Tamil Islamic Media

என் கேள்விக்கு இறைவனின் பதில்!

துபாய் காயல் நல மன்றத் தலைவர் ஜனாப் ஜே.எஸ்.ஏ. புகாரீ காக்கா அவர்கள் கருத்தாழமிக்க நல்ல பல மின்னஞ்சல்களை அவ்வப்பொழுது அனுப்பி வைப்பார்கள். அதில் சமீபத்தில் வந்த ஒரு மின்னஞ்சல் என்னை மிகவும் ஈர்த்தது.

டாக்டர் அஹ்மத் ஒரு பிரபலமான மருத்துவர். அவர் ஒரு தடவை ஒரு முக்கியமான மருத்துவ மாநாட்டுக்குப் புறப்பட்டார். அது இன்னொரு நகரத்தில் நடக்கவிருந்தது. அந்த மாநாட்டில் டாக்டர் அஹ்மதுக்கு ஒரு விருது வழங்கப்படவிருந்தது. அவர் அண்மையில் நடத்திய ஒரு நீண்ட நெடிய மருத்துவ ஆராய்ச்சிக்காக, அதனைப் பாராட்டும் விதமாக அந்த விருதை வழங்கி அவரை கௌரவிக்க இருந்தார்கள்.

  அந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்கு பெரிதும் ஆர்வம் கொண்டிருந்தார் டாக்டர் அஹ்மத். அந்த ஆராய்ச்சிக்காக மிக நீண்ட காலமாக, கடினமாக உழைத்திருந்தார் அவர். ஆராய்ச்சிக்காக தான் பட்ட சிரமங்களுக்கெல்லாம் ஆறுதலாக இந்த விருது அமையும் என்று அவர் எண்ணினார். விமானம் புறப்பட்டது. புறப்பட்டு இரண்டு மணி நேரத்தில் விமான ஓட்டுனர் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார். விமானத்தில் ஏதோ ஒரு கோளாறு இருக்கிறதென்றும், அருகிலுள்ள விமான நிலையத்தில் விமானத்தைத் தரையிறக்கப் போவதாகவும் அவர் அறிவிப்பு செய்தார்.

  தான் உரிய நேரத்தில் மாநாட்டை அடைவோமா என்று கவலை கொண்ட டாக்டர் அஹ்மத் விமானம் தரையிறங்கியதும் உடனடியாக உதவி மேடைக்கு ஓடினார். அங்கே இருந்த பெண்மணியிடம் அவரது நிலையை எடுத்துச் சொன்னார். தான் போக வேண்டிய இடத்திற்கு உடனடியாகக் கிளம்பக் கூடிய அடுத்த விமானத்தைப் பற்றிக் கூறுமாறு கேட்டுக்கொண்டார்.

  அந்தப் பெண்மணி அடுத்த குண்டைப் போட்டார். அடுத்த பத்து மணி நேரத்திற்கு அவர் செல்ல வேண்டிய இடத்திற்கு விமானமே இல்லை என்றும், அதனால் தன்னால் அவருக்கு உதவ முடியாது என்றும் வருத்தத்துடன் தெரிவித்தார். ஆனால் ஓர் ஆலோசனை கூறினார். ஒரு காரை வாடகைக்கு எடுத்து ஓட்டிச் சென்றால் நான்கு மணி நேரத்தில் சென்று விடலாம் என்று கூறினார்.

  வேறு வழியில்லாததால் அந்த ஆலோசனையை அவர் ஏற்றுக்கொண்டார். சாதாரணமாக நீண்டதூரப் பயணத்திற்கு கார் பயணத்தை அவர் விரும்ப மாட்டார்.

  ஒரு காரை வாடகைக்கு எடுத்து தன் பயணத்தைத் தொடர்ந்தார். சிறிது நேரத்தில் அவருக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. தட்பவெப்ப நிலை திடீரென்று மாறியது. கனமழையுடன், கடுமையான புயல் காற்று வீசத் தொடங்கியது. மழையின் அடர்த்தியில் அவரால் காரை ஓட்டிச் செல்ல முடியவில்லை. சாலையைச் சரியாகப் பார்க்க முடியவில்லை. இந்தக் குழப்பத்தில் அவர் போக வேண்டிய ஒரு வளைவைத் தவற விட்டார். அவரை அறியாமலேயே வண்டி வழி மாறிச் சென்று கொண்டிருந்தது.

  இரண்டு மணி நேரக் கடினப் பயணத்திற்குப் பின்னர் தான் வழி தவறி விட்டோம் என்பது அவருக்கு உறுதியானது. பாலைவனச் சாலையில், பயங்கர புயல் காற்றுக்கிடையில், பயமுறுத்தும் மழையினூடே அவரின் இந்த நீண்ட கடினமான பயணம் அவரை மிகவும் தளர்த்தி. கடும் களைப்பை ஏற்படுத்தியது. நல்ல பசியும் எடுத்தது. ஏதாவது வீடு தெரிகிறதா என்று பார்த்துக்கொண்டே சென்றார். ஒன்றும் தென்படவில்லை. சிறிது நேரப் பயணத்திற்குப் பிறகு, ஒரு சிறிய ஓட்டு வீடு கண்ணில் தென்பட்டது. காரை நிறுத்தி, அந்த வீட்டின் கதவைத் தட்டினார். ஒரு வயதான பெண்மணி கதவைத் திறந்தார். அந்தப் பெண்மணியிடம் தனது நிலையை விளக்கிய டாக்டர் அஹ்மத், தொலைபேசியைப் பயன்படுத்த அனுமதி கேட்டார்.

  அந்த வீட்டில் தொலைபேசியும், மின்சாரமும் இல்லை என்று தெரிவித்த அந்த வயதான பெண்மணி அவரை உள்ளே வருமாறு அழைத்தார். மிகவும் களைத்துப் போய் இருப்பதால் தேநீரும், உணவும் அருந்திவிட்டுச் செல்லுமாறு கேட்டுக்கொண்டார். டாக்டர் போக வேண்டிய இடத்திலிருந்து வழி தவறி நீண்ட தூரம் வந்துவிட்டதாகவும், சரியான பாதையை அடைவதற்கே இன்னும் நிறைய நேரம் பிடிக்கும் என்றும் அந்தப் பெண்மணி கூறினார்.  

பசியும், களைப்பும், குளிரும் அவரை யோசிக்க விடவில்லை. அந்தப் பெண்மணியின் அழைப்பை ஏற்று உள்ளே சென்றார். மேசையில் சூடான தேநீரும், உணவும் இருக்கிறது என்றும், அதனை அருந்துமாறும் கேட்டுக்கொண்ட அந்தப் பெண்மணி தான் தொழுது விட்டு வருவதாகக் கூறிச் சென்றார்.

  தேநீரை உறிஞ்சிய டாக்டர் அஹ்மத் அப்பொழுதுதான் அதனைக் கவனித்தார். மெழுகுவர்த்தியின் மங்கலான வெளிச்சத்தில் தொழுது கொண்டிருந்த அந்தப் பெண்மணியின் அருகில் ஒரு குழந்தை தொட்டிலில் படுத்துக் கிடந்தது.

