திரைகள் விலகட்டும்

உயிருக்குயிரான உயிரினும் மேலான சத்தியத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக நபித்தோழர் சுஹைப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்:

“முஃமின் உடைய நிலை ஆச்சிரியமானது. அவனுடைய எல்லா நிலைகளும் அவனுக்கு நன்மையே, இந்த நிலை முஃமினைத் தவிர வேறு யாருக்கும் இல்லை. அவனுக்கு சந்தோஷம் ஏற்பட்டால் அவன் நன்றி செலுத்துகிறான் அது நன்மையாகி விடுகிறது. துன்பம் ஏற்பட்டால் பொறுமை கொள்கிறான் அதுவும் அவனுக்கு நன்மையாகிவிடுகிறது"

இந்த ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் ஒரு அற்புதமான இன்னும் ஆச்சிரியமான ஒரு செய்தியை சொல்கிறார்கள். மேலோட்டமாக பார்க்கும் போது ஏதோ ஒரு பொது செய்தி செல்லுவது போன்று இந்த ஹதீஸ் தெரிந்தாலும், இது மிக அழமான ஒரு செய்தியை விவரிக்கிறது.

"ஒரு முஃமின் உடைய மனோநிலை எப்படி இருக்கும் / இருக்க வேண்டும்" என்பதை தத்ரூபமாக படம் பிடித்துக்கட்டும் நபிமொழி இது.

ஒரு முஃமினின் எல்லா நிலைகளும் அவனுக்கு நன்மையே என்ற ஒரு வாசகத்தை நபி (ஸல்) அவர்கள் பதிவு செய்கிறார்கள். இதன் பொருள் நீண்ட, அகண்ட பொருளைக் கொண்டுள்ளது, அதில் அவனின் உலக நிலையும் சிறப்பானதே, மறுமை நிலையும் சிறப்பானதே, தனி மனித நிலையும், சமூக நிலையும், குடும்ப நிலையும் சிறப்பானதே, பொருளாதார நிலையும், பொருளாதாரம் இல்லாத நிலையும் குறிக்கும். பொதுவாக மனிதன் தனக்கு இது நன்மை என்று நம்புவது அவனின் கடந்த கால அனுபவத்தைக் கொண்டே. ஆனால் உண்மை நிலை அவனின் அனுபவங்கள் சில நேரம் பொய்த்துப் போகலாம், நாமும் முஸ்லிமாக இருக்கிறோம் பல நிலைகளின் நம் வாழ்விலே இவ்வாறான நிலைகள் இல்லையே என்று நாம் யோசிக்கலாம்.

இந்த ஹதீஸின் ஆரம்பத்தில் நபியவர்கள் “ஒரு முஃமினின்” எல்லா நிலைகளுமே சிறப்பானவை என்பது கொண்டு இங்கு ஒரு நிபந்தனையை (Condition) நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் எல்லா நிலைகளும் நன்மையானவை என்று உணர்வதற்க்கு ஒரு மனோநிலை வேண்டும். அது தான் ஈமானிய நிலை.

  • இறைவன் ஒருவனே நம்மை படைத்தவனாக இருக்கிறான். 
  • அவன் ஒருவனே நம்மை காப்பதற்க்கு முழு சக்தி படைத்தவன். 
  • அவன் ஒருவனே வணக்கத்திற்குரியவன். 
  • அவன் ஒருவனே நமக்குரிய எல்லா தேவைகளை நிறைவு செய்கிறான் என்ற மனோநிலை.

பொதுவாக ஒரு இறைநம்பிக்கையாளரின் நம்பிக்கை இவ்வாறு தான் இருக்கும். ஆனால் இறை நம்பிக்கையற்ற நாத்திகர்களும், இறைவன் மீது எவ்வாறு நம்பிக்கை வைக்க வேண்டும் என்று தெரியாதவர்களும் (இறைவனுக்கு நாம் உணவு சமைத்து படைக்கிறோம், அவனுக்கு துயில் கொள்ள நாம் இடம் கொடுக்கிறோம் என்று இறைவனை நம்மைப் போன்றும் இன்னும் நம்மை விட ஒரு படி கீழாகவும் நம்புபவர்கள்) இந்த வட்டத்திற்குள் வரமாட்டார்கள்.

