தந்தைகளே! கவனியுங்கள்
வயசுக்கு வந்த பிள்ளையை வளர்க்க வேண்டியது அம்மாவோட பொறுப்பு என நைஸாக நழுவும் அப்பாவா நீங்கள்? கொஞ்சம் நில்லுங்கள். உண்மையில் உங்கள் டீன் ஏஜ் மகளுக்கு அம்மாவை விட அதிகம் தேவை நீங்கள் தான். திருதிருவென்று முழிக்காதீங்க... உறவு முறைகளிலேயே மிகவும் அழுத்தமானது தந்தைக்கும் மகளுக்குமுள்ள உறவு தான் என்கிறார் ஒரு .ஃபிரான்ஸ் நாட்டு அறிஞர்.
தந்தையின் நேசம் கலந்த வழிகாட்டுதல் இல்லாத இளம் வயதுப் பெண்கள் பல்வேறு சிக்கல்களில் விழுகிறார்கள். சிறுவயதிலேயே அவர்கள் பாலியல் ரீதியாக பலவீனப்படுகிறார்கள். தேவையற்ற தாய்மையைப் பெற்றுக் கொள்கிறார்கள். இதையெல்லாம் விரிவான ஆராய்ச்சி ஒன்று சொல்கிறது.
இந்த ஆராய்ச்சியை முன் நின்று நடத்தியவர் நியூசிலாந்திலுள்ள கேண்டர்பர்க் பல்கலைக்கழகத்தின் உளவியல் பேராசிரியரான புரூஸ் ஜே எல்லிஸ். டீன் ஏஜ் பருவத்திலேயே செக்ஸ் பிரச்சினைகளில் மாட்டி கர்ப்பமாவது அமெரிக்கா மற்றும் நியூசிலாந்தில் சர்வ சாதாரணம். இதற்குக் காரணம் என்னவாக இருக்கும் என அவர்கள் அலசி ஆராய்ந்தபோது தான் சிக்கியிருக்கிறது இந்த அதிர்ச்சியூட்டும் உண்மை. தந்தையின் சரியான வழிகாட்டுதல், அன்பு, அரவணைப்பு இல்லாதது தான் எல்லா பிரச்சினைக்கும் மூல காரணமாம். இப்போது சொல்லுங்கள், டீன் ஏஜ் பெண்ணின் வளர்ச்சிக்கு நீங்கள் தேவையா இல்லையா ?
ஒரு டீன் ஏஜ் மகளுக்கு அப்பா என்பவர் வெறும் ஒரு நபரல்ல. ஒரு நண்பன், பாதுகாவலன், ஊக்கமூட்டுபவர், உற்சாகப்படுத்துபவர், தன்னம்பிக்கை வளர்ப்பவர், நம்பிக்கை ஊட்டுபவர், பண்புகளை ஊட்டுபவர், வழிகாட்டி என எக்கச்சக்க முகங்கள் அவருக்கு இருக்க வேண்டும். ஒரு பெண் முதலில் சந்திக்கும் ஆண் அவளுடைய அப்பா தானே? அப்பாவிடமிருந்து தான் அவள் ஒரு ஆணுக்குரிய இலக்கணங்களைக் கற்றுக் கொள்கிறாள். ஆண் என்பவனின் குணாதிசயங்களைக் கற்றுக் கொள்கிறாள். ஆண் என்பவருடைய அளவீடுகளைக் கற்றுக் கொள்கிறாள். ஆண் என்பவரின் தேவையைக் கண்டு கொள்கிறாள். எனவே மகள் மழலையாய் இருக்கும் போதே எல்லா வகையிலும் முன் மாதிரியான வாழ்க்கை வாழவேண்டியது அப்பாவின் கடமையாகிறது.
சின்ன வயதில் மழலையாய் சிரித்துச் சிணுங்குகையில், அழகழகாய் ஆடைகள் வாங்கிக் கொடுப்பதானாலும் சரி, பென்சில், ரப்பர் வாங்குவதானாலும் சரி ரொம்பவே ஈடுபாடு காட்டுவீர்கள். எல்லாவற்றையும் தேடித் தேடி வாங்குவீர்கள். பாப்பாவும் ரொம்பவே சமர்த்தாய் உங்கள் கழுத்தைக் கட்டிக் கொண்டு கன்னத்தில் முத்தம் தருவாள். திடீரென ஒரு நாள் பார்த்தால், சட்டுபுட்டுன்னு வளர்ந்து நிர்ப்பாள். 'என் டாடி சூப்பர்' என்று சொல்லிக் கொண்டிருந்தவள், 'டாடிக்கு ஒரு மண்ணும் தெரியாது' என்று பல்டி அடிப்பாள். மூக்குத்தியை எடுத்து நாக்கில் மாட்டுவாள். டென்ஷன் ஆகாதீர்கள். எல்லாவற்றுக்கும் காரணம் அவளுடைய உடல், மன மாற்றங்கள் தான்.
என் பொண்ணுக்கு என்னைக் கண்டாலே புடிக்கல. அவளுக்கு நான் இனிமே தேவையில்லை என்றெல்லாம் உளறிக் கொட்டாதீர்கள். ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் மகள் உங்கள் மகள் தான். உங்கள் மீதான பாசமும், அன்பும், கரிசனையும் எப்போதுமே அவளிடம் நிரம்பி இருக்கும். ஆனால் அவளுடைய வெளிப்படுத்தல்களில் தான் எக்கச் சக்க மாற்றங்கள் முண்டியடிக்கும்.
