மரணம் நம் கண்களை தழுவட்டுமே

உயிருக்குயிரான உயிரினும் மேலான சத்தியத்தூதர் அவர்கள் கூறியதாக நபித்தோழர் அபூஹுரைரா அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஆதமின் மகன் மரணமடைந்து விட்டால் அவன் செயல்கள் துண்டிக்கப்பட்டு விடுகின்றன. ஆனால் மூன்றைத் தவிர

1. நிலையான தர்மம்
2. பிரயோஜனம் அளிக்கும் கல்வி
3. தன் பெற்றோருக்கு பிராத்தனை புரியும் நல்ல குழந்தை

இந்த ஹதீஸ் மிகத் தெளிவாக உள்ளது.

மனிதன் மரணித்தால் அவன் எந்த செயலும் செய்யமுடியாது.
தான் மரணமான பின்னாலும் உயிர் வாழ்வதற்குரிய வேலையை நபிகள் பெருமான் நமக்கு கற்றுத்தந்தார்கள்

1. நிலையான தர்மம்

ஒரு மனிதம் மற்றவர்களுக்கு பிரயோஜம் கொடுப்பது போன்ற தன் வாழ்நாளின் எதாவது செய்துவிட்டு சென்றால் அது அவனுக்கு பிரயோஜமாக அமையும்.
இறைவனுக்கு ஒரு மஸ்ஜிதை தன் வாழ்நாளில் கட்டினால் அதில் மனிதர்கள் தொழும் காலமெல்லாம் அதன் நன்மை அவருக்கு கிடைக்கும்
ஒரு இடத்தைவாங்கி அதை இறைபாதையில் கொடுத்தால், இன்னும் ஒருபடி மேலே நபியவர்கள் கூறினார்கள்

ஒரு முஸ்லிம் ஒரு இடத்தில் ஒரு மரக்கன்றை நட்டால் அதில் யாரெல்லாம் சப்பிடுகிறார்களோ அது அவருக்கு சதக்காவாகும், அதில் திருடப்பட்டாலும், அதில் கால்நடை, பறவையினங்கள் சாப்பிட்டாலும் அது அவருக்கு ஸதக்காவாக சேரும்.அதிலிருந்து உருவாகும் செடிகள் என்று அது தொடரும் கியாமத் நாள் வரை

எங்கள் தெருவில் உள்ள பள்ளிவாசலுக்கு எதிரில் இருந்த வேப்பமரம் சில தினங்களுக்கு முன்னால் அருகில் உள்ள மின் இணைப்புக்கு இடையூறாக உள்ளது என்ற காரணத்தினால் வெட்டப்பட்டது.

அப்பொழுது அந்த மரம் பற்றிய பேச்சு அங்கு எழுந்தது.
நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் அந்த பள்ளியிருந்த ஒரு பிலால் அவர்கள் அந்த மரத்தை நட்டதாகவும், வளர்த்தாகவும் செல்லப்பட்டது.
என் பிறப்பிற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே நடப்பட்ட மரமது.
எனக்கு விபரம் தெரிந்த பின் நான் பார்த்த வகையில் பல பேர் அதில் ஓய்வேடுத்துள்ளனர், தொழுகைக்கு வருபவர்கள் வாகனம் நிறுத்தியுள்ளனர் ,மிஸ்வாக்காக பயன்படுத்தியுள்ளனர், பல கிளைகள் அடுத்து வைப்பதற்கு எடுத்துசெல்லப்படது, பல மருந்துக்காக எடுத்துச்சென்றுள்ளனர்.
இது ஒரு மரக்கதை இது போன்று எத்தனை மரங்களோ, அல்லாஹ் அக்பர் அதை நட்டவர் கூட அறியாத விதத்தில் அவருக்கு நன்மை கிடைக்கிறது.

2. பிரயோஜனம் தரும் கல்வி

ஒரு மனிதன் ஒரு பிரயோஜமான புத்தம் எழுதினால் அதன் மூலம் உலகில் மக்கள் பயன்படுகிற வரை அவருக்கு நன்மை.
ஒருவரின் பேச்சு அதைக்கொண்டு அடுத்தவர் பயன்பெறுகிறார்.
ஒருவர் புத்தகங்களை வாங்கி அடுத்தவர்கள் பயன்படுத்த கொடுக்கிறார்.
ஒருவரிடம் கல்வி கற்ற மாணவர்கள் அடுத்தவருக்கு சொல்லிக்கொடுக்கின்றனர்.

உதாரணத்திற்கு இமாம் புஹாரி ரஹ்மதுல்லாஹி அலைஹி, கொடுத்த புஹாரி ஷரிபைக்கொண்டு உலகமே பிரயோஜனம் அடைகிறது.
பிரயோஜம் அடைந்தற்கு ஒரு நன்மை, அதைக்கொண்டு அமல் செய்தால் இன்னொரு நன்மை.

அல்லாஹ் அன்னாரின் தரஜாவை உயர்த்துவானாக, அவரின் கப்ரை சுவனப்பூங்காவாக ஆக்குவானாக!
வெறும் இஸ்லாமிய புத்தகங்களும், குர் ஆனுக்கும் மட்டும் தான் இந்த நன்மை என்று எண்ணிவிட வேண்டாம்.
இன்று உலக அறிவியல் வளர்ச்சி மூலம் மக்கள் பயன்படுத்து அனைத்து மருந்துகளை கண்டுபிடித்தவர்களுக்கும் இதே நன்மையே.

3. நல்ல குழந்தை

ஒருவர் தன் குழுந்தையை நல்ல முறையில் வளர்த்து அதற்கு ஒழுக்கங்களை கற்றுக்கொடுத்தால் அது அவருக்கு உலகில் உள்ள asset ஆக ஆகிவிடும்.
அக்குழந்தையின் து ஆக்களை அல்லாஹ் ஏற்றுக்கொள்கிறான் என்று நபிகளார் சுட்டிக்காட்டியுள்ளார்கள்
ஏதோ பிறந்தோம், இருந்தோம் என்று இல்லாமல். இருந்தோம் மரணத்திற்கு பின்னும் நன்மைகளை பெற்று வாழ்கிறோம் என்ற அடிப்படையில் வாழ வழி இது ஏற்போம் செயல்படுவோம்..

- பேரா. ஹஸனீ


No articles in this category...