கருத்து வேறுபாடு சம்பந்தமாக சட்டங்கள்

 
 
மௌலவி அப்துல் பாஸித் புஹாரி

தற்போதைய சூழலில் நமது சமூகம் எதிர்நோக்கியுள்ள அபாயங்களுக்கு காரணம் எதிரிகள் அல்ல. கருத்து வேறுபாடுகளால் நாம் பிளவுண்டதுதான் காரணமாகும். இந்த மார்க்கம் வெற்றியடையும், அனைத்து இடங்களையும் சென்றடையும் என்பதை திருக்குர்ஆன் மற்றும் ஹதீத்களின் மூலமாக நாம் அறிந்துக் கொள்ள முடியும்.

9:32    தம் வாய்களைக் கொண்டே அல்லாஹ்வின் ஒளியை (ஊதி) அணைத்துவிட அவர்கள் விரும்புகின்றார்கள் - ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான்.

61:9    (இணை வைத்து வணங்கும்) முஷரிக்குகள் வெறுத்த போதிலும், மற்ற எல்லா மார்க்கங்களையும் மிகைக்கும் பொருட்டு, அவனே தன் தூதரை நேர்வழியுடனும், சத்திய மார்க்கத்துடனும் அனுப்பினான்.

இரவு,பகல் சென்றடையும் அனைத்துப் பகுதிகளையும் இம் மார்க்கம் சென்றடையும் என்று நபிகள் நாயகம் ஸல் தெரிவித்தார்கள். அவ்வாறே அவர்கள் கூறும்போது அல்லாஹ் எனக்கு உலகினைச் சுருக்கி காண்பித்தான் -அதனுடைய அனைத்துப் பிரதேசங்களிலும் இஸ்லாம் இருப்பதைக் கண்டுக் கொண்டேன் எனக் கூறினார்கள்.

அவ்வாறே இந்த உம்மத்தினை பஞ்சத்தினாலோ அல்லது எதிரிகளினாலோ முற்றிலுமாக அல்லாஹ் அழித்துவிட மாட்டான் எனவும் அல்லாஹ் நபிகள் நாயகம் ஸல் அவர்களுக்கு வாக்களித்துள்ளான். எனவே அதுவத் தஃலியா - நமக்குள் உள்ள பகைமைதான் பயப்பட வேண்டியவை என்பதை இது உணர்த்துகிறது.பிளவுகள்தான் வேதனைகளைக் கொண்டு வரும்.

இந்ததலைப்பினை நாம் மூன்றாக பிரிக்கலாம்.

1. பிரிவின் வகைகள் - அன்வாவுல் ஹிலாப்
2. பிரிவின் காரணங்கள் - அஷ்பாவுல் ஹிலாப்
3. பிரிவின் ஒழுக்கங்கள் - அதபுலி ஹிலாப்

பிரிவின் வகைகளை கீழ்கண்டவாறு வகைப்படுத்தலாம்

a) அடிப்படைகளில் ஏற்படும் கருத்து வேறுபாடு
b) மார்க்கச் சட்டங்களில் ஏற்படும் கருத்து வேறுபாடு

11:118    உம் இறைவன் நாடியிருந்தால் மனிதர்கள் அனைவரையும் ஒரே சமுதாயத்தவராக ஆக்கியிருப்பான். (அவன் அப்படி ஆக்கவில்லை.) எனவே, அவர்கள் எப்போதும் பேதப்பட்டுக் கொண்டே இருப்பார்கள்.

இந்த வசனத்திற்கு விளக்கமாக இமாம் ஷாதிபி ரஹ் அவர்கள் கீழ்கண்டவாறு மனிதர்களை வகைப்படுத்துகிறார்கள். அடிப்படை விசயங்களில் கருத்து வேறுபாடு கொண்டவர்கள் இஸ்லாத்தினை விட்டு வெளியேறியவார்கள் என அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

மனிதர்களை மூன்று வகையினராவர். முதலாம் வகையினர் முவஹ்ஹிதுகள் அல்லது மூமின்கள். இதில் தங்களுக்கு தாங்களே அநீதம் இழைப்பவர்கள், நடுநிலையாளர்கள் மற்றும் நன்மையில் விரையக் கூடியவர்கள் ஆவர். ஆய்ஷா ரழி அவர்களிடம் ”தங்களுக்கு தாங்களே அநீதம் இழைப்பவர்கள் யார்” எனக் கேட்ட போது அவர்கள் கூறினார்கள் - நானும், உங்களைப் போன்றவர்களும் என பதிலுரைத்தார்கள். அவ்வாறான பணிவினை அல்லாஹ் நமக்குத் தந்தருள்வானாக...

இரண்டாம் வகையினர் காபிர்கள் மற்றும் முஷ்ரிக்குகள் ( இணை வைப்பவர்கள் மற்றும் இறைவனை மறுப்பவர்கள்). இவர்கள் எண்ணிக்கையில் அதிகமானவராக இருப்பர்.

12:106    மேலும் அவர்கள் இணைவைப்பர்களாக இருக்கிற நிலையிலல்லாமல் அவர்களில் பெரும்பாலோர் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்வதில்லை.

மூன்றாமவர் மிகவும் கெட்டவர்கள், மோசமானவர்கள் - இவர்க


No articles in this category...