Tamil Islamic Media

இமாம் அபூ ஹனீஃபா (ரஹ்)

ஜமீல் பாஷா உமரி
பதிப்புரை

பேரருளாளனும் பேரன்புடையோனுமாகிய இறைவனின் திருப் பெயரால் ஆரம்பிக்கிறோம். இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர் கள் மீதும் அவர்களின் தோழர்கள், பின்தொடருவோர் மீதும் அல்லாஹ்வின் அருள்மாரி பொங்கட்டும்! .

1 லட்சத்து 24 ஆயிரம் தூதர்கள் அனுப்பப்பட்டு அவர்கள் மூலம் வழிகாட்டப்பட்ட பூமி இது! வழி கெடுக்கும் இப்லீஸ் மற்றும் அவ னது சந்ததியினரான ஷைத்தான்கள் வழிகாட்டப் பட்டோரை வழி கெடுத்த வரலாறு யாருக்குத் தான் தெரியாது?.

இறைத்தூதர்கள் இறந்துபோன பிறகு, இப்லீஸால் வழி கெடுக்கப் பட்ட மனிதகுலம் .. மீட்சியுறாமல் போன போது இறுதியாக அனுப் பப்பட்டவரே முஹம்மத் (ஸல்) எனும் அகிலங்களுக்கோர் அருட் கொடை. .

 அவர்தம் பணிமுடிந்து, தன் வாரிசுகளாக அறிவிப்பு செய் தது யாரை எனப் பார்த்தால் ‘மார்க்க அறிஞர்கள்’ எனும் நபிமார் களின் வாரிசுகளே கண்களுக்குத் தெரிகிறார்கள். அந்த மார்க்க அறி ஞர்கள் இறைத் தூதர் விட்டுச் சென்ற பணியை - வாழையடி வாழை யாக - சஹாபாக்களுக்குப் பிறகு - இன்றுவரை நிறைவேற்றுவதைக் காணலாம். .

இந்த உலகத்தில் வாழ் அத்தனை மக்களும் நேர்வழியில் நிலைத் திருக்க வேண்டும் என்றால் ... நேர்வழி நின்று .. நேர் வழிப்படுத்தும் அறிவையும் ஆசையையும் கொண்ட மார்க்க அறிஞர்கள் தங்கள் பணியை படைத்தவனுக்காக அயராது பாடுபடுதல் வேண்டும். .

அவ்வப்போது உறவு பகை ஆகும் - நட்பு துரோகமிழைக்கும் - இன உணர்வு இறை உணர்வை மிகைத்து - அமைப்பு வெறி மேலோங்கும்!. கொள்கைகளை குறிவைத்து பகைவர்களின் உழைப்பு - வழிகெடுக்கும் பிரிவுகளை உருவாக்கும்!. .

இவையெல் லாம் கடந்து எதிரிகளின் சிறைச்சாலைகள், போர்த் தளவாடங்கள் - மலைக்க வைக்கும் சூழ்ச்சிகள்- கோரத் தாண்டவமாடும்!. .

இஸ்லாமிய பெயர்தாங்கி இயக்கங்கள் நம் எதிரிகளாலேயே உருவாக்கப்பட்டு வளர்க்கப் பட்டு நம்மைப் பிளவுபடுத்தக் கற்றுக் கொடுக்கப்படும். .

 இஸ்லாம், ஏகத்துவம் பெயராலேயே நஞ்சு புகட் டப்பட்டு - பாமரர்கள் வழிகெடுக்கப் படுவர். .

இத்தனை இருள்களில் ஒளிக்கீற்றும் தென்படும்! இறை யோனை மட்டுமே அஞ்சும் மார்க்க அறிஞர்கள் ஆங்காங்கே தோன்றுவார்கள்! அமெரிக்காவும் இஸ்ரேலும் அவற்றின் அடிவருடிகளான அரபு நாடு களும் அவர்களை அசைக்க முடியாது! ஆட்சியும் மாட்சியும் அவர் களை அலற வைக்காது! ஏனென்றால் அவர்கள் மார்க்க அறிஞர்கள்!! .

அவர்களின் வழிகாட்டி, அங்கே கலங்கரை விளக்கமாக ஒளி வீசி, இறந்த பின்பும் உலகின் அதிகபட்ச மக்களால் பின்பற்றப்படும் சட் டங்களை தொகுத்தளித்த இஸ்லாமியச் சட்ட பல்கலைக் கழகம் தந்த இமாம் அபூ ஹனீஃபா (ரஹ்)!. .

அவர்களின் பாதையில் லட்சியப் பய ணம் நடாத்தும் பேரறிஞர்கள் பலரை வல்ல இறைவன் தருவானாக! .

