'நிச்சயமாக உன்னிடம் அல்லாஹ் நேசிக்கக்கூடிய இரண்டு குணங்கள் உள்ளன: அவை நிதானம் மற்றும் பொறுமை.'
சம்பவம்:
அப்துல் கைஸ் கோத்திரத்தினர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைச் சந்தித்து இஸ்லாத்தை ஏற்க வந்தபோது,
அனைவரும் அவசரமாக நபியவர்களை நோக்கி ஓடினர்.
ஆனால் அவர்களின் தலைவரான அஷ்ஜு அப்துல் கைஸ் மட்டும் நிதானமாகச் செயல்பட்டார்.
அவர் முதலில் தனது சிறந்த ஆடைகளை அணிந்து, நறுமணம் பூசிக்கொண்ட பிறகுதான் நபியவர்களிடம் சென்றார்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரை தமக்கு அருகில் அமரச் செய்து,
'நிச்சயமாக உன்னிடம் அல்லாஹ் நேசிக்கக்கூடிய இரண்டு குணங்கள் உள்ளன: அவை நிதானம் (அல்-ஹில்ம்) மற்றும் பொறுமை (அல்-அனாத்)' என்று கூறினார்கள்.
அதற்கு அவர், 'அல்லாஹ்வின் தூதரே! இவை நான் பழகிக் கொண்ட குணங்களா
அல்லது இயற்கையிலேயே என்னிடம் உள்ள குணங்களா?'
என்று கேட்டார்.
நபியவர்கள், 'இயற்கையிலேயே உன்னிடம் அமைக்கப்பட்ட குணங்கள்' என்று பதிலளித்தார்கள்.
குணங்களின் வேறுபாடு:
மனிதர்கள் வெவ்வேறு சுபாவங்களுடன் பிறக்கிறார்கள்.
ஒரே வீட்டில் பிறந்தாலும் ஒருவன் கொடையாளியாகவும், மற்றவன் கஞ்சனாகவும் இருக்கிறான்;
ஒருவன் அமைதியானவனாகவும், மற்றொருவன் கோபக்காரனாகவும் இருக்கிறான்.
இவர்கள் அனைவரும் ஒரே தந்தை மற்றும் தாய்க்குப் பிறந்தவர்கள்,
ஒரே தண்ணீரில் வளர்க்கப்படும் செடிகளைப் போன்றவர்கள்.
ஆனால் அவற்றின் சுவை வெவ்வேறாக இருக்கிறது.
சுய கட்டுப்பாடு:
ஒருவன் தனது கெட்ட சுபாவத்திற்கு அடிபணிந்து போவது நியாயமானதல்ல.
அவ்வாறாயின் மனப்போராட்டம் (முஜாஹதா),
இச்சைகளுக்கு மாறு செய்தல் மற்றும் தீய எண்ணங்களைக் கட்டுப்படுத்துதல் என்பதெல்லாம் எங்கே போகும்?
உதாரணமாக:
நம் அனைவருக்கும் பணத்தின் மீது ஆசை இருக்கிறது,
அதற்காகத் திருடுவது நியாயமாகுமா?
நம் அனைவருக்கும் இச்சைகள் உள்ளன, அதற்காக விபச்சாரம் செய்வது சரியாகுமா?
எனவே, கெட்ட குணங்களை எதிர்த்துப் போராடுவதே உண்மையான அறப்போர் ஆகும்.
நாம் எடுக்கும் சிரமத்திற்கு ஏற்பவே அதற்கான நற்கூலியும் அமையும்.
رسائل من النبي صلى الله عليه وسلم أدهم شرقاوي
தமிழில் : ஆவூர் இஸ்மாயில் ஹஸனீ
| 1 | A Most Beautiful Hadith Among All The Beautiful Ahadith | |
| A Bedouin came one day to the Holy Prophet (sallallahu 'alahi wasallam) and said to him, 'O, Messenger of Allah! I've come to ask you a few questions about the affairs of this Life and the Hereafter.' | ||
© TamilIslamicAudio.com