மேலே குறிப்பிடப்பட்ட மனோநிலை உள்ளவர்களிடம் கூட சில நேரங்களின் உயர்வு தாழ்வு ஏற்பட்டு விடுகிறது. ஆனால், உண்மையான இறைவிசுவாசிகள் எந்த நிலையிலும் மனோநிலையிலும் மாற்றம் அடைய மாட்டார்கள். ஏனெனில் இறைவன் திருக்குரஆனில் குறிப்பட்டுகின்றான் “எங்களை அடைவதெல்லாம் எதை எங்கள் இறைவன் எங்கள் மீது விதியாக்கினானோ அவற்றை தவிர வேறொன்றுமில்லை" இதை ஒரு சாமானியன் கூட எளிதில் விளங்க முடியும். சில வேளைகள் அல்ல பல வேளைகளின் உலகில் நாம் நினைப்பதல்லாம் அதற்கு மாற்றமாக தான் நடந்து கொண்டிருக்கிறது. இப்படி நடப்பதின் உண்மையை ஒருவன் புரிந்து கொண்டால் நம்பிக்கையாளர்களின் பட்டியலில் சேர்ந்து விடுவான்.

நாம் நினைப்பது நடக்காவிட்டாலும், நடப்பவற்றைப் பற்றியல்லாம் நாம் நினைப்பதில்லை இது ஏன் இப்படி நடந்து? என்று நடக்கிற எல்லாமே என் இறைவனால் எனக்கு தரப்பட்டிருக்கும் செய்தி. மனதிற்குகந்த, நல்லவை நடக்கிற போதல்லாம் நன்றி செலுத்துகிறான், இதன் அர்த்தம் நடந்த விஷயங்களை மீண்டும் நினைவு படுத்தி இது இறைவனால் எனக்கு தரப்பட்ட வெகுமதி என்று எண்ணுகிறான். திடீரென வாழ்வில் வலிகளும், சிரமங்களும் ஏற்பட்டால் அதை பொருந்திக்கொண்டு அதில் பொருமை காக்கிறான். இந்த மனோநிலை இருக்கிற காரணத்தினால் தான் மேலே உள்ள ஹதீஸில் ஒரு முஃமினைத் தவிர வேறு யாருக்கும் இந்த நிலை இல்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

பொதுவாக மனித வாழ்வில் நன்மை நடக்கும் போதேல்லாம் அது தன்னை கொண்டுதான் நடந்து என்று எண்ணி பெருமைக் கொண்டு, தன்னை விட்டு அது சென்று விடக்கூடாது என்பதில் பிரையாசைக் கொள்கிறான். மனிதனுக்கு நன்மை வந்தால் அதை தடுத்து தனதாக்கி கொள்ளவே முயற்ச்சிக்கிறான், ஆனால் ஒரு தீமை அவனுக்கு கிடைத்தால் அதைக்கண்டு பதட்டம் அடைகிறான்.

மேலே எழுதப்பட்ட இத்துணை வார்த்தைகளின் சாரம்சத்தை மவ்லானா ரூமீ (ரஹ்) அவர்களின் வார்த்தைகளில் கூறுவதென்றால்.

வண்டி இழுப்பதென்னவோ மாடுகள்

ஆனால் சக்கரங்கள் கிடந்து சப்தமிடுகின்றன

என்ன ஒரு அற்புதமான, உயிரோட்டமுள்ள வார்த்தைகள்! ஒரு சாதரண மனிதனில் இருந்து பண்டிதர் வரை பண்படுத்தும் வார்த்தைகள்!