'டாடி பிளீஸ்.... டாடி... வாங்கிக் கொடுங்க டாடி' என்று சின்ன வயதில் கெஞ்சிய மகள் 'டாட்.... எனக்கு இது வேணும். முடியுமா முடியாதா?' என பிடிவாதம் பிடிப்பாள். உடனே நீங்கள் பதட்டப்படுவீர்கள். ஆனால் உண்மையில் அவள் உங்களுடைய அனுமதியை எதிர்பார்த்து நிற்கிறாள். அப்பாவின் அனுமதி இருந்தால் தான் அவளுக்கு அதில் ஒரு ஆத்ம திருப்தி. நீங்க பாட்டுக்கு எல்லாவற்றையும் சகட்டு மேனிக்கு நிராகரித்துத் தள்ளாதீர்கள். 'நல்லதுன்னா அப்பா ஒத்துப்பார்' எனும் நிலமை தான் இருக்க வேண்டுமே தவிர 'அவர் கிட்டே என்ன சொன்னாலும் வேலைக்காவாது' என்ற நிலைக்கு நீங்கள் வந்து விடவே கூடாது.
இது ஒரு நீச்சல் போல. கரையில் இருந்து கொண்டே நீங்கள் ஆர்டர் போட முடியாது. இன்னும் சொல்லப் போனால் டீன் ஏஜ் பருவத்தினருக்கு அட்வைஸ் எனும் வார்த்தையே அலர்ஜி. காரணம் பெரும்பாலும் அவளுடைய விருப்பத்துக்கு நேரானதாகத் தான் இருக்கிறது அப்பாக்களின் அட்வைஸ். அதற்காக நல்ல விஷயங்களைச் சொல்லக் கூடாதா என்பதல்ல. அதை செயலில் காட்டவேண்டும். அல்லது நாசூக்காக விளக்க வேண்டும். பேசுவதை விட மிக மிக அதிகமாய் மகள் பேசுவதைக் கேட்கவேண்டும். அது தான் முக்கியம்.
ஒன்றை நினைவில் கொள்ளுங்கள், 'என் அப்பா டெக்னாலஜியில் என்னைப் போல ஹைடெக்..' என கருதுவதில் உங்கள் மகளுக்கு இருக்கும் மகிழ்ச்சி அலாதியானது. நீங்கள் அந்த டெக்னாலஜி உலகுக்குள் நுழைந்தால் தான் அதிலுள்ள நன்மை தீமைகளை நாசூக்காக உங்கள் மகளுக்குச் சொல்லவும் முடியும்! அதை விட்டு விட்டு, 'என்ன இவ சாப்பிடும்போ எஸ் எம் எஸ் அடிக்கிறா, பேசிகிட்டே எஸ் எம் எஸ் அடிக்கிறா, ஆர்குட், பேஸ் புக் என்னன்னவோ சொல்றா....' என புலம்பித் தள்ளாதீர்கள்.
இன்னொரு விஷயம், உங்கள் மகள் பருவத்துக்குரிய வனப்புடன் வளர்கிறாள் என்றதும் தள்ளியே நிற்காதீர்கள். அது மன அளவில் உங்கள் டீன் ஏஜ் மகளைப் பாதிக்கும் என்கின்றனர் உளவியலார்கள். உங்கள் மகளின் தோளைத் தட்டிப் பாராட்டுவதோ, தலையைக் கோதிப் பாராட்டுவதோ, செல்லமாய் அரவணைத்துக் கொள்தலோ அவளுக்கு ரொம்பவே தேவை.
அடிக்கடி வெளியே கூட்டிப் போங்கள். ஐஸ்கிரீம் பார்லர் போன்ற இடங்களுக்கு ஜாலியாகப் போய் வாருங்கள். மகளுடன் நிறைய நேரம் செலவிடுங்கள். நிறைய நேரத்தை நீங்கள் அவளுடன் செலவிடும்போது அவளுக்கு இயல்பான உரையாடல் சாத்தியப்படுகிறது. நினைத்ததை எப்படியேனும் வெளிப்படுத்தி விடுவாள். அவள் பள்ளியிலோ, கல்லூரியிலோ ஏதேனும் விழா நடக்கிறது , அழைக்கிறாள் என்றால் தவற விடாதீர்கள். வெறுமனே நீங்கள் அவளுடன் இருந்தால் போதும் அவள் உங்களை ரொம்பவே கொண்டாடுவாள்.
நீங்கள் அவளை அன்பு செய்கிறீர்கள். சரி! மதிக்கிறீர்கள். சரி! ஆனால் அதை அவளிடம் வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறீர்களா? இல்லையேல் அதைச் சொல்லுங்கள் முதலில். டீன் ஏஜ் மனது எதிலும் வெளிப்படையாய் இருக்க விரும்பும் மனது. சுற்றி வளைத்து எதையும் பேசாமல், உங்கள் மகளை நீங்கள் மதிக்கிறீர்கள், அன்பு செய்கிறீர்கள் என்பதைச் சொல்லி விடுங்கள்.
டீன் ஏஜ் மகளின் தினசரிகள் பல்வேறு அனுபவங்களால் நிரம்பி வழியும். ஆனந்தம், கவலை, எரிச்சல், சோகம் என எக்கச் சக்க உணர்வுகள் நிரம்பி வழியும். சக தோழிகளின் கிண்டல், படிப்பு, அழகு என கண்டதுக்கும் கவலைப்படும் வயது அது. அதை முதலில் நீங்கள் எப்போதும் நினைவில் கொள்ளவேண்டும். 'எதுவானாலும் கவலையில்லை .... அப்பா இருக்கிறார்' எனும் நம்பிக்கையை நீங்கள் உங்கள் மகளிடம் ஊற்ற முடிந்தால் அதை விடப் பெரிய விஷயம் ஏதும் இல்லை. அதற்கு மகளிடம் உண்மையாய் இருக்க வேண்டியது உலக மகா தேவை!
மகளிடம் நீங்கள் எந்த அளவுக்கு உண்மையாய், நம்பிக்கைக்குரியவராய் இருக்கிறீர்களோ அந்த அளவுக்கு அவள் உங்களிடம் வெளிப்படையாய் பேசுவாள். உண்மையை உள்ளபடி பேசுவாள். அப்படி மனம் திறந்து பேசும் போது எந்தக் காரணம் கொண்டும் அவளைத் திட்டாதீர்கள். அவள் என்னதான் மிகப்பெரிய தவறு செய்திருந்தாலும் சரி, உணர்ச்சி வசப்படாதீர்கள். பிரச்சினைகள் � விளைவுகள் � தீர்வுகள் என சிந்தியுங்கள். நீங்கள் பதட்டப்பட்டு உங்கள் கோபத்தையும், ஆத்திரத்தையும் மகளிடம் காட்டி விட்டால் போச்சு. அது வீட்டைப் பூட்டி சாவியை தூர எறிவதற்குச் சமம். உங்கள் மகள் அதன் பின் உங்களிடம் எதையும் பேசுவாள் என்று சொல்வதற்கில்லை.
