04 குடும்பப் பணிகளில் நபிகளார்:

 

உம்முல் முஃமினீன் ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டது:

'நபி (ஸல்) அவர்கள் வீட்டில் இருக்கும்போது என்ன செய்வார்கள்?'

அதற்கு அவர்கள் கூறினார்கள்:

> “அவர்கள் தனது குடும்பத்தாருக்குத் தேவையான பணிகளில் ஈடுபட்டிருப்பார்கள். தொழுகை நேரம் வந்துவிட்டால், தொழுகைக்குப் புறப்பட்டு விடுவார்கள்.”

நாம் கவனிக்க வேண்டியவை:

* ஆண்மை என்பது யாருக்கும் உதவாமல் இருப்பது அல்ல:

ஒரு ஆண் தனது மனைவியுடன் சமையலறையில் ஒரு மணி நேரம் நின்று உதவுவது அவரது கண்ணியத்தைக் குறைக்காது.

அவளுடன் அமர்ந்து ஒன்றாகச் சாப்பிடுவது தவறல்ல.

* சிறு உதவிகள் பெரிய மாற்றம்:

அவள் துணிகளை மடித்து வைக்கும்போது நீங்களும் உதவினால் உலகம் அழிந்துவிடப் போவதில்லை.

வீட்டுப் பணிகளில் அவளுக்குத் துணையாக இருப்பது பெருமைக்குரிய விஷயம்.


* சுயசார்பு: ஒரு சட்டையைத் தைப்பதோ அல்லது உங்கள் உடைகளை நீங்களே எடுத்து வைப்பதோ அவமானமல்ல.


நபிகளாரின் எளிமை:
நபி (ஸல்) அவர்கள் தங்கள் செருப்பைத் தாங்களே தைத்தார்கள்;

தங்கள் உடையைச் சரி செய்தார்கள்;

தங்கள் ஆட்டில் தாங்களே பால் கறந்தார்கள்.


நிதர்சனம்:

ஆனால், நம்மில் சிலர் வீட்டில் ஒரு 'ஆளுநரைப்' போல அமர்ந்து கொள்கிறோம்.

குடிக்க ஒரு குவளைத் தண்ணீரைக் கூட மற்றவர்கள் கொண்டு வந்து தர வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

> இந்த உலகம் ஏற்கனவே கடினமான மனங்களால் நிறைந்துள்ளது; எனவே, நாம் நம் குடும்பத்தினரிடம் மென்மையாகவும் அன்பாகவும் நடந்து கொள்வோம்.

رسائل من النبي صلى الله عليه وسلم أدهم شرقاوي
தமிழில் : இஸ்மாயில் ஹஸனீ






1 A Most Beautiful Hadith Among All The Beautiful Ahadith
 

A Bedouin came one day to the Holy Prophet (sallallahu 'alahi wasallam) and said to him,

'O, Messenger of Allah! I've come to ask you a few questions about the affairs of this Life and the Hereafter.'