ஆட்சியை நாம் தேடவேண்டுமா? அல்லது ஆட்சி நம்மைத் தேடவேண்டுமா? (பாகம் 2/2)

முதல் பாகம்: http://www.tamilislamicaudio.com/articles/detail.asp?cid=26&scid=11&aid=421&alang=ln1

 

தலைவரின் தகுதி, ஆலோசகர்களின் தகுதி, மக்களின் தகுதிகளைப் பார்த்தோம். இதில் ஆலோசகர்களின் தகுதி என்பது மிக முக்கியமானது. தலைவரோ, அல்லது மக்களோ சரியில்லையெனில் எளிதாக வெளிப்பட்டுவிடும் ஆனால் ஆலோசகர்கள் சரியில்லையெனில் அது வெளியில் தெரிவது எளிதல்ல என்பது மட்டுமில்லை அதனால் ஏற்படும் விளைவுகள் எண்ணிப் பார்க்க முடியாதவாறு அமைந்துவிடும். கலிஃபா உதுமான் (ரலி) அவர்களின் ஆலோசர்களின் ஒருவரான மர்வான் என்பவரின் சதியின் விலையை இந்த சமூகம் இன்றளவும் கொடுத்துக் கொண்டிருக்கின்றது. மாவீரன் சிராஜுத் தெளலாவின் ஆலோசகர் மீர் ஜாபரின் துரோகம், சிராஜுத் தெளலாவின் ஆட்சியைப் பறித்தது, வளம் நிறைந்த வங்காளத்தை ஆங்கிலேயர்களின் வசம் கொடுத்தது. தனது சில ஆலோசகர்களின் மன்னிக்க முடியாத துரோகத்தினால் மைசூர் சிங்கம் திப்புசுல்தான் தனது இன்னுயிரைத் துறந்தார், தனது நாட்டை இழந்தார், ஏன் இந்தியாவையே நாம் இழந்தோம். - எண்ணிப் பார்ப்போம் நாம் எத்தனை பேருக்கு நல்ல ஆலோசனைகள் சொல்லும் நண்பர்களாக இருக்கின்றோம், நமக்கு எத்தனை பேர் இருக்கின்றனர் என்று. ஏதாவது ஆலோசனை தேவை என்றால் எத்தனை பேர் நம்மை நாடுகின்றனர் என்று எண்ணிப்பார்ப்போம். (நாகூர் ஹனிபாவின் ஒரு பாடலின் வரி: புத்தி சொல்லும் தகுதி வாழ்ந்து புகழ் மணக்கச் சிறந்திடு...)


குறித்துக் கொள்ளுங்கள் நமது ஓட்டினால் ஆட்சிகள் அமைவதில்லை. அல்லாஹ்வினால் நம்மீது அவைகள் ஏற்படுத்தப்படுகின்றன.

நபி மூஸா (அலை) அவர்களிடம் அவரது மக்கள் கேட்டார்கள் “அல்லாஹ் எங்கள் மீது திருப்தியுடன் இருக்கிறானா அல்லது அதிருப்தியுடன் இருக்கிறானா என்பதை எவ்வாறு அறிந்து கொள்வது” என்று அல்லாஹ்விடம் கேட்டு எங்களிடம் கூறுங்கள். அதன்படி நபி மூஸா (அலை) அவர்கள் அல்லாஹ்விடம் கேட்க அல்லாஹ் கூறினான். நான் மக்கள் மீது திருப்தியுடன் இருக்கிறேன் என்பதற்கான அடையாளம் நல்ல ஆட்சியாளர்களை நான் அவர்கள் மீது அமர்த்துவேன். நான் மக்கள் மீது அதிருப்தியுடன் இருக்கிறேன் என்பதற்கான அடையாளம் அவர்களை கெட்ட ஆட்சியாளர்களின் மூலம் சோதிப்பேன் என்று.

இவ்வாறே நபி ஈஸா (அலை) அவர்களும் அல்லாஹ்விடம் யாஅல்லாஹ் நீ மக்கள் மீது திருப்தியுடன் இருப்பதற்கும், அதிருப்தியுடன் இருப்பதற்கும் என்ன அடையாளம் என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ் நான் திருப்தியுடன் இருந்தால் விவசாய பூமிகளில் விதைகளைப் பயிரிடும் வேளையில் மழையை நான் இறக்குவேன். அறுவடை செய்யும் நேரத்தில் மழையை நிறுத்தி விடுவேன். மேலும் நல்ல ஆட்சியாளர்களையும் அமர்த்துவேன். ஆனால் நான் மக்கள் மீது அதிருப்தியுடன் இருந்தால் விவசாய பூமிகளில் விதைகளைப் பயிரிடும் வேளையில் மழையை நான் நிறுத்தி விடுவேன். அறுவடை செய்யும் நேரத்தில் மழையை இறக்குவேன். மேலும் கெட்ட ஆட்சியாளர்களையும் அமர்த்துவேன். என்று அல்லாஹ் கூறினான்.

ஆனால் நாமோ ஓட்டுகள் சேகரிப்பதில் கவனம் செலுத்துகிறோமே தவிர, நமது அஹ்லாக்குகளை சீர் செய்வதில் சிறிதும் கவனம் செலுத்துவதில்லை.


இங்கு ஒன்றை குறிப்பிட விரும்புகிறேன். இஸ்லாம் என்பது ஒரு முழுமையான வாழ்க்கை வழிமுறை. மறுமைக்காக இம்மையை துறக்கவோ இம்மைக்காக மறுமையை துறக்க நமக்கு கூறப் படவில்லை. இம்மையின் மூலமாகவே மறுமையை அடைய வழிசொல்லும் மார்க்கம். மனைவிக்கு ஆடையளிப்பதும் அறமாகும் என்று கூறிம் நீதியான மார்க்கம். ஆனால் உலகின் ஆட்சி என்பாது அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு அளிக்கின்றான். அது இந்த சமூகமாகத்தான் இருக்கும் என்றில்லை. இன்று உலகின் சூப்பர் பவர்களின் ஒன்று இங்கிலாந்து.

இஸ்லாமிய நாடுளை வெற்றிகொண்டு செல்வத்தையும் அறிவையும் அள்ளிச் சென்று தன்னை வளர்த்துக் கொண்ட நாடு. இதனை இழந்த இஸ்லாமிய நாடுகள் இன்றளவிலும் அறிவில் எழந்து நிற்க இயலாமல் இருப்பது வேதனைக் குறிய ஒரு விசயம். நிற்க இவர்களிடம் ஏன் உலகமே மண்டியிடுகின்றது என்று ஒரு உதாரணம் பார்ப்போம்.

இங்கிலாந்தில் உள்ள பிரஸ்டன் (Preston) என்ற சிறைச்சாலையை ஒரு வலம் வருவோம். இரண்டுபேருக்கு ஒரு அறை. அறையில் வேண்டிய வசதிகள் இண்டர்நெட் வசதியுடன். கட்டாயமாக ஒவ்வொரு கைதியும் சிறைக் காலத்தில் ஒரு தொழில் கல்வியை கற்கவேண்டும். சமையலறை …. 5 ஸ்டார் ஹோட்டல் தோற்று போகும். சமையலுக்காக உபயோகிக்கும் பாத்திரங்கள் அனைத்தும் விலையுயர்ந்தவை. எந்த ஒரு அதிகாரிக்கோ காவாலாளிகளுக்கோ கைதிகளை அடிக்கும் உரிமை மட்டுமல்ல அதட்டும் உரிமை கூட கிடையாது. ஒவ்வொரு வாரமும் கைதிகளுக்க்கான உபதேசம். அந்தந்த மதத்தினருக்கு அந்தந்த மத போதகர்களைக் கொண்டே. உள்ளேயே ஒரு சூப்பர்மார்க்கட். கைதிகள் தங்களுக்குத் தேவையானதை வாங்கிக்கொள்ள.