எப்போதும் அவளிடம் தோழமை உணர்வுடன் பழகுங்கள். அடிக்கடு உங்கள் மூடு மாறாமல் இருக்க வேண்டியது ரொம்ப முக்கியம். 'அப்பா எப்போ அமைதியா இருப்பாரு, எப்போ எரிஞ்சு விழுவாருன்னு தெரியாது' எனும் நிலமை வந்தால் சிக்கல் தான். அவளுடைய படிப்பு, நட்பு, எல்லாவற்றிலும் உங்கள் அளவான ஈடுபாடு இருக்கட்டும். 'அவளுக்கு இதெல்லாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை' என்று மட்டும் எப்போதும் நினைக்காதீர்கள். குறிப்பாக ஆண்களைப் பற்றியும், ஆண்களின் குணாதிசயங்கள், சிந்தனைகள், எதிர்பார்ப்புகள் போன்றவற்றைப் பற்றியும் அவளுக்குப் புரியும் வகையில் அவ்வப்போது சொல்வது அவசியம். வெளுத்ததெல்லாம் பாலல்ல, பாய்சன் கூட உண்டு என்பதை அவள் தெரிந்து கொள்ள வேண்டும், அதான் விஷயம்.
இந்த அப்பா மகள் பந்தத்தில் யாருக்கு அதிக பொறுப்பு என நினைக்கிறீர்கள்? அப்பாவுக்கு என்று சொன்னால் நீங்கள் ஒரு பொறுப்பான அப்பா என்று அர்த்தம். டீன் ஏஜ் மகளின் மனநிலையைப் புரிந்து கொண்டு பொறுமையாக வழிகாட்ட வேண்டியது உங்கள் கடமை. ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். டீன் ஏஜ் பருவம் தொட்டால் வெடிக்கும் பருவம். அதனால் அவளை உசுப்பேற்றும் எந்த சண்டையையும் நடத்தாமல் இருப்பது நல்லது. குறிப்பாக அவளுடைய தோற்றம், அழகு, ஆடைகள் போன்றவற்றைக் கிண்டலடிக்காதீர்கள். மாறாக, பாராட்டுங்கள். பாராட்டுக்கள் தன்னம்பிக்கையை வளர்க்கும். அவளை வலுவாக்கும்.
சமூகம் சார்ந்த பல அறிதல்களையும் நீங்கள் தான் அவளுக்குச் சொல்லித் தர வேண்டும். அவற்றைப் பற்றிய தெளிவை மகளுக்குத் தரும் பொறுப்பும் உங்களிடமே.
ஒரு ஆச்சரிய உண்மை என்னவென்றால், பதின் வயதுத் தொடக்கத்தில் இருக்கும் மனோபாவம் நாள் செல்லச் செல்லப் பக்குவப்படும். பெண்ணின் திருமண வயது வரும்போது 'அப்பா தான் உலகம்' எனும் நிலைக்குப் பெண்கள் வந்து விடுவார்கள். அதுவரை சலிக்காத வழிகாட்டலும், பொறுமையான அணுகு முறையும், நிபந்தனையற்றை அன்பும் நீங்கள் காட்ட வேண்டியது அவசியம்.
சின்ன வயதிலிருந்தே தந்தையின் வழிகாட்டுதலிலும், அன்பிலும் வளரும் குழந்தைகள் நல்ல மன வளர்ச்சி அடையும் என்கிறார் எழுத்தாளரும் மருத்துவருமான மெக் மீக்கர். 'ஸ்ட்ராங் ஃபாதர்ஸ், ஸ்ட்ராங் டாட்டர்ஸ்' எனும் நூலில் அப்பாவின் வழிகாட்டுதலே டீன் ஏஜ் பெண்களுக்கு மிக மிகத் தேவை என்கிறார். 'என் பொண்ணோட வாழ்க்கையில் மிக முக்கியமான நபர் நான்' எனும் எண்ணம் அப்பாக்களுக்கு வரவேண்டியது தான் முதல் தேவை என்கிறார் இவர்.
இன்னொரு முக்கியமான விஷயம், நீங்கள் உங்கள் மகளை எப்படி நடத்துகிறீர்கள் என்பதை வைத்து மட்டும் உங்கள் மகள் உங்களை எடை போடுவதில்லை. உங்கள் மனைவியை நீங்கள் எப்படி நடத்துகிறீர்கள், மற்றவர்களை எப்படி நடத்துகிறீர்கள் என்பதையெல்லாம் அவள் கூட்டிக் கழித்துப் பார்ப்பாள். நீங்கள் எல்லா இடத்திலும் வலுவாக இல்லையேல் நீங்கள் அவளிடம் காட்டும் அன்பை போலித்தனம் கலந்ததாக அவள் கருதிக் கொள்ள வாய்ப்பு உண்டு.
கடைசியாக ஒன்று. 'என் அப்பாவைப் போல நல்ல ஒரு ஆண் எனக்குக் கணவனாக வர வேண்டும்' என உங்கள் மகள் நினைக்க வேண்டும். அப்படி நடந்தால் நீங்கள் ஒரு அப்பாவாக வெற்றி பெற்று விட்டீர்கள் என்று பொருள்! வெற்றி பெற வாழ்த்துக்கள்.
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு தன் மகள் இந்திரா காந்திக்கு ஒரு முன்மாதிரியாக விளங்கினார் என்பது வரலாறு. அவர் தனது மகள் இந்திரா காந்திக்கு எழுதிய கடிதங்கள் எதிர்காலத்தில் அவரை முதல் பெண் பிரதமராக மிளிர்வதற்கு துணை நின்றது என்றுகூட சொல்லலாம். சிறையில் இருந்தபோதுகூட தன் மகளான இந்திராவுக்கு கடிதம் எழுத நேரு தவறியதில்லை.
