Tamil Islamic Media

தன்பக்கமா? தன்னிகரற்ற கொள்கையின் பக்கமா?

நுட்பமான, துல்லியமான கண்ணுக்குப் புலப்படாத ஒரு கோடு பின்வரும் இரண்டையும் பிரித்துக் காட்டுகிறது.

1. மனிதன்

2. அவன் ஏற்றுக்கொண்ட கொள்கை

இந்த பிரிகோட்டை விளங்குவதுதான் இச்செய்தியின் நோக்கமாகும்.

ஒவ்வொரு மனிதனுக்கும் ஏதாவது ஒரு கொள்கை இருக்கும். அந்தக் கொள்கை தவறானதாகவும் இருக்கலாம். சரியானதாகவும் இருக்கலாம்.

இங்கு தவறான வழிக்கு இட்டுச் செல்லும் கொள்கைகளையும் அவற்றின் காவலர்களையும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளவில்லை. ஒரு மனிதன் வரிந்து கட்டிக் கொண்ட உன்னதமான கொள்கையையும் அதன் காவலர்களையுமே எமது கருத்தாடலுக்கு எடுத்துக் கொள்கிறோம்.

ஓர் உயர்ந்த கொள்கையை ஏற்று விசுவாசித்து அதன்பால் ஏனையோரையும் அழைக்கும் ஒரு மனிதன் கால ஓட்டத்தில்...

“நான் கொள்கையின்பால் அழைக்கிறேன்” எனும் நிலையிலிருந்து

“கொள்கையைப் பயன்படுத்தி என்பால் அழைக்கிறேன்” எனும் நிலைக்கு தன்னை அறியாமலே மாறிவிடலாம்.

இது கொள்கைவாதிகளுக்கு ஏற்படும் ஒரு ஆபத்து மட்டுமல்ல, நோயும்கூட.

இந்த ஆபத்தையும் நோயையும் இணங்காண்பது உயர்ந்த கொள்கைகளின் தூய்மையைப் பாதுகாப்பதற்கு இன்றியமையாததாகும்.

உயர்ந்த, ஓரு உன்னதமான கொள்கையின்பால் அழைப்பு விடுக்கும் மனிதன் சிலபோது அல்லது அதிகமான சந்தர்ப்பங்களில்...

நான் மக்களை கொள்கையின்பால் அழைக்கிறேனா? அல்லது என்பக்கம் அழைக்கிறேனா? என்பதை புரிந்து கொள்ளத் தவறிவிடுகிறான்.

இரண்டுக்குமிடையில் காணப்படுகின்ற அந்த நுட்பமான கண்ணுக்குப் புலப்படாத கோடு, கொள்கைவாதிகளாலும் இலட்சிய வேட்கை கொண்டவர்களாலும் புரியப்படாமல் இருப்பது ஆபத்தாகும்.

ஒரு கொள்கைவாதி எப்போதும் தன்னைத் தனது கொள்கையிலிருந்து வேறுபடுத்தியும், இணைத்தும் நோக்கிப் பழக வேண்டும்.

கொள்கையின்பால் அழைக்கும்போது வேறுபடுத்திப் பார்க்க வேண்டும்.

கொள்கைக்காக வாழும்போது இணைத்துப் பார்க்க வேண்டும்.

அழைக்கும்போது வேறுபடுத்துவதற்குக் காரணம் மக்கள் தன் பக்கம் வந்துவிடாமல் கொள்கையின் பக்கம் சென்றுவிட வேண்டும் என்பதனாலாகும்.

வாழும்போது இணைத்துப் பார்ப்பதற்குக் காரணம் நானும் எனது கொள்கையும் ஒன்றாகி வாழ்க்கையில் இரண்டறக் கலந்துவிட வேண்டும் என்பதனாலாகும்.

இதற்கு மாறாக வாழ்க்கையில் பிரித்தும் அழைக்கையில் இணைத்தும் வைத்துவிட்டால் முன்னர் குறிப்பிட்ட ஆபத்திலிருந்தும் நோயிலிருந்தும் அழைப்பாளர்களைப் பாதுகாக்க முடியாது.

இங்கே நாம் விளங்கிக் கொள்ள முயற்சிப்பது வாழ்க்கையில் இரண்டையும் எவ்வாறு இணைத்துப் பார்ப்பது என்பதையல்ல. அழைப்பின்போது எவ்வாறு இரண்டையும் பிரித்துப் பார்ப்பது என்பதைத்தான்.

பிரித்துப் பார்ப்பதற்கு அழகான ஒரு வழிகாட்டலை அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்களே தந்திருக்கிறார்கள். அந்த வழிகாட்டலின் உதவியோடு ஒரு கொள்கைவாதி தன்னையும் தனது கொள்கையையும் பிரித்துப் பார்க்கும் கலையைக் கற்றுக்கொள்ளலாம். அது எளிதானது.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கூறினார்கள்.

“தன் பக்கம் உண்மை (சத்தியம்) இருந்தபோதிலும் வீணான விவாதத்தை விட்டுவிடுகின்ற மனிதனுக்கு சுவனத்தில் ஒரு வீட்டைப் பெற்றுத் தருவதாக நான் உத்தரவாதமளிக்கிறேன்.”

அல்லாஹு அக்பர்!

சத்தியம் தன்பக்கமிருந்தாலும் விவாதிக்க வேண்டாம் உங்களுக்கு ஒரு சுவன வீடு சொந்தமாகும் என்ற உத்தரவாதத்தை நான் தருகிறேன் என நபி ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பிரகடனம் செய்திருக்கிறார்கள். அவ்வாறாயின் அந்தப






No articles in this category...