழுக்கவியல்: அல்குர்ஆனின் வழிகாட்டல்
286 உண்ணுவதிலும்,குடிப்பதிலும் தூய்மையை பேணுவோம்!
287 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 7)
288 செயற்கைக் கருத்தரிப்பும் வாடகைத் தாயும்!
289 அறிவைத் தேடுவோம்!
290 ஆக்காதீர் ஆசனங்களாக
291 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 5, 6)
292 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 3)
293 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 4)
294 மோதினார் அப்பாவின் கதை அல்ல நிஜம்
295 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 1)
296 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 2)
297 ஸுபுஹ் தொழுகையும் நாமும் ???
298 ஆஸாத் விசாவா?உஷார்,உஷார்!
299 அதிகாலை நேரமும் சுபுஹுத் தொழுகையும்
300 தன்பக்கமா? தன்னிகரற்ற கொள்கையின் பக்கமா?
301 சமுதாய தலைவர்களே சிந்தியுங்கள்!
302 படிப்பினையூட்டும் ஒரு நிகழ்வு!
303 உபதேசம் என்பது உலமாக்களின் தனி உடைமையா?
304 பெண் குழந்தை ஒரு பாக்கியம்
305 நான் ஒருத்தனிடம் ஏமாந்தேன் நீ என்னிடம் ஏமாறு என்பதே மல்டி லெவல் மார்கெட்டிங் - AMWAY Products
306 டாக்டர் ஜாகீர் ஹுசைன் – கல்வியுடன் சுகாதாரத்தையும், ஒழுக்கத்தையும் கற்றுத்தந்தவர்
307 வெப்கேமிரா...எச்சரிக்கை...!
308 மனமகிழ் குடும்பம்:நல்லதோர் குடும்பத்தலைவி!
309 மனமகிழ் குடும்பம்: நல்லதோர் குடும்பத் தலைவன்
310 விசுவரூபம் ஒரு விளக்கம்
311 விஸ்வரூபமும் முஸ்லீம்களும்.
312 மதுவை ஒழிப்போம்,மாதுவை காப்போம்!
313 வாழ்க்கைக்காக ஒரு மரணம்
314 கண்ணாடிகள் கவனம்
315 360 மூட்டுக்கள் (எலும்பு இணைப்புக்கள்) Bone Joints..! ( 7-ம் நூற்றாண்டு முன்னறிவிப்பு )
316 ஷைத்தானின் விரோதிகளும், நண்பர்களும்
317 ஹஜ்ரத் அலி (ரலி) அவர்களின் அறிவுரைகள்
318 துஆக்கள் ஏன் ஒப்புக்கொள்ளப் படுவதில்லை?
319 சிந்திக்க தவறும் ஆண்களுக்கு மட்டும்
320 கருத்து வேறுபாடுகள்.
321 நபியவர்கள் எங்கள் உயிருக்கு மேல்
322 ஹிஜாபுக்குப்பின் கண்ட வாழ்க்கை
323 யூத கிருத்துவ வக்கிரப்படமும் விமர்சனங்களை வென்ற விண்புகழ் வேந்தரும்
324 தஜ்ஜால் Vs டெலிவிஷன்
325 ஓ! என் இளைய சமுதாயமே!
326 இதயத்தை பாதுகாக்க யோசனைகள்!
327 வீண் செலவு வேண்டாமே