Tamil Islamic Media

நாளை நமதா? - ஏ.பி. முஹம்மது அலி ஐ.பி.எஸ். (ஓய்வு)

நேற்று, 27.10.09 அன்று எனது முன்னாள் தமிழ் பேராசிரியருமும்-தற்போதைய �புதிய வாணிகம்�; ஆசிரியரான ஜனாப். முகம்மது ஹ_சைன் அவர்கள் தன் மகன் அப்துல் ரகீம் திருமணத்திற்கு அழைப்புக் கொடுப்பதிற்காக வந்தவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது, அவர் கொடுத்த செய்தி அதிர்ச்சி தரும்படி இருந்தது. அது என்ன? தனது பத்திரிக்கைக்கு விளம்பரம் வாங்கச் செல்லும் போது 90 சதவீத முஸ்லிம்கள் வியாபாரியாகவே உள்ளனர். சுமார் பத்து சதவீதம் தான் உற்பத்தியாளர்களாகவும், தொழிழ் முனைவர்களாகவும் உள்ளனர் என்றார்.
 
      அவர் சொன்ன தகவலை வைத்து எண்ண அலைகளை ஓட விட்டபின்பு-நம்மவர் சம்பாதிக்கச் சொல்லும் பழமொழி, �திரை கடலோடியும் திரவியம் தேடு� என்பது தான். ஆனால் அயல் மன்னில் சென்றவர்கள் படகு போன்ற கார்களில் பவனி வந்து-பங்களாக்களில் குடியிருப்பவர் சிலரே. நரம்பில் ஓடும் குருதியினை வேர்வையாக்கி வீடுகளில் கார் ஓட்டுதலும், கிளீனிங் வேலையிலும், கட்டிட வேலை, லிப்ட் ஆப்பரேட்டர், எலக்ட்ரிஷன், ஹோட்டல் சர்வர் போன்ற அடிமட்ட வேலை செய்யும் படிக்காத இளைஞர்கள் தான் அதிகம் என்றால் மிகையாகாது? நான் 1979 ஆம் ஆண்டு சிங்கப்பூர் சென்றபோது எனக்குத் தெரிந்தவர் ஒரு ஹோட்டலில் மீன் கழுவிக் கொண்டிருந்தார். பின்பு மலேசியா சென்றபோது இன்னொரு தெரிந்தவர் தனது தலைக்கு ஒரு தலையணை கூட இல்லாது உட்காரும் மரக்கட்டையினை வைத்து படுத்திருந்தார். இனனொரு நிகழ்ச்சி என்னை உண்மையிலே ஒரு கணம் உலுக்கி விட்டது. எங்கள் ஊருக்கு அருகில் உள்ள ஊரில் மலேசியா சபுர்ஆளி என்று பெருமையோடு வலம் வந்தவர்-அவர் சொந்த பந்தங்கள் எல்லாம் வசதியோடு வாழ்பவர்கள்;. அவருக்கு சுகர் வந்து ஒரு காலை முனங்காலுக்குக் கீழே எடுக்கப்பட்டதால் ஊருக்கு வருவதிற்கு கூச்சப்பட்டு வாழ்வதிற்காக ஒரு சாப்பிங் காம்ளக்ஸ் அருகில் கையேந்திக் கொண்டிருந்தார்.
 
