Tamil Islamic Media

கருத்துக்குக் கருத்தால் பதிலளிப்போம்!

கடந்த 21.09.2012 அன்று ஜாவத்தை ஜுமுஆ பள்ளிவாசலில் அஷ்ஷெய்க் ஏ.ஸி. அகார் முஹம்மத் (நளீமி) அவர்கள் ஆற்றிய உரையின் சுருக்கத்தை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கின்றNhம்.

தூய்மையும் ஒழுக்கமும் நிறைந்த, உலகமே போற்றுகின்ற ஒரு மாமனிதரை இன்றைய நாகரிகமான உலகில் அநாகரிகமாக சித்திரித்துக் காட்டியிருக்கிறார்கள் முதலாம் உலக நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று தம்மை பறைசாற்றிக் கொள்பவர்கள்.

Muslims Protestமனித உரிமைகளை மீறாதவர்கள், பண்பாடனவர்கள், ஜனநாயகத்தை மதிப்பவர்கள், எழுத்துச் சுதந்திரத்தையும் கருத்துச் சுதந்திரத்தையும் என்றும் எப்போதும் கட்டிக்காப்பவர்கள், பிறரைப் புண்படுத்தாதவர்கள், பயங்கரவாதத்தை அழிக்க வந்தவர்கள், தீவிரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வந்தவர்கள் என தம்மைச் சொல்லிக் கொள்பவர்கள்தான் 160 கோடி மக்களின் இதயங்களில் வாழ்கின்ற புனிதமான இறைத்தூதரை திரைப்படம் என்ற பெயரில் மிகக் கேவலமாக வர்ணித்;து உலக அமைதிக்கு உளைவைத்துள்ளார்கள்.

நமது நாட்டில் ஒரு குக்கிராமத்தில் வாழும் எழுத்தறிவில்லாத ஒரு மனிதன்கூட இவ்வளவு மட்டரகமாக நடப்பானா? நடந்தாலும் நமது நாடோ மூன்றாம் உலக நாடுகளோ கிழக்குலகமோ அதனை அனுமதிக்குமா? நிச்சயமாக அனுமதிக்காது! நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை இலக்கு வைத்து கேவலப்படுத்துகின்ற முயற்சியை இவர்கள் நீண்டகாலமாகவே கனகச்சிதமாகச் செய்து வருகிறார்கள். இத்தொடரான வேலைகளைப் பார்க்கும்போது முஸ்லிம்களை சீண்டிவிடுவதற்கான விளையாட்டாக இவற்றை எடுத்து விட்டார்களோ என நினைக்கத் தோன்றுகிறது.

சுமார் 13 நிமிட முன்னோட்டக் காட்சிகளைக் கண்டு முழு முஸ்லிம் சமூகமும் கொதித்தெழுந்திருக்கும் இச்சந்தர்ப்பத்தில், எரியும் நெருப்பில் எண்ணெய் வார்ப்பது போல பிரான்ஸ் நாட்டில் நபியவர்களைக் கேவலப்படுத்தி சில கேலிச் சித்திரங்களை ஒரு பத்திரிகை வெளியிட்டிருக்கிறது. “அதிர்ச்சியில் இருப்பவர்களுக்கு மேலும் அதிர்ச்சி அளிக்க உள்ளோம்” என அப்பத்திரிகையின் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். உண்மையில் முஸ்லிம் சமூகத்தைப் பார்த்து எள்ளி நகையாடுகின்ற ஒரு நிலையை இவர்கள் உருவாக்க முயற்சிக்கின்றார்கள்.

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை உயிரிலும் மேலாக மதிக்கின்ற நாங்கள்  இச்சந்தர்ப்பத்தில் அவர்களுக்குச் செய்ய வேண்டிய மிகப் பெரிய சேவை எதுவாக இருக்க முடியும்?

Muslims Protestஇன்று உலகின் மூலை முடுக்குகளிலெல்லாம் இந்த விவகாரத்தை அலச ஆரம்பித்திருக்கிறார்கள். யார் இந்த  முஹம்மத்? இவருடைய குணங்கள் என்ன? இவரின் தனிப்பட்ட, அந்தரங்க, குடும்ப வாழ்க்கை எவ்வாறு இருந்தது? 160 கோடிக்கு மேற்பட்ட மக்கள் இந்த மனிதருக்காக ஏன் இவ்வளவு உணர்ச்சிவசப்படுகிறார்கள்? என்றெல்லாம் கேள்வி எழுப்பும் இச்சந்தர்ப்பத்தை சிறந்த வாய்ப்பாகக் கருதி உலகில் வாழும் எஞ்சிய 540 கோடி மக்களுக்கும் நபியவர்களை அழகாக அறிமுகப்படுத்தக்கூடிய அரிய சந்தர்ப்பம் நமக்குக் கிடைத்துள்ளது.

அவர்கள் குறுந்திரைப்படம் தயாரித்து நபியவர்களை கேவலப்படுத்துகிறார்களா? நாம் ஒன்றல்ல, நபியவர்கள் குறித்து சிறந்த பல படங்களை தயாரித்து வழங்க வேண்டும்.

சில மாதங்களுக்கு முன்னர் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களைப் பற்றி அற்புதமான படமொன்றைத் தயாரிக்கும் பெரு முயற்சி  ஷேய்க் யூஸுப் அல்கர்ளாவியின் வழிகாட்டலுடன், இஸ்லாமிய வரையறைகளைப் பேணி முடுக்கி விடப்பட்டிருக்கின்ற செய்தியைக் கேள்வியுற்று நாம் மகிழ்ச்சியடைகின்றோம். நிச்சயமாக அந்தப்படம் வெளிவருகின்றபோது நபியவர்கள் குறித்து மனித சமுதாயம் சிறந்த தெளிவைப் பெற்றுக் கொள்ளும் என நாம் நம்பலாம்.

சில வருடங்களுக்கு முன் நபியவர்களைக் கேவலப்படுத்தி கார்ட்டூன் வரைந்து வெளியிட்டார்கள்; பின்னர் 'பித்னா' என்ற பெயரிலே குறுந்திரைப்படம் ஒன்றை வெளியிட்டார்கள்.  இப்போது மற்றுமொரு திரைபடத்தின் முன்னோட்டத்தை வெளியிட்டிருக்கிறார்கள்.  இதே நேரத்தில் அமெரிக்காவில் வாழும் சோமாலியா நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் எழுத்தாளர்  முஸ்லிம்களின் சீற்றத்தை தூண்டும் நோக்கோடு கட்டுரை ஒன்றை எழுதி வெளியிட்டிருக்கிறார்.