- Received Via Email
1 | செய்யும் உதவிகளுக்காக, மனிதர்களின் பாராட்டை எதிர்பார்க்க வேண்டாம் |
| நீங்கள் செய்யும் ஒவ்வொரு நன்மைக்காகவும் மனிதர்களின் பாராட்டை எதிர்பார்க்க வேண்டாம் என்று இந்த இறைவசனம் கற்றுத் தருகிறது. |
|
2 | போட்டோ: பாலஸ்தீன குழந்தைகள் மீது இஸ்ரேலின் போர் |
| காசா ஆயிரக்கணக்கான குழந்தைகளின் கல்லறையாக மாறிவிட்டது. இது மற்ற அனைவருக்கும் வாழும் நரகம். - United Nations Children Fund (UNICEF) |
|
3 | பாலஸ்தீனத்தின் பெருமை |
| பல நபிமார்கள் வாழ்ந்த இடம்.
நபி இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம் )ஹிஜிரத் சென்ற இடம் |
|
4 | திருச்சி சகோதரர்களின் கவனத்திற்கு: சோழ இளவரசி குந்தவை நாச்சியார் |
| சோழ இளவரசி குந்தவை நாச்சியார் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை முனைவர் பட்டதுக்கான ஆய்வுத் தலைப்பாக எடுத்து மிக விசாலமாக ஆய்வுசெய்து அதை அதிகாரப்பூர்வ வரலாறாக பதிவாக்கிட வேண்டும். |
|
5 | இஸ்லாமிய வங்கி இயலின் தந்தை மறைந்தார்! |
| உலகப் புகழ் பெற்ற இஸ்லாமியப் பொருளாதார நிபுணர் டாக்டர் நஜாத்துல்லாஹ் சித்தீகீ அவர்கள் இயற்கை எய்தினார் என்பதே அது!
|
|
6 | உணரப் படாத தீமை சினிமா |
7 | நான் ஏன் முஸ்லிம் ஆனேன்? - முன்னாள் கன்னியாஸ்திரி! |
8 | ஆறுதல் சொல்லச் சென்றோர் ஆறுதல் பெற்றுத் திரும்பிய அதிசயம்! |
9 | விரக்தி விஷத்தை விட கொடியது |
10 | பொறுத்தோம்! ஆனால் பொறுக்கமாட்டோம் யா ரஸூலுல்லாஹ்! |
11 | வாழ்க்கைக்கான பாடம் பாடப்புத்தகத்தில் அல்ல; போதிப்பவர்களின் வாழ்க்கையில் இருக்கிறது. |
12 | நரக மாளிகை - தாய் மண்ணின் மீது பற்று கொண்ட ஒவ்வொரு இந்தியனும் கட்டாயம் படிக்க வேண்டிய நூல்! |
13 | இங்கிலாந்தில் தப்லீக் ஜமாத் அனுபவங்கள் |
14 | அந்தப் பெண்களாக நாம்... |
15 | தன்னிகரற்ற தமிழகத்து உலமாபெருமக்கள் வரிசையில் |
16 | 2021 ல் தமிழகம் இழந்த ஆலிம்கள்: |
17 | இமாம் அபுல் ஹஸன் நத்வி ரஹிமஹுல்லாஹ் |
18 | நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்ட 10 துஆக்கள், |
19 | நோன்பும் மனக்கட்டுப்பாடும் |
20 | இவ்வளவு முரண்பாடுகளுடன் இறைவனிடம் கையேந்த வெக்கமாயில்ல!? |
21 | ஐரோப்பாவின் பிரபல்யமான அறிவுத் திருட்டுகள்..... |
22 | திருமணப் பதிவேடு எழுதுவதில் அக்கறையின்மை......! |
23 | நீ வரைந்த பாதை வழியே வாழ்க்கை ஓடுவதில்லை |
24 | முதியோர் பராமரிப்பு – இஸ்லாமிய கண்ணோட்டம் |
25 | இளையான்குடியில் உருது மக்கள் |
26 | கொண்டாடப்பட வேண்டிய ஆளுமைகள் : ஈரோடு மீ. கிபாயத்துல்லாஹ் பாகவி |
27 | மரணம் நோக்கி... |
28 | ஸிமம் தஃப்தரி (ZIMEM DEFTERI) - ஏழைகளின் கடனையடைத்தல் |
29 | மௌலானா சாத்(தா.ப) அவர்களுக்காக ஜரோப்பாவிலுள்ள ஒருதாயியின் அன்பான செய்தி |
30 | பேசாமல் இரு, கதவை அல்லாஹ் எப்படித் திறக்கிறான் என்று பார் |
31 | (புத்தாண்டு) கொண்டாட்டங்களை விட மனித உயிர்கள் அற்பமானவையா..? |
32 | அதுவென்ன சுன்னத் வல் ஜமாஅத்? |
33 | இறந்த பின் வாழ சந்தர்ப்பம். |
34 | இங்கிலாந்து மசூதி வீடியோ சொல்லும் உண்மைகள்! |
35 | பாரதியும் இஸ்லாமும் - மாலன் |
36 | பயணியின் வாழ்க்கை - பேரா. ஹஸனீ |
37 | கண்ணாடி வாழ்கை - பேரா. ஹஸனீ |
38 | ஆடை அவிழ்ப்பு அழகாகுமா...... |
39 | நபிகளாரும் காட்சிப்படுத்துதலும் (Visualization) |
40 | அன்றாட வாழ்வில் இஸ்லாம் - 02 |
41 | அன்றாட வாழ்வில் இஸ்லாம் - 01 |
42 | பெண்களிடம் மாற்றம் வேண்டும் |
43 | எம் சமூகம் இந்த உலகை ஆளும் |
44 | தவிர்ப்போம் நாற்காலி தொழுகைகளை... |
45 | வாய்ப்புகளை நழுவ விடாதீர்கள்! |
46 | பிரான்சால் நாடுகடத்தப் பட்டு பின்னர் பாராட்டப்பட்ட போராளி |
47 | மனம் திறந்த மடல் - மனம் திருந்திய தொண்டன் |
48 | ரமளானில் சமூக நலனுக்காக நாம் செய்ய வேண்டிய துஆ |
49 | புனித மிஃராஜ் இரவு அமல்கள்! |
50 | புனிதமான ரஜப் மாதத்தின் மிஃராஜ் இரவின் சிறப்புகள் |