ரமளான் வந்து விட்டால்……எத்தனை முஸ்லீம் கைதிகளோ அத்தனை “ஹாட் பாக்ஸ்கள்” 8 மணிநேரத்திற்கு உணவு அப்படியே இருக்கும் விலையுயர்ந்த தரமான “ஹாட் பாக்ஸ்கள்”. இரண்டு நேரத்திற்கான உணவுகள் ஸஹர் மற்றும் இஃப்தார் நேரத்திற்காக. (ஏனெனில் அந்த நேரத்தில் அங்கு சமையல் நடப்பதில்லை அதற்காக இந்த ஏற்பாடு). இந்த ஏற்பாடு அத்தனை முஸ்லீம் கைதிகளுக்கும் உண்டு. அவர்கள் நோன்பு வைத்தாலும் சரி வைக்காவிட்டாலும் சரி. (Source: Speech from Moulana Tariq Jameel who witnessed this by himself. Watch: https://www.youtube.com/watch?v=aCsu8yeYpaA [Urdu] )

நம்மால் கற்பனை செய்யக்கூட இயலவில்லை. இது போன்று பல காரணங்கள் அவர்கள் கையில் ஆட்சி அதிகாரம் இருப்பதற்கு. நமது அஹ்லாக்குகள் எப்படியிருக்கின்றன என்பதை சற்றே எண்ணிப் பார்ப்போம்.



முஸ்லீம்கள் மைனாரிட்டியாக இருக்கும் இந்தியாவில் ஆட்சி நம்மைத் தேடி வருமா?


மெளலான அபுல் கலாம் ஆசாத். நேரு இவரிடம் கல்வித் துறையை ஒப்படைத்தார். ஒரு ஆலிமிடம் சுதந்திர இந்தியாவின் கல்வித் துறை எப்படி? நினைத்துப் பார்த்தால் ஆச்சரியமாகத் தான் இருக்கின்றது ஆனால் மெளலானா அபுல் கலாம் ஆசாத்தைப் பற்றி அறிந்த நேருவிற்கோ எந்தவொரு தயக்கமும் இல்லை. சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சரான மெளலான அபுல் கலாம் ஆசாத் சாதித்ததென்ன?. இவரின் பிறந்தநாள் நவம்பர் 11, இந்த தேசத்தின் கல்விதினமாக அறிவிக்கப்படும் அளவிற்கு சாதித்தார். இந்தியாவின் தலை சிறந்த கல்வி நிறுவனமான ஐ.ஐ.டி Indian Institutes of Technology யை நிறுவியவர் இவர் தான். எல்லா பல்கலைகழகங்களையும் கண்காணிக்க University Grants Commission, என்ற அமைப்பை ஏற்படுத்தியவரும் இவர் தான்.- சாதனைகளில் சில.


முகம்மது ரஃபி கித்வாய் அவர்களைப்பற்றி எத்தனை பேருக்குத் தெரியும். நேரு சுதந்திர இந்தியாவில் உணவு நெருக்கடியை போக்குவதற்கு இவர் தகுதியானவர் என அறிந்து இவரிடம் அந்த பொறுப்பை ஒப்படைத்தார். மிக குறுகிய காலத்தில் தனது கடின உழைப்பாலும், மதி நுட்பத்தினாலும் , உணவு நெருக்கடிக்கான காரணங்களை முதலில் கண்டுபிடித்தார். பின்னர் மிக உறுதியுடன் அதற்கான தீர்வுகளை அமல் படுத்தினார். நாட்டின் உணவு நெருக்கடியை தீர்த்தார். மக்கள் வாயார வாழ்த்தினார்கள். ஆனால் அவர் இறக்கும்போது அவரது பூர்வீக வீடு அடமானத்தில் இருந்தது. (நாம் மறந்த தலைவர்களில் இவரும் ஒருவர்) (நன்றி: தேசம் மறந்த ஆளுமைகள் – ராபியா குமாரன்)

தனது நன்னடத்தையாளும், கண்ணியத்தினாலும் ஜனாதிபதி பதவியையே தன்னை நாடி வரச் செய்தவர்தான் டாக்டர் அப்துல் கலாம். பதவி வந்தபின் தனது திறைமையால் அந்த பதவிற்கே ஒரு அந்தஸ்தை இந்திய மக்களிடையே குறிப்பாக மாணவர்களிடையே உருவாக்கினார் அவர்.

நமக்கும் மிக நெருங்கிய காலத்திய உதாரணத்தை காட்டியுள்ளேன். ஆட்சி நம்மைத் தேடி வரவேண்டும் அதற்கான காரணங்களை மக்கள் நம்மிடையே காண வேண்டும். அதற்கான பயிற்சிகளை முதலில் நாம் மேற்கொண்டு, தகுதிகளை வளர்த்துக் கொள்ளவேண்டும். மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் வழங்கும் அறிவாளிகள் சமுதாயத்தில் உருவாக்கப் படவேண்டும்.



சற்றே மாற்றியும் யோசிப்போம். ஆட்சி அவசியம்தானா?

எந்த ஒரு செயலுக்கும் ஒரு நோக்கம் (Objective) இருக்கவேண்டும். நாம் ஆட்சிக்கு வர விரும்புவதற்கும் ஒரு நோக்கம் இருக்கவேண்டும். அது மக்களுக்கு, முஸ்லீம்கள் உட்பட அனைவருக்கும், நல்லது செய்வது தான் என்று மட்டுமே என்றிருக்கவேண்டும். அதல்லாமல் மற்ற எதற்காகவாவது (பதவி ஆசை, அதிகாரத்திற்காக, பணத்திற்காக, பெயருக்காக, புகழுக்காக etc..) இருக்குமேயானால் இஸ்லாத்திற்கும் அவர்களுக்கும் எந்த சம்பந்தமுமில்லை.

இப்போது நோக்கம் மக்களுக்கு நல்லது செய்வதற்காக, குறிப்பாக முஸ்லீம்களின் பாதுகாப்பிற்காக, அமைதிக்காக என்றிருக்கும் பட்சத்தில், சற்றே மாற்றி யோசிப்போம் ஆட்சியில் இருந்தால் மட்டும் தான் இது சாத்தியமா? ஆட்சியில்லையெனில் இவை சாத்தியமில்லையா? நிச்சயம் இதற்கு ஆட்சியில் இருப்பது அவசியமில்லை என்பதே பதில், உதாரணம் சென்னை வெள்ள நிவாரணப் பணி.

சமீபத்திய சென்னை வெள்ளப் பெருக்கின் போது நமது சமுதாயத்தினர் மேற்கொண்ட நற்பணிகள். சமுதாயத்தின் மீதிருந்த எண்ணத்தையே மற்றவர்களிடம் மாற்றிப் போட்டது. பலனை எதிர்பாராமல் செய்யும் உதவிகள் எதிரிகளையும் நண்பர்களாக மாற்றிவிடும். நாளை நமது நலனுக்கு ஒரு பிரசினை என்றால் நாம் களம் இறங்க வேண்டியதில்லை, நமக்கு முன்னே நமக்காக அவர்கள் நிற்பார்கள். வெள்ள நிவாரணப் பணி ஒரு ரியாக்சன். ஒரு ரியாக்சனுக்கே இவ்வளவு பவர் என்றால் ஆக்சனுக்கு எப்படியிருக்கும்.

