• ஹபீப் முஹம்மத், தாவூதி, நத்வி

  • மறைக்கப்பட்ட வரலாறு
    இந்தியாவை உருவாக்குவதற்கும் அதன் வளர்ச்சிக்கும் முஸ்லீம்கள் ஆற்றிய பணிகள் இன்றைக்கு மறைக்கப்பட்டு வருகிறது. இந்தியாவின் விடுதலைக்காக முஸ்லீம்கள் சிந்திய இரத்தத்தின் அளவிற்கு மற்றவர்கள் வியர்வைக் கூட சிந்தியது கூடக் கிடையாது. ஆனால் இன்று அவர்கள் தேசபக்தர்களாகவும் நாம் தேசத் துரோகிகளாக சித்தரிக்க்ப்படப் பட்டுக் கொண்டிருக்கின்றோம். 1857 ஆம் ஆண்டு நடந்த விடுதலைப் போரில் ஒரே நாளில் ஐந்து லட்சம் முஸ்லீம்கள் கொல்லப் பட்டனர். டெல்லியிலிருந்து லாகூர் வரைக்கும் கிட்டத்தட்ட 400 கி.மீ. தூரம் இருந்த அத்தனை மரங்களில் முஸ்லீம்கள் தூக்கில் தொங்காத எந்த மரமும் கிடையாது. அதில் அநேகம் பேர் உலமாக்கள். ஆனால் இந்த வரலாறு இந்தியர்கள் எத்தனை பேருக்குத் தெரியும். நமது உறக்கம் கலையவேண்டும்.