முதலாவதாக, நாம் இதன் பின்னணியிலுள்ள யதார்த்தத்தை மிகச் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். இதற்கெதிராக எமது நடவடிக்கை எவ்வாறு அமைய வேண்டும் என்பது மிகச் சரியாகத் தீர்மானிக்கப்பட வேண்டும். எமது உணர்வுகள், கோபம், அதிருப்தியை வெளிப்படுத்தும் அதேவேளை, அவை இஸ்லாமிய வரையறைகளை மீறிவிடாது பார்த்துக் கொள்ளல் வேண்டும். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கற்றுத் தந்த பண்பாடுகளை எந்நிலையிலும் மீறி விடக்கூடாது. இஸ்லாம் கூறுகின்ற ஆன்மிக, தார்மீக ஒழுக்கப் பண்பாடுகளை மீறியதாக எமது செயல்கள் அமைந்து விடுகின்றபோது அது எதிரிகளுக்கு சாதகமாக அமைந்துவிடும். அவர்களின் எதிர்பார்ப்பும் கைகூடி விடும்.

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றை எல்லோர் மத்தியிலும் எடுத்துச் சொல்லக்கூடிய அரியதொரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதனை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஆரம்பத்தில் வந்த 'பித்னா' என்ற படத்தைத் தொடர்ந்து சில மேற்குலக நாடுகளில் அல்குர்ஆன் மொழிபெயர்ப்புப் பிரதிகள்  வேகமாக விற்பனையாகின. எல்லோரும் இஸ்லாத்தைப் பற்றித் தேடிக் கற்க ஆரம்பித்தார்கள்; நபியவர்களின் வாழ்க்கை வரலாற்றை ஆராய ஆரம்பித்தார்கள். எனவே, இது நபிகளார் குறித்தும் அன்னாரின் வாழ்வு குறித்தும் நாமும் அறிந்து முழு மனித சமூகத்துக்கும் எடுத்துச் சொல்வதற்கான சிறந்த சந்தர்ப்பமாகும்.

காந்திஜி, சரோஜினி நாயுடு, தத்துவ மேதை பேர்னாட் ஷோ, THE HUNDRED  என்ற நூலை எழுதிய மைக்கல் எச் ஹார்ட் போன்ற நூற்றுக்கணக்கான முஸ்லிமல்லாத அறிஞர்கள் கூட நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் ஒழுக்கத்திற்கும் பண்பாட்டுக்கும் சான்று பகர்ந்திருக்கிறார்கள். இவற்றையெல்லாம் எடுத்துச் சொல்ல வேண்டும்.

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை காமுகராகவும் பெண் பித்தராகவும் இவ்வுலகிற்கு அறிமுகப்படுத்த இவர்கள் படாதபாடு படுகிறார்கள். நபியவர்களின் காலத்தில்கூட இந்தளவு அவர்கள் விமர்சிக்கப்படவில்லை. சூனியக்காரன், பைத்தியக்காரன், புரளியைக் கிளப்புகிறான் என்று கூறினார்களே தவிர, நபியவர்களின் ஒழுக்க விவகாரத்தில் கை வைக்கவில்லை. அவர்களது இளமைப் பருவம், வாலிபப் பருவம் குறித்து எவ்வித குற்றச்சாட்டும் முன்வைக்கப்படவும் இல்லை.

நீங்கள் மிக உயர்ந்த பண்பாடுள்ளவராக இருக்கிறீர்” என நபிகளாரைப் பார்த்து குர்ஆன் குறிப்பிட்டபோது இஸ்லாத்தின் எதிரிகள்கூட மௌனம் சாதித்தார்கள். சபா குன்றின் மீது ஏறி, “இந்த மலைக்குப் பின்னால் இந்த மக்கமா நகரைத் தாக்குவதற்கு ஒரு படை வருகிறது என நான் கூறினால் நீங்கள் நம்புவீர்களா?” எனக் கேட்டபோது அனைவரும் ஒத்த குரலில், “நிச்சயமாக நாம் நம்புவோம். ஏனெனில், எந்தக் கட்டத்திலும் நீங்கள் உண்மைக்குப் புறம்பாகப் பேசியதை நாம் கண்டதில்லை. நீங்கள் அல்அமீன்- நம்பிக்கைக்குரியவர், அஸ்ஸாதிக்- உண்மை பேசுபவர்” என்று சாட்சி சொன்னார்கள். அதற்குப் பின்னர் “நான் அல்லாஹ்வின் தூதராக வந்திருக்கிறேன், நம்புவீர்களா?” எனக் கேட்டபோதுதான் அதனை பலரால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை.

இன்று உலகத்திலிருக்கின்ற ஒரு தலைவராவது மனித சமூகத்திற்கு முன்னால் துணிச்சலோடு எழுந்து நின்று, “நான் எப்போதாவது பொய் சொல்லியிருக்கிறேனா?” எனக் கேட்க முடியுமா?

ஒழுக்க சீர்கேட்டின் உறைவிடங்களாக இருப்பவர்கள்தான் நபியவர்களின் ஒழுக்கத்தைப் பற்றி விமர்சிக்கிறார்கள்.  ஒரினத் திருமணத்தையும் விபசாரத்தையும் ஆகுமாக்குபவர்கள் 1400 வருடங்களுக்கு முன்னால் மிகச் சிறந்த ஒழுக்கசீலராக வாழ்ந்த நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை ஒழுக்கம் கெட்டவர் எனக் கூறுவது எவ்வளவு வினோதமாக உள்ளது.

அந்தப் 13 நிமிடத் திரைப்படத்தில் நடித்திருப்பவர்களுள் பலர் ஆபாசத் திரைப்பட நடிகர்கள். இவர்களுக்கு ஏன் ஒழுக்க வாழ்க்கை தேவைப்பட்டது?

இஸ்லாம் உலகில் வேகமாகப் பரவி ஒரு சக்தியாக வளர்ந்து வருவதைத் தடுக்க வேண்டும் என்ற பகையுணர்வும் காழ்ப்புணர்ச்சியுமே இதன் பின்னணியில் தொழிற்படுகின்றன.

வரலாறு நெடுகிலும் கீழைத்தேயவாதிகள் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களைப் பற்றி அசிங்கமாகப் பேசியிருக்கிறார்கள் .ஆனால் இந்தளவு கேவலமாக, ஆதாரமற்ற விதத்தில் நபிகளார் மீது சேறு பூசப்படவில்லை.

ஆர்ப்பாட்டம், ஊர்வலம், பேரணிகள், கண்டனங்கள் போன்றவற்றுக்கு இஸ்லாத்தில் அனுமதி உண்டு. ஆனால் இவற்றினூடாக இஸ்லாத்தின் தூதையும் தூதரையும் அழகிய விதத்தில் அறிமுகப்படுத்த வேண்டும். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் பெயரை வைத்து அரசியல் நடத்தக் கூடாது.