எந்த டாக்டரிடம் நமக்கு சுகம் கிடைக்கின்றதோ அவரிடம் தான் நாம் மீண்டும் செல்வோம். இது மனித இயற்கை. இது போன்று தான் தனது பிரச்சினைகளுக்கு தீர்வுகளை யார் கொடுக்கின்றார்களோ அவர்களைத்தான் மக்கள் விரும்புவார்கள். வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முஸ்லீம் சமூகம் தீர்வைக் கொடுத்தது தான் இந்த சமுகத்தைப் பற்றிய பார்வையே மாற்றி அமைத்தது. இதிலிருந்து நாம் பாடம் பெறவேண்டும். மக்களுக்கான தீர்வை கொடுப்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும். மக்களின் தீர்க்கபடாத பிரச்சினைகள் ஏராளமாக இருக்கின்றன. அதில் சிலவற்றிற்காகவாவது தீர்வுகளை கொடுக்க நாம் முன்வரவேண்டும்.

தண்ணீர் பற்றாக்குறை

மழை நீர் சேமிப்பு திட்டங்களை அமல் படுத்தலாம். இருந்த ஏரிகளும், குளங்களும், குட்டைகளும் பிளாட்டுகளாக மாறியது தான் தண்ணீர் பற்றாக்குறைக்கு காரணம். சமீபத்திய வெள்ளத்திற்கும் காரணம். முஸ்லீம் அமைப்புகளும், செல்வந்தர்களும் இந்த திட்டங்களை முறைப்படி அமல்படுத்தலாம். இது ஒரு சிறந்த ஸதகத்துல் ஜாரியாவாக அமையும்.

மருத்துவத்துறை:

தொண்டாற்றும் துறையாக ஒரு காலத்தில் இருந்தது இன்று முழுவதுமாக வியாபாரமாக்கப் பட்டுவிட்டது. ஆஸ்பத்திரிக்கு செல்லாமலே எளிய முறையில் குணப்படுத்தும் முறைகள் இருக்கின்றன. இதற்கான விழிப்புணர்வை முறையாக மேற்கொள்ளலாம். அதிக விலையுள்ள பல மருந்துகளுக்கு விலை குறைவான மாற்று மருந்துகள் உள்ளன. இதனடிப்படையில் மலிவு விலை மருந்து கடைகளை திறக்கலாம்.

விவசாயம்:

உணவே மருந்தாக இருந்த காலம் மாறி இன்றே விஷமே உணவாக இருக்கின்றது. எந்த பூச்சிக் கொள்ளி மருந்துகளை குடித்தால் மரணம் நிச்சயமோ அந்த மருந்துகளைத்தான் உணவு தானியங்களுக்கு தெளித்து பின்னர் அதை உணவாக சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றோம், அதன் காரணமாகத்தான் நோய்களும் நோயாளிகளும் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. முஸ்லீம் விவயசாயிகள் இயற்கை விவசாயத்தை கையில் எடுப்பது மட்டுமில்லாமல் அதில் முன்னோடிகளாக திகழவேண்டும்.

குர்ஆனிலிருந்து தீர்வுகள்:

குர்ஆனில் வாழ்வின் எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் இருக்கின்றன என்று பெருமையுடன் கூறிக் கொண்டிருக்கின்றோம். ஆனால் எந்த தீர்வையாவது செயல் படுத்தி காட்டியிருக்கின்றோமா?. நமக்கு ஓதுவதற்கே நேரமில்லை இதில் எங்கே ஆய்வு செய்வது..

குர்ஆனை ஆய்வு செய்து அதில் முன்னணியில் இருப்பவர்கள் யார் தெரியுமா? தெரியவில்லை என்றால் தெரிந்து கொள்ளுங்கள். யூதர்கள் தான். அல்லாஹ் ஆத் சமுதாயத்தை நெருப்பை கொண்டழித்தான் என்ற ஆயத்தை ஆய்வு செய்தார்கள். அப்படியானால் அந்த ஏரியாவில் நெருப்பு சம்பந்தப்பட்ட பொருள் இருக்கவேண்டுமென்ற கோணத்தில் ஆராய்ந்து பெட்ரோல் இருப்பதை கண்டுபிடித்தார்கள்.

படிக்கவேண்டும், ஆராய்ச்சிகள் குர்ஆன் அடிப்படையில் தொடங்கவேண்டும். மனித சமுதாயத்திற்கு தீர்வுகள் வழங்கப்படவேண்டும். எந்த சமுதாயம் தன்னுடைய பிரச்சினைகளுக்கு தீர்வுகளை அளிக்கின்றதோ அந்த சமுதாயத்தை நிச்சயமாக தன்னை ஆள்வதற்கு முழு சம்மதத்துடன் வரவேற்கும். ஆகவே நமது சிந்தனைகள் என்னைக் கொண்டு மற்றவர்கள் என்ன பலன் அடைந்தார்கள் என்ற கோணத்தில் அமைய வேண்டும். மற்றவர்கள் மீது எப்படி அதிகாரம் செலுத்தலாம் என்று ஒரு போதும் இருக்கக்கூடாது. எந்த வகையில் அல்லாஹ் எனக்களித்திருக்கும் அறிவை என்னல் பெருக்கி மற்றவர்களுக்கு அதன் மூலம் பலனளிக்க முடியும் என்ற எண்ணத்தை வளரச் செய்ய வேண்டும்.

மதுவிலக்கு:

வாக்குறுதி அளிப்பது எளிது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிளக்கு அமல் படுத்துவோம் என்று கூறுவது. செயல் முறை….? இப்போது தமிழ் நாட்டின் வருமானத்தில் முதலிடத்தில் இருப்பது மதுக்கடைகள் மூலம் வரும் வருமானம் 2014 -15-ல், 22 ஆயிரத்து, 400 கோடி . இன்று அரசின் வருமானத்தில், ஏறத்தாழ ஐந்தில் ஒரு பங்கு, மது விற்பனை மூலம் கிடைக்கிறது. பலபேர்களுக்கு வேலைவாய்ப்பும் இதில் அடக்கம். மது விலக்கை அமல் படுத்தினால் இந்த இரண்டு பிரச்சினைகளையும் தீர்க்கவேண்டும். அதற்கான செயல் முறை திட்டம் நம்மிடையே இருக்கின்றதா?. கிடையாது. ஆகவே அதில் கவனம் செலுத்தி அப்படியொரு எளிதாக நடைமுறை படுத்தக் கூடிய பொருளாதார செயல் முறைதிட்டத்தை உருவாக்கி, ஆளும் கட்சியிடம் ஒப்படைத்து செயல் படுத்தக் கூறலாம். கோரிக்கையுடன் தீர்வும் வைக்கப்படும் போது பிரச்சினை தீர்வதற்கான சாத்தியம் அதிகம்.

வட்டியில்லா கடன்:

இன்று எத்தனையோ குடும்பங்கள் வட்டிப் பிரச்சினைகளினால் நிம்மதியிழந்து தவிக்கின்றன. கடனாக வாங்கிய ஒரு சிறு தொகைக்காக வாழ்க்கை முழுவதும் வட்டி கொடுத்துக் கொண்டிருப்பவர்கள் கணக்கிலடங்கா. வட்டியில்லா வங்கிகள் சாத்தியமே இன்று இந்தியாவிலேயே நம்மவர்கள் சிலரின் முயற்சியால் தொடங்கப்பட்டு பலபேர் பலனடைந்து கொண்டிருக்கின்றனர். அதற்கான முயற்சியில் நேரடியாக ஈடுபட முடியவில்லையெனினும் அதில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு முழு ஆதரவையும் ஊக்கத்தையும் வழங்கலாம்.

