Tamil Islamic Media

எச்சரிக்கை: இப்போதாவது விழித்துக்கொள்வோம்.

எச்ச‌ரிக்கை:இந்த‌க் க‌ட்டுரை ப‌டிப்ப‌த‌ற்கு, ப‌கிர்ந்துகொள்வ‌த‌ற்கு ம‌ட்டும‌ல்ல‌. அம‌ல் ப‌டுத்துடுவ‌த‌ற்கு. இன்றே... இப்போதே...

ஆர‌ம்ப‌ கால‌ங்க‌ளின் இஸ்லாத்தை வேறோடு அழிக்க‌ அத‌ன் எதிரிக‌ள் முனைந்த போதெல்லாம் ஸ‌ஹாபாக்கள் த‌ங்க‌ள‌து வேர்வையினாலும் இர‌த்த‌த்தினாலும் அளப்பறிய தியாகத்தினாலும் அத‌னை காத்து இன்று ந‌ம் வ‌ரை அதைக் கொண்டு வந்து சேர்த்திருக்கிறார்கள்.

Sahabaas


எதிரிக‌ளை அவ‌ர்க‌ளைப் போன்றே ஆயுத‌ங்க‌ளை ஏந்தி எதிர்த்த‌ன‌ர். இறையுத‌வி, பெருமானார் (ஸ‌ல்) அவ‌ர்க‌ளின் த‌லைமை, ம‌ற்றும் ஈமானின் உறுதியின் உத‌வியால் ம‌ன‌தில் எந்த‌ வித‌ அச்சமுமின்றி போர்க்க‌ள‌த்தில் குதித்த‌ன‌ர். உல‌க‌ வ‌ர‌லாற்றில் ஈடியிணைய‌ற்ற‌ வெற்றிக‌ளை குவித்த‌ன‌ர். இஸ்லாத்தின் நெறிக‌ளை எந்த‌ நேர‌த்திலும், க‌ழுத்திற்கு க‌த்தி வ‌ந்த‌ நேர‌த்திலும் அவ‌ர்க‌ள் மீறிய‌தில்லை.

இன்றைய‌ நிலை:

இன்றும் இஸ்லாத்தை இந்த‌ ம‌ண்ணை விட்டு அக‌ற்ற‌, முஸ்லீம்க‌ளை அழிக்க‌ நினைக்கும் எதிரிக‌ள். ஆனால் ஒரு சின்ன‌ வித்தியாச‌ம் போர்க்க‌ள‌மும் ஆயுத‌மும். இன்றை போர்க்க‌ள‌ம் மீடியா. ஆயுத‌ங்க‌ள்: டி.வி., இன்டெர்நெட், இத்யாதிக‌ள்...

நாமும் அதே போர்க்களத்தில்... அதே ஆயுதங்களுடன்.... ஆனால் ந‌ம‌து ஆயுத‌ங்க‌ளின் இல‌க்கு எதிரிக‌ள் அல்ல!!!. மாறாக நாமே அதன் இலக்கு. நமது ஆயுதங்கள் ந‌ம்மை நோக்கியே!!.. நமக்கிடையே விவாதங்கள் ச‌ண்டைகள் சச்சரவுகள் ....

Our current situation

இன்று மீடியாக்க‌ள் போட்டிபொட்டுக் கொண்டு முஸ்லீம்க‌ளை மோச‌மான‌வ‌ர்க‌ளாக‌ சித்திரித்துக் கொண்டிருக்கின்ற‌ன‌. நாம் ந‌ம‌து நிலைமையை இஸ்லாத்தின் க‌ண்ணிய‌த்தை எடுத்துச் சொல்ல‌ இப்போதும் த‌வ‌றினால் ...... நாளை அல்லாஹ்வின் முன்னால் என்ன‌ ப‌தில் சொல்ல‌ப் போகிறோம்.

ச‌கோத‌ர‌ர்க‌ளே கால‌ம் வேக‌மாம‌ க‌ரைந்துக் கொண்டிருக்கின்ற‌து. எழுதும் திற‌மையுட‌னும், சிந்த‌னைத்திற‌மையுட‌னும் ந‌ம‌து ச‌கோத‌ர‌ர்க‌ள் அநேக‌ம் பேர்க‌ளை இன்டெர்நெட்டில் காண்கின்றேன். ஆனால் வ‌ருத்த‌த்திற்குறிய‌ விச‌ய‌ம் அவ‌ர்க‌ளின் இல‌க்கு ந‌ம‌து ம‌ற்ற‌ முஸ்லீம் ச‌கோத‌ர்க‌ளே... கொள்கையின் பெய‌ரால்... இய‌க்க‌த்தின் பெய‌ரால்.. இன்னும் பிற‌ பெய‌ர்க‌ளால்..

ஒரு தாழ்மையான‌ வேண்டுகோள்...