நபி மீதுள்ள எமது அன்பையும் பாசத்தையும் யதார்த்தபூர்வமாக நிரூபிப்பதாக இருந்தால்  நபிகளார் பற்றிய நூல்களை வெளியிடுவது, கட்டுரைகளை எழுதுவது, மாநாடுகளை நடத்துவது, ஒன்றுகூடல் நிகழ்ச்சிகளை நடத்துவது, நாம் தொழில் புரிகின்ற காரியாலயங்களில் நபிகளாரின் வாழ்க்கையைப் பற்றி அழகாக அறிமுகப்படுத்துவது போன்ற காத்திரமான பணிகளில் நாம் ஈடுபட வேண்டும். அந்தக் கடப்பாடு எம்மீது இருக்கிறது.

உங்களில் சிறந்தவர் தன்னுடைய மனைவி மக்களுக்கு, குடும்பத்தாருக்கு சிறந்தவர். உங்கள் அனைவரிலும் நான் குடும்பத்திற்கு சிறந்தவராக இருக்கின்றேன்.” என நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.

நபியவர்களின் இந்த வாக்கை உண்மைப்படுத்த வேண்டுமெனில் அவர்களின் வாழ்வைக் கற்க வேண்டும். அவர்கள் ஏன் ஆஇஷா நாயகியைத் திருமணம் முடித்தார்கள்? ஹப்ஸா, மைமூனா, உம்மு ஹபீபா, ஜுவைரியா போன்றவர்கள் எந்தப் பின்புலத்தில் திருமணம் முடிக்கப்பட்டார்கள்? இஸ்லாம் கூறும் பலதார திருமணத்தின் தாத்பரியம் என்ன? என்பவற்றையெல்லாம் ஒரு முஸ்லிம் தெரிந்திருக்க வேண்டும். உணர்ச்சிபூர்வமான கோஷங்களை எழுப்புவதற்கு அப்பால் அறிவுபூர்வமாக ஒரு முஸ்லிம் தன்னைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்

அச்சு ஊடகம், இலத்திரனியல் ஊடகம், பேஸ்புக், டுவிட்டர் முதலான சமூக வலைத்தளங்கள் அனைத்தையும் பயன்படுத்தி பிறருக்கு தெளிவை வழங்க வேண்டிய தார்மீகக் கடப்பாடு ஊடகவியலாளர்கள், ஊடக அமைப்புக்கள், இஸ்லாமிய அமைப்புக்கள் அனைவர் மீதும் உண்டு.

நபிகளார் மீது தொடராக மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த அடாவடித்தனங்களுக்கு எதிராக தக்க பாடம் கற்பிக்காமல் தன்னை ஒரு முஸ்லிம் ஊடகவியலாளன்,முஸ்லிம் துறைசார் நிபுணர் என அழைத்துக் கொள்வதில் எவ்விதப் அர்த்தமுமில்லை.

நாம் கருத்துக்கு கருத்தால்தான் பதில் சொல்வோம்; கல்லாலோ கத்தியாலோ அல்ல.

“அல்லாஹ்வின் பாதையின் பக்கம் மக்களை ஞானத்தைக் கொண்டும் அழகிய உபதேசங்களைக் கொண்டும்  அழையுங்கள். (அவர்களுடன் விவாதிக்க நேர்ந்தால்) சிறந்த முறையில் அவர்களுடன் விவாதியுங்கள்.” (அல்குர்ஆன்) என்ற அல்குர்ஆனின் வழிகாட்டலுக்கமைய தர்க்கபூர்வமாக, அறிவு ரீதியாக, வரலாற்று ரீதியாக என எல்லாக்கோணங்களிலும் எமது வாதங்களை முன்வைக்கின்ற அளவுக்கு  எம்மை நாம் பலப்படுத்திக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறோம். இதுதான் இப்பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வாக இருக்க முடியும். முஸ்லிம்களுடைய எதிர்வினையை உலகமே அவதானித்துக் கொண்டிருக்கின்றது. இந்த அருமையான சந்தர்ப்பத்தில் எம்மிடம் கட்டுக்கோப்பும் திட்டமிட்ட நகர்வுகளின் அடிப்படையிலான அறிவூட்டலும் இருக்குமாயின் எமக்கு மிகச் சாதகமான சந்தர்ப்பமாக இது மாறும் என்பதில் சந்தேகமில்லை.

இத்திரைப்படத்தில் நபியவர்களை பெண் பித்தனாக வர்ணிக்கும் அதேவேளை, இரத்த வெறியராகவும் வர்ணிக்கிறார்கள். உண்மையில் நபிகளார் கல்நெஞ்சம் படைத்தவரா? தயவு தாட்சண்யமற்றவரா? இல்லை. ஏன் நாம் இந்த உண்மையை உலகிற்கு எடுத்துச் சொல்லாமல் ஊமைகளாகியிருக்கிறோம்?  ஊடகம் எம்மிடம் இல்லை என்பதுதான் இதற்கு முக்கிய காரணம்.

நபிகளார் உண்மையின் உறைவிடமாக இருந்தார்கள்; பண்பாட்டின் சிகரமாகத் திகழ்ந்தார்கள். தாயிபுக்குச் சென்ற நபிகளாரை சிறுவர்களைத் தூண்டி கல்லெறிந்து காயப்படுத்தினார்கள்; ஓட ஓட விரட்டினார்கள். ஆனால் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அவர்களை சபிக்கவில்லை; இவர்களை ஒரு நாள் நான் பழிவாங்குவேன் என்று சூளுரைக்கவில்லை.

யா அல்லாஹ் இந்த சமுதாயத்திற்கு நேர்வழி காட்டுவாயாக! இவர்கள் அறியாமையின் காரணமாக இப்படி என்னைக் காயப்படுத்துகிறார்கள், இவர்கள்தான் சத்தியத்தைப் புரிந்துகொள்ளாவிட்டலும், இவர்களின் சந்ததியாவது சத்தியத்தைப் புரிந்து கொள்வார்கள்” என்று சொன்ன நபிகளாரை இவர்கள் இரத்த வெறியராக, சகிப்புத்தன்மையற்றவராக சித்திரிப்பது எவ்வளவு கேவலமானது என்பதை நாம் உரத்துக் கூறக் கடமைப்பட்டுள்ளோம்.

தான் பிறந்து வளர்ந்த மண்ணிலிருந்து தன்னைத் துரத்திய, தன்னைக் கொலை செய்வதற்கு எல்லா சதி முயற்சிகளையும் செய்தவர்கள் மக்கா வெற்றியின்போது நபிகளாரின் கண்முன்னே நிற்கிறார்கள். சொந்த மண்ணை விட்டு விரட்டியவர்கள், நபிகளாரை இம்சைப்படுத்தியவர்கள், தொல்லைப்படுத்தியவர்கள் யாவரும் தமக்கு என்ன நடந்துவிமோ என்ற பயத்தில் நின்றபோது நபிகளார் கேட்கிறார்கள்:

“குறைஷிகளே! உங்களை நான் என்ன செய்வேன் என்று நினைக்கிறீர்கள்?”