ஜகாத்:

இதை முறைப்படுத்தினால் ஏழ்மை ஒழிந்து விடும் என்று கோஷம் மட்டும் போட்டுக் கொண்டிருக்காமல் செயலில் செய்து காட்டலாம், முஹல்லா அளவில் இது முறைப்படுத்தி பின்னர் ஊர் அளவில், மாவட்ட அளவில் ஜமாத்துகளின் தொடர்பு ஏற்படுத்தப் பட்டால் ஏற்படும் பலன்கள் நிச்சயம் மாற்று மத சகோதரர்களையும் நம்மளவில் ஈர்க்கும். இருக்கும் அமைப்புகள் ஜமாத்துகள் மிக எளிதாக இதை செயல் படுத்தலாம்.

குறிப்பு: கடந்த சில வருடங்களாக எங்கள் ஊரைச் (நெல்லை ஏர்வாடி) சேர்ந்த EMAN என்ற ஐக்கிய அமீரக அமைப்பின் மூலம் ஜகாத்தை வசூல் செய்து முறையாக அதை கொடுத்து வருகிறோம். இன்று மிகவும் ஏழ்மையான, எந்தவித ஆதரவுமற்ற சுமார் 80 ஏழை குடும்பங்கள் அவர்களுக்கான பணம் அவர்களுக்கு கிடைத்த நிலையில், யார் கையையும் எதிர்பாராமல் வாழ்கின்றனர்.


மேலே குறிப்படப்பட்ட அனைத்துமே நிச்சயமாக நாம் செயல் படுத்தப்படக் கூடியதே! இது போன்ற நல்ல காரியங்களைச் செய்வதற்கு ஆட்சி தேவையில்லை, மாறாக இது போன்ற காரியங்களில் நாம் ஈடுபட்டால் நிச்சயம் ஆட்சி ஒருநாள் நம்மைத் தேடிவரும்.

உண்மையில் நோக்கமும் செயலும் தூய்மையாக இருந்தால் ஒரு ஆட்சியால் சாதிக்க முடியாததை ஒரு தனி நபர் சாதிக்க முடியும். இதோ சில உதாரணங்கள்: வரலாறு அல்ல.. நிகழ் காலத்திலேயே…

ஒருகோடிக்கும் மேற்பட்ட மக்கள் இஸ்லாத்தை ஏற்க காரணம்.
5,700 பள்ளிவாசல்கள்.
9,500 கிணறுகள்
15,000 அனாதைகளின் பரிபாலனம்..
எந்த அரசாங்கத்தினாலும் சாதிக்க முடியாததை தனி நபராக சாதித்தார்.
சாதித்தவர்: டாக்டர்: அப்துல் ரஹ்மான் அல் சுமைத். தனது சொகுசான குவைத் வாழ்க்கையைத் துறந்து, உயிரைப் பணயம் வைத்து ஆப்ரிக்காவில் அவர் செய்த தியாக உழைப்பின் விளைவுகள்.
Watch: https://www.youtube.com/watch?v=TbPbbOGGknE 



1.800 ஆம்புலென்சுகள். (Efficient Service, Response time 3 to 5 mins)
நூற்றுக் கணக்கான மருத்துவ மனைகள். தனக்கென சொந்த வீடில்லை.
ஆதரவற்ற குழந்தைகள், பெண்கள் மற்றும் வயோதிர்களுககாக எப்பொதுமே திறந்திருக்கும் கதவுகள்.
சாதித்தவர்: அப்துல் சத்தார் யத்ஹி, அண்டை நாடான பாகிஸ்தானில்
அரசாங்கத்தால் சாதிக்க முடியாததை தனி நபராக சாதித்தவர்.
Watch: https://www.youtube.com/watch?v=AfKn2vUiQuc 



சிந்தனைகள் மாறவேண்டும். அது பதவியை நோக்கி ஒரு போதும் இருக்கக் கூடாது. சேவை என்ற வட்டத்திற்குள்ளேயே அது இருக்கவேண்டும்.

பல அமைப்புகள் இது போன்று சமூக பிரச்சினைகளுக்கு தமிழ் நாட்டில் நமக்கருகிலேயே தீர்வையளித்துக் கொண்டிருக்கின்றன. அவைகள் பத்திரிக்கைகளிலோ, டி.வி.க்களிலோ, வாட்ஸ்அப்புகளிலோ வருவதில்லை தெரிவதில்லை. அவற்றைத் தேடி கண்டுபிடித்து அவர்களுக்கு ஊக்கத்தையும் உங்களது நேரத்தையும் கொடுங்கள்.

சகோதரர்களை பேச்சை குறைப்போம் செயல்களை அதிகப் படுத்துவோம். என்றோ படித்த ஞாபகம், சந்தோசம் என்பது வண்ணத்துப் பூச்சியைப் போன்றது. அதை நாம் துரத்தினால் அது நம்மைவிட்டு விலகிப் போகும். நாம் அதை சட்டைசெய்யாமல் நமது (சரியான) வேலையில் கவனம் செலுத்தினால் அது நமது தோளில் வந்தமரும் என்று. ஆம் ஆட்சியும் அது போன்றே.

நமது குறிக்கோள் உண்மையான வெற்றி, சந்தோசம்… இம்மையிலும் மறுமையிலும். அது ஆட்சி கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும். மக்கள் தொண்டே மகேசன் தொண்டு. ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம். மறுமை வரை காத்திருக்காமல்…

அல்லாஹ் நம் அனைவருக்கும் உணர்ந்து புரிந்து சரியான வழியில் செயல்பட அருள் புரிவானாக..

குறிப்பு: நான் மார்க்கம் கற்ற ஆலிம் இல்லை. தவறுகள் இருந்தால் சுட்டிக் காட்டுங்கள், திருத்திக் கொள்கிறேன்.

நெல்லை ஏர்வாடி S.பீர் முஹம்மத்
http://www.nellaiEruvadi.com
http://www.TamilIslamicAudio.com


7146. அப்துர் ரஹ்மான் இப்னு சமுரா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் (என்னிடம்), 'அப்துர் ரஹ்மானே! ஆட்சிக் பொறுப்பை (நீங்களாக)க் கேட்காதீர்கள். ஏனெனில், நீங்கள் கேட்டு அது உங்களுக்கு அளிக்கப்பட்டால் அதோடு நீங்கள் (தனியாக) விடப்படுவீர்கள். கேட்காமல் உங்களுக்கு அது அளிக்கப்பட்டால் அது தொடர்பாக உங்களுக்கு (அல்லாஹ்வின்) உதவிகிடைக்கும். நீங்கள் ஒரு சத்தியம் செய்து, அது அல்லாத வேறொன்றை அதைவிடச் சிறந்ததாக நீங்கள் கருதினால் உங்களின் சத்தியத்(தை முறித்துவிட்டு முறித்த)தற்கான பரிகாரத்தைச் செய்துவிடுங்கள். சிறந்தது எதுவோ அதைச் செயல்படுத்துங்கள்' என்றார்கள்.13 Volume :7 Book :93 புஹாரி

நபி (ஸல்) கூறினார்கள்: “ஒரு முஃமின் (இறைநம்பிக்கையாளர்) மற்றொரு முஃமினுக்கு ஒரு கட்டடத்தைப் போன்றாவார். கட்டடத்தின் ஒரு பகுதி மற்ற பகுதிக்கு வலு சேர்க்கிறது.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

மேலும் நபி (ஸல்) கூறினார்கள்: “பகைமை கொள்ளாதீர்கள் பொறாமை கொள்ளாதீர்கள் புறக்கணிக்காதீர்கள் சகோதரர்களாக, அல்லாஹ்வின் அடிமைகளாக வாழுங்கள் ஒரு முஸ்லிம் தனது சகோதரரை மூன்று நாட்களுக்கு மேல் வெறுத்து ஒதுக்கிட வேண்டாம்.” (ஸஹீஹுல் புகாரி)