  ஒரு தொழுகை முடிந்ததும், கையேந்தி பன்னிப் பன்னி மன்றாடிப் பிரார்த்தனை புரியும் அந்தப் பெண்மணி அடுத்த தொழுகையை ஆரம்பித்து விடுவார். மீண்டும் பிரார்த்தனை. மீண்டும் மன்றாட்டம். இதனைக் கவனித்துக்கொண்டிருந்த டாக்டர் அந்தப் பெண்மணிக்கு ஏதோ ஓர் அவசியத் தேவை இருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டார்.

  தொழுகையை முடித்து அந்தப் பெண்மணி எழுந்ததும் டாக்டர் மெல்ல பேச்சு கொடுத்தார். அவரது தேவைகளை அல்லாஹ் பூர்த்தி செய்வான் என்ற நம்பிக்கையும், ஆறுதலும் கூறினார்.

  அவர் நிறைய பிரார்த்தனைகளைச் செய்ததையும், மிக நீண்ட நேரம் தொழுததையும் தான் கவனித்ததாகவும், ஏதாவது தன்னாலான உதவிகள் வேண்டுமென்றால் தான் செய்து தருவதாகவும் டாக்டர் அந்தப் பெண்மணியிடம் கூறினார். அந்தப் பெண்மணி புன்முறுவல் பூத்தார். அல்லாஹ் தன் அனைத்துப் பிரார்த்தனைகளையும் ஏற்றுக்கொண்டதாகவும், ஒரே ஒரு பிரார்த்தனை மட்டும் இன்னும் ஏற்றுக்கொள்ளப்படாமல் இருப்பதாகவும் கூறினார்.

  அந்தக் குறிப்பிட்ட பிரார்த்தனைக்கு மட்டும் அல்லாஹ் ஏன் இன்னும் பதில் தரவில்லை என்று தனக்குத் தெரியவில்லை என்றும், தனது பலஹீனமான ஈமான் அதற்குக் காரணமாக இருக்கலாம் என்றும் அவர் கூறினார். சொல்லத் தடையில்லையென்றால் அந்தத் தேவை என்னவென்று தன்னிடம் கூறும்படி டாக்டர் கேட்டுக்கொண்டார்.

  அதனைச் சொல்வதாக ஆமோதித்து தலையாட்டிய அந்த அம்மையார் சொன்னார்:

  “அந்தத் தொட்டிலில் இருக்கும் குழந்தை என் பேரன். அவனுடைய பெற்றோர்கள் அண்மையில் நடந்த விபத்து ஒன்றில் பலியாகிவிட்டார்கள். இந்தக் குழந்தைக்கு அரிய வகை புற்றுநோய் உள்ளது. நான் போகாத மருத்துவமனை இல்லை. பார்க்காத டாக்டர்கள் இல்லை. குழந்தைக்கு சிகிச்கை அளிக்க முடியாது என்று எல்லோரும் கையை விரித்துவிட்டனர். என் பேரனுக்கு உள்ள அரிய வகை புற்றுநோயைக் குணப்படுத்துவதற்கு ஒரே ஒரு மருத்துவரால்தான் முடியுமாம். அவர் பெயர் டாக்டர் அஹமதாம். ஆனால் அவர் இருக்குமிடம், நான் இருக்குமிடத்திலிருந்து வெகு தூரத்தில் இருக்கிறது. அவரை நான் காண்பதற்கு வாய்ப்பே இல்லை. ஆதலால்தான் நான் அல்லாஹ்விடம் அல்லும், பகலும் டாக்டர் அஹமதுவைச் சந்திப்பதற்கும், அவர் என் பேரனுக்குச் சிகிச்சை அளிப்பதற்கும் ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தருமாறு மன்றாடிப் பிரார்த்தித்துக்கொண்டிருக்கிறேன்.” இதனைக் கேட்ட டாக்டர் அஹ்மதின் கண்களில் தாரை தாரையாகக் கண்ணீர் வழிந்தோடியது. “அல்லாஹ் மிகப் பெரியவன். விமானத்தில் கோளாறு, பயங்கரப் புயல், பாதை தவறியது… இவையெல்லாம் ஏற்பட்டது எதற்கு என்று இப்பொழுதுதான் எனக்கு நன்றாகப் புரிகிறது. அல்லாஹ் டாக்டர் அஹ்மதுவைச் சந்திப்பதற்கு உங்களுக்கு வழியை ஏற்படுத்தித் தரவில்லை. மாறாக, டாக்டர் அஹ்மதுவையே உங்களிடம் நேரடியாக அனுப்பி வைத்திருக்கிறான். ஆம்! நான்தான் டாக்டர் அஹ்மத்…” என்று கூறினார் டாக்டர்.

  திடுக்கிட்ட அந்த அம்மையாரின் கண்களில் ஆனந்தக் கண்ணீர். உடனே தன் கைகளை உயர்த்தி இவ்வாறு கூறினார்: “யா அல்லாஹ்! நீ மகா பெரியவன், மகா கருணையாளன்…!”

  அந்த மின்னஞ்சல் இத்தோடு நிறைவுற்றது. மின்னஞ்சலின் இந்தக் கடைசி வரிகளைப் படித்தவுடன் என் கண்கள் குளமாயின. பிரார்த்தனைக்குத்தான் எத்துணை வலிமை! கருணையாளனான அல்லாஹ் தன் அடியார்களின் பிரார்த்தனைகளுக்கு எவ்வாறெல்லாம் பதிலளிக்கின்றான்!

  

  தன் அடியார்களைப் பிரார்த்தனை புரியும்படி அல்லாஹ் ஊக்குவிக்கவும் செய்கின்றான்.

  (நபியே!) என் அடியார்கள் என்னைப் பற்றி உம்மிடம் கேட்டால், “நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன். அவர்கள் என்னிடமே (பிரார்த்தித்துக்) கேட்கட்டும். என்னையே நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்” என்று கூறுவீராக. (சூரா அல் பகரா 2 : 186)

  “பிரார்த்தனை… அதுவே ஒரு வணக்கம்” என்று ஏந்தல் நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள். நம் தேவைகளைக் கேட்பதற்கு, நம் மனப் பாரத்தை இறைவனின் முன்பு இறக்கி வைப்பதற்கு நமக்கு நன்மையையும் அள்ளித் தரும் அற்புத மார்க்கம்தான் இஸ்லாம்.

  பிரார்த்தனைகள்தான் எத்தனை வகை? மனிதர்கள் பலவிதம். ஒவ்வொரு மனிதருக்கும் வெவ்வேறு விதமான தேவைகள். பல்வேறு விதமான பிரச்னைகள். அந்தத் தேவைகளை அடைவதற்கு, பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு அவர்களுக்கிருக்கும் ஒரே வழி பிரார்த்தனைதான். பிரார்த்தனைக்கென்று சில வழிமுறைகள் இருக்கின்றன. பிரார்த்தனை செய்யும்பொழுது ஏனோதானோவென்று செய்வதில் எந்தப் பலனும் இல்லை.

  மனத்தூய்மையோடு பிரார்த்தனை செய்வதுதான் மிக்க பலன்களைத் தரும். எங்கோ சிந்தனைகளை வைத்துப் பிரார்த்தனை செய்வதால் எந்தப் பலனும் ஏற்படப் போவதில்லை.