அநியாயம் செய்த குறைஷிகளுக்கும் நபிகளாரின் நற்குணத்தின் மீதும் கருணையின் மீதும் நம்பிக்கை இருந்தது. குறைஷிகள் கூறினார்கள்:

“நீங்கள் நற்குணமுள்ள, கௌரவமான, தாராளத்தன்மையுடைய ஒரு சகோதரர்; அத்தகைய சகோதரனின் மகன். நிச்சயமாக உங்களிடமிருந்து நன்மையைத்தான் எதிர்பார்க்கிறோம்.”

கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டிய இவர்களைப் பார்த்து நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள்;:

“யூஸூப் தன் சமூகத்தாரைப் பார்த்து என்ன சொன்னார்களோ அதைத்தான் நானும் உங்களுக்குச் சொல்கிறேன். இன்று எந்தத் தண்டனையும் உங்களுக்குக் கிடையாது. நீங்கள் சுதந்திரமாகச் செல்லுங்கள்” எனக் கூறி அனைவரையும் மன்னித்து விடுதலை செய்கிறார்கள்.

புனைந்துரைக்கப்பட்ட, இட்டுக்கட்டப்பட்ட, வரலாற்றாசிரியர்கள் ஏற்க மறுத்த, நாம் பக்கச் சார்போடு கூறுகின்ற வரலாறல்ல இது. இந்த வரலாற்றை மீண்டும் ஒரு முறை உலகத்திற்கு ஞாபகப்படுத்த வேண்டியுள்ளது. அசத்தியம் ஓங்கி ஒலிக்கிறது என்பதற்காக அது சத்தியமாகி விடாது. சத்தியம் மௌனியாக இருப்பதற்காக அது தோல்வி கண்டதாகக் கருத முடியாது.

எனவே, உலமாக்கள், புத்திஜீவிகள், துறைசார் நிபுணர்கள், அரசியல் தலைவர்கள், இச்சந்தர்ப்பத்தில் தமது பங்களிப்புக்களை வழங்க முன்வர வேண்டும். குறிப்பாக ஊடகவியலாளர்கள்தான் இவ்வுலகின் உண்மையான போராளிகள். ஊடகமும் பேனாவும்தான் உலகின் முதன்மையான ஆயுதங்கள். கத்தியில்லாத இரத்தமில்லாத யுத்தத்தில் நாம் வெல்ல வேண்டுமா? சமுதாய அங்கத்தவர்களான நாம் அனைவரும் அண்டை அயலவர் முதல் முழு உலகத்திற்கும் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களது முழு வாழ்வை, அதன் சரியான பக்கத்தை எடுத்துச் சொல்ல வேண்டும். அது ஒன்றே இத்தகைய துர்ப்பிரசாரங்களை முறியடிப்பதற்கான ஓரே வழி.

தொகுப்பு: எம்.எல்.எம். அஸ்ஹர்

Source: http://www.sheikhagar.org/articles/muslimumma/316-summery-of-jawata-kuthba

 






1 திருக்குர்ஆனின் அற்புதம் - வானமும் பூமியும் அழவில்லை - பிர்அவ்ன்

முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பே இச்சம்பவங்கள் நிகழ்ந்துவிட்டன. அக்காலகட்டத்தில் எகிப்தின் மொழி அறபி அல்ல. கி.பி. ஏழாம் நூற்றாண்டில், கலீபா உமர் (ரலி) அவர்களின் காலத்தில் எகிப்து இஸ்லாமிய ஆட்சியின் கீழ் வந்த பிறகே அங்கு அறபு மொழி பரவத் தொடங்கியது.

2 ஒரு ஆறுதல் வார்த்தை, ஒருவரின் மறுமை வாழ்வையே மாற்றக்கூடும்.

எவரையும் குறைத்து மதிப்பிடாதீர்கள். நீங்கள் காட்டும் ஒரு சிறு கருணை அல்லது சொல்லும் ஒரு ஆறுதல் வார்த்தை, ஒருவரின் மறுமை வாழ்வையே மாற்றக்கூடும்.

3 ரமலானை வரவேற்கும் துஆ

நோன்பும் இரவுத் தொழுகையும் நிறைவேற்றும் சக்தியை எங்களுக்கு அருள்வாயாக. இம்மாதத்தை எங்கள் உள்ளங்களைத் தூய்மைப்படுத்தும் மாதமாகவும், தவறான எண்ணங்களை அழிக்கும் மாதமாகவும் ஆக்குவாயாக.

4 ரமலான் நோன்பின் 10 முக்கிய நோக்கங்கள்

அல்லாஹ்வின் பெயரால் ஆரம்பிக்கிறேன். நாம் அனைவரும் இந்த உலகிற்கு அனுப்பப்பட்டதன் நோக்கம் அல்லாஹ்வை வணங்குவதற்காக மட்டுமே. இந்த வழிபாடுகளில் மிக உயர்ந்தது, அல்லாஹ் சட்டமாக்கிய கடமைகளை நிறைவேற்றுவதாகும். நோன்பு என்பது ஒரு தனித்துவமான வணக்கம். ஏனெனில், இது 'ஒன்றைச் செய்வதால்' கிடைக்கும் நன்மையல்ல, மாறாக அல்லாஹ்வுக்காக 'சிலவற்றைத் தவிர்ப்பதால்' (உணவு, நீர், இச்சை) கிடைக்கும் நன்மையாகும்.

5 அவர்களும் சதித் திட்டங்களை தீட்டினார்கள். அல்லாஹ்வும் திட்டங்களை தீட்டினான் - 2 அற்புத உதாரணங்கள்

அல்குர்ஆன் கூறும் இரண்டு சரிதைகள். இரண்டுமே பேரற்புதம். 1. யூசுஃப் (அலை). 2. மூஸா (அலை). இரண்டு சரிதைகளுக்கும் இடையிலான அற்புதமான ஒப்பீட்டை அல்குர்ஆன் அழகாகச் சொல்லித் தருகிறது.