மேலும் கூறினார்கள்: “ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக்கு சகோதரராவார். அவருக்கு அநியாயம் செய்யக் கூடாது அவரை எதிரியிடம் ஒப்படைக்கக் கூடாது யாரொருவர் தனது சகோதரன் தேவையை நிறைவேற்ற ஈடுபடுகிறாரோ அல்லாஹ் அவன் தேவையை நிறைவேற்றுகிறான்! யார் ஒருவர் ஒரு முஸ்லிமின் கஷ்டத்தை அகற்றுகிறாரோ அவருக்கு அல்லாஹ் மறுமையின் கஷ்டங்களிலிருந்து ஒரு கஷ்டத்தை அகற்றுகிறான். யார் ஒருவர் முஸ்லிமின் குறையை மறைப்பாரோ அல்லாஹ் அவருடையக் குறையை மறுமையில் மறைத்துவிடுவான்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

மேலும் கூறினார்கள்: “பூமியிலுள்ளவர்களின் மீது கருணை காட்டுங்கள். வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான்.” (ஸுனன் அபூதாவூது, ஸுனனுத் திர்மிதி)




1 அவளுக்காக நான் இதை மறக்கவே மாட்டேன்
  ஆறுதல் என்பது சில நேரங்களில் உலகத்திலுள்ள அனைத்து செல்வங்களை விடவும் மேலானதாக இருக்கும்
 
2 அவர்கள் என்னைத் துரத்திவிடுவார்களா?
  மொழியின் மூலைமுடுக்கெல்லாம் தேடினாலும், இதைவிட வலிமிகுந்த ஒரு கேள்வியை நீங்கள் காண முடியாது: "அவர்கள் என்னைத் துரத்திவிடுவார்களா?"
 
3 திருக்குர்ஆனின் அற்புதம் - வானமும் பூமியும் அழவில்லை - பிர்அவ்ன்
  முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பே இச்சம்பவங்கள் நிகழ்ந்துவிட்டன. அக்காலகட்டத்தில் எகிப்தின் மொழி அறபி அல்ல. கி.பி. ஏழாம் நூற்றாண்டில், கலீபா உமர் (ரலி) அவர்களின் காலத்தில் எகிப்து இஸ்லாமிய ஆட்சியின் கீழ் வந்த பிறகே அங்கு அறபு மொழி பரவத் தொடங்கியது.
 
4 ஒரு ஆறுதல் வார்த்தை, ஒருவரின் மறுமை வாழ்வையே மாற்றக்கூடும்.
  எவரையும் குறைத்து மதிப்பிடாதீர்கள். நீங்கள் காட்டும் ஒரு சிறு கருணை அல்லது சொல்லும் ஒரு ஆறுதல் வார்த்தை, ஒருவரின் மறுமை வாழ்வையே மாற்றக்கூடும்.
 
5 ரமலானை வரவேற்கும் துஆ
  நோன்பும் இரவுத் தொழுகையும் நிறைவேற்றும் சக்தியை எங்களுக்கு அருள்வாயாக. இம்மாதத்தை எங்கள் உள்ளங்களைத் தூய்மைப்படுத்தும் மாதமாகவும், தவறான எண்ணங்களை அழிக்கும் மாதமாகவும் ஆக்குவாயாக.
 