  “இன்னும் தெரிந்து கொள்ளுங்கள். மறதியான உள்ளத்தால் (நாவால் மாத்திரம்) கேட்கப்படும் பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக்கொள்ள மாட்டான்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : திர்மிதீ)

  அல்லாஹ் ஏற்றுக்கொள்வான் என்ற உறுதியோடு பிரார்த்தனை செய்வது பிரார்த்தனையின் முக்கியமான அம்சம்.

  “அல்லாஹ் இந்தப் பிரார்த்தனையை ஏற்றுக்கொண்டு (எனக்கு) விடையளிப்பான் என்ற நோக்கத்தோடு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : திர்மிதீ)

  “என் அடியான் என்னை எப்படி எண்ணுகின்றானோ அப்படி நான் நடந்து கொள்கிறேன்” என்று அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : முஸ்லிம், திர்மிதீ)

  அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து, பூமான் நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத்து கூறிய பின் பிரார்த்தனையை ஆரம்பிக்கவும், முடிக்கவும் வேண்டும்.

  “என் மீது ஸலவாத்து சொல்லப்படும் வரைக்கும் ஒவ்வொரு பிரார்த்தனையும் திரையிடப்பட்டிருக்கின்றது” என்று நபியவர்கள் கூறியதாக அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

  அல்லாஹ் அருளிய அருட்கொடைகளைப் பொருந்திக்கொண்டும், தான் செய்த பாவங்களை ஏற்றுக் கொண்டும் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

  “இறைவா! நீ எனது இறைவன். நீயே என்னைப் படைத்தாய். நான் உனது அடிமை. நான் எனக்கு முடியுமான அளவுக்கு உனக்களித்த உடன்படிக்கையின் மீது இருப்பேன். வணங்கப்படுவதற்கு தகுதியுள்ளவன் உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை” என்று ஓர் அடியான் சொல்வது பாவமன்னிப்பில் உயர்ந்த பாவமன்னிப்பாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : புகாரீ)

  பிரார்த்தனை புரியும்பொழுது அல்லாஹ்விடத்தில் தன்னுடைய தேவையையும், இயலாமையையும், பலவீனத்தையும் எடுத்துச் சொல்ல வேண்டும். இன்பத்திலும், துன்பத்திலும் பிரார்த்திக்க வேண்டும்.

  “துன்பமான நேரத்தில் தன்னுடைய பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று யார் விரும்புகின்றாரோ அவர் மகிழ்ச்சியான நேரத்தில் அதிகம் பிரார்த்தனை செய்யட்டும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : புகாரீ)

  “மகிழ்ச்சியான நேரத்தில் அல்லாஹ்விடம் நீ அறிமுகமாகிக் கொள். கஷ்டமான நேரத்தில் அல்லாஹ் உன்னைத் தெரிந்து கொள்வான்” என நபி (ஸல்) அவர்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்கு வஸிய்யத்து செய்தார்கள்.

  பிரார்த்தனை புரியும்பொழுது எந்தவித அவசரத்தையும் காட்டக் கூடாது. நிதானமாகப் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

  “அவசரப்படாமல் உங்களில் ஒருவர் பிரார்த்திக்கும் பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக் கொள்கின்றான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : முஸ்லிம்)  

பிரார்த்தனை புரியும்பொழுது இரு கைகளையும் ஏந்தவேண்டும்.  

“தனது இரு கைகளையும் ஏந்தி நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள். நான் அப்பொழுது அவர்களின் அக்குளின் வெண்மையைப் பார்த்தேன்” என அபூ மூஸா அல் அஸ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார். (நூல் : புகாரீ)  

“நிச்சயமாக அல்லாஹ் வெட்கமுள்ளவனும், சங்கையுள்ளவனுமாவான். ஒரு மனிதன் தன் இரு கரங்களையும் உயர்த்தி பிரார்த்தனை செய்தால் அதை ஒன்றுமில்லாமல் வெறுங்கையோடு திருப்புவதற்கு அல்லாஹ் வெட்கப்படுகிறான்” என ஸல்மானுல் ஃபார்ஸீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல் : திர்மிதீ)  

பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படும் நேரங்கள்:

  1. நோன்பு துறக்கும்பொழுது.   2. லைலத்துல் கத்ர் இரவு.   3. இரவின் கடைசிப் பகுதி (தஹஜ்ஜுத் நேரம்).   4. ஃபர்லான தொழுகைகளின் இறுதிப் பகுதி.   5. பாங்குக்கும், இகாமத்துக்கும் இடையில்.   6. அரஃபா தினத்தில்.   7. ஜும்ஆவுடைய நாளின் ஒரு குறிப்பிட்ட நேரத்தில்.   8. கடமையான தொழுகைக்கு அதான் (பாங்கு) சொல்லப்படும் போது.   9. தொழுகையில் ஸஜ்தாவில் இருக்கும்பொழுது.   “உங்களில் ஒருவர் தன் இறைவனோடு மிகவும் நெருக்கமாக உள்ள நேரம் ஸஜ்தா செய்யும் நேரம். ஆகவே ஸஜ்தா செய்யும் நேரத்தில் அதிகம் பிரார்த்தனை செய்யுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : முஸ்லிம்)   “ஸஜ்தாவில் அதிகம் பிரார்த்தனை செய்யுங்கள். (அதில் கேட்கப்படும் பிரர்த்தனைகள் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு) தகுதியுள்ளது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)   10. சேவல் கூவும் பொழுது.   “சேவல் கூவுவதைக் கேட்டால் அல்லாஹ்விடம் அருளைக் கேளுங்கள். அது மலக்கைக் காணும்போதுதான் கூவுகின்றது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரீ)   11. பிரயாணி தன் பிரயாணத்தின் போது. (பைஹகீ)   12. பிற சகோதரருக்காகப் பிரார்த்திக்கும் பொழுது.

  “ஒருவன் தன் முஸ்லிம் சகோதரனுக்காக மறைமுகமாகக் கேட்கும் பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக்கொள்கின்றான். மற்ற சகோதரனுக்காக பிரார்த்தனை செய்யும் போதெல்லாம் அதற்கென்று நியமிக்கப்பட்ட மலக்கு அவனுடைய தலையருகில் நின்று கொண்டு, “இறைவா! இப்பிரார்த்தனையை ஏற்றுக்கொள்வாயாக. இன்னும் அல்லாஹ் உனக்கும் இதுபோல் தருவானாக” எனவும் பிரார்த்திப்பார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

  எப்படி பிரார்த்திக்க வேண்டும் என்று கற்றுத் தந்த கருணை நபிகள் (ஸல்) அவர்கள் எப்படி பிரார்த்திக்கக் கூடாது என்றும் கற்றுத் தந்துள்ளார்கள்.

  “உங்களுடைய உயிருக்கோ, பிள்ளைகளுக்கோ, பொருள்களுக்கோ பாதகமாக நீங்கள் பிரார்த்தித்து விடாதீர்கள்! ஏனெனில் அல்லாஹ் பிரார்த்தனையை ஏற்றுக் கொள்ளும் நேரமாக அது இருப்பின் உங்களுக்கே எதிராக அந்தப் பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்பட்டு விடும்.” (அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்துல்லாஹ், நூல் : முஸ்லிம்)

  இரத்த உறவைத் துண்டிப்பதற்கு அல்லது பாவம் செய்வதற்கு பிரார்த்திக்கக் கூடாது.

