கண்மணி நாயகமே வாழி! - அத்தாவுல்லா

கண்மணி  நாயகமே வாழி! - அத்தாவுல்லா

அண்ணல் நபிப் பெருமானின் வியர்வை, தலை முடி, நகங்களைக் கூட நபித் தோழர்கள் பாதுகாத்து வைத்திருந்தனர். அது குறித்து அடியேன் எழுதிய கவிதை ஒன்று ( கண்மணி நாயகம் - நூலில் இருந்து) நண்பர்களின்  பார்வைக்காக!

வியர்வைகளின்  நீரும்
விரும்புகிற நீராம்
வீசுமணம் கஸ்தூரி கமழும்

வெட்டி விடும் நகமும்
பொடித் திமையில் பூச
விலகிவிடும் நெருப்புக்குக் கவசம்

துயரம்  வரும்போது
தூயர் தலை மயிரும்
தொட்டு முகம் முத்திவிட அகலும்

தூதர் விரல் பட்டுத்
தெளிக்கும் துளி நீரும்
சுவனத்துப் பாலாற்றின் சுவைக்கும்

உயர்வுகளைத் தொட்டும்
எளிமைகளில்  வாழ்ந்த
உயிர் காக்கும் உம்மி நபி  வாழி

உள்ளறையில்  தங்கி
மண்ணறையில்  காக்கும்
உண்மைகளில் உயர்ந்த நபி வாழி!

 

- Parangi Pettai Khaleel Baaqavee,  Kuwait

  


No articles in this category...