Tamil Islamic Media

இறை நேசர்கள்- தொடரும் விளக்கம்

 

நம்மை ஈன்றெடுத்தவர்களுக்கு செய்யும் மரியாதையை விட இன்னமும் கூடுதலாகவே செய்ய வேண்டும் இந்த புண்ணியவான்களுக்கு, காரணமாய்; இந்த பூமியில் பிறந்து விட்ட நம்மை, இறப்புக்குப் பிறகு அல்லாஹ் வாக்களித்த சுவர்க்கத்தில் கொண்டு சேர்க்கும் நேரிய வழிகாட்டும் புனித மார்க்கத்தில் நாம் இணைந்து கொள்ள வழி செய்தமையால். குர்ஆனும் ஹதீஸும் ஆயிரத்தி நானூற்றி முப்பத்தி நான்கு ஆண்டுகளாகவே நம்முடன் தானே இருந்து கொண்டிருக்கிறது, அப்படியானால், அதே காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருந்த நம் முன்னோர்களும் பரந்து விரிந்திருந்த இந்த இந்திய தேசத்து மக்களும் அத்தைகைய இனிய இஸ்லாமிய மார்க்கத்தில் தங்களை இணைத்துக் கொள்ள தடையாய் இருந்ததுதான் என்ன?.

 

மொகலாய மன்னர்களின் ஆட்சி காலம் இந்தியாவில் கிட்டத்தட்ட எண்ணூறு ஆண்டுகளுக்கு மேலாக இருந்தது என்று கேள்வி படுகிற நிலையில், இந்தியா ஒரு இஸ்லாமிய நாடாகவில்லையே எதனால்? குறிப்பாக தென்னிந்தியாவில் பூர்வீகக் குடியினரும் முஸ்லிம் அல்லாத மாற்று மதத்தினரும் தானே மிக அதிகமாக இருந்து வந்திருக்கிறார்கள். அப்போதும் திறந்த புத்தகமாய் இருந்து கொண்டிருந்த குர்ஆனையும் ஹதீசுகளையும் பின் பற்றி அவர்களெல்லாம் இஸ்லாத்தில் இணையவில்லையே ஏன்?

 

இசக்கி மாடன்களும், ஏக்கி முத்துக்களும், லெக்‌ஷ்மண செட்டியார்களும், சிவசுப்ரமணிய பிள்ளைகளும், இரத்தினவேல் நாடார்களும், தாமோதரன் ஆசாரிமார்களும், கருப்பண்ண முதலியார்களும் இன்னமும் பட்டாரியர்களும், நாயுடு, நாயக்கர்களும், பெரும்பான்மையாய் தலித்துக்களுமாகவல்லவா நாம் பிறந்த இடம் அன்றைக்கு இருந்தது. எங்கு நோக்கினும் மாற்றுமத சகோதரர்களின் ஆட்சி அதிகாரமே மிகைத்தும் பரந்தும் வியாபித்திருந்த்து.

 

இந்நிலையில், உத்தேசமாக ஒரு பதிநான்கு, கூடினால் பதினேழு தலைமுறைகளுக்கு முன்பு, (அதாவது கிட்டத்தட்ட கி.பி. 740-லிருந்து கி.பி. 820 என்று கொள்ளலாம்) கோட்டாறின் முதல் முஸ்லிமாக வாழ்ந்திருந்த ஹஸரத் செய்யிதுனா பாவாகாஸீம் சாகிப் ஒலியுல்லாஹ் அவர்களின் வருகை இருந்திருக்காவிட்டால், அப்படிப்பட்ட புண்ணிய சீலர்களையே இன்று கீழ்த்தரமாக விமர்சிக்கும் இந்த இழிபிறவிகளுக்கு சூட்டிக் கொள்ள ஒரு முஸ்லிம் பெயர் கூட கிடைத்திருக்க முடியாது என்பதுதான் நிதர்சனமான உண்மை.

 

அப்படி ஒரு நதிமூலத்தை பெற்றிருப்பவர்கள்தான், இன்றைக்கு; குலத்தையே, இனத்தையே நம் அடையாளத்தையே வேறறுக்க புறப்பட்டிருக்கிற வேதாளங்களாகவும் இன்னமும் (பைஸா)சப் பிசாசுகளாகவும் இருந்து கொண்டிருக்கிறார்கள். வாராது வந்த மா மணியா இல்லை சாணை பிடிக்காத கருங்கல்லா அவர்கள் பத்திரப்படுத்தி வைத்திருக்கும் அப்படி ஒரு தரங்கெட்ட உரைகல்? உரசிப் பார்த்ததில் தகப்பன் பேர் கூட சரியில்லையோ (நல்ல காலம் தகப்பனே சரியில்லை என்று சொல்லவில்லை) என்று சொல்ல வைத்ததோடு, எதையெதையெல்லாமோ இன்று வரை ஊரலின் கொடுமையால் உரசியும் உளறிக் கொட்டியுமே காலத்தை கடத்தும் உத்தம புத்திரர்களுக்கு, அவர்கள் கொண்டிருக்கிற பெயர்களே சரி இல்லை என்று; இன்று உறவும் ஊரும் நாடும் சொல்கிறதே, மாற்றிக் கொள்ள தயாரா? இஸ்லாத்தில் அப்படி எந்த முன் உதாரணங்களும் இல்லாத நிலையில்; சுருங்கிப் போன மனங்களின் அடையளாமாக; பெயர்களையே சுருக்கி வைத்திருக்கும் சூடு சொரணையற்ற இவர்களை நாம் எல்லாம் தெளிவாகவே அடையாளம் கண்டுதான் வைத்திருக்கிறோம்.

 

“எத்தனை கடப்பாறைகளும், நெம்புகோல்களும் ஓரடி அடித்தாலே உயிர் போய்விடுகிற அளவில் பருத்த சுத்தியல்களும் இப்பவே இந்த இடத்தி


No articles in this category...