6 அல்லாஹ் நம்மை நேசிக்கிறானா இல்லையா என்பதை நாம் எப்படி நிர்ணயிப்பது?
7 எல்லா பிரச்சனைக்கும் தீர்வு - நடமாடும் குர்ஆனாக நாம் மாறவேண்டும் -
8 காசா! ஒரு துன்பம் மகிழ்ச்சியானது
9 தடுமாறாத குதிரை இல்லை. சறுக்காத பாதம் இல்லை.
10 ︎நேர்மை என்பது...
11 செய்யும் உதவிகளுக்காக, மனிதர்களின் பாராட்டை எதிர்பார்க்க வேண்டாம்
12 போட்டோ: பாலஸ்தீன குழந்தைகள் மீது இஸ்ரேலின் போர்
13 பாலஸ்தீனத்தின் பெருமை
14 திருச்சி சகோதரர்களின் கவனத்திற்கு: சோழ இளவரசி குந்தவை நாச்சியார்
15 இஸ்லாமிய வங்கி இயலின் தந்தை மறைந்தார்!
16 உணரப் படாத தீமை சினிமா
17 நான் ஏன் முஸ்லிம் ஆனேன்? - முன்னாள் கன்னியாஸ்திரி!
18 ஆறுதல் சொல்லச் சென்றோர் ஆறுதல் பெற்றுத் திரும்பிய அதிசயம்!
19 விரக்தி விஷத்தை விட கொடியது
20 பொறுத்தோம்! ஆனால் பொறுக்கமாட்டோம் யா ரஸூலுல்லாஹ்!
21 வாழ்க்கைக்கான பாடம் பாடப்புத்தகத்தில் அல்ல; போதிப்பவர்களின் வாழ்க்கையில் இருக்கிறது.
22 நரக மாளிகை - தாய் மண்ணின் மீது பற்று கொண்ட ஒவ்வொரு இந்தியனும் கட்டாயம் படிக்க வேண்டிய நூல்!
23 இங்கிலாந்தில் தப்லீக் ஜமாத் அனுபவங்கள்
24 அந்தப் பெண்களாக நாம்...
25 தன்னிகரற்ற தமிழகத்து உலமாபெருமக்கள் வரிசையில்
26 2021 ல் தமிழகம் இழந்த ஆலிம்கள்:
27 இமாம் அபுல் ஹஸன் நத்வி ரஹிமஹுல்லாஹ்
28 நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்ட 10 துஆக்கள்,
29 நோன்பும் மனக்கட்டுப்பாடும்
30 இவ்வளவு முரண்பாடுகளுடன் இறைவனிடம் கையேந்த வெக்கமாயில்ல!?
31 ஐரோப்பாவின் பிரபல்யமான அறிவுத் திருட்டுகள்.....
32 திருமணப் பதிவேடு எழுதுவதில் அக்கறையின்மை......!
33 நீ வரைந்த பாதை வழியே வாழ்க்கை ஓடுவதில்லை
34 முதியோர் பராமரிப்பு – இஸ்லாமிய கண்ணோட்டம்
35 இளையான்குடியில் உருது மக்கள்
36 கொண்டாடப்பட வேண்டிய ஆளுமைகள் : ஈரோடு மீ. கிபாயத்துல்லாஹ் பாகவி
37 மரணம் நோக்கி...
38 ஸிமம் தஃப்தரி (ZIMEM DEFTERI) - ஏழைகளின் கடனையடைத்தல்
39 மௌலானா சாத்(தா.ப) அவர்களுக்காக ஜரோப்பாவிலுள்ள ஒருதாயியின் அன்பான செய்தி
40 பேசாமல் இரு, கதவை அல்லாஹ் எப்படித் திறக்கிறான் என்று பார்
41 (புத்தாண்டு) கொண்டாட்டங்களை விட மனித உயிர்கள் அற்பமானவையா..?
42 அதுவென்ன சுன்னத் வல் ஜமாஅத்?
43 இறந்த பின் வாழ சந்தர்ப்பம்.
44 இங்கிலாந்து மசூதி வீடியோ சொல்லும் உண்மைகள்!
45 பாரதியும் இஸ்லாமும் - மாலன்
46 பயணியின் வாழ்க்கை - பேரா. ஹஸனீ
47 கண்ணாடி வாழ்கை - பேரா. ஹஸனீ
48 ஆடை அவிழ்ப்பு அழகாகுமா......
49 நபிகளாரும் காட்சிப்படுத்துதலும் (Visualization)
50 அன்றாட வாழ்வில் இஸ்லாம் - 02
51 அன்றாட வாழ்வில் இஸ்லாம் - 01
52 பெண்களிடம் மாற்றம் வேண்டும்
53 எம் சமூகம் இந்த உலகை ஆளும்
54 தவிர்ப்போம் நாற்காலி தொழுகைகளை...
55 வாய்ப்புகளை நழுவ விடாதீர்கள்!
56 பிரான்சால் நாடுகடத்தப் பட்டு பின்னர் பாராட்டப்பட்ட போராளி
57 மனம் திறந்த மடல் - மனம் திருந்திய தொண்டன்
58 ரமளானில் சமூக நலனுக்காக நாம் செய்ய வேண்டிய துஆ
59 புனித மிஃராஜ் இரவு அமல்கள்!
60 புனிதமான ரஜப் மாதத்தின் மிஃராஜ் இரவின் சிறப்புகள்
61 மனைவிக்காக துஆ செய்வதும் ஒரு சுன்னத்!
62 மனித உடம்பின் 99 இரகசியங்கள் !
63 தஹஜ்ஜூத் தொழுகையின் சிறப்பு
64 ஒவ்வொரு முஸ்லீமும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை
65 எது வணக்கம்..?
66 விஞ்ஞானிகளுக்கெல்லாம்- விஞ்ஞானி.... அல்ஹாசன்விஞ்ஞானி!
67 அன்பு மனைவிகளுக்கு ! அருமையான உபதேசங்கள்!!
68 தமிழ்க் கலாச்சாரத்தை ஆதரிப்போம்.இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பாதுகாப்போம்.
69 இமாம் அபூ ஹனீஃபா (ரஹ்)
70 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 5)
71 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 4)
72 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 3)
73 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 2)
74 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 1)
75 தாயாருக்கு மருந்து வாங்க பணமில்லை ஆனாலும் வேண்டாம் இந்த நான்கு கோடி - ஜுனைத் ஜம்சேத்
76 மீலாது விழா கொண்டாடுவது கூடுமா?
77 இஸ்லாத்தில் பெண்களின் சிறப்பு:
78 நாட்டங்கள் நிறைவேற ஸலாத்துன் நாரிய்யா ஓதுவோம்
79 வைரங்கள் நாங்கள்! - பொது சிவில் சட்டம் பற்றி ஓர் இஸ்லாமிய பெண்
