Tamil Islamic Media

முஸ்லிம் உலகம் இஸ்லாத்தை தொலைத்து விட்டதா ?

மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்


தனிமனிதாக, குடும்பமாக, சமூகமாக, நாடாக, உம்மத்தாக, சர்வதேசமாக மனிதன் வாழ்வதற்கே காலத்திற்குக் காலம் நபிமார்களும், தூதுவர்களும், இறைத் தூதுகளுடன் அருளப்பட்டனர்.
காலத்திற்குக் காலம் நபிமார்கள், தூதுவர்கள்,

இறுதி இறைத்தூதர் முஹம்மத் (ஸல்)அவர்கள் சஹாபாக்கள், தாபிஈன்கள், அவர்கள் பின் வந்த நல்லடியார்கள் மனித வர்க்கத்திற்கு தத்தமது பங்களிப்பை செய்திருக்கின்றார்கள்.


இறைவன், பிரபஞ்சம், உலகம், வாழ்வு, மரணம், இம்மை, மறுமை குறித்த மிகவும் தெளிவான கோட்பாட்டுச் சிந்தனைகளை கொண்டுள்ள சிறந்த ஒரு உம்மத்தான நாம் நவீன உலகிற்கு இஸ்லாம் குறித்த எத்தகைய நடை முறைகளை, முன் மாதிரிகளை தனி மனிதர்களாக, குடும்பமாக, சமூகமாக, நாடாக, உம்மத்தாகவும் முன்வைத்துக் கொண்டிருக்கின்றோம் என்பதே ஒவ்வொரு விசுவாசியினதும் ஆன்மாவை ஆட்டிப் படைக்கின்ற, உள்ளத்தை உறுத்துகின்ற கேள்வியாகும்.


இஸ்லாத்தின் பெயரால், ஷரீஅத்தின் பெயரால், அகீதாவின் பெயரால், கிலாஃபத்தின் பெயரால், ஆன்மீகநெறிமுறைகளின் பெயரால் மொத்தத்தில் மதத்தின் பெயரால், முரண்பட்ட சிந்தனைகளுக்குள் சிக்கி சின்னாபின்னப்பட்டு இம்மை மறுமை வாழ்வின் அத்துணை இலக்குகளையும் தொலைத்துக் கொண்ட ஒரு உம்மத்தாக, இஸ்லாத்தின் எதிரிகளை உள்வீட்டில் வைத்து பாதுகாக்கும் ஒரு உம்மத்தாக எதிரிகளின் நலன்களுக்கேற்பவே செயல்படுபவர்களாக நாம் மாறி வருகின்றோம்.

சத்தியத்தின் வேடம் பூண்டு, சத்தியத்தின் வார்த்தைகளைச் சொல்லிக் கொண்டு வரும் யூத மற்றும் மேற்கத்திய மேலாதிக்க சக்திகள் மற்றும் முஸ்லிம் பெயர் தாங்கிகளின் சதி வலைகளிலிருந்தும் இஸ்லாத்தையும் முஸ்லிம் இளைஞர்களையும் காப்பாற்றுகின்ற மிகப் பெரும் பாரதூரமான பணியை, நாம் கடந்த பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்த இலக்குகளை, கோட்பாடுகளை செயல்படாமல் ஆக்கியுள்ளனர். இவ்வாறு முஸ்லிம் சமூகம் முடக்கப்பட்டுள்ளது.

மொத்தத்தில் மனிதனை மனிதன் மிகைப்பதற்கும், கொன்று குவிப்பதற்கும், ஆக்கிரமிப்புக்களை மேற்கொள்வதற்கும், ஆயுதங்களை விற்பதற்கும், போரினை விதைப்பதற்கும், இரத்தத்தை ஓட்டுவதற்கும், இரசாயன, உயிரியல், மற்றும் அணு ஆயுத பரிசோதனைகளுக்காக மதம், ஆன்மிகம், அரசியல், பொருளாதாரம், கோட்பாடுகள், சித்தாந்தங்கள், விஞ்ஞானம், தொழில் நுட்பம் என அனைத்தும் காரணமாக்கப்பட்டுள்ளன.