6 ரமலான் நோன்பின் 10 முக்கிய நோக்கங்கள்
7 அவர்களும் சதித் திட்டங்களை தீட்டினார்கள். அல்லாஹ்வும் திட்டங்களை தீட்டினான் - 2 அற்புத உதாரணங்கள்
8 அல்லாஹ் நம்மை நேசிக்கிறானா இல்லையா என்பதை நாம் எப்படி நிர்ணயிப்பது?
9 எல்லா பிரச்சனைக்கும் தீர்வு - நடமாடும் குர்ஆனாக நாம் மாறவேண்டும் -
10 காசா! ஒரு துன்பம் மகிழ்ச்சியானது
11 தடுமாறாத குதிரை இல்லை. சறுக்காத பாதம் இல்லை.
12 ︎நேர்மை என்பது...
13 செய்யும் உதவிகளுக்காக, மனிதர்களின் பாராட்டை எதிர்பார்க்க வேண்டாம்
14 போட்டோ: பாலஸ்தீன குழந்தைகள் மீது இஸ்ரேலின் போர்
15 பாலஸ்தீனத்தின் பெருமை
16 திருச்சி சகோதரர்களின் கவனத்திற்கு: சோழ இளவரசி குந்தவை நாச்சியார்
17 இஸ்லாமிய வங்கி இயலின் தந்தை மறைந்தார்!
18 உணரப் படாத தீமை சினிமா
19 நான் ஏன் முஸ்லிம் ஆனேன்? - முன்னாள் கன்னியாஸ்திரி!
20 ஆறுதல் சொல்லச் சென்றோர் ஆறுதல் பெற்றுத் திரும்பிய அதிசயம்!
21 விரக்தி விஷத்தை விட கொடியது
22 பொறுத்தோம்! ஆனால் பொறுக்கமாட்டோம் யா ரஸூலுல்லாஹ்!
23 வாழ்க்கைக்கான பாடம் பாடப்புத்தகத்தில் அல்ல; போதிப்பவர்களின் வாழ்க்கையில் இருக்கிறது.
24 நரக மாளிகை - தாய் மண்ணின் மீது பற்று கொண்ட ஒவ்வொரு இந்தியனும் கட்டாயம் படிக்க வேண்டிய நூல்!
25 இங்கிலாந்தில் தப்லீக் ஜமாத் அனுபவங்கள்
26 அந்தப் பெண்களாக நாம்...
27 தன்னிகரற்ற தமிழகத்து உலமாபெருமக்கள் வரிசையில்
28 2021 ல் தமிழகம் இழந்த ஆலிம்கள்:
29 இமாம் அபுல் ஹஸன் நத்வி ரஹிமஹுல்லாஹ்
30 நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்ட 10 துஆக்கள்,
31 நோன்பும் மனக்கட்டுப்பாடும்
32 இவ்வளவு முரண்பாடுகளுடன் இறைவனிடம் கையேந்த வெக்கமாயில்ல!?
33 ஐரோப்பாவின் பிரபல்யமான அறிவுத் திருட்டுகள்.....
34 திருமணப் பதிவேடு எழுதுவதில் அக்கறையின்மை......!
35 நீ வரைந்த பாதை வழியே வாழ்க்கை ஓடுவதில்லை
36 முதியோர் பராமரிப்பு – இஸ்லாமிய கண்ணோட்டம்
37 இளையான்குடியில் உருது மக்கள்
38 கொண்டாடப்பட வேண்டிய ஆளுமைகள் : ஈரோடு மீ. கிபாயத்துல்லாஹ் பாகவி
39 மரணம் நோக்கி...
40 ஸிமம் தஃப்தரி (ZIMEM DEFTERI) - ஏழைகளின் கடனையடைத்தல்
41 மௌலானா சாத்(தா.ப) அவர்களுக்காக ஜரோப்பாவிலுள்ள ஒருதாயியின் அன்பான செய்தி
42 பேசாமல் இரு, கதவை அல்லாஹ் எப்படித் திறக்கிறான் என்று பார்
43 (புத்தாண்டு) கொண்டாட்டங்களை விட மனித உயிர்கள் அற்பமானவையா..?
44 அதுவென்ன சுன்னத் வல் ஜமாஅத்?
45 இறந்த பின் வாழ சந்தர்ப்பம்.
46 இங்கிலாந்து மசூதி வீடியோ சொல்லும் உண்மைகள்!
47 பாரதியும் இஸ்லாமும் - மாலன்
48 பயணியின் வாழ்க்கை - பேரா. ஹஸனீ
49 கண்ணாடி வாழ்கை - பேரா. ஹஸனீ
50 ஆடை அவிழ்ப்பு அழகாகுமா......
51 நபிகளாரும் காட்சிப்படுத்துதலும் (Visualization)
52 அன்றாட வாழ்வில் இஸ்லாம் - 02
53 அன்றாட வாழ்வில் இஸ்லாம் - 01
54 பெண்களிடம் மாற்றம் வேண்டும்
55 எம் சமூகம் இந்த உலகை ஆளும்
56 தவிர்ப்போம் நாற்காலி தொழுகைகளை...
57 வாய்ப்புகளை நழுவ விடாதீர்கள்!
58 பிரான்சால் நாடுகடத்தப் பட்டு பின்னர் பாராட்டப்பட்ட போராளி
59 மனம் திறந்த மடல் - மனம் திருந்திய தொண்டன்
60 ரமளானில் சமூக நலனுக்காக நாம் செய்ய வேண்டிய துஆ
61 புனித மிஃராஜ் இரவு அமல்கள்!
62 புனிதமான ரஜப் மாதத்தின் மிஃராஜ் இரவின் சிறப்புகள்
63 மனைவிக்காக துஆ செய்வதும் ஒரு சுன்னத்!
64 மனித உடம்பின் 99 இரகசியங்கள் !
65 தஹஜ்ஜூத் தொழுகையின் சிறப்பு
66 ஒவ்வொரு முஸ்லீமும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை
67 எது வணக்கம்..?
68 விஞ்ஞானிகளுக்கெல்லாம்- விஞ்ஞானி.... அல்ஹாசன்விஞ்ஞானி!
69 அன்பு மனைவிகளுக்கு ! அருமையான உபதேசங்கள்!!
70 தமிழ்க் கலாச்சாரத்தை ஆதரிப்போம்.இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பாதுகாப்போம்.
71 இமாம் அபூ ஹனீஃபா (ரஹ்)
72 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 5)
73 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 4)
74 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 3)
75 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 2)
76 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 1)
77 தாயாருக்கு மருந்து வாங்க பணமில்லை ஆனாலும் வேண்டாம் இந்த நான்கு கோடி - ஜுனைத் ஜம்சேத்
78 மீலாது விழா கொண்டாடுவது கூடுமா?
79 இஸ்லாத்தில் பெண்களின் சிறப்பு:
80 நாட்டங்கள் நிறைவேற ஸலாத்துன் நாரிய்யா ஓதுவோம்
81 வைரங்கள் நாங்கள்! - பொது சிவில் சட்டம் பற்றி ஓர் இஸ்லாமிய பெண்
82 அறிவமுதூட்டிய எங்கள் ஆன்மீக ஆசான் கமாலுத்தீன் ஹள்ரத் கிப்லா அவர்கள்......பற்றிய ஒர் மலரும் நினைவு
83 ஆண் மகனின் வாழ்வியல் சோதனை !!!
84 மனைவியை_நேசிங்கள்..
85 தாயுடன் வாழும் வாய்ப்புப் பெற்றவர்களே!
86 அம்மா! அம்மா!
87 அந்த_ஏழைப்_பெண்ணின்_ஜகாத்‬!
88 இந்திய சுதந்திர போராட்ட நாயகர்கள்
89 செருப்புத் தொழிலாளியின் ஹஜ் பயணம்
90 இமாம்களும் மத்கபுகளும்.
91 பெற்றோர்க்கு மரியாதை செய்யுங்கள்.
92 சொர்க்கத்தில் முதலில் நுழையும் ஏழைப் பெண்மணி..!
93 பராஅத் இரவின் சிறப்புகள்
94 வாப்பா!
95 ஆண்ட்ராய்டு போனும் அண்ணலாரின் உம்மத்தும்!
96 கிராமமோ... நகரமோ... அவர்களை கண்காணித்த​படி இருப்பதே பாதுகாப்பது
97 கருத்துக்குக் கருத்தால் பதிலளிப்போம்!
98 என் கேள்விக்கு இறைவனின் பதில்!
99 அரிய பண்புகளைக் கொண்ட அல்கமா (ரலி)வின் குழு
100 இதிலென்ன வெட்கம்?
101 தாய் மடி தேடும் குழந்தைகள்: (வல்லூரின் கரங்களில் நாம்)
102 பழையன கழிதலும் புதியன புகுதலும்
103 நொண்டிக் குதிரைக்குச் சறுக்கியதே சாக்கு !
104 கற்பில் கவனம் தேவை
105 வம்புக்கு இழுப்பதில் என்ன சுகம் இவர்களுக்கு?
106 புக்கூரும் (காலை நேரமும்) இறையருளும்
107 இஸ்திஃகாராவின் சிறப்பு
108 தஜ்ஜால் பற்றிய முன்னறிவிப்பும் பாதுகாப்பிற்கான வழிமுறையும்.
109 இஸ்லாத்தின் பார்வையில் கோபம்!!!