80 அறிவமுதூட்டிய எங்கள் ஆன்மீக ஆசான் கமாலுத்தீன் ஹள்ரத் கிப்லா அவர்கள்......பற்றிய ஒர் மலரும் நினைவு
81 ஆண் மகனின் வாழ்வியல் சோதனை !!!
82 மனைவியை_நேசிங்கள்..
83 தாயுடன் வாழும் வாய்ப்புப் பெற்றவர்களே!
84 அம்மா! அம்மா!
85 அந்த_ஏழைப்_பெண்ணின்_ஜகாத்‬!
86 இந்திய சுதந்திர போராட்ட நாயகர்கள்
87 செருப்புத் தொழிலாளியின் ஹஜ் பயணம்
88 இமாம்களும் மத்கபுகளும்.
89 பெற்றோர்க்கு மரியாதை செய்யுங்கள்.
90 சொர்க்கத்தில் முதலில் நுழையும் ஏழைப் பெண்மணி..!
91 பராஅத் இரவின் சிறப்புகள்
92 வாப்பா!
93 ஆண்ட்ராய்டு போனும் அண்ணலாரின் உம்மத்தும்!
94 கிராமமோ... நகரமோ... அவர்களை கண்காணித்த​படி இருப்பதே பாதுகாப்பது
95 என் கேள்விக்கு இறைவனின் பதில்!
96 அரிய பண்புகளைக் கொண்ட அல்கமா (ரலி)வின் குழு
97 இதிலென்ன வெட்கம்?
98 தாய் மடி தேடும் குழந்தைகள்: (வல்லூரின் கரங்களில் நாம்)
99 பழையன கழிதலும் புதியன புகுதலும்
100 நொண்டிக் குதிரைக்குச் சறுக்கியதே சாக்கு !
101 கற்பில் கவனம் தேவை
102 வம்புக்கு இழுப்பதில் என்ன சுகம் இவர்களுக்கு?
103 புக்கூரும் (காலை நேரமும்) இறையருளும்
104 இஸ்திஃகாராவின் சிறப்பு
105 தஜ்ஜால் பற்றிய முன்னறிவிப்பும் பாதுகாப்பிற்கான வழிமுறையும்.
106 இஸ்லாத்தின் பார்வையில் கோபம்!!!
107 உங்களையும் தாக்கலாம் இந்த நோய்!
108 தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-3/3)
109 தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-2/3)
110 தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-1/3)
111 ஏழு குணங்களை தவிர்ந்து கொள்ளுங்கள்! நிம்மதி பெறுங்கள்!
112 கணவன் மனைவி – அற்புதமான விஷயங்கள்.
113 வீட்டுப் பெண்களின் வீடியோ போஸ்
114 எச்சரிக்கை: இப்போதாவது விழித்துக்கொள்வோம்.
115 இறுக்கமும் இரக்கமும்
116 இஷா தொழுகையும் இரவு உணவும்
117 கழிவறைகளில் கிப்லா முன்னோக்கப்பட கூடாது
118 மனிதன் உயிர்வாழ இன்றியமையாதது
119 தினமணி தலையங்கம்: 'இறைவா, எங்கே போகிறோம்?'
120 இறைவணக்கமும் இயலாமையும் (சேரில் அமர்ந்து தொழலாமா?)
121 மரணம் நம் கண்களை தழுவட்டுமே
122 முஸ்லிம் சமூகத்தின் வீட்டுமொழியாக வேண்டிய மொழி அறபு மொழி
123 பெயர்களை நினைவில் வைப்போம்
124 ஊடகங்கள் பரப்பிவரும் முன்ஜென்மபித்தலாட்டம்
125 இறை பிரியத்தோடு உலகில் தலைநிமிர்ந்து வாழ
126 ஹிஜ்ரீ பிறந்த வரலாறு
127 மனிதனுக்கான சுவனத்தை பரிந்துரைக்கும் இரண்டு விடயம்
128 சீனாவில் இஸ்லாம் அறிமுகம்
129 ஆட்சியை நாம் தேடவேண்டுமா? அல்லது ஆட்சி நம்மைத் தேடவேண்டுமா? (பாகம் 2/2)
130 முஸ்லீம் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் தொண்டு நிறுவனங்கள் !...
131 ஒரு 2.5 கதை
132 ஆட்சியை நாம் தேடவேண்டுமா? அல்லது ஆட்சி நம்மைத் தேடவேண்டுமா? (பாகம் ½)
133 இம்ரானா விவகாரம் மீடியாக்கள் நடத்திய மானபங்கம்
134 உலகத்தில் யாருமே ஏழை இல்லை
135 பராஅத் இரவு –நாம் பெற வேண்டிய படிப்பினைகள்பகைமையை முடிவுக்கு கொண்டு வருவோம்
136 வ.உ.சி க்கு 10 லட்சம் ரூபாய்க்கு கப்பல் வாங்கி கொடுத்த பக்கீர் முஹம்மதுவை தெரியுமா?
137 நம் துஆக்கள் ஏன் கபூலாவதில்லை?
138 நபிமொழியை மெய்ப்பித்தது இன்றைய விஞ்ஞானம்!!!
139 குறைகளை மறைத்தல்
140 உலகத்தூதர் கூறிய உண்மை சகோதரத்துவம்!
141 நல்ல பெண்மணி
142 பிஸ்மில்லாஹ் சொல்லியாச்சா...? பாரம்பரியமும் நாகரீகமும்
143 💥 யார் அந்த மாமனிதர்..?
144 ஈர்ப்பை விதைப்போம்!
145 ஒரே ஒரு கேள்வி 10 விதமான அற்புதமான பதில்கள்
146 யார் இந்த துலுக்கன்?
147 ஷஹீத் இமாம் ஹஸனுல் பன்னாவின் 10 அறிவுரைகள்
148 இவ்வுலகிலும் மறு உலகிலும் தன்னிறைவு தரக்கூடிய விஷயங்கள்
149 முஸ்லிம் உலகம் இஸ்லாத்தை தொலைத்து விட்டதா ?
150 உலமாக்களின் தகுதி… அந்தக் காலம் எப்போது வரும்
151 நிம்மதி - சிறுகதை
152 வாழும் இறைநேசர்களிடம் வாழ்த்துப் பெறுவோம் !
153    ஓ...மானிடனே,என்னை தெரிகிறதா?
154 சுலைஹாவின் தவறை உணர்த்திய கணவனின் கடிதம்!
155 நபி வழி வெற்றிக்கு வழி இஸ்லாத்தில் தெரிந்து கொள்ளவேண்டியவை.
156  வாழ்க்கை வாழ்வதற்கே !
157 உம்மதினரின் மீது பெருமானாரின் அளவு கடந்த அன்பு
158 விற்கப்படும் மார்க்கம்
159 அழகிய ஐம்பெருங் குணங்கள் !
160 தன்னம்பிக்கை கொள்ளுங்கள் !
161 பார்வைகள் பலவிதம் !
162 நேர மேலாண்மை / திட்டமிடல்
163 பள்ளிக்கு அருகில் வாழ்வோம்
164 எச்சரிக்கை: தொலைக்காட்சியில் போட்டி என்ற பெயரில் மோசடி
