பொறுத்தோம்! ஆனால் பொறுக்கமாட்டோம் யா ரஸூலுல்லாஹ்!

யா ரஸூலுல்லாஹ்!

எங்களது நாடுகளை ஆக்கிரமிக்கிறார்கள்.  பொறுத்துக் கொண்டிருக்கின்றோம்!
எங்களது இல்லங்களை சூறையாடுகிறார்கள். பொறுத்துக் கொண்டிருக்கின்றோம்!
எங்களது குழந்தைளை கொல்கின்றனர். பொறுத்துக் கொண்டிருக்கின்றோம்!
எங்களது பெண்களை மானபங்கம் செய்கின்றனர். பொறுத்துக் கொண்டிருக்கின்றோம்!
எங்களது சகோதர்களை அநியாயமாக சிறைப்பிடிக்கின்றனர். பொறுத்துக் கொண்டிருக்கின்றோம்!

ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து கடைசியில் மனிதனை கடித்தது போல் இன்று
உங்களது கண்ணியத்தின் மீதே கைவைக்க துணிந்துவிட்டனர் யாரஸூல்ல்லாஹ்!

எங்களால் பொறுக்கமுடியாது யாரஸூலுல்லாஹ்!
எங்களால் பொறுக்கமுடியாது யாரஸூலுல்லாஹ்!
நிச்சயம் எங்களால் பொறுக்கமுடியாது யாரஸூலுல்லாஹ்!

இதோ ஆஸ்திரேலியா முதல் அமெரிக்காவரை ஒன்றுபட்டு ஒரேகுரலில்
வீதியில் போராடும் முஸ்லீம்களின் காட்சி  இதன் சாட்சி யாரஸுலுல்லாஹ்!


நீங்கள் எங்களை விட்டு பிரிந்து ஆயிரத்து நானூறு ஆண்டுகள் ஆகிவிட்டன யாரஸுலுல்லாஹ்!

உங்களின் போதனைகளை மறந்துவிட்டோம் யாரஸூலுல்லாஹ்!
உங்களின் வழிமுறைகளை மறந்துவிட்டோம் யாரஸுலுல்லாஹ்!
நீங்கள் கற்றுத் தந்த அற்புதமான நற்குணங்களை மறந்துவிட்டோம் ரஸூலுல்லாஹ்!
உங்களது தோழர்களின் உன்னதமான வாழ்வினை மறந்துவிட்டோம் ரஸூலுல்லாஹ்!

ஆனால்

நாங்கள் உங்களை மறந்துவிடவில்லை யாரஸுலுல்லாஹ்!
நீங்கள் எங்களுக்காக செய்த அளப்பரிய தியாகங்களை மறக்கவில்லை ரஸூலுல்லாஹ்!
நீங்கள் எங்களுக்காக தாயிஃபில் பட்ட கல்லடிகளை மறக்கவில்லை ரஸூலுல்லாஹ்!
நீங்கள் எங்களுக்காக உஹதில் சிந்திய இரத்தத்தை மறக்கவில்லை ரஸூலுல்லாஹ்!
இரவில் உறங்காமல் கால்கள் வீங்க நின்று எங்களுக்காக இறைவனிடத்தில் ஏந்திய
கரங்களை, சிந்திய கண்ணீரை மறக்கவில்லை ரஸூலுல்லாஹ்!

இந்த உலகின் மாயவலையில் சிக்குண்டிருந்தாலும் எங்களின் அடிமனதில் நிரந்தரமாக குடி கொண்டிருக்கும் இவைகளின் வெளிப்பாடுதான் இந்தப் போராட்டங்கள் யாரஸுலுல்லாஹ்! இன்றைக்கும் எங்களை இணைக்கும் ஒரே பாலம் நீங்கள்தான் யாரஸுலுல்லாஹ்!


எங்களுக்காக இறைவனிடம் இறைஞ்சுங்கள் யாரஸுலுல்லாஹ்!

எங்களின் பாவ மன்னிப்பிற்காக! எங்களின் நிலைகள் மாறுவதற்காக!
உங்களின் உன்னதமான அடிச்சுவட்டை பின்பற்றுபவர்களாக!
தொழுகையை நிலை நிறுத்துபவர்களாக!
நோன்பு நோற்பவர்களாக!
ஜக்காத்தை முழுமையாக நிறைவேற்றுபவர்களாக!
ஹஜ்ஜை நிறைவேற்றுபவர்களாக!
நீங்களும் உங்களது தோழர்களும் காட்டிச் சென்ற உன்னதமான நற்குணங்களுக்குச் சொந்தக்காரர்களாக!

நாங்களும் முயற்சி செய்கிறோம்! யாரஸுல்லாஹ்!

என்று நாங்கள் இதில் வெற்றியடைகிறோமோ! அன்று நிச்சயமாக இந்த உலகம் எங்களது காலடியில் விழும் ரஸூலுல்லாஹ்!  உங்களது உத்தம தோழர்களின் காலடியில் விழுந்தது போல்!


யா அல்லாஹ்

எங்களது நிலைமைகளை மாற்றுவாயாக!
உள்ளங்களை திருப்புவனே எங்களது உள்ளங்களை முற்றிலுமாக உன்புறம் திருப்புவாயாக!
நபியவர்களின் பிரியத்தை எங்கள் சதை, ரத்தம், உணர்வு அத்துணையிலும் கலந்திடுவாயாக!.
சத்தியத்தை சத்தியமாக அறிந்து அதன்படி அமல் செய்வதற்கு அருள்புரிவாயாக!
அசத்தியத்தை அசத்தியமாக அறிந்து அதனை விட்டும் வெருண்டோட செய்வாயாக!

-    S. பீர் முஹம்மத் (நெல்லை ஏர்வாடி)
1-Oct-2012


No articles in this category...