110 உங்களையும் தாக்கலாம் இந்த நோய்!
111 தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-3/3)
112 தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-2/3)
113 தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-1/3)
114 ஏழு குணங்களை தவிர்ந்து கொள்ளுங்கள்! நிம்மதி பெறுங்கள்!
115 கணவன் மனைவி – அற்புதமான விஷயங்கள்.
116 வீட்டுப் பெண்களின் வீடியோ போஸ்
117 எச்சரிக்கை: இப்போதாவது விழித்துக்கொள்வோம்.
118 இறுக்கமும் இரக்கமும்
119 இஷா தொழுகையும் இரவு உணவும்
120 கழிவறைகளில் கிப்லா முன்னோக்கப்பட கூடாது
121 மனிதன் உயிர்வாழ இன்றியமையாதது
122 தினமணி தலையங்கம்: 'இறைவா, எங்கே போகிறோம்?'
123 இறைவணக்கமும் இயலாமையும் (சேரில் அமர்ந்து தொழலாமா?)
124 மரணம் நம் கண்களை தழுவட்டுமே
125 முஸ்லிம் சமூகத்தின் வீட்டுமொழியாக வேண்டிய மொழி அறபு மொழி
126 பெயர்களை நினைவில் வைப்போம்
127 ஊடகங்கள் பரப்பிவரும் முன்ஜென்மபித்தலாட்டம்
128 இறை பிரியத்தோடு உலகில் தலைநிமிர்ந்து வாழ
129 ஹிஜ்ரீ பிறந்த வரலாறு
130 மனிதனுக்கான சுவனத்தை பரிந்துரைக்கும் இரண்டு விடயம்
131 சீனாவில் இஸ்லாம் அறிமுகம்
132 முஸ்லீம் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் தொண்டு நிறுவனங்கள் !...
133 ஒரு 2.5 கதை
134 ஆட்சியை நாம் தேடவேண்டுமா? அல்லது ஆட்சி நம்மைத் தேடவேண்டுமா? (பாகம் ½)
135 இம்ரானா விவகாரம் மீடியாக்கள் நடத்திய மானபங்கம்
136 உலகத்தில் யாருமே ஏழை இல்லை
137 பராஅத் இரவு –நாம் பெற வேண்டிய படிப்பினைகள்பகைமையை முடிவுக்கு கொண்டு வருவோம்
138 வ.உ.சி க்கு 10 லட்சம் ரூபாய்க்கு கப்பல் வாங்கி கொடுத்த பக்கீர் முஹம்மதுவை தெரியுமா?
139 நம் துஆக்கள் ஏன் கபூலாவதில்லை?
140 நபிமொழியை மெய்ப்பித்தது இன்றைய விஞ்ஞானம்!!!
141 குறைகளை மறைத்தல்
142 உலகத்தூதர் கூறிய உண்மை சகோதரத்துவம்!
143 நல்ல பெண்மணி
144 பிஸ்மில்லாஹ் சொல்லியாச்சா...? பாரம்பரியமும் நாகரீகமும்
145 💥 யார் அந்த மாமனிதர்..?
146 ஈர்ப்பை விதைப்போம்!
147 ஒரே ஒரு கேள்வி 10 விதமான அற்புதமான பதில்கள்
148 யார் இந்த துலுக்கன்?
149 ஷஹீத் இமாம் ஹஸனுல் பன்னாவின் 10 அறிவுரைகள்
150 இவ்வுலகிலும் மறு உலகிலும் தன்னிறைவு தரக்கூடிய விஷயங்கள்
151 முஸ்லிம் உலகம் இஸ்லாத்தை தொலைத்து விட்டதா ?
152 உலமாக்களின் தகுதி… அந்தக் காலம் எப்போது வரும்
153 நிம்மதி - சிறுகதை
154 வாழும் இறைநேசர்களிடம் வாழ்த்துப் பெறுவோம் !
155    ஓ...மானிடனே,என்னை தெரிகிறதா?
156 சுலைஹாவின் தவறை உணர்த்திய கணவனின் கடிதம்!
157 நபி வழி வெற்றிக்கு வழி இஸ்லாத்தில் தெரிந்து கொள்ளவேண்டியவை.
158  வாழ்க்கை வாழ்வதற்கே !
159 உம்மதினரின் மீது பெருமானாரின் அளவு கடந்த அன்பு
160 விற்கப்படும் மார்க்கம்
161 அழகிய ஐம்பெருங் குணங்கள் !
162 தன்னம்பிக்கை கொள்ளுங்கள் !
163 பார்வைகள் பலவிதம் !
164 நேர மேலாண்மை / திட்டமிடல்
165 பள்ளிக்கு அருகில் வாழ்வோம்
166 எச்சரிக்கை: தொலைக்காட்சியில் போட்டி என்ற பெயரில் மோசடி
167 அந்நியப் பெண்ணுடன் ஆண் - அந்நிய ஆணுடன் பெண் கைகுலுக்கலாமா?
168 தந்தைகளே! கவனியுங்கள்
169 வரலாறு புகட்டும் பாடம்
170 அல்குர்ஆன் என்னும் மதுரம்
171 முஸ்லிம்கள் செய்ய வேண்டியது என்ன?
172 ஊருக்குள் விடாதீர்..விளம்பரமல்ல விபரீதம்!!
173 கஸ்டம்ஸில் எச்சரிக்கையாக இருங்கள்!
174 நாம் தான் முயல வேண்டும்.
175 குழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள்!
176 காசாகும் குடும்ப அந்தரங்கங்கள். எச்சரிக்கை!!
177 கற்பா? கல்லூரியா?
178 கசாப்புத் தொழில் சிறந்தது....
179 சுவர்க்கத்தை பரிசாக பெற்றுத் தரும் நற்கிரியைகள்
180 நான் ஏன் முஸ்லிம் ஆனேன் ?
181 ரகசிய கேமராக்கள்: பெண்களே எச்சரிக்கை!
182 இருளை நோக்கிச்செல்லும் வெளிச்சமுள்ள சமுதாயம்! தீர்வு என்ன? எப்படி செயல்படுத்துவது?
183 செல்வந்தர் மகனுக்கு கூறிய மரண சாசனம். (சிறுகதை)
184 மேற்கத்திய கலாச்சாரம் TO இஸ்லாம்- முஸ்லிம் பெண்ணியவாதியின் பயணம்
185 என் ஹிஜாப் என் உரிமை!!!
186 சபைகளில் கண்ணியம் தவறும் கணவர்கள்
187 முகமாகும் பெண்கள்!!
188 நற்குணமே இஸ்லாத்தின் அடையாளமாகும்!
189 இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்
190 உங்கள் தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுகிறது?!
191 அன்புச் செல்வங்களுக்கு....(நமக்கும்) - கேள்வி பதில்கள்
192 செல்போன்கள்... ஜாக்கிரதை!
193 இணையதளத்தில் கனவன்-மனைவி அந்தரங்க உரையாடல் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்
194 வெற்றியடைய 10 சுலபமான வழிகள் !
195 ஒரு வழிப்போக்கனின் வாழ்க்கைப் பயணம்!
196 மிஸ்டு காலா... பெண்களே எச்சரிக்கை!
197 ஈமானே-உன் விலையென்ன?
198 இஸ்லாமியரும்-எதிர் நீச்சலும்
199 நாளை நமதா? - ஏ.பி. முஹம்மது அலி ஐ.பி.எஸ். (ஓய்வு)
200 அமைதியாக இருந்தால் அமைதி வருமா ?
201 அமர்ந்தது போதும் எழுந்து வாருங்கள் பயணிப்போம்
202 பயங்கரவாதிகள் எல்லாம் முஸ்லிம்களா?
203 ஒளிரட்டும் பண்மைமிகு மீலாது விழாக்கள் ! ஒழியட்டும் வன்மையிலிருந்து மீளாத விழாக்கள் !!
204 கட்டாய மத மாற்றத்திற்கு இஸ்லாத்தில் இடமில்லை
205 மக்தப் மதரஸா ... ஒரு அமைதிப் புரட்சி
206 யுக முடிவின் இறுதிக்கட்டமா நெருங்கிவிட்டது?
207 "ஜம் ஜம்” தண்ணீர் தோன்றிய வரலாறு
208 மெட்ராஸ் ஐ - குறித்த உண்மைகள் :
209 ஹிஜ்ரீ பிறந்த தியாகங்களின் வரலாறு !
210 தாமிரபரணியை உறிஞ்ச வரும் 'பெப்சி' நிறுவன ஆலை
211 பிள்ளைகளை பாதுகாப்பாக வளர்க்க பெற்றோர்களுக்கு சில அழகிய வழி முறைகள்:
212 அறிவைத் தேடுவோம்!
213 தமிழ் மண்ணில் வேர் கொள்ள முடியவில்லை!
214 ஒரு மகன் தன் அப்பாவைப்பற்றி என்ன நினைக்கிறான்?
215 பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா? ஏதிர்த்தாரா?
216 இந்திய முஸ்லிம்களின் முதல் எதிரி அல் காய்தா:
217 பிள்ளையாரப்பா பெரியப்பா,புத்திமதியை சொல்லப்பா