  “யாராவது ஒரு முஸ்லிம் பாவம் செய்வதற்கோ அல்லது சொந்த பந்தத்தைத் துண்டிப்பதற்கோ பிரார்த்தனை செய்யாமல் மற்ற விஷயங்களுக்காக பிரார்த்தனை செய்தால் இறைவன் மூன்றில் ஏதேனும் ஒரு விதத்தில் இவ்வாறு பதில் அளிக்கிறான்:

  1) அவன் கேட்டதைக் கொடுத்து விடுகிறான்,   2) மறுமைக்காக அதன் நன்மையைச் சேர்த்து வைக்கிறான்,   3) பிரார்த்தனையின் அளவு அவனுக்கு ஏற்படும் தீங்கைப் போக்கி விடுகிறான்   என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதைக் கேட்ட ஒரு நபித்தோழர்,

  “அப்படியென்றால் அல்லாஹ்வின் தூதரே, நாங்கள் அதிகமாக பிரார்த்தனை செய்யப் போகிறோம்” என்றார். அதற்கு நபியவர்கள், “அல்லாஹ்விடம் மிகவும் அதிகம் இருக்கின்றது” என்றார்கள். (அறிவிப்பவர் : அபூ ஸயீத் அல் குத்ரீ (ரலி), நூல் : ஹாகிம்)  

ஆக, நாம் கேட்கும் எந்தப் பிரார்த்தனையும் வீண் போகாது. நமது பிரார்த்தனைகளை ஒன்று அல்லாஹ் உடனே ஏற்று பதில் தருவான். அல்லது நாம் பிரார்த்தனை செய்த அளவுக்கு நன்மை மறுமையில் நமக்கு வந்து சேரும். அல்லது நமக்கு ஏற்படும் தீங்குகள் அகற்றப்படும். அந்தத் தீங்குகளின் அளவு நாம் செய்யும் பிரார்த்தனையின் அகல, ஆழத்தைப் பொறுத்து மாறுபடும். நாம் பன்னிப் பன்னி மன்றாடிக் கேட்கும் துஆக்கள் கபூல் ஆகவில்லையென்றால் அந்த அளவுக்கு நமக்கு வரப் போகும் வேறு பல துன்பங்களை அல்லாஹ் அகற்றி விடுவான் என்று பொருள்.

  ஆதலால் எத்தனை காலம்தான் பிரார்த்திப்பது, ஒன்றும் நடக்கவில்லை என்று நாம் சலித்துக்கொள்ளவோ, நிராசையடையவோ தேவையில்லை. விடாமல் நமது தேவைகளை அல்லாஹ்வின் மன்றத்தின் முன் வைத்துக்கொண்டே இருக்கவேண்டியதுதான். அது தட்டுகின்ற இடத்தைத் தட்டி, முட்டுகின்ற இடத்தை முட்டும். அல்லாஹ் அதில் கண்டிப்பாக மேற்கண்ட மூன்றில் ஒரு பலனை வைத்திருப்பான்.

  கருணையுள்ள ரஹ்மான் திருக்குர்ஆனில் நமக்கு பல பிரார்த்தனைகளைக் கூறியுள்ளான். அண்ணல் நபி (ஸல்) அவர்களும் அழகிய பிரார்த்தனைகளைக் கற்றுத் தந்துள்ளார்கள்.  

அந்தப் பிரார்த்தனைகளைக் கவனித்தீர்கள் என்றால் அங்கே ஓர் அழகு மிளிர்வதைக் காண்பீர்கள். சுருக்கமான வார்த்தைகளில் அதிகப் பொருட்கள் அடங்கியவையாக அவை இருக்கும். எனவே நாமே சுயமாக வார்த்தைகளைப் போட்டு பிரார்த்திப்பதை விட இந்தப் பிரார்த்தனைகளைக் கேட்டால் அதிகப் பலன்கள் விளையும்.

  பிரார்த்தனைகளைக் கேட்கும்பொழுது அல்லாஹ்விடம் உரிமையுடன் கேட்க வேண்டும்.

  “உங்களில் எவரேனும் பிரார்த்தனை செய்தால் அதனை வலியுறுத்திக் கேட்கட்டும். ‘நீ விரும்பினால் தா!’ என்று எவரும் கேட்க வேண்டாம். ஏனெனில் அவனை நிர்ப்பந்தம் செய்வோர் எவருமில்லை.” (அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல் : புகாரீ)

  மனிதனுக்கு பிரச்னைகள் அதிகாமாகும்பொழுது அதனை மனதிலேயே போட்டு பாரத்தை ஏற்றிக்கொண்டிராமல் இன்னொரு மனிதரிடம் அந்தப் பிரச்னைகளைச் சொன்னால் மனதின் பாரம் இறங்கிப் போகும்.

  இந்த மனக்குறைகளை யார் யாரிடமோ சொல்வதை விட வல்ல இறைவனிடம் இறக்கி வையுங்கள். மனச் சுமையும் நீங்கும். பிரார்த்தனை வணக்கம் என்பதால் நன்மையும் கிட்டும். அதற்குத் தகுந்த பலன்களும் பலிக்கும்.

  இன்றைய பரபரப்புக் காலகட்டத்தில், பணிச் சுமைகளுக்கிடையில் நமக்கு ஏற்படும் படபடப்பு, மன உளைச்சல் போன்றவற்றைக் களைய இறைப் பிரார்த்தனை அதிகம் செய்தல் நலம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதனால் தேவையற்ற நோய்கள் வருவது தவிர்க்கப்படுகிறது. எனவே பிரார்த்தனையின் வலிமையை உணர்ந்து, உளப்பூர்வமாக வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்தித்து ஈருலகிலும் வெற்றிகளை ஈட்டுவோமாக!  

Thanks: http://kayalpatnam.com/columns.asp?id=55






1 மன அமைதிக்கான மிக முக்கிய காரணங்கள்:

ஓர் இறைநம்பிக்கையாளரின் மன அமைதி என்பது உண்மையான ஈமான், அல்லாஹ் மீதான உறுதி, அவனது விதியை ஏற்றுக்கொள்ளுதல், அவனை அதிகமாக நினைவுகூருதல் மற்றும் அவனுக்குக் கீழ்ப்படிதல் ஆகியவற்றின் கனியாகும். உள்ளத்தில் அல்லாஹ்வுடனான தொடர்பு எந்தளவுக்கு வலுப்பெறுகிறதோ, அந்தளவுக்கு மன அமைதி அதிகரித்து கவலைகள் குறையும்.

2 இஸ்லாம் என்பது சட்டங்களும் விதிகளும் அல்ல...!

தண்டனைகள் மட்டுமே குற்றச்செயல்களை ஒழிக்கும் அதிமுக்கிய காரணி என்பது இஸ்லாத்தின் பார்வை அல்ல. குற்றம் உருவாகும் காரணங்களை தடுத்து குற்றங்கள் நிகழாமல் காப்பதே மிக முக்கியம்.

