Tamil Islamic Media

ஹஜ்ரத் அலி (ரலி) அவர்களின் அறிவுரைகள்

ஒருவர் அவர்களிடம் வந்து இவ்வுலகைப் பற்றி எங்எகளுக்கு விளக்குங்கள் என்று கேட்டார். இவ்வுலகைப் பற்றி நான் எவ்விதம் விளக்குவது? என்று கேட்டு விட்டு அவர்கள் கூறினார்கள்.

"இவ்வுலகில் எவர் ஆரோக்கியத்துடன் வாழ்ந்தாரோ அவர் (மறுமை உலகில்) நோயாளியாக ஆவார்.
இவ்வுலகில் எவர் நிம்மதியாக வாழ்ந்தாரோ அவர் மறு உலகில் வருந்துவார்.
இவ்வுலகில் எவர் தேவையுள்ள ஏழையாக வாழ்ந்தாரோ அவர் மறு உலகில் தேவைற்றவராக வாழ்வார்.
இவ்வுலகில் சீமானாக வாழ்ந்தாரோ அவர் மறு உலகில் பல சேதனைகளுக்கு உள்ளாக்கப்படுவார்.
இவ்வுலகில் ஹலாலான பொருள்களைப் பயன்படுத்தியவர்களுக்கு இறைவனிடத்தில் கேள்விகணக்கு இருக்கிறது. ஹராமானதைப் பயன்படுத்தி விட்டவர்களுக்கு இறைவனிடத்தில் தண்டனை இருக்கிறது.
இவ்வுலகில் ஹலாலா, ஹராலா என்னும் சந்தேகத்திற்குரிய பொருள்களைப் பயன்படுத்தியவர்களுக்கு மறு உலகில் கண்டனம் இருக்கிறது."

ஒருவர் பல குற்றங்களுக்கு புரிந்துவிட்டுத் தமக்கு மறுமையில் கிடைக்கும் தண்டனையை நினைத்து நடுங்கிக் கொண்டிருந்தார். தமக்கு அல்லாஹ்வின் மன்னிப்புக் கிடைக்கவே கிடைக்காது என்றும் அவர் அஞ்சிக் கொண்டிருந்தார் அவரே அவ்விதம் கருதும் விதம் அவர் அவ்வளவு பாவங்கள் செய்திருந்தார். அவரை ஹஜ்ரத் அலீ (ரலி) அவர்கள் காண நேர்ந்தது. அவரின் மன நிலையை அறிந்து கொண்டு அவர்கள்,   " நீர் இறையருளைக் குறித்து நம்பிக்கை இழந்து போயிருக்கிறீர். இறைவனின் மன்னிப்பு உமக்கு கிடைக்காது என்று எண்ணுகிறீர். இப்படி எண்ணுவது நீர் செய்த குற்றங்கள் எல்லாவற்றையும் விடக் கொடியக் குற்றம்" என்று கூறினார்கள்..

இறைவனின் மன்னிக்கும் தன்மையை மனத்திற் கொண்டு அவரிடம் இவ்விதம் கூறிய அவர்கள் ஒரு சமயம் சொன்னார்கள் ; "ஒரு மனிதன் குற்றம் புரிகிறான். அந்தக் குற்றத்தை இறைவனும் மறைத்து விடுவான். உலகிலேயே இவ்வாறு காப்பாற்றிய இறைவன் மறுமையிலும் காப்பாற்றவே செய்வான்."

பிறிதோரு சமயம் அவர்கள் பகர்ந்தார்கள்; "இறைவனின் பேரன்பு குறித்து மக்களை நம்பிக்கை இழக்கச் செய்து விடக் கூடாது. அதே சமயத்தில் இறைவனின் தண்டனை பற்றிய அச்சத்தையும் அவன் இதயத்தில் பதியச் செய்ய வேண்டும்.."

ஒரு முறை அவர்களிடம் ஒருவர் வந்து அல்லாஹ்வின் தூதர் அவர்கள் பாவ மன்னிப்புக் கோருபவன் இறைவனின் நண்பன் எனக் கூறினார்களே அதன் பொருள் என்ன? என்று கேட்டார். அதற்கு அவர்கள் ஒரு      "நண்பன் தன் நண்பன் விரும்பாததை எக்காரணம் கொண்டும் செய்ய முன் வர மாட்டான். அதே போன்று பாவ மன்னிப்புக் கோருபவன் தன் நண்பனான இறைவன் விரும்பாததை எக்காரணம் கொண்டும் செய்ய முன்வரக்கூடாது" என்று பதில் கூறினார்கள்.

இவ்விதம் பதில் அளித்த அவர்கள் பாவமன்னிப்பு பற்றி இந்த விளக்கம் வழங்கியிருக்கிருக்கிறார்கள். "பாவ மன்னிப்புக் கோருவதால் குற்றம் செய்தவன் குற்றம் செய்யாதவனாக மாறுகிறான். இரண்டாவது, இறையண்மையைப் பெறுவதற்குச் சந்தர்ப்பம் கிடைக்கிறது. அதனால் அவன் இறைவனின் நண்பனாவான்".

ஒரு முறை அவர்களிடம் ஒருவர் வந்து பாவ மன்னிப்பு என்பது என்ன? என்று கேட்டார். அவருக்கு அவர்கள் பாவ மன்னிப்பு என்பது ஆறு விஷயங்களுக்குக் குறிப்பிடப்படுகிறது.

ஒன்று, செய்த பாவதிற்காக வருந்திக் கண்ணீர் விடுதல்.
இரண்டாவது, தவறிப் போன பர்லான கடமைகளாத் திரும்பச் செய்து நிறைவேற்றுதல்.
மூன்றாவது, அநியாயமாக எடுத்தவற்றைத் திரும்பக் கொடுத்தல்,
நான்காவது, நஃப்ஸைப் பாவத்தில் வளர்த்தது போல் அதனை வணக்கத்தில் கரைத்தல்,
ஐந்தாவது, பாவத்தில் இன்பத்தைச் சுவைக்கச் செய்தது போல






No articles in this category...