1. தொழுகையை அதன் நேரத்தில் தொழுவது
நேரத்தில் தொழுகையை பேணுவது உனக்கு கட்டுப்பாட்டை கற்றுத் தரும், அல்லாஹ்வுடன் உன்னை இணைக்கும்.
ஆதாரம்: 'நிச்சயமாக தொழுகை முஃமின்கள் மீது நேரம் குறிக்கப்பட்ட கடமையாக உள்ளது.' [குர்ஆன் 4:103]
நபி அவர்களிடம் மிகச் சிறந்த செயல் எது என்று கேட்கப்பட்ட போது, 'நேரத்தில் தொழும் தொழுகை' என்றார்கள். [புகாரி, முஸ்லிம்]
2. தினமும் குர்ஆனிலிருந்து ஒரு விர்து
ஒரு நாளைக்கு ஒரு பக்கம் ஆனாலும் சரி, குர்ஆன் ஒளியாகவும், உள்ளத்திற்கு அமைதியாகவும் இருக்கும்.
ஆதாரம்: 'இந்த குர்ஆனை நாம் உபதேசத்திற்காக எளிதாக்கி வைத்துள்ளோம்.' [குர்ஆன் 54:17]
'உங்களில் சிறந்தவர் குர்ஆனை கற்று, பிறருக்கு கற்றுக் கொடுப்பவர்.' [புகாரி]
3. காலை, மாலை திக்ருகள்
உன் நாளை அல்லாஹ்வை நினைவு கூர்ந்து ஆரம்பி, அவனை நினைவு கூர்ந்து முடி, அல்லாஹ் உன்னை பாதுகாப்பான்.
ஆதாரம்: 'காலையிலும், மாலையிலும் உம் இறைவனை நினைவு கூர்வீராக.' [குர்ஆன் 7:205]
'அறிந்து கொள்ளுங்கள்! அல்லாஹ்வை நினைவு கூர்வதால் தான் உள்ளங்கள் அமைதி பெறுகின்றன.' [குர்ஆன் 13:28]
4. தினமும் 100 முறை இஸ்திஃபார்
உன் நாவை எப்போதும் அல்லாஹ்வை நினைவு கூர்வதில் ஈடுபடுத்து, உள்ளம் உணர்ந்து பாவமன்னிப்பு தேடு.
ஆதாரம்: நபி அவர்கள் கூறினார்கள்: 'அல்லாஹ்வின் மீது சத்தியமாக, நான் ஒரு நாளைக்கு 70 முறைக்கு மேல் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடுகிறேன்.' [புகாரி]
மற்றொரு அறிவிப்பில் 100 முறை என்று வந்துள்ளது. [முஸ்லிம்]
5. இரவு தொழுகை, இரண்டு ரக்அத் ஆனாலும் சரி
உனக்கும், அல்லாஹ்வுக்கும் இடையில் ஒரு தனி நேரத்தை ஒதுக்கு, உன் உள்ளத்தில் உள்ள அனைத்தையும் அதில் கேள்.
ஆதாரம்: 'இரவில் சிறு பகுதியில் தொழுது, அவனுக்கு தஸ்பீஹ் செய்வீராக.' [குர்ஆன் 76:26]
'இரவு தொழுகையை பேணுங்கள், அது உங்களுக்கு முன் சென்ற நல்லடியார்களின் வழியாகும்.' [திர்மிதி]
6. தர்மம், நன்மை செய்வது
பிறருக்கு உதவு, குறைவாக இருந்தாலும் கொடு, அல்லாஹ்விடம் கூலியை நாடு.
ஆதாரம்: 'நீங்கள் தர்மமாக எதை செலவு செய்தாலும், அல்லாஹ் அதற்கு பிரதி கொடுப்பான்.' [குர்ஆன் 34:39]
'ஒரு பேரீச்சம் பழத்தின் பாதியைக் கொண்டாவது நரகத்திலிருந்து உங்களை காத்துக் கொள்ளுங்கள்.' [புகாரி, முஸ்லிம்]
© TamilIslamicAudio.com