Tamil Islamic Media

தஜ்ஜால் Vs டெலிவிஷன்

தஜ்ஜால்

டெலிவிஷன்

ஒற்றைக் கண் உடையவன். ஒரே திரையுடையது.
அதிவேகத்துடன் பயனம் செய்யச் சக்திபெற்றவன். ஓலி அலைகளும் திரையில் போன்றும் பிம்பங்களும் காற்றின் மூலமாகவே ஒளிபரப்பப்படுகின்றன.
தஜ்ஜால் ஒரு யூதனுடன் இருப்பான். தகவல் தொடர்புச் சாதனங்கள் அனைத்தும் யூதர்களாலேயே நிர்வகிக்கப்படுகின்றன.
ஓவ்வொரு மனிதரிடமும் அவன் வருவான். பட்டி தொட்டிகளில் எல்லாம் இது இல்லாத இடமில்லை எனலாம்.
அவன் பிரச்சாரம் பொய் ஏமாற்றுதல் என்பன வற்றின் அடிப்படையில் இருக்கும். சினிமாக்களும் ஆபாச நடனங்களும் தீமைகளையும் ஏமாற்றுதலையும் அடிப்படையாகக் கொண்டவை.
அழிவில்லா இன்பத்தைத்த தான் அளிக்க இயலும் என வாக்களிப்பான். ஸ்விட்சைப் போட்டதும் மகிழ்ச்சியையும் பொழுது போக்கையும் அளிக்கும் என்ற வாக்கின் மீதே இவை வீடுகளுக்குக் கொண்டு வந்து பொறுத்தப்படுகின்றன.
பெருங்கூட்டத்தையும் வசீகரிக்கும் இசையை அவன் இசைப் பவனாக இருப்பான். அனைத்து வர்த்தக பொழுது போக்கு அம்சங்களிலும் இதுவே முன்னிற்கிறது.
நயவஞ்சகத்தைப் பரப்புவான். இதுவும் நயவஞ்சகத்தைப் பரப்ப உதவுகிறது.
அல்லாஹ்வை நினைப்பதை விட்டும் மக்களைத்த தூரமாக்கிவிடுவான் மக்களுக்குத் தொழுகையையும் திக்ரையும் மறக்கடித்து விடுகிறது.
தானே இறைவன் எனக்கூறி மக்களின் இதயங்களைக் கறை படுத்துவான். வழிதவறச் செய்யும் சினிமாக்கள் மக்களின் இறை நம்பிக்கையைக்கறைப் படுத்துகின்றன.
இவனைப் பின்பற்றுவோர் அல்லாஹ்வின் அருளிலிருந்து விலகி விடுவதோடு இஸ்லாத்திலிருந்தும் வெளியேறிவிடுவர். இதன்மீது பற்று வைத்திருப்போர் அனைவருமே அல்லாஹ்வின் அருளுக்கு அப்பாற்பட்டவர்கள். கருணையின் வானவர்கள் உருவப்படங்கள் இருக்கும் இல்லங்களுக்குள் நுழையக்கூட மாட்டார்கள்.
இவனுக்குக் கீழ் இருக்கும் ஷைத்தான்கள் பசப்பு வார்த்தைகளால் மக்களை வழிகெடுக்து தஜ்ஜாலைப் பின்பற்றச் செய்வர். அறிஞர்கள் அறிவியல் வல்லுநர்களும் அரசியல் வாதிகளும் டி.வி.யின் வழியே தங்கள் சொந்தக் கருத்துக்களை மக்களிடம் திணிக்கப் பாடுபடுவர்.
இவனது சீடர்களில் ஈமானுள்ளவர்களும் வணக்கவாளிகளும் அடங்குவர்.  ஈமானுடையோரும் வணக்கவாளிகளும் கூட டிவியின் மாயையில் வீழ்ந்து கிடக்கின்றனர்.

ஓர் இல்லத்தில் டி.வி. வைக்கப்படும் போது அதற்கொரு ஆண்டனா வீட்டுக் கூரை மேல் பொருத்தப்படுகிறது.  இது வீட்டுக் கூரை மீது தஜ்ஜாலின் கொடி மரம் ஊன்றப் பட்டதைப் போன்று தோன்றுகிறது.  ஒரு வேளை இந்த ஆண்டனாக்கள் தன்னை நெருங்கியவர் யார்? வெறுப்பவர் யார்? எனப் பிரித்தறியும் வேலையை தஜ்ஜாலுக்கு எளிதாக்கவதற்காகவும் தன் கூட்டாளிகளை அவன் இனங்கண்டு கொள்வதற்காகவும் அடையாளங்களாகத் திகழ்கினறனவோ என்று தோன்றுகிறது.

யா அல்லாஹ் இந்ந உம்மத்தை தஜ்ஜால் டெலிவிஷன் இவ்விரு பெருந்தீங்குகளிலிருந்தும் பாதுகாப்பாயாக ஆமீன்.

 

தொகுப்பு: முகம்மது ஃபைரோஸ், கும்பகோணம். 






No articles in this category...