• முஹம்மது இஸ்மாயில் ஹஸனி M.A., M.Phil

  • யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 72-73 (29-Oct-2017)
    36:72. மேலும், அவற்றை அவர்களுக்குக் கீழ்படியுமாறு செய்துள்ளோம்; ஆகவே, அவற்றில் சிலவற்றின் மீது அவர்கள் ஏறிச்சவாரி செய்வதும் இருக்கிறது; இன்னும் அவற்றிலிருந்து சிலவற்றைப் புசிக்கிறார்கள்.
    36:73. மேலும், அவற்றிலிருந்து அவர்களுக்கு பயன்களும், பானங்களும் இருக்கின்றன, இவற்றுக்கெல்லாம் அவர்கள் நன்றி செலுத்த மாட்டார்களா?

    குறிப்பு:

    மரணம் வரை தேடப்பட வேண்டிய அறிவு
    சிந்திக்கிறவர்களுக்கு குர்ஆன் பாடம் நடத்தும்
    கால்நடைகள் கற்று தரும் ஏகத்துவம்
    கால்நடைகள் ஒரு மிகப்பெரிய அருட்கொடை
    ஈமானிய அடையாளம் உலகிலும் மறுமையிலும் வெளிப்படும்.
    ஓர் அறிஞரின் கூற்று: குர்ஆன் என்பது பேசும் உலகம் , சுற்றியுள்ள உலகம் என்பது பேசாத குர்ஆன் , பெருமானார்(ஸல்) அவர்கள் நடக்கும் குர்ஆன்
    குர்ஆனை நோக்கிய பயணமே நம்முடைய நோக்கம்
    அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்கவே கால்நடைகள் நமக்கு கட்டுபடுகிறது
    மனித உடலில் உள்ள அத்தாட்சியின் கடல்.
    பாவமன்னிப்பும் உடல்ஆரோக்கியமும் ஒரு முஸ்லிமின் அடிப்படையான துஆ இருக்க வேண்டும்
    எதில் கவனம் உள்ளதோ அது மட்டும் தான் உள்ளே இறங்கும்.