இறைவன் தான் நம் அனைத்து நிலைகளையும் சரிசெய்கிறான், ஆனால் மனிதன் தான் என்னவோ சாதனைகள் புரிந்து விட்டது போன்று “நான் அப்படிச் செய்தேன் இப்படி செய்தேன். எல்லாம் என் அறிவு, புத்தி கூர்மையில் தான் இவ்வளவும் நடந்தது என்று தப்பட்டம் அடிக்கிறான்". அந்தோ பரிதாபம்! திரைக்கு பின்னால் இருந்து திறப்பட செயல்படுத்திக் கொண்டிருக்கும் அந்த திறமையின் பலம் புரியவேண்டுமே! இந்த ஆத்மாவிற்கு அந்த நிலை புரியவே ஆத்மாக்களுக்கு அழைப்பு கொடுக்கிறது மேலே உள்ள நபிமொழி.

இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் கூறிய உபதேச வார்த்தைகள் இன்னும் காதில் ரீங்காரமிடுகின்றன

ஒ குழந்தாய், நான் உனக்கு சில வார்த்தைகளை கற்றுத் தருகிறேன்,

  • அல்லாஹ்வின் சட்ட வரம்புகளை பாதுகாப்பாயாக! இறைவனின் பாதுகாப்பு உனக்கு இருக்கும்.
  • உணர்வுகளுக்கு அடிமையாகிவிடாமல் இறைவனின் உன் உணர்வுகளை அடிமையாக்குவாயாக! இறைவனை உனக்கு முன்னால் பெற்றுக்கொள்வாய்! 
  • நீ எதைக்கேட்டாலும் இறைவனிடம் மட்டுமே கேட்பாயாக! 
  • நீ உதவிதேடினால் இறைவனிடம் மட்டுமே உதவி தேடுவாயாக! 
  • இந்த உலகமே சேர்ந்து உனக்கு ஒரு நன்மையை நாடினாலும் இறைவன் எழுதி வைத்ததை தவிர வேறு எந்த ஒரு நன்மையும் அவர்களால் செய்ய முடியாது. 
  • இந்த உலகமே சேர்ந்து ஒரு தீமை உனக்கு செய்ய நாடினாலும் இறைவன் எழுதி வைத்ததை தவிர வேறு எந்த ஒரு தீமையும் அவர்களால் செய்ய முடியாது.

இமாம் அஹ்மது (ரஹ்) அவர்களின் ஹதீஸில் இன்னும் சில வாசங்கள் இந்த் ஹதீஸில் உள்ளது

  • நீ சிறப்பாக இருக்கிறபோது இறைவனை நினைவில் வை! நீ சிரமத்தில் இருக்கும் போது அவன் உன்னை நினைவில் வைப்பான்.
  • நீ மிகுந்த சிரமம் எடுத்து முயற்ச்சித்தும் உனக்கு கிடைக்காதவை உன்னுடையதல்ல! 
  • நீ வேண்டாம் என்று நினைத்தும் உன்னை வந்து அடைந்திருப்பவை தவறாக வந்தடைந்தவையுமில்லை!

புரிந்து கொள்!

  • பொறுமைக்கு பின் தான் உதவியிருக்கிறது! 
  • சிரமத்திற்கு பின் தான் மகிழ்ச்சி இருக்கிறது! 
  • கஷ்டத்திற்கு பின் தான் இலகு இருக்கிறது!

எத்துணை அற்புதமான நபி பெருமான் (ஸல்) அவர்களின் வார்த்தை! சந்தோசத்தை நன்றி செலுத்துதலாலும், கஷ்டத்தை பொருமையாலும் எதிர்கொண்டு வென்றேடும்போம் இருலக வாழ்வின் வெற்றிகளை நமதாக்குவோம்!




1 A Most Beautiful Hadith Among All The Beautiful Ahadith
 

A Bedouin came one day to the Holy Prophet (sallallahu 'alahi wasallam) and said to him,

'O, Messenger of Allah! I've come to ask you a few questions about the affairs of this Life and the Hereafter.'