3 அவளுக்காக நான் இதை மறக்கவே மாட்டேன்

ஆறுதல் என்பது சில நேரங்களில் உலகத்திலுள்ள அனைத்து செல்வங்களை விடவும் மேலானதாக இருக்கும்

4 அவர்கள் என்னைத் துரத்திவிடுவார்களா?

மொழியின் மூலைமுடுக்கெல்லாம் தேடினாலும், இதைவிட வலிமிகுந்த ஒரு கேள்வியை நீங்கள் காண முடியாது: "அவர்கள் என்னைத் துரத்திவிடுவார்களா?"

5 திருக்குர்ஆனின் அற்புதம் - வானமும் பூமியும் அழவில்லை - பிர்அவ்ன்

முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பே இச்சம்பவங்கள் நிகழ்ந்துவிட்டன. அக்காலகட்டத்தில் எகிப்தின் மொழி அறபி அல்ல. கி.பி. ஏழாம் நூற்றாண்டில், கலீபா உமர் (ரலி) அவர்களின் காலத்தில் எகிப்து இஸ்லாமிய ஆட்சியின் கீழ் வந்த பிறகே அங்கு அறபு மொழி பரவத் தொடங்கியது.

6 ஒரு ஆறுதல் வார்த்தை, ஒருவரின் மறுமை வாழ்வையே மாற்றக்கூடும்.
7 ரமலானை வரவேற்கும் துஆ
8 ரமலான் நோன்பின் 10 முக்கிய நோக்கங்கள்
9 அவர்களும் சதித் திட்டங்களை தீட்டினார்கள். அல்லாஹ்வும் திட்டங்களை தீட்டினான் - 2 அற்புத உதாரணங்கள்
10 அல்லாஹ் நம்மை நேசிக்கிறானா இல்லையா என்பதை நாம் எப்படி நிர்ணயிப்பது?
11 எல்லா பிரச்சனைக்கும் தீர்வு - நடமாடும் குர்ஆனாக நாம் மாறவேண்டும் -
12 காசா! ஒரு துன்பம் மகிழ்ச்சியானது
13 தடுமாறாத குதிரை இல்லை. சறுக்காத பாதம் இல்லை.
14 ︎நேர்மை என்பது...
15 செய்யும் உதவிகளுக்காக, மனிதர்களின் பாராட்டை எதிர்பார்க்க வேண்டாம்
16 போட்டோ: பாலஸ்தீன குழந்தைகள் மீது இஸ்ரேலின் போர்
17 பாலஸ்தீனத்தின் பெருமை
18 திருச்சி சகோதரர்களின் கவனத்திற்கு: சோழ இளவரசி குந்தவை நாச்சியார்
19 இஸ்லாமிய வங்கி இயலின் தந்தை மறைந்தார்!
20 உணரப் படாத தீமை சினிமா
21 நான் ஏன் முஸ்லிம் ஆனேன்? - முன்னாள் கன்னியாஸ்திரி!
22 ஆறுதல் சொல்லச் சென்றோர் ஆறுதல் பெற்றுத் திரும்பிய அதிசயம்!
23 விரக்தி விஷத்தை விட கொடியது
24 பொறுத்தோம்! ஆனால் பொறுக்கமாட்டோம் யா ரஸூலுல்லாஹ்!
25 வாழ்க்கைக்கான பாடம் பாடப்புத்தகத்தில் அல்ல; போதிப்பவர்களின் வாழ்க்கையில் இருக்கிறது.
26 நரக மாளிகை - தாய் மண்ணின் மீது பற்று கொண்ட ஒவ்வொரு இந்தியனும் கட்டாயம் படிக்க வேண்டிய நூல்!
27 இங்கிலாந்தில் தப்லீக் ஜமாத் அனுபவங்கள்
28 அந்தப் பெண்களாக நாம்...
29 தன்னிகரற்ற தமிழகத்து உலமாபெருமக்கள் வரிசையில்
30 2021 ல் தமிழகம் இழந்த ஆலிம்கள்:
31 இமாம் அபுல் ஹஸன் நத்வி ரஹிமஹுல்லாஹ்
32 நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்ட 10 துஆக்கள்,
33 நோன்பும் மனக்கட்டுப்பாடும்
34 இவ்வளவு முரண்பாடுகளுடன் இறைவனிடம் கையேந்த வெக்கமாயில்ல!?
35 ஐரோப்பாவின் பிரபல்யமான அறிவுத் திருட்டுகள்.....
36 திருமணப் பதிவேடு எழுதுவதில் அக்கறையின்மை......!
37 நீ வரைந்த பாதை வழியே வாழ்க்கை ஓடுவதில்லை
38 முதியோர் பராமரிப்பு – இஸ்லாமிய கண்ணோட்டம்
39 இளையான்குடியில் உருது மக்கள்
40 கொண்டாடப்பட வேண்டிய ஆளுமைகள் : ஈரோடு மீ. கிபாயத்துல்லாஹ் பாகவி
41 மரணம் நோக்கி...
42 ஸிமம் தஃப்தரி (ZIMEM DEFTERI) - ஏழைகளின் கடனையடைத்தல்
43 மௌலானா சாத்(தா.ப) அவர்களுக்காக ஜரோப்பாவிலுள்ள ஒருதாயியின் அன்பான செய்தி
44 பேசாமல் இரு, கதவை அல்லாஹ் எப்படித் திறக்கிறான் என்று பார்
45 (புத்தாண்டு) கொண்டாட்டங்களை விட மனித உயிர்கள் அற்பமானவையா..?
46 அதுவென்ன சுன்னத் வல் ஜமாஅத்?
47 இறந்த பின் வாழ சந்தர்ப்பம்.
48 இங்கிலாந்து மசூதி வீடியோ சொல்லும் உண்மைகள்!
49 பாரதியும் இஸ்லாமும் - மாலன்
50 பயணியின் வாழ்க்கை - பேரா. ஹஸனீ
51 கண்ணாடி வாழ்கை - பேரா. ஹஸனீ
52 ஆடை அவிழ்ப்பு அழகாகுமா......
53 நபிகளாரும் காட்சிப்படுத்துதலும் (Visualization)
54 அன்றாட வாழ்வில் இஸ்லாம் - 02
55 அன்றாட வாழ்வில் இஸ்லாம் - 01
56 பெண்களிடம் மாற்றம் வேண்டும்
57 எம் சமூகம் இந்த உலகை ஆளும்
58 தவிர்ப்போம் நாற்காலி தொழுகைகளை...
59 வாய்ப்புகளை நழுவ விடாதீர்கள்!
60 பிரான்சால் நாடுகடத்தப் பட்டு பின்னர் பாராட்டப்பட்ட போராளி
61 மனம் திறந்த மடல் - மனம் திருந்திய தொண்டன்
62 ரமளானில் சமூக நலனுக்காக நாம் செய்ய வேண்டிய துஆ
63 புனித மிஃராஜ் இரவு அமல்கள்!
64 புனிதமான ரஜப் மாதத்தின் மிஃராஜ் இரவின் சிறப்புகள்
65 மனைவிக்காக துஆ செய்வதும் ஒரு சுன்னத்!
66 மனித உடம்பின் 99 இரகசியங்கள் !
67 தஹஜ்ஜூத் தொழுகையின் சிறப்பு
68 ஒவ்வொரு முஸ்லீமும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை
69 எது வணக்கம்..?
70 விஞ்ஞானிகளுக்கெல்லாம்- விஞ்ஞானி.... அல்ஹாசன்விஞ்ஞானி!
71 அன்பு மனைவிகளுக்கு ! அருமையான உபதேசங்கள்!!
72 தமிழ்க் கலாச்சாரத்தை ஆதரிப்போம்.இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பாதுகாப்போம்.
