பள்ளிக்கு அருகில் வாழ்வோம்
பள்ளிக்கு அருகில் வாழ்வோம்� பள்ளியின் தொடர்போடு வாழ்வோம்�
எந்த அளவு பள்ளிக்கு நெருக்கமாய் வாழ்கிறோமோ அந்தளவு சுவர்க்கத்திற்கு நெருக்கமாய் வாழ்கிறோம், 
அதாவது ஷைத்தானை விட்டும் நரகத்தை விட்டும் தூரமாய் வாழ்கிறோம் என்று பொருள். 
- பள்ளிவாசலுக்கு அருகில் வீடு விலைகோ / வாடகைக்கோ வாங்க வேண்டும்
 - பாங்கோசை கேட்டவுடன் பள்ளிக்கு செல்ல வேண்டும்
 - ஒருபோதும் இமாம் ஜமாத்தை விட்டு விடக் கூடாது
 - ஒருவேளை இமாம் ஜமாத் தவறி விட்டாலும், Fபர்ளான தொழுகைகளை பள்ளியில் தான் தொழ வேண்டும்.
 - பள்ளியினுள் எப்போது நுளைந்தாலும் பள்ளியின் காணிக்கை நfபில் தொழ வேண்டும்.
 - எப்போது பள்ளியில் நுளைந்தாலும் இஃதிகாFபுடைய நிய்யத்தில் செல்ல வேண்டும்.
 - பள்ளியினுள் நுளையும் போது ஓது துஆவை ஓதி நுளைய வேண்டும்.
 - பள்ளியினுள் fபர்ளு தொழுகைக்காக காத்திருக்க வேண்டும்.
 - ஒரு Fபர்ளு தொழுகைக்கு பின் அடுத்த Fபர்ளு தொழுகைக்காக காத்திருப்பது
 - Fபர்ளு தொழுகைக்கு பின் அதிக நேரம் அந்த இடத்திலேயே அமர்த்திருக்க வேண்டும்.
 - Fபர்ளு தொழுகைக்கு பின் ஹதீஸில் கூறப்பட்ட திக்ருகளை ஓத வேண்டும்.
 - காலை மாலை திக்ருகள் பள்ளியில் செய்ய வேண்டும்.
 - பள்ளியில் வழமையாக குர்ஆன் ஓத வேண்டும்.
 - ரமளானின் கடைசி பத்து நாட்களில் பள்ளியில் இஃதிகாfப் இருக்க வேண்டும்.
 - ஜும்ஆ தொழுகைக்கு மிக விரைவில் பள்ளிக்கு செல்ல வேண்டும்.
 - ஏதேனும் பிரச்சனை அல்லது சிரம்மமான நேரங்களில் பள்ளிக்கு சென்று இரண்டு ரக்ஆத் தொழுது இறைவனிடம் துஆ செய்ய வேண்டும்.
 - பயணத்திலிருந்து திரும்பி வந்தால் பள்ளிக்கு சென்று இரண்டு ரக்ஆத் தொழ வேண்டும்.
 - பள்ளியில் தனிமையில் இறைவனை அஞ்சி அழ வேண்டும்.
 - பள்ளியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் (குர்ஆன் ஹதீஸ் விளக்க்க்கூட்டங்கள், அரபி
வகுப்புகள், வாராந்திர மற்றும் மாதந்திர பயான்கள்) கலந்து கொள்ள வேண்டும். - பள்ளியை காணும் போதெல்லாம் முகமலர வேண்டும்.
 - பள்ளியை நாமே வழமையாக சுத்தம் செய்ய வேண்டும்.
 - பள்ளியை மார்க்க விஷயங்களை கற்கும் கற்பிக்கும் பாடசாலையாக ஆக்கிக் கொள்ள வேண்டும்.
 
- Received Via Email
	  
	  
	   | No articles in this category... | 

      