இந்திய முஸ்லிம்களின் முதல் எதிரி அல் காய்தா:

வெளிநாட்டில் உள்ள பயங்கரவாத அமைப்பினரின் போலியான உதவி இந்திய முஸ்லிம்களுக்குத் தேவையில்லை

டாக்டர் K.V.S. ஹபீப் முஹம்மது,
துணைத் தலைவர், இஸ்லாமிய நிறுவனம் அறக்கட்டளை(IFT),

(தி இந்து 12 செப்டம்பர் 2014 வெள்ளிக்கிழமை நாளிதழில் கட்டுரை)

அல்-காய்தாவின் தலைவர் அய்மான் அல்ஜவாஹிரி தமது 55 நிமிட வீடியோ உரையில் இப்படிக் குறிப்பிட்டுள்ளார்: “அல்-காய்தாவின் கிளையை இந்தியாவில் தொடங்கவிருக்கிறோம். பர்மா, வங்கதேசம், அசாம், குஜராத், காஷ்மீர் ஆகிய இடங்களில் அநீதிக்கும் அடக்குமுறைக்கும் உள்ளாக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு ஆதரவாகப் போராடப்போகிறோம். இஸ்லாமிய கிலாபத்தை நிறுவப்போகிறோம்.

” இந்தப் பேச்சு, நாடெங்கிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம், உள்துறை அமைச்சகம், உளவுத் துறை ஆகியன இதுகுறித்துக் கவலையையும் அச்சத்தையும் தெரிவித்துள்ளன. அல்-காய்தாவின் அறிக்கையினால், இவர்கள் எல்லாரையும்விட அதிக ஆத்திரமும் கவலையும் கொண்டுள்ளனர் முஸ்லிம் சமுதாயத்தினர்.

சோவியத் எதிர்ப்பால் பிறந்த அமைப்பு
1980-களில் சோவியத் யூனியன் ஆப்கானிஸ்தானில் படையெடுத்தபோது, அவர்களை விரட்டுவதற்காக அமெரிக்க உளவுத் துறையின் தார்மிக, பொருளாதார, ஆயுத உதவியோடு தொடங்கப்பட்ட இயக்கமே அல்-காய்தா. ஒசாமா பின்லேடன் அதன் தலைவ ராக இருந்தார். ரஷ்யர்களை ஆப்கன் மண்ணிலிருந்து விரட்டியடித்ததும் அல்-காய்தாவுக்கும் அமெரிக்கா வுக்கும் பகை மூண்டு ஒருவருக்கொருவர் எதிரிகளானார் கள். அல்-காய்தா பயங்கரவாத வன்முறைச் செயல்களில் ஈடுபட்டு, உலகின் பல்வேறு நாடுகளில் அமெரிக்காவுக்கு எதிராகத் தாக்குதல்கள் நிகழ்த்தின.

இராக்கில் பயங்கரவாதச் செயல்களை நிகழ்த்தி, அங்குள்ள சிறுபான்மையினரையும் யஜீதிகளையும் ஷியாக்களையும் கிறித்தவர்களையும் கொன்று குவித்து வரும் ஐஎஸ்ஐஎஸ் என்ற அமைப்பும் இவர்களிடமிருந்து பிரிந்து சென்றதுதான். இப்போது இவ்விரு அமைப்புகளுக்கிடையே கடும் பகை நிலவிவருகிறது. இஸ்லாமிய கிலாபத்தை அமைத்துவிட்டோம் என்று உலக முஸ்லிம்களின் ஆதரவை, குறிப்பாக இளைஞர்களின் ஆதரவைப் பெற ஐஎஸ்ஐஎஸ் முயல்கிறது.

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் வேகமான வளர்ச்சி அல்-காய்தாவுக்குப் பீதியை ஏற்படுத்தியது. அல்-காய்தா பின்னுக்குத் தள்ளப்பட்டுவிடும் என்ற அச்சம் அவர்களுக்கு ஏற்பட்டது. எனவே, சரிந்துவரும் தங்களது செல்வாக்கை நிலைநிறுத்த அல்-காய்தா இந்தப் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இவர்களுக்கு ஆதரவு கிடைக்காது
அல்-காய்தா தனிமனிதர்களை உசுப்பி அதன் மூலம் பயங்கரவாதச் செயல்களை நிகழ்த்த முயற்சிக்கக்கூடுமே தவிர, ஓர் அமைப்பாக இந்தியாவில் தடம்பதிக்க முடியாது. சர்வாதிகார, எதேச்சாதிகார, மன்னராட்சி நடைபெறும் நாடுகளில் மக்களுக்கு ஆட்சியாளர்கள் மீது மிகுந்த வெறுப்பு ஏற்பட்டிருப்பதால், அந்த நாடுகளில் அல்-காய்தாவுக்கு எளிதில் ஆட்கள் கிடைப்பார்கள். ஆனால், இந்தியா போன்ற வலுவான ஜனநாயகம், கருத்துச் சுதந்திரம், வெளிப்படைத் தன்மை, பன்மைச் சமூக அமைப்பு கொண்ட நாடுகளில் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு கிடைக்காது.


இந்திய முஸ்லிம்களும் பயங்கரவாத இயக்கங்கள் குறித்துத் தெளிவான பார்வையுடன் செயல்படுகின்றனர். பயங்கரவாதம் இஸ்லாமிய அறநெறிகளுக்கு முரணானது. ‘எவனொருவன் ஒரு உயிரை அநியாயமாகக் கொலை செய்கிறானோ அவன் மனித இனத்தையே கொலை செய்தவனாவான்’ என்கிறது திருக்குர்ஆன். அத்துடன் போர் தர்மங்களையும் தெளிவாக வகுத்துள்ளது இஸ்லாம். “போர்முனையில் இல்லாதவர்களை (பொதுமக்களை)


No articles in this category...