பரிபூரணமான முஸ்லிம் யாரெனில் அவருடைய கரம், நாவு கொண்டு மற்ற முஸ்லிம்கள் நிம்மதி பெற்றிருக்க வேண்டும். இன்னும் முஹாஜிர் (நாடு துறப்பவர்) யாரெனில் அல்லாஹ் எதைவிட்டும் தடுத்துள்ளானோ அதை விட்டும் தவிர்ந்து இருப்பவராவார்
இறைவனுக்கு அஞ்சி நடப்பவருக்கு செல்வம் இருப்பதில் தவறில்லை. ஆனால், இறைவனுக்கு அஞ்சி நடப்பவருக்கு செல்வத்தை விட ஆரோக்கியம் மேலானது. மேலும், மன அமைதி (திருப்தி) என்பது இறைவனின் அருட்கொடைகளில் ஒன்றாகும்.
மனிதர்களுக்கு சில நேரங்களில் தங்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை விட, தாங்கள் மதிக்கப்படுகிறோம் அல்லது கவனிக்கப்படுகிறோம் என்ற உணர்வே அதிகமாகத் தேவைப்படுகிறது.