முஆத் பின் ஜபல் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கூறியதாக அறிவிக்கிறார்கள் : சுவர்க்கத்தின் திறவு கோல்கள் லாயிலாக இல்லல்லாஹ் என்ற ஷஹாதத் ஆகும் ( வணக்கத்திற்குரியவன் அல்லாஹுவைத்தவிர வேறு இறைவன் இல்லை என்று கூறுவதாகும்)
இறைவனுக்கு அஞ்சி நடப்பவருக்கு செல்வம் இருப்பதில் தவறில்லை. ஆனால், இறைவனுக்கு அஞ்சி நடப்பவருக்கு செல்வத்தை விட ஆரோக்கியம் மேலானது. மேலும், மன அமைதி (திருப்தி) என்பது இறைவனின் அருட்கொடைகளில் ஒன்றாகும்.
மனிதர்களுக்கு சில நேரங்களில் தங்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை விட, தாங்கள் மதிக்கப்படுகிறோம் அல்லது கவனிக்கப்படுகிறோம் என்ற உணர்வே அதிகமாகத் தேவைப்படுகிறது.