51 | மனைவிக்காக துஆ செய்வதும் ஒரு சுன்னத்! |
52 | மனித உடம்பின் 99 இரகசியங்கள் ! |
53 | தஹஜ்ஜூத் தொழுகையின் சிறப்பு |
54 | ஒவ்வொரு முஸ்லீமும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை |
55 | எது வணக்கம்..? |
56 | விஞ்ஞானிகளுக்கெல்லாம்- விஞ்ஞானி.... அல்ஹாசன்விஞ்ஞானி! |
57 | அன்பு மனைவிகளுக்கு ! அருமையான உபதேசங்கள்!! |
58 | தமிழ்க் கலாச்சாரத்தை ஆதரிப்போம்.இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பாதுகாப்போம். |
59 | இமாம் அபூ ஹனீஃபா (ரஹ்) |
60 | இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 5) |
61 | இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 4) |
62 | இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 3) |
63 | இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 2) |
64 | இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 1) |
65 | தாயாருக்கு மருந்து வாங்க பணமில்லை ஆனாலும் வேண்டாம் இந்த நான்கு கோடி - ஜுனைத் ஜம்சேத் |
66 | மீலாது விழா கொண்டாடுவது கூடுமா? |
67 | இஸ்லாத்தில் பெண்களின் சிறப்பு: |
68 | நாட்டங்கள் நிறைவேற ஸலாத்துன் நாரிய்யா ஓதுவோம் |
69 | வைரங்கள் நாங்கள்! - பொது சிவில் சட்டம் பற்றி ஓர் இஸ்லாமிய பெண் |
70 | அறிவமுதூட்டிய எங்கள் ஆன்மீக ஆசான் கமாலுத்தீன் ஹள்ரத் கிப்லா அவர்கள்......பற்றிய ஒர் மலரும் நினைவு |
71 | ஆண் மகனின் வாழ்வியல் சோதனை !!! |
72 | மனைவியை_நேசிங்கள்.. |
73 | தாயுடன் வாழும் வாய்ப்புப் பெற்றவர்களே! |
74 | அம்மா! அம்மா! |
75 | அந்த_ஏழைப்_பெண்ணின்_ஜகாத்! |
76 | இந்திய சுதந்திர போராட்ட நாயகர்கள் |
77 | செருப்புத் தொழிலாளியின் ஹஜ் பயணம் |
78 | இமாம்களும் மத்கபுகளும். |
79 | பெற்றோர்க்கு மரியாதை செய்யுங்கள். |
80 | சொர்க்கத்தில் முதலில் நுழையும் ஏழைப் பெண்மணி..! |
81 | பராஅத் இரவின் சிறப்புகள் |
82 | வாப்பா! |
83 | ஆண்ட்ராய்டு போனும் அண்ணலாரின் உம்மத்தும்! |
84 | கிராமமோ... நகரமோ... அவர்களை கண்காணித்தபடி இருப்பதே பாதுகாப்பது |
85 | கருத்துக்குக் கருத்தால் பதிலளிப்போம்! |
86 | என் கேள்விக்கு இறைவனின் பதில்! |
87 | அரிய பண்புகளைக் கொண்ட அல்கமா (ரலி)வின் குழு |
88 | இதிலென்ன வெட்கம்? |
89 | தாய் மடி தேடும் குழந்தைகள்: (வல்லூரின் கரங்களில் நாம்) |
90 | பழையன கழிதலும் புதியன புகுதலும் |
91 | நொண்டிக் குதிரைக்குச் சறுக்கியதே சாக்கு ! |
92 | கற்பில் கவனம் தேவை |
93 | வம்புக்கு இழுப்பதில் என்ன சுகம் இவர்களுக்கு? |
94 | புக்கூரும் (காலை நேரமும்) இறையருளும் |
95 | இஸ்திஃகாராவின் சிறப்பு |
96 | தஜ்ஜால் பற்றிய முன்னறிவிப்பும் பாதுகாப்பிற்கான வழிமுறையும். |
97 | இஸ்லாத்தின் பார்வையில் கோபம்!!! |
98 | உங்களையும் தாக்கலாம் இந்த நோய்! |
99 | தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-3/3) |
100 | தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-2/3) |
101 | தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-1/3) |
102 | ஏழு குணங்களை தவிர்ந்து கொள்ளுங்கள்! நிம்மதி பெறுங்கள்! |
103 | கணவன் மனைவி – அற்புதமான விஷயங்கள். |
104 | வீட்டுப் பெண்களின் வீடியோ போஸ் |
105 | எச்சரிக்கை: இப்போதாவது விழித்துக்கொள்வோம். |
106 | இறுக்கமும் இரக்கமும் |
107 | இஷா தொழுகையும் இரவு உணவும் |
108 | கழிவறைகளில் கிப்லா முன்னோக்கப்பட கூடாது |
109 | மனிதன் உயிர்வாழ இன்றியமையாதது |
110 | தினமணி தலையங்கம்: 'இறைவா, எங்கே போகிறோம்?' |
111 | இறைவணக்கமும் இயலாமையும் (சேரில் அமர்ந்து தொழலாமா?) |
112 | மரணம் நம் கண்களை தழுவட்டுமே |
113 | முஸ்லிம் சமூகத்தின் வீட்டுமொழியாக வேண்டிய மொழி அறபு மொழி |
114 | பெயர்களை நினைவில் வைப்போம் |
115 | ஊடகங்கள் பரப்பிவரும் முன்ஜென்மபித்தலாட்டம் |