உலகை பிணக்காடாக்கிய மனிதன் சந்திரனிலும் செவ்வாயிலும் தண்ணீரை தேடுகின்றான்..! முஸ்லிம் உம்மத்தோ உலகிற்கு எத்தனை சந்திரன் எததனை பிறை என்று அடிபட்டுக் கொண்டிருக்கிறது, சுலைமான் நபிகாலத்து ஷைத்தான்கள் இன்னும் சூனியம் செய்கிறார்களா என்று மேடை போட்டு சண்டை போட்டுக் கொண்டிருக்கிறது.

முஸ்லிம் உம்மத் இறுதி இறைத்தூதருக்குப்பின் யார் கலீபா என்பதனை தீர்மானிக்க இன்னும் சண்டை பிடித்து தமக்குள் போர் தொடுத்து இலட்சக் கணக்கில் இறந்து மடிந்து கொண்டிருக்கிறது, இஸ்லாத்தின் எதிரிகள் முஸ்லிம் உம்மத்தின் ஒவ்வொரு கூறுகளையும் தீவிரவாதத்தின் உச்சத்திற்கே அழைத்துச் சென்று ஆயுதம் ஏந்தச் செய்து நம்மைத் நாமே உள்வீட்டில் அழிவை அரவணைக்கச் செய்துள்ளது.

முதலாம் உலக யுத்தத்துடன் மத்திய கிழக்கை இலக்கு வைத்து கூறு போட்டு உஸ்மானிய சாம்ராஜ்யத்தை வீழ்ச்சியடையச் செய்து அங்கே யூத சியோனிஸ சாம்ராஜயத்தை தோற்றுவித்தன் மூலம் இன்று வரை அரபு முஸ்லிம் உம்மத்தை நிம்மதியாக விட்டு வைக்க வில்லை.

பனிப்போர் முடிவுக்கு வருமுன் சோவியத் ரஷ்யா எனும் வல்லரசை ஆப்கானின் முஸ்லிம் முஜாஹிதகளைக் கொண்டே வீழ்த்திய மேற்கத்தியம் இன்று வரை ஆப்கானை நிம்மதியாக விட்டுவைக்க வில்லை.

ஷியா சன்னி சண்டையை தீவிரப்படுத்தி ஒரு புறம் வளைகுடா சன்னிகளை தூண்டிவிட்டு மறுபுறம் ஈராக்கை ஏவிவிட்டு ஈரானை இலக்குவைத்த அமெரிக்கா இன்றுவரை ஈராக்கை விட்டுவைக்கவில்லை.

சில வருடங்களுக்கு முன் நடந்த அறபு வசந்தத்தை காவுகொண்டு, அதன் மூலம் எகிப்தையும், லிபியாவையும் சிரியாவையும் சின்னாபின்னப்படுத்தி விட்டு அடுத்த கட்ட நடவடிக்கையாக அரபுலகத் தலைவர்களைக் கொண்டே இஸ்ரேலை அண்டியுள்ள ஈராக் சிரியா உள்ளிட்ட ஷாம் தேசத்தை கூறு போட அதிரடிகளில் இறங்கியுள்ளது அமெரிக்கா.

அருளப்பட்ட வேதங்கள் கொண்ட கிறிஸ்தவத்தையும், யூத மதத்தையும் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிரிகளாய் வளர்த்துவிட்ட மேற்கத்திய ஆதிக்க சக்திகள் இன்று ஆசிய நாடுகளில் இந்துக்களையும் பௌத்தர்களையும் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக திட்டமிட்டு மோதவிட்டுக் கொண்டிருக்கின்றன.

இராணுவ ஊடுறுவல்கள், உலகம் தழுவிய ஊடகப் போர்கள், கலை கலாச்சாரப் படையெடுப்புக்கள், சிந்தனை சித்தாந்தப் போர்கள், நாகரீக பண்பாட்டு விழுமிய ஆதிக்கங்கள், பொருளாதார சுரண்டல்கள், அரசியல் இராஜ தந்திர ஆதிக்க நகர்வுகள் என முஸ்லிம் உலகை முற்றுகையிட்டுள்ள இஸ்லாத்தின் எதிரிகள்... நம் வீட்டு மனிதர்களைக் கொண்டே நமக்குள் முரண்படச் செய்து மோதல்களை முடுக்கி விட்டுள்ளார்கள்.

