02. அவளுக்காக நான் இதை மறக்கவே மாட்டேன்

 

மனிதர்களுக்கு சில நேரங்களில் தங்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை விட, தாங்கள் மதிக்கப்படுகிறோம் அல்லது கவனிக்கப்படுகிறோம் என்ற உணர்வே அதிகமாகத் தேவைப்படுகிறது.

கொடை என்பது வெறும் பணம் சார்ந்தது மட்டுமல்ல, ஒருவரை அக்கறையுடன் கவனிப்பதும் கூட ஒரு சிறந்த கொடைதான்.

ஆறுதல் என்பது சில நேரங்களில் உலகத்திலுள்ள அனைத்து செல்வங்களை விடவும் மேலானதாக இருக்கும்.

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் மீதான அந்த அவதூறு சம்பவத்தின் போது, அன்சாரிப் பெண்மணி ஒருவர் அவரிடம் வந்தார். அந்தத் துயரத்தின் பாரத்தினால் அவரால் ஒரு வார்த்தை கூடப் பேச முடியவில்லை. அதற்குப் பதிலாக, அவர் அன்னை ஆயிஷாவுடன் அமர்ந்து அழுதார்.

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: 'அவர் எனக்காகச் செய்த இதை நான் மறக்கவே மாட்டேன்.'

மென்மை என்பது வலிமையை வென்றுவிடும்.

எனவே எப்போதும் மற்றவர்களுக்கு ஒரு பாதுகாப்பான புகலிடமாக இருங்கள்.

துக்கத்தில் இருப்பவரின் கண்ணீரைத் துடையுங்கள்,

ஏமாற்றப்பட்டவரின் தோளைத் தட்டிக் கொடுங்கள்,

எதையாவது இழந்தவரை அரவணைத்துக் கொள்ளுங்கள்,

காணாமல் போனவரைத் தேடிச் செல்லுங்கள்.
இதற்கெல்லாம் பெரிய வீரச் செயல்கள் எதுவும் தேவையில்லை, ஒரு மனிதனாக இருந்தால் மட்டும் போதும்!

رسالل من النبي صلى الله عليه وسلم سلم அத்ஹம் ஷர்காவி

தமிழில் : இஸ்மாயில் ஹஸனீ






1 06 நிதானமும் பொறுமையும்
  நிச்சயமாக உன்னிடம் அல்லாஹ் நேசிக்கக்கூடிய இரண்டு குணங்கள் உள்ளன: அவை நிதானம் மற்றும் பொறுமை
 
2 05 மன அமைதியும் ஒரு அருட்கொடையே
  இறைவனுக்கு அஞ்சி நடப்பவருக்கு செல்வம் இருப்பதில் தவறில்லை. ஆனால், இறைவனுக்கு அஞ்சி நடப்பவருக்கு செல்வத்தை விட ஆரோக்கியம் மேலானது. மேலும், மன அமைதி (திருப்தி) என்பது இறைவனின் அருட்கொடைகளில் ஒன்றாகும்.
 
3 04 குடும்பப் பணிகளில் நபிகளார்:
  இந்த உலகம் ஏற்கனவே கடினமான மனங்களால் நிறைந்துள்ளது; எனவே, நாம் நம் குடும்பத்தினரிடம் மென்மையாகவும் அன்பாகவும் நடந்து கொள்வோம்
 
4 03 இறைவா! என்னை விட எனக்குப் பிரியமான ஒரு நண்பனை எனக்குத் தா.
  மனிதர்கள் வண்ணத்துப்பூச்சிகளைப் போன்றவர்கள், சில நேரங்களில் அவர்கள் தங்கள் இறக்கைகளில் உள்ள அழகைத் தாங்களே காண்பதில்லை.
 
5 01 அவர்கள் என்னைத் துரத்திவிடுவார்களா?
  துரதிர்ஷ்டவசமாக, பலர் உங்களின் குறைகளுக்காக அல்ல, உங்களின் நிறைகளுக்காகவே உங்களை வெறுப்பார்கள்.
 
6 ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் பரிந்துரை
7 ஒற்றைச்செறுப்பு
8 திரைகள் விலகட்டும்
9 உம்மு ஸலமா (ரலி)யும் ஆறாதரணங்களின் அற்புத அன்பளிப்பும்
10 நன்மை தீமையும் அதன் அளவுகோலும்
11 வலிபோக்கும் ஆன்மீக வழிகள்
12 முஜாஹிர்களும் மன்னிப்பும்
13 நன்மை தீமையும் அதன் அளவுகோலும்
14 தங்க ஓடை: மனிதனின் பேராசை
15 பயணியே சற்று நில்
16 அக்கம் பக்கம் / அண்டை வீட்டார்
17 என் கண்ணாடி எங்கே?
18 நன்மைக்கு வழிகாட்டினால்
19 பொறாமைக்குரியோர் ....
20 நபியின் மீது பிரியம்
21 அல்லாஹ்வின் பிரதிநிதி குழுவினர்
22 ஈமானின் கிளைகள்
23 வளைகுடாவில் வசிப்பவரின் இந்தியப்பெருநாள் - மார்க்க சட்டம்
24 நற்செயல் எது?
25 பட்டாடை
26 நாற்பது ஹதீஸ்கள் மனனம் செய்பவர்...
27 பரிபூரணமான முஸ்லிம்
28 பரிபூரண இறைநம்பிக்கை - ஈமான்
29 சுவர்க்கத்தின் சாவி
30 மக்களில் சிறந்தவர்
31 மறுமை
32 மறைவானவற்றை நம்புவது
33 அழகிய துஆ