116 | இறை பிரியத்தோடு உலகில் தலைநிமிர்ந்து வாழ |
117 | ஹிஜ்ரீ பிறந்த வரலாறு |
118 | மனிதனுக்கான சுவனத்தை பரிந்துரைக்கும் இரண்டு விடயம் |
119 | சீனாவில் இஸ்லாம் அறிமுகம் |
120 | ஆட்சியை நாம் தேடவேண்டுமா? அல்லது ஆட்சி நம்மைத் தேடவேண்டுமா? (பாகம் 2/2) |
121 | முஸ்லீம் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் தொண்டு நிறுவனங்கள் !... |
122 | ஒரு 2.5 கதை |
123 | ஆட்சியை நாம் தேடவேண்டுமா? அல்லது ஆட்சி நம்மைத் தேடவேண்டுமா? (பாகம் ½) |
124 | இம்ரானா விவகாரம் மீடியாக்கள் நடத்திய மானபங்கம் |
125 | உலகத்தில் யாருமே ஏழை இல்லை |
126 | பராஅத் இரவு –நாம் பெற வேண்டிய படிப்பினைகள்பகைமையை முடிவுக்கு கொண்டு வருவோம் |
127 | வ.உ.சி க்கு 10 லட்சம் ரூபாய்க்கு கப்பல் வாங்கி கொடுத்த பக்கீர் முஹம்மதுவை தெரியுமா? |
128 | நம் துஆக்கள் ஏன் கபூலாவதில்லை? |
129 | நபிமொழியை மெய்ப்பித்தது இன்றைய விஞ்ஞானம்!!! |
130 | குறைகளை மறைத்தல் |
131 | உலகத்தூதர் கூறிய உண்மை சகோதரத்துவம்! |
132 | நல்ல பெண்மணி |
133 | பிஸ்மில்லாஹ் சொல்லியாச்சா...? பாரம்பரியமும் நாகரீகமும் |
134 | 💥 யார் அந்த மாமனிதர்..? |
135 | ஈர்ப்பை விதைப்போம்! |
136 | ஒரே ஒரு கேள்வி 10 விதமான அற்புதமான பதில்கள் |
137 | யார் இந்த துலுக்கன்? |
138 | ஷஹீத் இமாம் ஹஸனுல் பன்னாவின் 10 அறிவுரைகள் |
139 | இவ்வுலகிலும் மறு உலகிலும் தன்னிறைவு தரக்கூடிய விஷயங்கள் |
140 | முஸ்லிம் உலகம் இஸ்லாத்தை தொலைத்து விட்டதா ? |
141 | உலமாக்களின் தகுதி… அந்தக் காலம் எப்போது வரும் |
142 | நிம்மதி - சிறுகதை |
143 | வாழும் இறைநேசர்களிடம் வாழ்த்துப் பெறுவோம் ! |
144 | ஓ...மானிடனே,என்னை தெரிகிறதா? |
145 | சுலைஹாவின் தவறை உணர்த்திய கணவனின் கடிதம்! |
146 | நபி வழி வெற்றிக்கு வழி இஸ்லாத்தில் தெரிந்து கொள்ளவேண்டியவை. |
147 | வாழ்க்கை வாழ்வதற்கே ! |
148 | உம்மதினரின் மீது பெருமானாரின் அளவு கடந்த அன்பு |
149 | விற்கப்படும் மார்க்கம் |
150 | அழகிய ஐம்பெருங் குணங்கள் ! |
151 | தன்னம்பிக்கை கொள்ளுங்கள் ! |
152 | பார்வைகள் பலவிதம் ! |
153 | நேர மேலாண்மை / திட்டமிடல் |
154 | பள்ளிக்கு அருகில் வாழ்வோம் |
155 | எச்சரிக்கை: தொலைக்காட்சியில் போட்டி என்ற பெயரில் மோசடி |
156 | அந்நியப் பெண்ணுடன் ஆண் - அந்நிய ஆணுடன் பெண் கைகுலுக்கலாமா? |
157 | வரலாறு புகட்டும் பாடம் |
158 | அல்குர்ஆன் என்னும் மதுரம் |
159 | முஸ்லிம்கள் செய்ய வேண்டியது என்ன? |
160 | ஊருக்குள் விடாதீர்..விளம்பரமல்ல விபரீதம்!! |
161 | கஸ்டம்ஸில் எச்சரிக்கையாக இருங்கள்! |
162 | நாம் தான் முயல வேண்டும். |
163 | குழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள்! |
164 | காசாகும் குடும்ப அந்தரங்கங்கள். எச்சரிக்கை!! |
165 | கற்பா? கல்லூரியா? |
166 | கசாப்புத் தொழில் சிறந்தது.... |
167 | சுவர்க்கத்தை பரிசாக பெற்றுத் தரும் நற்கிரியைகள் |
168 | நான் ஏன் முஸ்லிம் ஆனேன் ? |
169 | ரகசிய கேமராக்கள்: பெண்களே எச்சரிக்கை! |
170 | இருளை நோக்கிச்செல்லும் வெளிச்சமுள்ள சமுதாயம்! தீர்வு என்ன? எப்படி செயல்படுத்துவது? |
171 | செல்வந்தர் மகனுக்கு கூறிய மரண சாசனம். (சிறுகதை) |
172 | மேற்கத்திய கலாச்சாரம் TO இஸ்லாம்- முஸ்லிம் பெண்ணியவாதியின் பயணம் |
173 | என் ஹிஜாப் என் உரிமை!!! |
174 | சபைகளில் கண்ணியம் தவறும் கணவர்கள் |
175 | முகமாகும் பெண்கள்!! |
176 | நற்குணமே இஸ்லாத்தின் அடையாளமாகும்! |
177 | இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் |
178 | உங்கள் தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுகிறது?! |
179 | அன்புச் செல்வங்களுக்கு....(நமக்கும்) - கேள்வி பதில்கள் |
180 | செல்போன்கள்... ஜாக்கிரதை! |
181 | இணையதளத்தில் கனவன்-மனைவி அந்தரங்க உரையாடல் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் |