இவ்வளவு முற்றுகைக்கு மத்தியிலும் நம்பிக்கை இழக்காத விசுவாசிகள் கூட்டம் அனாதரவாய், அறிமுகமில்லாதவர்களாய் ஒரு விடியலுக்காக காத்திருக்கின்றார்கள், அடுத்த நிமிடம் மறுமை என்றிருப்பினும் கையில் உள்ள பேரீச்சம் குச்சியை நம்பிக்கையுடன் நடுவதுபோல் தமது பாதையிலும் பயணத்திலும் தெளிவாக இருக்கின்றார்கள்.


முஸ்லிம் உம்மத்தின் விடுதலைக்காக மாத்திரமன்றி, எதிரிகள், மற்றவர்கள் என்ற பாரபட்சமில்லாமல் உலகில் வாழும் மனித குலத்தின் விமோசனத்திற்காக ஒவ்வொரு விசுவாசியான முஸ்லிம் ஆணும் பெண்ணும் இருளிலே நம்பிக்கை எனும் விளக்கை ஏந்தி முன்னோக்கிப் பயணிக்கின்றார்கள்.
நிச்சயமாக இறை நிராகரிப்பாளர்களே அல்லாஹ்வின் அருள் குறித்து நம்பிக்கை இழந்து விடுவார்கள்.

மனிதனுடைய மார்க்கம், உயிர், அறிவு, ஆன்மா, உடைமை, கௌரவம், பரம்பரை போன்ற அடிப்படை அம்சங்களை, போற்றி பாதுகாக்கின்ற அழகிய வாழ்வு நெறியே இஸ்லாமாகும். இஸ்லாமிய ஷரீஅத் சட்டங்கள் இத்தகைய அடிப்படை அம்சங்களை பேணிக் காக்கின்ற அடிப்படையான ஆன்மீக கோட்பாட்டு இலக்குகளின் மீது கட்டி எழுப்பப்பட்ட மிகச் சிறந்த வாழ்வு நெறியாகும்.

இஸ்லாமிய 'ஷரீஅத்' என்றாலே குரூரமான கசையடி, கை வெட்டல், கழுத்து வெட்டல், கல்லடித்துக் கொல்லுதல் என ஒரு பிழையான காழ்ப்புணர்வுப் பரப்புரை சர்வதேச அளவில் மாத்திரமன்றி அண்மைக் காலமாக இலங்கையிலும் இந்தியாவிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அதே போன்றே இஸ்லாமிய உம்மத்தினை நிர்வகிக்கின்ற 'கிலாபத்' எனும் வார்த்தை குறித்தும் அது குரூரமான இஸ்லாமிய ஷரீஅத்துக் சட்டங்களை மனிதர்கள் மீது திணிக்கின்ற மனித உரிமைகளைப் பறிக்கின்ற ஆட்சிக் கட்டமைப்பு என்ற பரப்புரையும் உலகெங்கும் மேற்கொள்ளப் பட்டு வருகிறது.
மேலே சொன்ன ஷரீஅத்து, கிலாபத்து போன்ற பிரயோகங்கள் போன்றே 'ஜிஹாத்' எனும் வார்த்தையும் முஸ்லிம் உம்மத்து குறித்த பீதியை அனைவரிடமும் ஏற்படுத்துவதற்காக திட்டமிட்ட அடிப்படையில் தவறான அர்த்தங்கள் கற்பிக்கப்பட்டு வருகிறது.

ஜிஹாத் என்றால் முஸ்லிம் அல்லாதவர்களை கொன்று குவித்தல், இஸ்லாத்தை பலாத்காரமாக அடுத்தவர் மீது திணித்தல், நாடுகளை ஆக்கிரமித்தல், கணக்கு வழக்கில்லாமல் மாற்றுக் கருத்துக் கொண்டவர்களை கொன்று குவித்தல் என மிகவும் அகோரமாக காட்சிப்படுத்தி எல்லோருக்கும் இஸ்லாம் குறித்து தவறான புரிதல் உருவாக்கப்பட்டு வருகிறது.