218 அவ்வளவு ஈமானா? அல்லாஹ்வின் மேல் அவ்வளவு நம்பிக்கையா?
219 என் மகனிடம் சொல்லுங்கள்:-ஒரு தாயின் மனக்குமுறல்!
220 சமூக நலத்திற்கு உகந்த சட்டம் எது?
221 “வேர்கள்” வரலாறு!
222 கருத்து வேறுபாடு சம்பந்தமாக சட்டங்கள்
223 என் மகனிடம் சொல்லுங்கள்:-ஒரு தாயின் மனக்குமுறல்!
224 கலீல் அஹ்மத் கீரனூரி (ரஹ்) அவர்களின் அல்அஃப்லாக் வல்அவ்காத் நூல் அறிமுகம்
225 மனிதனின் தேவை ! – மன அமைதி
226 யா அல்லாஹ் ரஜப் ஷஃபான் மாதங்களில் எங்களுக்கு அருள் புரிவாயாக. இன்னும் ரமளானை அடையச் செய்வாயாக
227 அண்ணல் நபிகளாரின் பொன் மொழிகள்-மெளனம் கொள்ளுங்கள்.
228 அல்லாஹ் அறிவுறுத்தும் அமுதமொழிகள்
229 பிரார்த்தனைகள் ஏன் ஏற்கப்படவில்லை?
230 மஸ்ஜித் (பள்ளிவாசல்)
231 பேச்சு,மெளனம்
232 ஜனாஸா - மைய்யத்
233 கிலாஃஃபா மறைவு: இந்தியா தடுமாறியது.. எகிப்து கவலையுற்றது
234 ஹஜ் யாத்திரை - சில சிந்தனைகள் !!!
235 ஜெனரல் எர்வின் ரோமல் கண்ட காலித் இப்னு வலீத் (ரலி )
236 முஸ்லிம்களை ஏன் பயங்கரவாதிகளாக சித்தரிக்க முற்படுகிறார்கள்?
237 வெளிநாடுகளில் வேலை செய்யும் என் சகோதரர்களே!
238 அரிஸ்டாட்டில் முதல் நியூட்டன் வரை
239 இறை நேசர்கள்- தொடரும் விளக்கம்
240 வலிமார்கள் என்பவர்கள் யார்?
241 காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயீல் ஸாஹிப் அவர்களின் பதில் சொல்லும் பாங்கு
242 அமைதியாக இருந்தால் அமைதி வருமா ?
243 மனித குல விரோதி
244 எனது பெயர் ஜனாஸா!
245 பாபரா ராமர் கோயிலை இடித்திருப்பார்???
246 கடன் கொடுப்போரும் வாங்குவோரும் நடந்து கொள்ள வேண்டிய முறை
247 மோடியை விட்டு 2002 ஏன் விலகாது?
248 இஸ்லாம் வாள் முனையில் பரப்பப்பட்டதா?
249 வதைக்கும் விவாகரத்து வழக்குகள்
250 ஹிந்து - குறித்து இஸ்லாம்!
251 தமிழரும் இசுலாமியரும்
252 குர்ஆன் மக்தப் - காலத்தின் தேவை!
253 இஸ்லாம் மிருக வதையை தூண்டுகின்றதா?
254 மில்லர் கண்ட குர்ஆனின் அதிசயங்கள்
255 முஹம்மது(ஸல்) எனக்கு நடுநிலையானவர்
256 முஸ்லிமல்லாதவர்களுக்கு ஒரு கடிதம்
257 அயோத்தி ராமன் அழுகிறான் -கவிஞர் வைரமுத்து
258 துருக்கி மன்னரின் விலை 10 பொற்காசுகளே!
259 கற்பனைகளும் இஸ்லாமும்
260 வணங்கி மகிழ்கிறோம் - ஆச்சிரியம் ஆனால் உண்மை.
261 சுத்தம் பேணுவோம்,நுரையீரலை காப்போம்!
262 நபிகள் நாயகத்தை வசைபாடிப் படம் எடுத்தவர்....
263 மது ஒரு பெரும் பாவம்
264 மகாத்மா காந்தி, பெரியார் சந்திப்பு
265 பெற்றோர்களைப் பேணுவோம்!
266 யார் இவர்? பேச்சாளர்..போர் வீரர்..இராணுவ தலைவர்..
267 சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-3)
268 உடல் உறுப்புகளை தானம் செய்வதுபற்றி இஸ்லாம்
269 தவ்பா என்னும் பாவமன்னிப்பின் சிறப்புகள்!
270 சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-2)
271 சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-1)
272 இதயத்தை கவனமா பாத்துக்கங்க!
273 இமாம்களை கண்ணியம் செய்வோம்!
274 உமர் (ரலி) அவர்களுக்கு நண்பர்கள் எழுதிய கடிதம்.
275 மறுமை வாழ்வை நேசிப்போம்!
276 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 8 - முடிவு)
277 சொல்லின் செல்வர் எம்.எம். பீர் முஹம்மது சாகிப்
278 சுதேசி சிந்தனைகள்.......
279 உள்ளத்தை தூய்மை படுத்துவோம்!
280 கல்வி நல்லோர்களின் சொத்து!
281 மனிதர்களுக்கு மீன்கள் சொல்லும் பாடம்!
282 வாழ்க்கைக்கு உதவும் வாய்மைமொழிகள்! (தொடர்- 1)
283 வாழ்க்கைக்கு உதவும் வாய்மைமொழிகள்! (தொடர்- 2)
284 பாராளுமன்ற தேர்தலும் முஸ்லிம்களின் நிலைபாடும்!
285 தொடர்பூடக ஒழுக்கவியல்: அல்குர்ஆனின் வழிகாட்டல்
286 உண்ணுவதிலும்,குடிப்பதிலும் தூய்மையை பேணுவோம்!
287 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 7)
288 செயற்கைக் கருத்தரிப்பும் வாடகைத் தாயும்!
289 அறிவைத் தேடுவோம்!
290 ஆக்காதீர் ஆசனங்களாக
291 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 5, 6)
292 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 3)
293 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 4)
294 மோதினார் அப்பாவின் கதை அல்ல நிஜம்
295 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 1)
296 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 2)
297 ஸுபுஹ் தொழுகையும் நாமும் ???
298 ஆஸாத் விசாவா?உஷார்,உஷார்!
299 அதிகாலை நேரமும் சுபுஹுத் தொழுகையும்
300 தன்பக்கமா? தன்னிகரற்ற கொள்கையின் பக்கமா?
301 சமுதாய தலைவர்களே சிந்தியுங்கள்!
302 படிப்பினையூட்டும் ஒரு நிகழ்வு!
303 உபதேசம் என்பது உலமாக்களின் தனி உடைமையா?
304 பெண் குழந்தை ஒரு பாக்கியம்
305 நான் ஒருத்தனிடம் ஏமாந்தேன் நீ என்னிடம் ஏமாறு என்பதே மல்டி லெவல் மார்கெட்டிங் - AMWAY Products
306 டாக்டர் ஜாகீர் ஹுசைன் – கல்வியுடன் சுகாதாரத்தையும், ஒழுக்கத்தையும் கற்றுத்தந்தவர்
307 வெப்கேமிரா...எச்சரிக்கை...!
308 மனமகிழ் குடும்பம்:நல்லதோர் குடும்பத்தலைவி!
309 மனமகிழ் குடும்பம்: நல்லதோர் குடும்பத் தலைவன்
310 விசுவரூபம் ஒரு விளக்கம்
311 விஸ்வரூபமும் முஸ்லீம்களும்.
312 மதுவை ஒழிப்போம்,மாதுவை காப்போம்!
313 வாழ்க்கைக்காக ஒரு மரணம்
314 கண்ணாடிகள் கவனம்
315 360 மூட்டுக்கள் (எலும்பு இணைப்புக்கள்) Bone Joints..! ( 7-ம் நூற்றாண்டு முன்னறிவிப்பு )
316 ஷைத்தானின் விரோதிகளும், நண்பர்களும்
317 ஹஜ்ரத் அலி (ரலி) அவர்களின் அறிவுரைகள்
318 துஆக்கள் ஏன் ஒப்புக்கொள்ளப் படுவதில்லை?
319 சிந்திக்க தவறும் ஆண்களுக்கு மட்டும்
320 கருத்து வேறுபாடுகள்.
321 நபியவர்கள் எங்கள் உயிருக்கு மேல்
322 ஹிஜாபுக்குப்பின் கண்ட வாழ்க்கை
323 யூத கிருத்துவ வக்கிரப்படமும் விமர்சனங்களை வென்ற விண்புகழ் வேந்தரும்
324 தஜ்ஜால் Vs டெலிவிஷன்
325 ஓ! என் இளைய சமுதாயமே!
326 இதயத்தை பாதுகாக்க யோசனைகள்!
327 வீண் செலவு வேண்டாமே