பெருமானார் (ஸ‌ல்) அவ‌ர்க‌ள் இந்த‌ உம்ம‌த்திற்காக‌ வ‌டித்த‌ க‌ண்ணீரின் பெய‌ரால், தாயிஃப் ம‌ற்றும் உஹ‌தில் சிந்திய‌ இர‌த்த‌த்தின் பெய‌ரால்; ஸ‌ஹாபாக்க‌ள் செய்த‌ தியாக‌ங்க‌ளின் பெய‌ரால்; இமாம் ஹுஸைன் (ர‌லி) அவ‌ர்க‌ள் க‌ர்ப‌லாவில் சிந்திய‌ இர‌த்த‌தின் பெய‌ரால்.....

ஒரு 3 மாத‌த்திற்காக‌வ‌து ந‌ம‌து இல‌க்கை ச‌ரியான‌ பாதையில் செலுத்த‌ உறுதிமொழி எடுப்போம்.

  1. இந்த‌‌ கால‌த்தில் எந்த‌ ஒரு முஸ்லீமைப் ப‌ற்றியும் த‌வ‌றாக‌ எந்த‌ ப‌திவும் எந்த‌ மீடியாவிலும் செய்ய‌ மாட்டேன்.
  2. இஸ்லாத்திற்கு எதிராக‌ எந்த‌ ஒரு மீடியாவிலும் ஒரு க‌ருத்து ப‌திவு செய்ய‌ப்ப‌ட்டிருந்தால் அத‌னை ம‌றுத்து என‌து க‌ருத்தை இஸ்ல‌த்தின் க‌ண்ணிய‌த்தோடு, அழ‌கிய‌ முறையில் ப‌திவு செய்வேன்.
  3. ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னும் இந்த‌ துஆவைச் செய்வேன். 'யா அல்லாஹ் ச‌த்திய‌த்தை ச‌த்தியமாக‌ அறிந்து அத‌ன் அம‌ல் செய்ய‌ த‌வ்ஃபீக் அளிப்பாயாக‌! அச‌த்திய‌த்தை அச‌த்தியமாக‌ அறிந்து அத‌னை விட்டும் வேகுதூர‌ம் வில‌கியிருக்க‌ச் செய்வாயாக‌.!'

Let us set our target rightly.

முழூ மூச்சோடு ஈடுப‌டுவோம். இன்ஷா அல்லாஹ் ந‌ம்மால் நிச்ச‌ய‌ம் முடியும். வ‌ர‌க்கூடிய‌ 3 மாத‌ங்க‌ளில் இதனைச் செய்து காட்டுவோம். அல்லாஹ் நாடினால் உட‌ம்பில் உயிர் இருக்கும் வ‌ரை இத‌னை செய்வோம்.

இஸ்லாத்திற்காக இதைக் கூட நாம் செய்யவில்லையெனில்...... நாளை.. படைத்தவனின் முன்னால் நிற்கும் காட்சியை ஒரு கணம் எண்ணிப் பாருங்கள்.....

அல்லாஹ் ந‌ம் அனைவ‌ருக்கும் நேர்வ‌ழி காட்டுவானாக‌!


இஸ்லாத்திற்கு... முஸ்லீம்களுக்கெதிராக ஊன்றப்படும் சில விஷ வித்துக்களின் உதாரணங்கள்.

(இதை சாதாரணாமாக எடுத்துக் கொள்ளாதீர், இவைதான் நமக்கெதிராக பல வகைகளில் விருட்சமாக வெடிக்கின்றன...)

YouTube-ல் டாக்டர் பெரியார் தாசன் அவர்களின் ஒரு வீடியோ பதிவில் உள்ள கமெண்ட்கள்...
Periyardasan

 

மோடியின் புகழ் பாடும் தினமலர், கமெண்ட்கள்...

Comments

உண்மையென்ன எனில் 800 ஆண்டுகால ஆட்சிகாலங்களில் முஸ்லீம்கள் கோவில்களை இடித்திருந்தால் இன்று ஒரு கோவில் கூட மிஞ்சியிருக்காது. பிறவழிபாட்டுத் தளங்களையிடிப்பது இஸ்லாமிய போர் நெறிகளுக்கு அப்பாற்பட்டது. வரலாற்றில் கோவில்களை இடித்தார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இதற்கு கிடையாது. ஒரு பொய்யை திரும்ப திரும்ப சொல்வதால் அது உண்மையாக மாறிவிடாது. மாறாக கலவரங்கள் என்ற பெயரில் பல மசூதிகள் இன்றளவும் இடிக்கப்படுகின்றன....

RSS என்ற அமைப்பு 1925-இல் உருவாக்கப்பட்டது. ஒரு சுதந்திரப் போராட்டத்தில் கூட பங்கேற்கவில்லை. ஆனால் ஆயிரக்கணக்கான உலமாக்கள் சுதந்திரப் போரில் தங்களது உயிர்களை பறிகொடுத்தனர்.
இனியும் கேலிகளுக்காகவும், பொழுதுபோக்குவதற்காகவும், நம்மவர்களையே விமர்சிப்பதற்கும் நமது நேரத்தை வீணடிப்பது சரியா?.... நமது அடிப்படையே தகர்ந்துக் கொண்டிருக்கும்போது....

சிந்தியுங்கள் !!!     தீர்மானியுங்கள் !!!     இன்றே இப்போதே !!!

கத்தியின்றி, இரத்தமின்றி ஒரு யுத்தம்!!!
No articles in this category...