165 அந்நியப் பெண்ணுடன் ஆண் - அந்நிய ஆணுடன் பெண் கைகுலுக்கலாமா?
166 தந்தைகளே! கவனியுங்கள்
167 வரலாறு புகட்டும் பாடம்
168 அல்குர்ஆன் என்னும் மதுரம்
169 முஸ்லிம்கள் செய்ய வேண்டியது என்ன?
170 ஊருக்குள் விடாதீர்..விளம்பரமல்ல விபரீதம்!!
171 கஸ்டம்ஸில் எச்சரிக்கையாக இருங்கள்!
172 நாம் தான் முயல வேண்டும்.
173 குழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள்!
174 காசாகும் குடும்ப அந்தரங்கங்கள். எச்சரிக்கை!!
175 கற்பா? கல்லூரியா?
176 கசாப்புத் தொழில் சிறந்தது....
177 சுவர்க்கத்தை பரிசாக பெற்றுத் தரும் நற்கிரியைகள்
178 நான் ஏன் முஸ்லிம் ஆனேன் ?
179 ரகசிய கேமராக்கள்: பெண்களே எச்சரிக்கை!
180 இருளை நோக்கிச்செல்லும் வெளிச்சமுள்ள சமுதாயம்! தீர்வு என்ன? எப்படி செயல்படுத்துவது?
181 செல்வந்தர் மகனுக்கு கூறிய மரண சாசனம். (சிறுகதை)
182 மேற்கத்திய கலாச்சாரம் TO இஸ்லாம்- முஸ்லிம் பெண்ணியவாதியின் பயணம்
183 என் ஹிஜாப் என் உரிமை!!!
184 சபைகளில் கண்ணியம் தவறும் கணவர்கள்
185 முகமாகும் பெண்கள்!!
186 நற்குணமே இஸ்லாத்தின் அடையாளமாகும்!
187 இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்
188 உங்கள் தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுகிறது?!
189 அன்புச் செல்வங்களுக்கு....(நமக்கும்) - கேள்வி பதில்கள்
190 செல்போன்கள்... ஜாக்கிரதை!
191 இணையதளத்தில் கனவன்-மனைவி அந்தரங்க உரையாடல் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்
192 வெற்றியடைய 10 சுலபமான வழிகள் !
193 ஒரு வழிப்போக்கனின் வாழ்க்கைப் பயணம்!
194 மிஸ்டு காலா... பெண்களே எச்சரிக்கை!
195 ஈமானே-உன் விலையென்ன?
196 இஸ்லாமியரும்-எதிர் நீச்சலும்
197 நாளை நமதா? - ஏ.பி. முஹம்மது அலி ஐ.பி.எஸ். (ஓய்வு)
198 அமைதியாக இருந்தால் அமைதி வருமா ?
199 அமர்ந்தது போதும் எழுந்து வாருங்கள் பயணிப்போம்
200 பயங்கரவாதிகள் எல்லாம் முஸ்லிம்களா?
201 ஒளிரட்டும் பண்மைமிகு மீலாது விழாக்கள் ! ஒழியட்டும் வன்மையிலிருந்து மீளாத விழாக்கள் !!
202 கட்டாய மத மாற்றத்திற்கு இஸ்லாத்தில் இடமில்லை
203 மக்தப் மதரஸா ... ஒரு அமைதிப் புரட்சி
204 யுக முடிவின் இறுதிக்கட்டமா நெருங்கிவிட்டது?
205 "ஜம் ஜம்” தண்ணீர் தோன்றிய வரலாறு
206 மெட்ராஸ் ஐ - குறித்த உண்மைகள் :
207 ஹிஜ்ரீ பிறந்த தியாகங்களின் வரலாறு !
208 தாமிரபரணியை உறிஞ்ச வரும் 'பெப்சி' நிறுவன ஆலை
209 பிள்ளைகளை பாதுகாப்பாக வளர்க்க பெற்றோர்களுக்கு சில அழகிய வழி முறைகள்:
210 அறிவைத் தேடுவோம்!
211 தமிழ் மண்ணில் வேர் கொள்ள முடியவில்லை!
212 ஒரு மகன் தன் அப்பாவைப்பற்றி என்ன நினைக்கிறான்?
213 பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா? ஏதிர்த்தாரா?
214 இந்திய முஸ்லிம்களின் முதல் எதிரி அல் காய்தா:
215 பிள்ளையாரப்பா பெரியப்பா,புத்திமதியை சொல்லப்பா
216 அவ்வளவு ஈமானா? அல்லாஹ்வின் மேல் அவ்வளவு நம்பிக்கையா?
217 என் மகனிடம் சொல்லுங்கள்:-ஒரு தாயின் மனக்குமுறல்!
218 சமூக நலத்திற்கு உகந்த சட்டம் எது?
219 “வேர்கள்” வரலாறு!
220 கருத்து வேறுபாடு சம்பந்தமாக சட்டங்கள்
221 என் மகனிடம் சொல்லுங்கள்:-ஒரு தாயின் மனக்குமுறல்!
222 கலீல் அஹ்மத் கீரனூரி (ரஹ்) அவர்களின் அல்அஃப்லாக் வல்அவ்காத் நூல் அறிமுகம்
223 மனிதனின் தேவை ! – மன அமைதி
224 யா அல்லாஹ் ரஜப் ஷஃபான் மாதங்களில் எங்களுக்கு அருள் புரிவாயாக. இன்னும் ரமளானை அடையச் செய்வாயாக
225 அண்ணல் நபிகளாரின் பொன் மொழிகள்-மெளனம் கொள்ளுங்கள்.
226 அல்லாஹ் அறிவுறுத்தும் அமுதமொழிகள்
227 பிரார்த்தனைகள் ஏன் ஏற்கப்படவில்லை?
228 மஸ்ஜித் (பள்ளிவாசல்)
229 பேச்சு,மெளனம்
230 ஜனாஸா - மைய்யத்
231 கிலாஃஃபா மறைவு: இந்தியா தடுமாறியது.. எகிப்து கவலையுற்றது
232 ஹஜ் யாத்திரை - சில சிந்தனைகள் !!!
233 ஜெனரல் எர்வின் ரோமல் கண்ட காலித் இப்னு வலீத் (ரலி )
234 முஸ்லிம்களை ஏன் பயங்கரவாதிகளாக சித்தரிக்க முற்படுகிறார்கள்?
235 வெளிநாடுகளில் வேலை செய்யும் என் சகோதரர்களே!
236 அரிஸ்டாட்டில் முதல் நியூட்டன் வரை
237 இறை நேசர்கள்- தொடரும் விளக்கம்
238 வலிமார்கள் என்பவர்கள் யார்?
239 காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயீல் ஸாஹிப் அவர்களின் பதில் சொல்லும் பாங்கு
240 அமைதியாக இருந்தால் அமைதி வருமா ?
241 மனித குல விரோதி
242 எனது பெயர் ஜனாஸா!
