சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-1)


' உம் அதிபதி விதித்துள்ளன் “ அவனைத்தவிர வேறேவரையும் நீங்கள் வணங்காதீர் . பெற்றோரிடம் மிக கண்ணியமான முறையில் நடந்துகொள்ளுங்கள்”. ( அல் குர் ஆன் 17:23)


பெற்றோருடன் அழகிய முறையில் நடந்துகொள்ளுங்கள். இவ்வாறு நடந்து கொள்வது ஈருலகிலும் சிறந்த பாக்கியம் எனக் கருதுங்கள். இறைவனுக்கு அடுத்து மனிதன் மீது அதிக உரிமை அவனுடைய பெற்றோருக்குரிய உரிமைகளே ஆகும்.


பெற்றோருக்குரிய உரிமைகளின் முக்கியத்துவத்தை மிக அழுத்தமாக குர் ஆன் எடுத்துரைக்கிறது.


இறைமறையில் பல வசனங்கள் பெற்றோரின் கடமைகளை இறைவனுக்கு உரிய கடமைகளுடன் இணைத்தே எடுத்துறைக்கிறது. மேலும், பெற்றோருக்கு நன்றி செலுத்துவதை இறைவனுக்கு நன்றி செலுத்துவதுடன் சேர்த்தே இயம்புகிறது.

 
பெருமானாரின் ஒரு ஹதீஸ் இப்படி உள்ளது:


அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:


 “ அண்ணலார் (ஸல்) அவர்களிடம் நான் கேட்டேன்:  இறைவனுக்கு எந்த செயல் மிக விருப்பமானது ?'
அண்ணலார் (ஸல்)  அவர்கள் பதிலளித்தார்கள் : “ தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழுவது”
மேலும் வினவினேன் அதற்கு பிறகு எந்த செயல் இறைவனுக்கு பிரியமானது என்று?
அண்ணலார் (ஸல்) கூறினார்கள்: பெற்றோருடன் நல்ல முறையில் நடந்துகொள்வது
பிறகு கேட்டேன். இதற்கு பிறகு  பெருமானார் கூறினார்கள் : “ இறைபாதையில் உழைப்பது” ( புஹாரி - முஸ்லிம்)


இன்னும் ஒரு அற்புதமான ஹதீஸை இப்னு மாஜா என்ற ஹதீஸ் புத்தகத்தின் ஆசிரியர் தன் நூலில் குறிப்பிடுகின்றார்:


“ பெருமானார் அவர்களிடம் ஒருவர் கேட்டார்: அல்லாஹ்வின் தூதர் அவர்களே பிள்ளைகள் மீது தன் பெற்றோருக்குரிய உரிமை என்ன?'

உலகை உய்விக்க வந்த பெருமானின் வார்த்தைகள் இதோ: “ பெற்றோரே உன் சுவனம் ஆவார்கள்,மேலும் அவர்களே உம் நரகமும் ஆவர்கள்”


இதை நாம் விளங்கும் வார்த்தைளில் கூறவேண்டுமானால். அங்கிங்கொல்லாம் சுவனத்தை தேடி அலைபவரே. நீங்கள் உம் பெற்றோருடன் அழகிய முறையில் நடந்து கொண்டால் நீர் சுவர்க்கத்திற்குரியவர். அவர்களின் கடமைகளைப்பாழ்படுத்தினால் நரகம் நூழைய வேண்டி வரும்.

 ( நூல்: ஆதாபே ஜிந்தகி )

 
- ஹஸனீ


No articles in this category...