• முஹம்மது இஸ்மாயில் ஹஸனி M.A., M.Phil

  • யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 16-19 (25-Oct-2015)
    36:16. தூதர்கள் கூறினார்கள்: திண்ணமாக, நாங்கள் உங்களிடம் தூதர்களாக அனுப்பப்பட்டுள்ளோம் என்பதை எங்கள் அதிபதி நன்கறிகின்றான்.
    36:17. மேலும் எங்கள் மீதுள்ள கடமை, தூதைத் தெளிவாய் (உங்களிடம்) சேர்ப்பித்து விடுவதைத்தவிர வேறில்லை!

    36:18. அதற்கவர்கள் நாங்கள் உங்கள் வருகையை நிச்சயமாக கெட்ட சகுனமாக நினைக்கின்றோம். நீங்கள் (இதிலிருந்து) விலகிக் கொள்ளாவிடில் நிச்சயமாக நாங்கள் உங்களைக் கல்லெறிந்து கொன்று விடுவோம். அன்றி, எங்களுடைய துன்புறுத்தும் வேதனையும் உங்களைப் பிடித்துக்கொள்ளும் என்று கூறினார்கள்.

    36:19. அதற்கு (நம் தூதர்கள்) உங்களுடைய கெட்ட சகுனம் உங்களிடம்தான் இருக்கின்றது. உங்களுக்கு நல்லறிவைப் புகட்டிய தற்காகவா? (எங்களைக் கெட்ட சகுனம் என்று கூறுகிறீர்கள்). அது சரியன்று; நீங்கள்தாம் வரம்பு மீறிய மக்கள் என்று கூறினார்கள்.