182 | வெற்றியடைய 10 சுலபமான வழிகள் ! |
183 | ஒரு வழிப்போக்கனின் வாழ்க்கைப் பயணம்! |
184 | மிஸ்டு காலா... பெண்களே எச்சரிக்கை! |
185 | ஈமானே-உன் விலையென்ன? |
186 | இஸ்லாமியரும்-எதிர் நீச்சலும் |
187 | நாளை நமதா? - ஏ.பி. முஹம்மது அலி ஐ.பி.எஸ். (ஓய்வு) |
188 | அமைதியாக இருந்தால் அமைதி வருமா ? |
189 | அமர்ந்தது போதும் எழுந்து வாருங்கள் பயணிப்போம் |
190 | பயங்கரவாதிகள் எல்லாம் முஸ்லிம்களா? |
191 | ஒளிரட்டும் பண்மைமிகு மீலாது விழாக்கள் ! ஒழியட்டும் வன்மையிலிருந்து மீளாத விழாக்கள் !! |
192 | கட்டாய மத மாற்றத்திற்கு இஸ்லாத்தில் இடமில்லை |
193 | மக்தப் மதரஸா ... ஒரு அமைதிப் புரட்சி |
194 | யுக முடிவின் இறுதிக்கட்டமா நெருங்கிவிட்டது? |
195 | "ஜம் ஜம்” தண்ணீர் தோன்றிய வரலாறு |
196 | மெட்ராஸ் ஐ - குறித்த உண்மைகள் : |
197 | ஹிஜ்ரீ பிறந்த தியாகங்களின் வரலாறு ! |
198 | தாமிரபரணியை உறிஞ்ச வரும் 'பெப்சி' நிறுவன ஆலை |
199 | பிள்ளைகளை பாதுகாப்பாக வளர்க்க பெற்றோர்களுக்கு சில அழகிய வழி முறைகள்: |
200 | அறிவைத் தேடுவோம்! |
201 | தமிழ் மண்ணில் வேர் கொள்ள முடியவில்லை! |
202 | ஒரு மகன் தன் அப்பாவைப்பற்றி என்ன நினைக்கிறான்? |
203 | பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா? ஏதிர்த்தாரா? |
204 | இந்திய முஸ்லிம்களின் முதல் எதிரி அல் காய்தா: |
205 | பிள்ளையாரப்பா பெரியப்பா,புத்திமதியை சொல்லப்பா |
206 | அவ்வளவு ஈமானா? அல்லாஹ்வின் மேல் அவ்வளவு நம்பிக்கையா? |
207 | என் மகனிடம் சொல்லுங்கள்:-ஒரு தாயின் மனக்குமுறல்! |
208 | சமூக நலத்திற்கு உகந்த சட்டம் எது? |
209 | “வேர்கள்” வரலாறு! |
210 | கருத்து வேறுபாடு சம்பந்தமாக சட்டங்கள் |
211 | என் மகனிடம் சொல்லுங்கள்:-ஒரு தாயின் மனக்குமுறல்! |
212 | கலீல் அஹ்மத் கீரனூரி (ரஹ்) அவர்களின் அல்அஃப்லாக் வல்அவ்காத் நூல் அறிமுகம் |
213 | மனிதனின் தேவை ! – மன அமைதி |
214 | யா அல்லாஹ் ரஜப் ஷஃபான் மாதங்களில் எங்களுக்கு அருள் புரிவாயாக. இன்னும் ரமளானை அடையச் செய்வாயாக |
215 | அண்ணல் நபிகளாரின் பொன் மொழிகள்-மெளனம் கொள்ளுங்கள். |
216 | அல்லாஹ் அறிவுறுத்தும் அமுதமொழிகள் |
217 | பிரார்த்தனைகள் ஏன் ஏற்கப்படவில்லை? |
218 | மஸ்ஜித் (பள்ளிவாசல்) |
219 | பேச்சு,மெளனம் |
220 | ஜனாஸா - மைய்யத் |
221 | கிலாஃஃபா மறைவு: இந்தியா தடுமாறியது.. எகிப்து கவலையுற்றது |
222 | ஹஜ் யாத்திரை - சில சிந்தனைகள் !!! |
223 | ஜெனரல் எர்வின் ரோமல் கண்ட காலித் இப்னு வலீத் (ரலி ) |
224 | முஸ்லிம்களை ஏன் பயங்கரவாதிகளாக சித்தரிக்க முற்படுகிறார்கள்? |
225 | வெளிநாடுகளில் வேலை செய்யும் என் சகோதரர்களே! |
226 | அரிஸ்டாட்டில் முதல் நியூட்டன் வரை |
227 | இறை நேசர்கள்- தொடரும் விளக்கம் |
228 | வலிமார்கள் என்பவர்கள் யார்? |
229 | காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயீல் ஸாஹிப் அவர்களின் பதில் சொல்லும் பாங்கு |
230 | அமைதியாக இருந்தால் அமைதி வருமா ? |
231 | மனித குல விரோதி |
232 | எனது பெயர் ஜனாஸா! |
233 | பாபரா ராமர் கோயிலை இடித்திருப்பார்??? |
234 | கடன் கொடுப்போரும் வாங்குவோரும் நடந்து கொள்ள வேண்டிய முறை |
235 | மோடியை விட்டு 2002 ஏன் விலகாது? |
236 | இஸ்லாம் வாள் முனையில் பரப்பப்பட்டதா? |
237 | வதைக்கும் விவாகரத்து வழக்குகள் |
238 | ஹிந்து - குறித்து இஸ்லாம்! |
239 | தமிழரும் இசுலாமியரும் |
240 | குர்ஆன் மக்தப் - காலத்தின் தேவை! |
241 | இஸ்லாம் மிருக வதையை தூண்டுகின்றதா? |
242 | மில்லர் கண்ட குர்ஆனின் அதிசயங்கள் |
243 | முஹம்மது(ஸல்) எனக்கு நடுநிலையானவர் |
244 | முஸ்லிமல்லாதவர்களுக்கு ஒரு கடிதம் |
245 | அயோத்தி ராமன் அழுகிறான் -கவிஞர் வைரமுத்து |
246 | துருக்கி மன்னரின் விலை 10 பொற்காசுகளே! |
247 | கற்பனைகளும் இஸ்லாமும் |
248 | வணங்கி மகிழ்கிறோம் - ஆச்சிரியம் ஆனால் உண்மை. |