73 இமாம் அபூ ஹனீஃபா (ரஹ்)
74 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 5)
75 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 4)
76 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 3)
77 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 2)
78 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 1)
79 தாயாருக்கு மருந்து வாங்க பணமில்லை ஆனாலும் வேண்டாம் இந்த நான்கு கோடி - ஜுனைத் ஜம்சேத்
80 மீலாது விழா கொண்டாடுவது கூடுமா?
81 இஸ்லாத்தில் பெண்களின் சிறப்பு:
82 நாட்டங்கள் நிறைவேற ஸலாத்துன் நாரிய்யா ஓதுவோம்
83 வைரங்கள் நாங்கள்! - பொது சிவில் சட்டம் பற்றி ஓர் இஸ்லாமிய பெண்
84 அறிவமுதூட்டிய எங்கள் ஆன்மீக ஆசான் கமாலுத்தீன் ஹள்ரத் கிப்லா அவர்கள்......பற்றிய ஒர் மலரும் நினைவு
85 ஆண் மகனின் வாழ்வியல் சோதனை !!!
86 மனைவியை_நேசிங்கள்..
87 தாயுடன் வாழும் வாய்ப்புப் பெற்றவர்களே!
88 அம்மா! அம்மா!
89 அந்த_ஏழைப்_பெண்ணின்_ஜகாத்‬!
90 இந்திய சுதந்திர போராட்ட நாயகர்கள்
91 செருப்புத் தொழிலாளியின் ஹஜ் பயணம்
92 இமாம்களும் மத்கபுகளும்.
93 பெற்றோர்க்கு மரியாதை செய்யுங்கள்.
94 சொர்க்கத்தில் முதலில் நுழையும் ஏழைப் பெண்மணி..!
95 பராஅத் இரவின் சிறப்புகள்
96 வாப்பா!
97 ஆண்ட்ராய்டு போனும் அண்ணலாரின் உம்மத்தும்!
98 கிராமமோ... நகரமோ... அவர்களை கண்காணித்த​படி இருப்பதே பாதுகாப்பது
99 கருத்துக்குக் கருத்தால் பதிலளிப்போம்!
100 அரிய பண்புகளைக் கொண்ட அல்கமா (ரலி)வின் குழு
101 இதிலென்ன வெட்கம்?
102 தாய் மடி தேடும் குழந்தைகள்: (வல்லூரின் கரங்களில் நாம்)
103 பழையன கழிதலும் புதியன புகுதலும்
104 நொண்டிக் குதிரைக்குச் சறுக்கியதே சாக்கு !
105 கற்பில் கவனம் தேவை
106 வம்புக்கு இழுப்பதில் என்ன சுகம் இவர்களுக்கு?
107 புக்கூரும் (காலை நேரமும்) இறையருளும்
108 இஸ்திஃகாராவின் சிறப்பு
109 தஜ்ஜால் பற்றிய முன்னறிவிப்பும் பாதுகாப்பிற்கான வழிமுறையும்.
110 இஸ்லாத்தின் பார்வையில் கோபம்!!!
111 உங்களையும் தாக்கலாம் இந்த நோய்!
112 தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-3/3)
113 தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-2/3)
114 தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-1/3)
115 ஏழு குணங்களை தவிர்ந்து கொள்ளுங்கள்! நிம்மதி பெறுங்கள்!
116 கணவன் மனைவி – அற்புதமான விஷயங்கள்.
117 வீட்டுப் பெண்களின் வீடியோ போஸ்
118 எச்சரிக்கை: இப்போதாவது விழித்துக்கொள்வோம்.
119 இறுக்கமும் இரக்கமும்
120 இஷா தொழுகையும் இரவு உணவும்
121 கழிவறைகளில் கிப்லா முன்னோக்கப்பட கூடாது
122 மனிதன் உயிர்வாழ இன்றியமையாதது
123 தினமணி தலையங்கம்: 'இறைவா, எங்கே போகிறோம்?'
124 இறைவணக்கமும் இயலாமையும் (சேரில் அமர்ந்து தொழலாமா?)
125 மரணம் நம் கண்களை தழுவட்டுமே
126 முஸ்லிம் சமூகத்தின் வீட்டுமொழியாக வேண்டிய மொழி அறபு மொழி
127 பெயர்களை நினைவில் வைப்போம்
128 ஊடகங்கள் பரப்பிவரும் முன்ஜென்மபித்தலாட்டம்
129 இறை பிரியத்தோடு உலகில் தலைநிமிர்ந்து வாழ
130 ஹிஜ்ரீ பிறந்த வரலாறு
131 மனிதனுக்கான சுவனத்தை பரிந்துரைக்கும் இரண்டு விடயம்
132 சீனாவில் இஸ்லாம் அறிமுகம்
133 ஆட்சியை நாம் தேடவேண்டுமா? அல்லது ஆட்சி நம்மைத் தேடவேண்டுமா? (பாகம் 2/2)
134 முஸ்லீம் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் தொண்டு நிறுவனங்கள் !...
135 ஒரு 2.5 கதை
136 ஆட்சியை நாம் தேடவேண்டுமா? அல்லது ஆட்சி நம்மைத் தேடவேண்டுமா? (பாகம் ½)
137 இம்ரானா விவகாரம் மீடியாக்கள் நடத்திய மானபங்கம்
138 உலகத்தில் யாருமே ஏழை இல்லை
139 பராஅத் இரவு –நாம் பெற வேண்டிய படிப்பினைகள்பகைமையை முடிவுக்கு கொண்டு வருவோம்
140 வ.உ.சி க்கு 10 லட்சம் ரூபாய்க்கு கப்பல் வாங்கி கொடுத்த பக்கீர் முஹம்மதுவை தெரியுமா?
141 நம் துஆக்கள் ஏன் கபூலாவதில்லை?
142 நபிமொழியை மெய்ப்பித்தது இன்றைய விஞ்ஞானம்!!!
143 குறைகளை மறைத்தல்
144 உலகத்தூதர் கூறிய உண்மை சகோதரத்துவம்!
145 நல்ல பெண்மணி
146 பிஸ்மில்லாஹ் சொல்லியாச்சா...? பாரம்பரியமும் நாகரீகமும்
147 💥 யார் அந்த மாமனிதர்..?
148 ஈர்ப்பை விதைப்போம்!
149 ஒரே ஒரு கேள்வி 10 விதமான அற்புதமான பதில்கள்
150 யார் இந்த துலுக்கன்?
151 ஷஹீத் இமாம் ஹஸனுல் பன்னாவின் 10 அறிவுரைகள்
152 இவ்வுலகிலும் மறு உலகிலும் தன்னிறைவு தரக்கூடிய விஷயங்கள்
153 முஸ்லிம் உலகம் இஸ்லாத்தை தொலைத்து விட்டதா ?
154 உலமாக்களின் தகுதி… அந்தக் காலம் எப்போது வரும்
155 நிம்மதி - சிறுகதை
156 வாழும் இறைநேசர்களிடம் வாழ்த்துப் பெறுவோம் !
