• முஹம்மது இஸ்மாயில் ஹஸனி M.A., M.Phil

  • அந் நூர் விளக்கவுரை: ஆயா: 10-11 (02-Dec-2018)
    24:10. இன்னும் உங்கள் மீது அல்லாஹ்வுடைய நல்லருளும், அவனுடைய ரஹ்மத்தும் இல்லாது போயிருப்பின், (உங்களுக்கு அழிவு உண்டாயிருக்கும்;) நிச்சயமாக அல்லாஹ் தவ்பாவை ஏற்றுக் கொள்பவனாகவும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றான்.
    24:11. எவர்கள் பழி சுமத்தினார்களோ, நிச்சயமாக அவர்களும் உங்களில் ஒரு கூட்டத்தினரே! ஆனால் அது உங்களுக்குத் தீங்கு என்று நீங்கள் எண்ண வேண்டாம். அது உங்களுக்கு நன்மையாகும். (பழி சுமத்தியவர்கள்) ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் சம்பாதித்த பாவம் (அதற்கொப்ப தண்டனை) இருக்கிறது; மேலும், அ(ப்பழி சுமத்திய)வர்களில் பெரும் பங்கெடுத்துக் கொண்டவனுக்குக் கடினமான வேதனையுண்டு.

    குறிப்பு:
    வதந்தி மற்றும் அவதூறு பற்றிய இஸ்லாமிய பார்வை!
    மனித சிந்தனையை தூண்ட செய்யும் இஸ்லாம்
    பெருமானார் நபி(ஸல்) அவர்களின் போர்க்கால நடைமுறைகள்!
    அன்னை ஆயிஷா(ரழி) அவர்கள் மீதான விமர்சனமும், அதனை பெருமானார் நபி(ஸல்) கையாண்ட விதமும்
    பெருமானார் நபி(ஸல்) அவர்களின் தாயார் அன்னை ஆமினா(ரழி) அவர்களின் உதவியாளர் உம்மு அய்மன்(ரழி) அவர்களின் சிறப்பு
    அன்னை ஆயிஷா(ரழி) அவர்கள் யார், என்பதை உணர்த்தும் தொடர் ஆயத்துகள்!