Tamil Islamic Media

வீழ்ந்தெழுவோம் : பொருளாதார நெருக்கடியை எப்படி சமாளித்தார்கள் - அழகிய முன்னுதாரனம். (தொடர்-45)

*வீழ்ந்தெழுவோம்* : *பொருளாதார நெருக்கடியை எப்படி சமாளித்தார்கள் - அழகிய முன்னுதாரனம்.*
(தொடர்-45)

*இத்தகைய ஆட்சிக்கு அல்லவா மானுடம் ஏங்குகிறது!!!!!!*
*மன்னர் ஸைஃபுத்தீன் குதுஸ்* *எகிப்து* மன்னராக பொறுப்பேற்று சில மாதங்கள் கூட கழியவில்லை. எகிப்தை துவம்சம் செய்ய *தாத்தாரியர்கள்* தங்களது படையை எகிப்தை நோக்கி நகர்த்திக் கொண்டிருந்தார்கள். இன்னும் சில நாட்களில் படை எகிப்தை நெருங்கிவிடும். *அந்த நேரத்தில் எகிப்து நாடு மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் இருந்தது*. என்ன செய்வதென்று தெரியாமல், அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் மார்க்க அறிஞர்கள் ஆகிய அனைவரையும் அழைத்து மன்னர் அவசர ஆலோசனை கூட்டத்தை நடத்தினார்.
*எகிப்து நாட்டை நெருங்கிக் கொண்டிருக்கும் எதிரிகள் ஒரு பக்கம்*.
*மறு பக்கம் கடுமையான பொருளாதார* *நெருக்கடியை*
*நாடு சந்தித்து வருகிறது* என இந்த இரண்டையும் விளக்கினார் மன்னர்.இந்த சூழ்நிலையில் *'மக்கள் அனைவரின் மீதும் ஜகாத்தை விட அதிகமான வரி வசூலிக்க வேண்டும்.அப்பொழுது தான் எதிரிகளை வீழ்த்துவதற்கு நமது படைக்கு தேவையானவற்றை தயார் செய்ய இயலும்'*.இது ஒன்றே இதற்கான தீர்வு *உலமாக்களாகிய நீங்களே இதற்கான மார்க்க தீர்பை* வழங்க வேண்டும் என்று கூறி தனது உரையை நிறைவுச் செய்தார்.
உடனே அந்த சபையில் இருந்த *சுல்தானுல் உலமா இஸ் இப்னு அப்துஸ் ஸலாம் (ரஹ்)* அவர்கள் கூறினார்கள்:மன்னரே தாங்கள் கூறியது சரியே!!
*ஓர் இஸ்லாமிய நாட்டை நோக்கி எதிரிகள் போர் தொடுக்க தயாராகும் போது அந்த இஸ்லாமிய நாடு பொருளாதார நெருக்கடியில் இருந்தால் போரை எதிர்கொள்வதற்கு தேவையானவற்றை பெற்றுக் கொள்ளும் பொருட்டு மக்களிடமிருந்து வரியை ஜகாத்திற்கும் அதிகமாக வசூலிக்கலாம்.*
ஆனால் அவ்வாறு மார்க்க தீர்ப்பை வெளியிட வேண்டுமென்றால் *இரண்டு நிபந்தனைகள்* பூர்த்தி செய்யப்பட வேண்டும்.
1ஆவது நிபந்தனை *அரசின் பைத்துல்மால் காலியாக இருக்க வேண்டும்*.
2ஆவது நிபந்தனை (இது மிகவும் கடுமையான நிபந்தனை) *மன்னர், அமைச்சர்கள்,அரசு அதிகாரிகள் என அனைவரும் தங்களது அடிப்படை தேவைகளுக்கு தேவையானவற்றை தவிர மற்ற அனைத்தையும் விற்று மக்களும் இவர்களும் சமமானவர்களாக மாற வேண்டும்*.இதன் மூலம் நாட்டின் தேவை பூர்த்தி செய்யப்பட வேண்டும் *இவ்வாறு செய்தும் இயலவில்லை எனும் போது. தாராளமாக மக்களிடம் ஜகாத்தை விட அதிகமாக வரி வசூலிக்கலாம் என்ற மார்க்க தீர்பை நாங்கள் வெளியிடுவோம்.*
*இந்த இரண்டாவது நிபந்தனையை விட ஆச்சரியமானது இதனை மன்னர் ஸைஃபுத்தீன் குதுஸ் (ரஹ்) அவர்கள் நடைமுறைப்படுத்தியது*. *மன்னர், அமைச்சர்கள் அதிகாரிகள் அனைவருமே தேவைக்கு அதிகமாக தாங்கள் வைத்திருக்கும் அனைத்தையும் விற்றார்கள்*.
இதனால் போர் செய்வதற்கு *இஸ்லாமியப் படைக்கு தேவையான அனைத்தும் பூர்த்தியானது*. *இன்னும் பணம் மீதம் இருந்தது, அதனை கொண்டு நாட்டின் கடன்கள் அடைக்கப்பட்டது.* *இன்னும் மீதம் இருந்தது அது ஏழை எளியோருக்கு வழங்கப்பட்டது.*
பொருளாதார நெருக்கடியில் இருந்த தங்களது எகிப்து நாடு எவ்வாறு இத்தகைய செல்வ செழிப்பான நாடாக உருமாறியது என்று மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
*இந்த அருமையான நிகழ்வை இஸ்லாமிய ஆட்சியை தவிர வேறெங்கு நாம் பெற்றுக் கொள்ள இயலும்!!!!!!*
*المصدر:*
كتاب *التتار من البداية إلى عين جالوت*
*راغب السرجاني*
*தமிழில்: மௌலவி நியாசுதீன் புகாரி*

குறிப்பு:

சுல்தான் ஸைஃபுத்தீன் குதுஸ் அவர்களின் தலைமையில் எகிப்து மம்லுக் படையினர் மங்கோலியர்களை 3 செப்டம்பர் 1260 அன்று நடந்த வரலாறு பிரசித்திபெற்ற ”அய்ன் ஜலூத்” போரில் தோற்கடித்தது. சென்ற இடமெல்லாம் அழிவையும், நாசத்தையும், கொலைகளையும் செய்து தோல்வியையே சந்தித்திராத மங்கோலியர்களை முதல் முதலில் வீழ்த்தி வல்லவனுக்கு வல்லவன் உலகில் உண்டு என்பதை மீண்டும் நிரூபித்தார். சுல்தான் சுல்தான் ஸைஃபுத்தீன் குதுஸ். மங்கோலியர்களின் அட்டகாசங்களை ஒரு முடிவுக்கு கொண்டு வந்தது இந்தப் போர்.

 








No articles in this category...