157    ஓ...மானிடனே,என்னை தெரிகிறதா?
158 சுலைஹாவின் தவறை உணர்த்திய கணவனின் கடிதம்!
159 நபி வழி வெற்றிக்கு வழி இஸ்லாத்தில் தெரிந்து கொள்ளவேண்டியவை.
160  வாழ்க்கை வாழ்வதற்கே !
161 உம்மதினரின் மீது பெருமானாரின் அளவு கடந்த அன்பு
162 விற்கப்படும் மார்க்கம்
163 அழகிய ஐம்பெருங் குணங்கள் !
164 தன்னம்பிக்கை கொள்ளுங்கள் !
165 பார்வைகள் பலவிதம் !
166 நேர மேலாண்மை / திட்டமிடல்
167 பள்ளிக்கு அருகில் வாழ்வோம்
168 எச்சரிக்கை: தொலைக்காட்சியில் போட்டி என்ற பெயரில் மோசடி
169 அந்நியப் பெண்ணுடன் ஆண் - அந்நிய ஆணுடன் பெண் கைகுலுக்கலாமா?
170 தந்தைகளே! கவனியுங்கள்
171 வரலாறு புகட்டும் பாடம்
172 அல்குர்ஆன் என்னும் மதுரம்
173 முஸ்லிம்கள் செய்ய வேண்டியது என்ன?
174 ஊருக்குள் விடாதீர்..விளம்பரமல்ல விபரீதம்!!
175 கஸ்டம்ஸில் எச்சரிக்கையாக இருங்கள்!
176 நாம் தான் முயல வேண்டும்.
177 குழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள்!
178 காசாகும் குடும்ப அந்தரங்கங்கள். எச்சரிக்கை!!
179 கற்பா? கல்லூரியா?
180 கசாப்புத் தொழில் சிறந்தது....
181 சுவர்க்கத்தை பரிசாக பெற்றுத் தரும் நற்கிரியைகள்
182 நான் ஏன் முஸ்லிம் ஆனேன் ?
183 ரகசிய கேமராக்கள்: பெண்களே எச்சரிக்கை!
184 இருளை நோக்கிச்செல்லும் வெளிச்சமுள்ள சமுதாயம்! தீர்வு என்ன? எப்படி செயல்படுத்துவது?
185 செல்வந்தர் மகனுக்கு கூறிய மரண சாசனம். (சிறுகதை)
186 மேற்கத்திய கலாச்சாரம் TO இஸ்லாம்- முஸ்லிம் பெண்ணியவாதியின் பயணம்
187 என் ஹிஜாப் என் உரிமை!!!
188 சபைகளில் கண்ணியம் தவறும் கணவர்கள்
189 முகமாகும் பெண்கள்!!
190 நற்குணமே இஸ்லாத்தின் அடையாளமாகும்!
191 இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்
192 உங்கள் தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுகிறது?!
193 அன்புச் செல்வங்களுக்கு....(நமக்கும்) - கேள்வி பதில்கள்
194 செல்போன்கள்... ஜாக்கிரதை!
195 இணையதளத்தில் கனவன்-மனைவி அந்தரங்க உரையாடல் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்
196 வெற்றியடைய 10 சுலபமான வழிகள் !
197 ஒரு வழிப்போக்கனின் வாழ்க்கைப் பயணம்!
198 மிஸ்டு காலா... பெண்களே எச்சரிக்கை!
199 ஈமானே-உன் விலையென்ன?
200 இஸ்லாமியரும்-எதிர் நீச்சலும்
201 நாளை நமதா? - ஏ.பி. முஹம்மது அலி ஐ.பி.எஸ். (ஓய்வு)
202 அமைதியாக இருந்தால் அமைதி வருமா ?
203 அமர்ந்தது போதும் எழுந்து வாருங்கள் பயணிப்போம்
204 பயங்கரவாதிகள் எல்லாம் முஸ்லிம்களா?
205 ஒளிரட்டும் பண்மைமிகு மீலாது விழாக்கள் ! ஒழியட்டும் வன்மையிலிருந்து மீளாத விழாக்கள் !!
206 கட்டாய மத மாற்றத்திற்கு இஸ்லாத்தில் இடமில்லை
207 மக்தப் மதரஸா ... ஒரு அமைதிப் புரட்சி
208 யுக முடிவின் இறுதிக்கட்டமா நெருங்கிவிட்டது?
209 "ஜம் ஜம்” தண்ணீர் தோன்றிய வரலாறு
210 மெட்ராஸ் ஐ - குறித்த உண்மைகள் :
211 ஹிஜ்ரீ பிறந்த தியாகங்களின் வரலாறு !
212 தாமிரபரணியை உறிஞ்ச வரும் 'பெப்சி' நிறுவன ஆலை
213 பிள்ளைகளை பாதுகாப்பாக வளர்க்க பெற்றோர்களுக்கு சில அழகிய வழி முறைகள்:
214 அறிவைத் தேடுவோம்!
215 தமிழ் மண்ணில் வேர் கொள்ள முடியவில்லை!
216 ஒரு மகன் தன் அப்பாவைப்பற்றி என்ன நினைக்கிறான்?
217 பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா? ஏதிர்த்தாரா?
218 இந்திய முஸ்லிம்களின் முதல் எதிரி அல் காய்தா:
219 பிள்ளையாரப்பா பெரியப்பா,புத்திமதியை சொல்லப்பா
220 அவ்வளவு ஈமானா? அல்லாஹ்வின் மேல் அவ்வளவு நம்பிக்கையா?
221 என் மகனிடம் சொல்லுங்கள்:-ஒரு தாயின் மனக்குமுறல்!
222 சமூக நலத்திற்கு உகந்த சட்டம் எது?
223 “வேர்கள்” வரலாறு!
224 கருத்து வேறுபாடு சம்பந்தமாக சட்டங்கள்
225 என் மகனிடம் சொல்லுங்கள்:-ஒரு தாயின் மனக்குமுறல்!
226 கலீல் அஹ்மத் கீரனூரி (ரஹ்) அவர்களின் அல்அஃப்லாக் வல்அவ்காத் நூல் அறிமுகம்
227 மனிதனின் தேவை ! – மன அமைதி
228 யா அல்லாஹ் ரஜப் ஷஃபான் மாதங்களில் எங்களுக்கு அருள் புரிவாயாக. இன்னும் ரமளானை அடையச் செய்வாயாக
229 அண்ணல் நபிகளாரின் பொன் மொழிகள்-மெளனம் கொள்ளுங்கள்.
230 அல்லாஹ் அறிவுறுத்தும் அமுதமொழிகள்
231 பிரார்த்தனைகள் ஏன் ஏற்கப்படவில்லை?
232 மஸ்ஜித் (பள்ளிவாசல்)
233 பேச்சு,மெளனம்
234 ஜனாஸா - மைய்யத்
235 கிலாஃஃபா மறைவு: இந்தியா தடுமாறியது.. எகிப்து கவலையுற்றது
236 ஹஜ் யாத்திரை - சில சிந்தனைகள் !!!
237 ஜெனரல் எர்வின் ரோமல் கண்ட காலித் இப்னு வலீத் (ரலி )
238 முஸ்லிம்களை ஏன் பயங்கரவாதிகளாக சித்தரிக்க முற்படுகிறார்கள்?
239 வெளிநாடுகளில் வேலை செய்யும் என் சகோதரர்களே!
240 அரிஸ்டாட்டில் முதல் நியூட்டன் வரை
241 இறை நேசர்கள்- தொடரும் விளக்கம்