249 | சுத்தம் பேணுவோம்,நுரையீரலை காப்போம்! |
250 | நபிகள் நாயகத்தை வசைபாடிப் படம் எடுத்தவர்.... |
251 | மது ஒரு பெரும் பாவம் |
252 | மகாத்மா காந்தி, பெரியார் சந்திப்பு |
253 | பெற்றோர்களைப் பேணுவோம்! |
254 | யார் இவர்? பேச்சாளர்..போர் வீரர்..இராணுவ தலைவர்.. |
255 | சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-3) |
256 | உடல் உறுப்புகளை தானம் செய்வதுபற்றி இஸ்லாம் |
257 | தவ்பா என்னும் பாவமன்னிப்பின் சிறப்புகள்! |
258 | சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-2) |
259 | சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-1) |
260 | இதயத்தை கவனமா பாத்துக்கங்க! |
261 | இமாம்களை கண்ணியம் செய்வோம்! |
262 | உமர் (ரலி) அவர்களுக்கு நண்பர்கள் எழுதிய கடிதம். |
263 | மறுமை வாழ்வை நேசிப்போம்! |
264 | நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 8 - முடிவு) |
265 | சொல்லின் செல்வர் எம்.எம். பீர் முஹம்மது சாகிப் |
266 | சுதேசி சிந்தனைகள்....... |
267 | உள்ளத்தை தூய்மை படுத்துவோம்! |
268 | கல்வி நல்லோர்களின் சொத்து! |
269 | மனிதர்களுக்கு மீன்கள் சொல்லும் பாடம்! |
270 | வாழ்க்கைக்கு உதவும் வாய்மைமொழிகள்! (தொடர்- 1) |
271 | வாழ்க்கைக்கு உதவும் வாய்மைமொழிகள்! (தொடர்- 2) |
272 | பாராளுமன்ற தேர்தலும் முஸ்லிம்களின் நிலைபாடும்! |
273 | தொடர்பூடக ஒழுக்கவியல்: அல்குர்ஆனின் வழிகாட்டல் |
274 | உண்ணுவதிலும்,குடிப்பதிலும் தூய்மையை பேணுவோம்! |
275 | நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 7) |
276 | செயற்கைக் கருத்தரிப்பும் வாடகைத் தாயும்! |
277 | அறிவைத் தேடுவோம்! |
278 | ஆக்காதீர் ஆசனங்களாக |
279 | நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 5, 6) |
280 | நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 3) |
281 | நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 4) |
282 | மோதினார் அப்பாவின் கதை அல்ல நிஜம் |
283 | நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 1) |
284 | நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 2) |
285 | ஸுபுஹ் தொழுகையும் நாமும் ??? |
286 | ஆஸாத் விசாவா?உஷார்,உஷார்! |
287 | அதிகாலை நேரமும் சுபுஹுத் தொழுகையும் |
288 | தன்பக்கமா? தன்னிகரற்ற கொள்கையின் பக்கமா? |
289 | சமுதாய தலைவர்களே சிந்தியுங்கள்! |
290 | படிப்பினையூட்டும் ஒரு நிகழ்வு! |
291 | உபதேசம் என்பது உலமாக்களின் தனி உடைமையா? |
292 | பெண் குழந்தை ஒரு பாக்கியம் |
293 | டாக்டர் ஜாகீர் ஹுசைன் – கல்வியுடன் சுகாதாரத்தையும், ஒழுக்கத்தையும் கற்றுத்தந்தவர் |
294 | வெப்கேமிரா...எச்சரிக்கை...! |
295 | நான் ஒருத்தனிடம் ஏமாந்தேன் நீ என்னிடம் ஏமாறு என்பதே மல்டி லெவல் மார்கெட்டிங் - AMWAY Products |
296 | மனமகிழ் குடும்பம்:நல்லதோர் குடும்பத்தலைவி! |
297 | மனமகிழ் குடும்பம்: நல்லதோர் குடும்பத் தலைவன் |
298 | விசுவரூபம் ஒரு விளக்கம் |
299 | விஸ்வரூபமும் முஸ்லீம்களும். |
300 | மதுவை ஒழிப்போம்,மாதுவை காப்போம்! |
301 | வாழ்க்கைக்காக ஒரு மரணம் |
302 | கண்ணாடிகள் கவனம் |
303 | 360 மூட்டுக்கள் (எலும்பு இணைப்புக்கள்) Bone Joints..! ( 7-ம் நூற்றாண்டு முன்னறிவிப்பு ) |
304 | ஷைத்தானின் விரோதிகளும், நண்பர்களும் |
305 | ஹஜ்ரத் அலி (ரலி) அவர்களின் அறிவுரைகள் |
306 | துஆக்கள் ஏன் ஒப்புக்கொள்ளப் படுவதில்லை? |
307 | சிந்திக்க தவறும் ஆண்களுக்கு மட்டும் |
308 | கருத்து வேறுபாடுகள். |
309 | நபியவர்கள் எங்கள் உயிருக்கு மேல் |
310 | ஹிஜாபுக்குப்பின் கண்ட வாழ்க்கை |
311 | யூத கிருத்துவ வக்கிரப்படமும் விமர்சனங்களை வென்ற விண்புகழ் வேந்தரும் |
312 | தஜ்ஜால் Vs டெலிவிஷன் |
313 | ஓ! என் இளைய சமுதாயமே! |
314 | இதயத்தை பாதுகாக்க யோசனைகள்! |
315 | வீண் செலவு வேண்டாமே |