243 பாபரா ராமர் கோயிலை இடித்திருப்பார்???
244 கடன் கொடுப்போரும் வாங்குவோரும் நடந்து கொள்ள வேண்டிய முறை
245 மோடியை விட்டு 2002 ஏன் விலகாது?
246 இஸ்லாம் வாள் முனையில் பரப்பப்பட்டதா?
247 வதைக்கும் விவாகரத்து வழக்குகள்
248 ஹிந்து - குறித்து இஸ்லாம்!
249 தமிழரும் இசுலாமியரும்
250 குர்ஆன் மக்தப் - காலத்தின் தேவை!
251 இஸ்லாம் மிருக வதையை தூண்டுகின்றதா?
252 மில்லர் கண்ட குர்ஆனின் அதிசயங்கள்
253 முஹம்மது(ஸல்) எனக்கு நடுநிலையானவர்
254 முஸ்லிமல்லாதவர்களுக்கு ஒரு கடிதம்
255 அயோத்தி ராமன் அழுகிறான் -கவிஞர் வைரமுத்து
256 துருக்கி மன்னரின் விலை 10 பொற்காசுகளே!
257 கற்பனைகளும் இஸ்லாமும்
258 வணங்கி மகிழ்கிறோம் - ஆச்சிரியம் ஆனால் உண்மை.
259 சுத்தம் பேணுவோம்,நுரையீரலை காப்போம்!
260 நபிகள் நாயகத்தை வசைபாடிப் படம் எடுத்தவர்....
261 மது ஒரு பெரும் பாவம்
262 மகாத்மா காந்தி, பெரியார் சந்திப்பு
263 பெற்றோர்களைப் பேணுவோம்!
264 யார் இவர்? பேச்சாளர்..போர் வீரர்..இராணுவ தலைவர்..
265 சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-3)
266 உடல் உறுப்புகளை தானம் செய்வதுபற்றி இஸ்லாம்
267 தவ்பா என்னும் பாவமன்னிப்பின் சிறப்புகள்!
268 சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-2)
269 சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-1)
270 இதயத்தை கவனமா பாத்துக்கங்க!
271 இமாம்களை கண்ணியம் செய்வோம்!
272 உமர் (ரலி) அவர்களுக்கு நண்பர்கள் எழுதிய கடிதம்.
273 மறுமை வாழ்வை நேசிப்போம்!
274 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 8 - முடிவு)
275 சொல்லின் செல்வர் எம்.எம். பீர் முஹம்மது சாகிப்
276 சுதேசி சிந்தனைகள்.......
277 உள்ளத்தை தூய்மை படுத்துவோம்!
278 கல்வி நல்லோர்களின் சொத்து!
279 மனிதர்களுக்கு மீன்கள் சொல்லும் பாடம்!
280 வாழ்க்கைக்கு உதவும் வாய்மைமொழிகள்! (தொடர்- 1)
281 வாழ்க்கைக்கு உதவும் வாய்மைமொழிகள்! (தொடர்- 2)
282 பாராளுமன்ற தேர்தலும் முஸ்லிம்களின் நிலைபாடும்!
283 தொடர்பூடக ஒழுக்கவியல்: அல்குர்ஆனின் வழிகாட்டல்
284 உண்ணுவதிலும்,குடிப்பதிலும் தூய்மையை பேணுவோம்!
285 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 7)
286 செயற்கைக் கருத்தரிப்பும் வாடகைத் தாயும்!
287 அறிவைத் தேடுவோம்!
288 ஆக்காதீர் ஆசனங்களாக
289 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 5, 6)
290 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 3)
291 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 4)
292 மோதினார் அப்பாவின் கதை அல்ல நிஜம்
293 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 1)
294 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 2)
295 ஸுபுஹ் தொழுகையும் நாமும் ???
296 ஆஸாத் விசாவா?உஷார்,உஷார்!
297 அதிகாலை நேரமும் சுபுஹுத் தொழுகையும்
298 தன்பக்கமா? தன்னிகரற்ற கொள்கையின் பக்கமா?
299 சமுதாய தலைவர்களே சிந்தியுங்கள்!
300 படிப்பினையூட்டும் ஒரு நிகழ்வு!
301 உபதேசம் என்பது உலமாக்களின் தனி உடைமையா?
302 பெண் குழந்தை ஒரு பாக்கியம்
303 டாக்டர் ஜாகீர் ஹுசைன் – கல்வியுடன் சுகாதாரத்தையும், ஒழுக்கத்தையும் கற்றுத்தந்தவர்
304 வெப்கேமிரா...எச்சரிக்கை...!
305 நான் ஒருத்தனிடம் ஏமாந்தேன் நீ என்னிடம் ஏமாறு என்பதே மல்டி லெவல் மார்கெட்டிங் - AMWAY Products
306 மனமகிழ் குடும்பம்:நல்லதோர் குடும்பத்தலைவி!
307 மனமகிழ் குடும்பம்: நல்லதோர் குடும்பத் தலைவன்
308 விசுவரூபம் ஒரு விளக்கம்
309 விஸ்வரூபமும் முஸ்லீம்களும்.
310 மதுவை ஒழிப்போம்,மாதுவை காப்போம்!
311 வாழ்க்கைக்காக ஒரு மரணம்
312 கண்ணாடிகள் கவனம்
313 360 மூட்டுக்கள் (எலும்பு இணைப்புக்கள்) Bone Joints..! ( 7-ம் நூற்றாண்டு முன்னறிவிப்பு )
314 ஷைத்தானின் விரோதிகளும், நண்பர்களும்
315 ஹஜ்ரத் அலி (ரலி) அவர்களின் அறிவுரைகள்
316 துஆக்கள் ஏன் ஒப்புக்கொள்ளப் படுவதில்லை?
317 சிந்திக்க தவறும் ஆண்களுக்கு மட்டும்
318 கருத்து வேறுபாடுகள்.
319 நபியவர்கள் எங்கள் உயிருக்கு மேல்
320 ஹிஜாபுக்குப்பின் கண்ட வாழ்க்கை
321 யூத கிருத்துவ வக்கிரப்படமும் விமர்சனங்களை வென்ற விண்புகழ் வேந்தரும்
322 தஜ்ஜால் Vs டெலிவிஷன்
323 ஓ! என் இளைய சமுதாயமே!
324 இதயத்தை பாதுகாக்க யோசனைகள்!
325 வீண் செலவு வேண்டாமே