இமாம் அபூ ஹனீஃபா (ரஹ்) அவர்கள் பற்றி பல நூல்கள் பல்வேறு மொழிகளில் வந்திருந்தாலும் செம்மையான நூலாக ‘சீரத்துந் நுஅமான்’ திகழ்கின்றது. .

அல்லாமா ஷிப்லீ (ரஹ்) ஆயிரக் கணக் கான நூற்களை ஆராய்ந்து உருவாக்கிய ஆதார நூல்! .

நூற்றுக்கும் அதிகமான நூற்களை தமிழுலகில் வழங்கிவரும் - மொழி பெயர்க்கும் மனிதப் பொறி - அல்லாமா சையத் அப்துர் ரஹ்மான் உமரி அவர்களின் எழுத்துப் பட்டறையில் தமிழ்ப்படுத் தப்பட்டு, .

அமீரகத்தின் வரைகலை நிபுணர் ஹஸன் அவர்களால் அட்டை வடிவமைக்கப்பட்டு எஸ்கேஎஸ் அச்சகம் ஹாபிழ் ஹமீத் அவர்களால் அச்ச டிக்கப்பட்டு 1 மில்லியன் மாணவர்களை உலகம் முழுவதும் கொண்டு விளங்கும் மெட்ராஸ் அரபிக் கல்லூரி இந்நெடுநூலை பெருமகிழ்ச்சியுடன் தமிழ்நாட்டு உலமாக்களுக்கு அர்ப்பணிக்கிறது. .

எங்கள் தாழ்மையான வேண்டுகோளை திறந்தமனதுடன் ஏற்று சிறப்புமிகு அணிந்துரைகளை வழங்கிய ஈரோடு தாவூதிய்யா இஸ்லாமியப் பாடசாலையின் முதல்வரும் தமிழகத்தின் மூத்த உலமாக்களில் ஒருவருமான சங்கைக்கும் .
கண்ணியத்திற்கும் உரிய மௌலானா உமர் ஃபாரூக் தாவூதி அவர்களுக்கும்.

 தமிழ்நாடு ஜமா அத்துல் உலமா சபையின் ஃபத்வாக் குழு தலைவரும் சேலம் மழாஹிருல் உலூம் இஸ்லாமியப் பாடசாலையின் முதல்வருமான கண்ணியத்திற்குரிய மௌலானா அபுல் கலாம் காஸிமி அவர்களுக்கும்.

 நபிமொழி மொழிபெயர்ப்பாளரும் தமிழகத்தின் மூத்த இஸ்லாமிய எழுத்தாளர்களில் ஒருவருமான மதிப்பிற்குரிய மௌலானா அப்துல் ரவூப் பாகவீ அவர்களுக்கும் நன்றிகளை உரித்தாக்குகின்றோம். .

எங்களோடு இப்பணியில் இணைந்து பணியாற்றிய ஹாபிழ் முஹ்யுத்தீன் யூஸுஃபி காஸிமி, அப்துல் காதிர் அவ்தா, ஷேக் சையத் அப்துல் காதிர் (மதுரை), .

கமாலுத்தீன், லியாகத் அலீ (சென்னை) .

 உமர் ஷாஹ், கலீலுர் ரஹ்மான் (கோயமுத்தூர்), .

 ஜான் முஹம்மத் (கும்பகோணம்) ஆகியோரும் நன்றிக்கு உரியவர்கள். .

நபிமொழிக் கலை குறித்து இமாம் அபூ ஹனீஃபா (ரஹ்) அவர்கள் கொண்டிருந்த பல நுட்பங்களும் கருத்துகளும் துறை சார்ந்த கலைச் சொற்களாக இருந்ததாலும் பொது மக்களுக்கு எளிதில் புரியாத கூற்றுகளாக தென்பட்டதாலும் அவை இந்நூலில் தமிழாக்கம் செய் யப்படவில்லை என்பதை அறிக! .

யா அல்லாஹ்!
ஆயிரமாயிரம் அபூ ஹனீஃபாக்களை உருவாக்கு! தீமைப் புயலில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு கலங்கரை விளக்கமாக அவர்களை மாற்று! .

எங்கள் அறிஞர்களுக்கு - இமாம் அவர்களின் இறை அச்சம், அறிவு, தெளிவு, வீரம், செல்வம், மறுமை நோக்கம் ஆகிய வற்றை வழங்கு! .

இம்முயற்சியில் பணி புரிந்தோர் - பங்களிப்பு செய்தோர் - பரப்புவோர் - பயனடைவோர் அனைவருக்கும் அருள் புரிவாய் - ரஹ்மானே!! ...
ஆமீன்.

ஐ. ஜமீல் பாஷா உமரி


No articles in this category...