ஓ...மானிடனே,என்னை தெரிகிறதா?

 

                                       (கீழை ஜஹாங்கீர் அரூஸி)

இறை மாதங்கள் 11க்கு பின்னர் உன்னை காண வந்திருக்கும் ரமலான் நான் தான்.

கடந்த மாதங்களில் நீ யாரையெல்லாம் நேசித்தாயோ?அது எனக்கு தெரியாது?

ஆனால் இம்மாதம் முழுவதும் என்னை நீ நேசித்தால்..நான் உன் மண்ணறையிலிருந்து மறுமை வரை உன்னை விட்டும் பிரியாமல் உன் நலன் பேண உன்னையும்,என்னையும் படைத்த ரப்புல் ஆலமீனிடம் மன்றாடுவேன்.

என் மீதான உன் நேசம் உண்மையென்றால்...நான் சொல்லும் நேரத்தில் தான் நீ உண்ண வேண்டும்,பருக வேண்டும்.என் நேசத்தின் மீதான உன் தூக்க நேரமும் கூட அமல்களாகிட வல்லோனிடம் கையேந்துவேன்.

பொய் சொல்வது,புறம் பேசுவது,கோள் சொல்லுவது,உறவை முறிப்பது எனக்கு பிடிக்காத விசயம்.இவைகளை நீ வெறுத்தால் மட்டுமே நான் உன்னை விருப்பமாக்கி கொள்வேன்.

என்னை நேசித்த யாரையும் நான் நஷ்டப்படுத்தியது இல்லை.எனது சகவாசம் உள்ளவர்கள் வழி தவறியதுமில்லை.

என்னை நேசிக்கும் உனது ஒவ்வொரு அசைவுகளும் வணக்கமாகிட நான் படைத்தவனிடம் முறையிடுவேன்.

என் மாதம் முடிந்து நான் உன்னை விட்டு பிரிந்தாலும் என் மீதான நேசம் உண்மையென்றால்...அடுத்து வரும் 11 மாதங்களும் உன்னை நல்வழி நோக்கியே பயன்படுத்தி கொள்வாய்.

நெருங்கிப்பார்...என் நிஃமத்து புரியும்.

பழகிப்பார்....என் பண்புகள் தெரியும்.


No articles in this category...