நபியவர்கள் எங்கள் உயிருக்கு மேல்

அன்புடையீர்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)


நம் உயிருக்குயிரான உயிரினும் மேலான சத்தியத்தூதர் நபிகள் (ஸல்) அவர்கள் குறித்து வெளியிட்டப்பட்ட குறும்படம் உலக அரங்கில் சில அரக்கர்களை அடையாளப்படுத்தியது.

அதன் வெளிப்பாடாக உலக முஸ்லிம்கள் உலகின் எல்லா மூலைகளிலும் தத்தம் எதிர்பலைகளை காட்டிவருகின்றனர். இது போன்ற தருணங்களில் ஒரு முஸ்லிம் தங்களின் எதிர்ப்பை முறைப்படி பதிவு செய்யவேண்டும்.

இன்னும் சில ஊடகங்கள் அமெரிக்க அதிபர் ஒபாமாவே அப்படத்தை பார்த்துவிட்டு, அப்படி ”எதிர்க்கவேண்டிய அளவிற்க்கு ஒன்றுமில்லை” ஏதோ இவரின் சர்டிபிகேட் ரொம்ப உயர்ந்தது போன்றும், இன்னும் இவர் ஏதோ பெரிய தியாகி போன்றும் சித்தரித்து அவரின் சொற்கள் இன்று மீடியக்களில் இப்படம் குறித்து வலம் வருகிறது.

தங்களின் சிந்தனையாலும், செயலாலும் நாகரிகம் கெட்ட இன்னும் தன் வம்ச வழியாலும் ( இன்று இறைவன் அருளால் அவரின் குடும்பம், தாய் பற்றிய ஆவனப்படம் வெளியிடப்பட்டுள்ளது) வெட்கம் கெட்ட வழியில் உள்ளவர்கள் தங்களை போன்றே பிறரையும் பார்கிறார்கள்.

பெருமானாரின் வரலாற்றைப்பாதுகாக்க முஸ்லிம்களை விட இறைவன் போதுமானவன்.

அவர்கள் வெள்ளைமாளிகையில் இருந்தாலும் அவர்கள் இறைவன் கேவலப்படுத்திவிடுவான் என்பது இது தான் சான்று. ஏதோ அவரின் தாய்பற்றி உண்மைச்செய்தி  வந்தவுடன் வருத்தப்படுகிராறாம் ஒபாமா. இப்பொழுது இதையும் கருத்துச்சுகந்திரம் என்று சொல்லவேண்டியது தானே. தனக்கென்று வரும்போது வலிக்கிறது, ஒபாமாவே பொறுத்திரு இன்னும் முடியவில்லை இன்னும் இறைவன் இதற்கு வித்திட்ட அத்துணை பேரையும் கேவலப்படுத்து காலம் சமீபமானது.

"இஸ்லாமியரகளுக்கு எங்கள் தலைவர் முஹம்மது ரஸுலுல்லாஹ் உயிரைவிட மேல்." இப்படிதான் சொல்லித்தருகிறது எங்கள் வேத மறை,  எங்கள் உயிரைக்கொண்டாவது அந்த கலங்கத்தை துடைத்தெடுப்போம்.

இந்த இடத்தில் இஸ்லாமியர்களுக்கு சில வரிகள்.

அவர்களின் செயல்கள் குறித்த நம் எதிர்ப்புகளை முறையாக உலகம் முழுவது பதிவுசெய்துவிட்டோம். அத்தோடு நம் கடமைமுடிந்துவிட்டதா.

இமாம் புஹாரி அவர்கள் தன்னுடைய ஹதீஸ் புத்தகத்தில் நல்லொழுக்கம் என்றஅத்தியாயத்தின் கீழ் இறைமறுப்பாளர்கள் நபியவர்களை தாக்கி வசைபாடிகள் கொள்ளவேண்டிய நிலை என்ற தனி பாடத்தைக்கொண்டுவருகிறார். அதில் உள்ள நபிமொழிகளின் சாரம் இதோ:

 6150. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
இணைவைப்பாளர்களைத் தாக்கி வசைக் கவி பாட (கவிஞர்) ஹஸ்ஸான் இப்னு ஸாபித்(ரலி)
அவர்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்டார்கள். அப்போது
இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'குறைஷியரான அவர்களுடன் பின்னிப் பிணைந்துள்ள) என்
வமிசப் பரம்பரையை என்ன செய்வாய்?' என்று கேட்டார்கள். அதற்கு ஹஸ்ஸான்(ரலி)
அவர்கள், 'குழைத்த மாவிலிருந்து முடியை உருவியெடுப்பது போன்று தங்களை(யும்
தங்கள் வமிச் பரம்பரையையும் வசையிலிருந்து) உருவியெடுத்துவிடுவேன்' என்ற
பதிலளித்தார்கள்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான உர்வா(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
நான் (என் சிறிய தாயார்) ஆயிஷா(ரலி) அவர்களிடம் ஹஸ்ஸான் இப்னு ஸாபித்(ரலி)
அவர்களை (அவதூறு பரப்புவதில் சம்பந்தப்பட்டதால்) ஏசிக் கொண்டே போனேன்.
அப்போது அவர்கள், 'அவரை ஏசாதே! ஏனெனில், அவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்காக
(இணைவைப்பவர்களைத் தாக்கி) பதிலடி கொடுத்துக் கொண்டிருந்தார்' என்றார்கள்.

6152. அபூ ஸலமா இப்னு அப்திர் ரஹ்மான் இப்னி அவ்ஃப்(ரஹ்) அவர்கள்
அறிவித்தார்.
ழூழூ(கவிஞர்) ஹஸ்ஸான் இப்னு ஸாபித் அல


No articles in this category...