உண்மையில் மேலே சொன்ன அனைத்து மாபாதகமான செயல்பாடுகள், உலகெங்கும் ஆயுதக் கலாச்சாரத்தை விதைத்து அழிவுகளை ஏற்படுத்த சகல அரசியல் பொருளாதார இராஜதந்திர இராணுவ நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. இது அத்தனையும் நாடுகளை ஆக்ரமிக்கவும், காலனித்துவப்படுத்தவும் மேற்கத்திய, யூத, சிலுவை சக்திகள் உலகை மேலாதிக்கம் செய்ய போடப்பட்ட நிகழ்ச்சி நிரல்.
ஒரு மனித உயிரின் மதிப்பு மொத்த மனித இனத்தின் உயிர்களின் மதிப்புக்குச் சமம் என்ற அடிப்படை வாழ்க்கைத் தத்துவத்தை உலகில் அல் குர்ஆன் தவிர வேறு எந்த மார்க்கமும் தெளிவாக உயிரின் மதிப்பு பற்றிய ஒரு கோட்பாட்டுச் சிந்தனையை முன்வைக்கவில்லை.

தனி மனிதர்களாகவும், குடும்பங்களாகவும், கோத்திரங்களாகவும், சமூகங்களாகவும், நாடுகளாகவும் மனித வாழ்வின் அடிப்படை இலக்குகளை பேணுகின்ற பொதுவான விதிகளையே இஸ்லாமிய ஷரீஅத், கிலாஃபத், ஜிஹாத் ஆகிய வார்த்தைகள் உள்ளடக்கியிருக்கின்றன.

ஆனால் அண்மைக் காலமாக உலக அரங்கில் இஸ்லாமிய கிலாஃபத், இஸ்லாமிய ஷரீஅத், இஸ்லாமிய ஜிஹாத் ஆகிய மூன்று வார்த்தைகளையும் பூதாகரப்படுத்தி அவற்றை அடிப்படை வாதமாக, தீவிரவாதாமாக, இஸ்லாமிய பயங்கரவாதமாக அரங்கேற்றி இஸ்லாமோஃபோபியா எனும் இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் குறித்து பீதியை கிளப்புகின்ற நடை முறை வியாக்கியானங்கள் உலகின் முன் வைக்கப்படுகின்றன.

புதிய உலக அமைப்பில் முஸ்லிம் நாடுகளில் உள்ள எண்ணெய் மற்றும் கனிம வளங்களை ஆக்கிரமிக்கவும், பரந்து விரிந்த யூத சாம்ராஜயத்தை தோற்றுவிக்கவும், நவீன சிலுவைப் போரை ஆசிய ஆஃப்ரிக்க நாடுகளுக்கு விரிவாக்குவதன் மூலம் மூன்றாம் உலகப் பேரழிவை முஸ்லிம் உம்மத்தின் மீது திணிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு அரங்கேற்றப்பட்டு வருகின்றன.

உலகில் உள்ள எந்த அணுகுண்டுக்கும் இஸ்லாமியர்கள் உரிமை கோரவில்லை, உலகில் பறக்கும் யுத்த விமானங்கள், நாசகார கப்பல்கள், உயிரியல், இரசாயன ஆயுதங்கள் உட்பட அத்தனை ஆயுதங்களும் ஆயுதக் கிடங்குகளும் முஸ்லிம்களின் தயாரிப்பு அல்ல! இஸ்லாத்தை எதிர்ப்பவர்களின் தயாரிப்புக்களாகும்.


உலகில் உள்ள சுமார் 65 ஆயுத உற்பத்தி நிறுவனங்களும் யூதர்களால் நடத்தப்படுகின்றன, 95 % ஊடக நிறுவனங்களும் அவர்களது ஆயுத கலாச்சாரத்தை சந்தைப்படுத்துவதற்காக நடத்தப் படுகின்றன.

ஒவ்வொரு முஸ்லிமான ஆணும் பெண்ணும், இளைஞனும் யுவதியும் இஸ்லாத்தின் பாலும், முஸ்லிம் உம்மத்தின் பாலும், முழு மனித குலத்தின் பாலும் தமக்குள்ள பொறுப்பு மற்றும் பங்களிப்பை உணர்ந்து தாம் இருக்கும் இடத்தில் இருந்தவாறு அறிவுடனும் தெளிவுடனும் கவனத்துடனும் இஸ்லாத்தின் வாழும் நடைமுறையாக பரிணமிக்க வேண்டும்.

நிச்சயமாக இறை நிராகரிப்பாளர்களே அல்லாஹ்வின் அருள் குறித்து நம்பிக்கை இழந்து விடுவார்கள்.

Source: http://www.samooganeethi.org/index.php/category/social-justice/item/484-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%BE

 


No articles in this category...