• முஹம்மது இஸ்மாயில் ஹஸனி M.A., M.Phil

  • அந் நூர் விளக்கவுரை: ஆயா: 14-16 (06-Jan-2019)
    24:14. இன்னும், உங்கள் மீது இம்மையிலும், மறுமையிலும் அல்லாஹ்வின் அருளும், அவனுடைய ரஹ்மத்தும் இல்லாதிருந்தால், நீங்கள் இச் சர்ச்சையில் ஈடுபட்டிருந்தமைக்காக கடினமான வேதனை நிச்சயமாக உங்களைத் தீண்டியிருக்கும்.
    24:15. இப்பழியை (ஒருவரிடமிருந்து ஒருவராக) உங்கள் நாவுகளால் எடுத்து(ச் சொல்லி)க் கொண்டு, உங்களுக்குத் (திட்டமாக) அறிவில்லாத ஒன்றைப் பற்றி உங்கள் வாய்களால் கூறித் திரிகின்றீர்கள்; இன்னும் இதை நீங்கள் இலேசானதாகவும் எண்ணி விட்டீர்கள். ஆனால் அது அல்லாஹ்விடத்தில் மிகப்பெரிய (பாவமான)தாக இருக்கும்
    24:16. இன்னும் இதை நீங்கள் செவியேற்ற போது, “இதைப் பற்றி நாம் பேசுவது நமக்கு(த் தகுதி) இல்லை; (நாயனே!) நீயே தூயவன்; இது பெரும் பழியாகும்” என்று நீங்கள் கூறியிருக்கலாகாதா?

    குறிப்பு:
    நம் ஈமானை எடைப்போடும் சுயபரிசோதனை
    தனக்கு தெரியாத ஒரு விஷயம் தனது காதுக்கு வரும் போது ஒரு முஸ்லிம் எப்படி நடக்க வேண்டும்
    முஃமீன்களாக இருப்பவர் இது போன்ற காரியங்களை செய்யவே கூடாது!
    அல்லாஹ் நம்மீது கொண்ட கருணையின் வெளிப்பாடு
    நான் ஒரு பாவத்தை செய்துவிட்டு, அதை சிறியது பெரியது என்று நானே முடிவு செய்ய, எனக்கு எந்த தகுதியும் இல்லை!
    ஈமானிய சுவை என்னை விட்டு விலகுவதற்கான அடையாளங்கள்!