242 வலிமார்கள் என்பவர்கள் யார்?
243 காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயீல் ஸாஹிப் அவர்களின் பதில் சொல்லும் பாங்கு
244 அமைதியாக இருந்தால் அமைதி வருமா ?
245 மனித குல விரோதி
246 எனது பெயர் ஜனாஸா!
247 பாபரா ராமர் கோயிலை இடித்திருப்பார்???
248 கடன் கொடுப்போரும் வாங்குவோரும் நடந்து கொள்ள வேண்டிய முறை
249 மோடியை விட்டு 2002 ஏன் விலகாது?
250 இஸ்லாம் வாள் முனையில் பரப்பப்பட்டதா?
251 வதைக்கும் விவாகரத்து வழக்குகள்
252 ஹிந்து - குறித்து இஸ்லாம்!
253 தமிழரும் இசுலாமியரும்
254 குர்ஆன் மக்தப் - காலத்தின் தேவை!
255 இஸ்லாம் மிருக வதையை தூண்டுகின்றதா?
256 மில்லர் கண்ட குர்ஆனின் அதிசயங்கள்
257 முஹம்மது(ஸல்) எனக்கு நடுநிலையானவர்
258 முஸ்லிமல்லாதவர்களுக்கு ஒரு கடிதம்
259 அயோத்தி ராமன் அழுகிறான் -கவிஞர் வைரமுத்து
260 துருக்கி மன்னரின் விலை 10 பொற்காசுகளே!
261 கற்பனைகளும் இஸ்லாமும்
262 வணங்கி மகிழ்கிறோம் - ஆச்சிரியம் ஆனால் உண்மை.
263 சுத்தம் பேணுவோம்,நுரையீரலை காப்போம்!
264 நபிகள் நாயகத்தை வசைபாடிப் படம் எடுத்தவர்....
265 மது ஒரு பெரும் பாவம்
266 மகாத்மா காந்தி, பெரியார் சந்திப்பு
267 பெற்றோர்களைப் பேணுவோம்!
268 யார் இவர்? பேச்சாளர்..போர் வீரர்..இராணுவ தலைவர்..
269 சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-3)
270 உடல் உறுப்புகளை தானம் செய்வதுபற்றி இஸ்லாம்
271 தவ்பா என்னும் பாவமன்னிப்பின் சிறப்புகள்!
272 சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-2)
273 சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-1)
274 இதயத்தை கவனமா பாத்துக்கங்க!
275 இமாம்களை கண்ணியம் செய்வோம்!
276 உமர் (ரலி) அவர்களுக்கு நண்பர்கள் எழுதிய கடிதம்.
277 மறுமை வாழ்வை நேசிப்போம்!
278 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 8 - முடிவு)
279 சொல்லின் செல்வர் எம்.எம். பீர் முஹம்மது சாகிப்
280 சுதேசி சிந்தனைகள்.......
281 உள்ளத்தை தூய்மை படுத்துவோம்!
282 கல்வி நல்லோர்களின் சொத்து!
283 மனிதர்களுக்கு மீன்கள் சொல்லும் பாடம்!
284 வாழ்க்கைக்கு உதவும் வாய்மைமொழிகள்! (தொடர்- 1)
285 வாழ்க்கைக்கு உதவும் வாய்மைமொழிகள்! (தொடர்- 2)
286 பாராளுமன்ற தேர்தலும் முஸ்லிம்களின் நிலைபாடும்!
287 தொடர்பூடக ஒழுக்கவியல்: அல்குர்ஆனின் வழிகாட்டல்
288 உண்ணுவதிலும்,குடிப்பதிலும் தூய்மையை பேணுவோம்!
289 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 7)
290 செயற்கைக் கருத்தரிப்பும் வாடகைத் தாயும்!
291 அறிவைத் தேடுவோம்!
292 ஆக்காதீர் ஆசனங்களாக
293 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 5, 6)
294 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 3)
295 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 4)
296 மோதினார் அப்பாவின் கதை அல்ல நிஜம்
297 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 1)
298 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 2)
299 ஸுபுஹ் தொழுகையும் நாமும் ???
300 ஆஸாத் விசாவா?உஷார்,உஷார்!
301 அதிகாலை நேரமும் சுபுஹுத் தொழுகையும்
302 தன்பக்கமா? தன்னிகரற்ற கொள்கையின் பக்கமா?
303 சமுதாய தலைவர்களே சிந்தியுங்கள்!
304 படிப்பினையூட்டும் ஒரு நிகழ்வு!
305 உபதேசம் என்பது உலமாக்களின் தனி உடைமையா?
306 பெண் குழந்தை ஒரு பாக்கியம்
307 டாக்டர் ஜாகீர் ஹுசைன் – கல்வியுடன் சுகாதாரத்தையும், ஒழுக்கத்தையும் கற்றுத்தந்தவர்
308 வெப்கேமிரா...எச்சரிக்கை...!
309 நான் ஒருத்தனிடம் ஏமாந்தேன் நீ என்னிடம் ஏமாறு என்பதே மல்டி லெவல் மார்கெட்டிங் - AMWAY Products
310 மனமகிழ் குடும்பம்:நல்லதோர் குடும்பத்தலைவி!
311 மனமகிழ் குடும்பம்: நல்லதோர் குடும்பத் தலைவன்
312 விசுவரூபம் ஒரு விளக்கம்
313 விஸ்வரூபமும் முஸ்லீம்களும்.
314 மதுவை ஒழிப்போம்,மாதுவை காப்போம்!
315 வாழ்க்கைக்காக ஒரு மரணம்
316 கண்ணாடிகள் கவனம்
317 360 மூட்டுக்கள் (எலும்பு இணைப்புக்கள்) Bone Joints..! ( 7-ம் நூற்றாண்டு முன்னறிவிப்பு )
318 ஷைத்தானின் விரோதிகளும், நண்பர்களும்
319 ஹஜ்ரத் அலி (ரலி) அவர்களின் அறிவுரைகள்
320 துஆக்கள் ஏன் ஒப்புக்கொள்ளப் படுவதில்லை?
321 சிந்திக்க தவறும் ஆண்களுக்கு மட்டும்
322 கருத்து வேறுபாடுகள்.
323 நபியவர்கள் எங்கள் உயிருக்கு மேல்
324 ஹிஜாபுக்குப்பின் கண்ட வாழ்க்கை
325 யூத கிருத்துவ வக்கிரப்படமும் விமர்சனங்களை வென்ற விண்புகழ் வேந்தரும்
326 தஜ்ஜால் Vs டெலிவிஷன்
327 ஓ! என் இளைய சமுதாயமே!
328 இதயத்தை பாதுகாக்க யோசனைகள்!
329 வீண் செலவு வேண்டாமே