      அதே போன்று நான் 2001 ஆம் ஆண்டு அமெரிக்கா சென்றபோது பிரிமாண்ட்டில் நான் கல்லூரி ஆசிரியனாக இருந்த அதிராம்பட்;;டணத்தினைச்சார்ந்த ஒருவரைச் சந்தித்தேன். அவர் பி.எஸ்.ஸி படித்தவர், மனைவியும் வசதியானக் குடும்பத்தில் பிறந்தவர். அவரிடம் என்ன வேலை செய்கிறீர்கள் என்றேன். அதற்கு அவர் அங்குள்ள உடுப்பி ஹோட்டலில் சர்வராக இருப்பதாகவும் ஆயிரம் டாலர் கொடுப்பதாவும் கூறினார். முனைவி வுற்புறுத்தலால் இந்த வேலை பார்ப்பதாகச் சொன்னார். இவைகளை ஏன் இங்கு குறிப்பிடுகிறேன் என்றால் மனிதனுக்கு மானத்தோடு வாழும் நம்பிக்கைக் குறையும் போது இது போன்ற பரிதாபமான நிகழ்வுகள் நடக்கின்றன. இந்தியாவில் கூட எத்தனையோ நபர்கள் ஊனமுற்றாலும் படித்து டாக்டர்-என்ஜினியர்-முதுகலை பட்டம் பெற்றுமு;-இன்னும் கூடை-சேர் பின்னும் தொழில் முனைவர்களாகவும் இருக்கும் போது நாம் நம்பிக்கை இழக்கலாமா? ஆகவே நம்பிக்கை பழமொழிகளான தன் கையே தனக்குதவி-உன்னால் முடியும் தம்பி-வாழ்க்கை ஒரு எதிர் நீச்சல் அதில் நீந்தி வந்தவன் தான் வாழ்வான் போன்றவைகளை வருங்கால இளைஞர்களுக்குப் போதிக்க வேண்டும்.
 
 
      படித்த இளைஞர்களுக்கு உலகில் வேலை வாய்ப்பு வருங்காலங்களில் மிகவும் பிரகாசமாக இருப்பது கடிணம். இப்போது கூட துபாய்-சிங்கப்பூர் போன்ற இடங்களில் வேலை பார்த்த நமது இளைஞர்கள் வேலையின்றி ஊருக்கு வந்து வேலை தேடும் படலத்தினைத் தொடங்கி உள்ளனர். அவர்களுக்க நான் சொல்லுவதெல்லாம் �கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள் கவலைப்படாமல் வாழ்ந்து கொள்� என்பது தான. எங்கள் ஊர் இளையாங்குடியில் தோலில் மணிபர்ஸ், பைகள், கேன்வாஸ் சூட் கேஸ்கள் செய்யும் தொழில் குடிசைத்தொழில் போல இருந்தது. ஆனால் அவைகளையெல்லாம் எப்படி வெளிநாடுகளுக்கு போட்டிகளுக்கிடையே ஏற்றுமதி செய்வது என்ற வழிவகை தெரியாததால் அவைகளெல்லாம் நலிந்து விட்டன. ஆனால் அதே தொழிலை இன்று சென்னையில் செய்து வெளிநாட்டு ஏற்றுமதியினைப் பெற்றவர்கள் லாபகரமாக நடத்தி வருகிறார்கள் என்றால் மறுக்க முடியாது. திண்டுக்கல்லில் தோல்வியாபாரம் கொடிகட்டி பறப்பதினை அனைவரும் அறிவர். ஆனால் அதே தேலை பதப்படுத்தி செருப்புகளாகவும், ஸ_க்களாகவும், கைப்பைகளாகவும், சூட் கேஸ்களாகவும், பெல்ட்களாக செய்யும் தொழிலை வெற்றிகரமாக நடத்தும் யுக்தி வாணியம்பாடி, ஆம்பூர், மேல்விசாரம், பேரணாம்பேட், ராணிப்பேட்டை போன்ற ஊரில் உள்ளவர்கள் அறிந்து ஆயிரக்கணக்கான மக்களுக்கு வேலை கொடுப்பதோடுமட்டுமல்லாமல்-ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து அன்னியச்செலவாணியை அள்ளிக் குவிக்கின்றனர். ஏன் அதே தொழிலை திண்டுக்கலில் இருக்கும் தோல் வியாபாரிகள் சிந்திக்கக் கூடாது.
 
      ஊதாரணததிற்கு நாடார் ஜன மக்களை எடுத்துக் கொள்ளுங்கள. பழைய பேப்பர்கள்-இரும்புகள் வாங்க இரு சக்கர-மூன்று சக்கர வண்டிகளிலும் தெருத் தெருவாக அளைவதினைப் பார்க்கிறேம். ஆனால் அவர்கள் பழைய பொருட்களை வாங்குவதோடு நின்று விடுவதில்லை. அதனை தரம் பிரித்து பழைய பேப்பர்களை அட்டை செய்யும் இயந்திரத்தில் கொடுத்து அட்டைகளாக்கி விடுகின்றனர். பழைய இரும்புகளை உருக்கி-ஸ்டீல் பட்டறையில் கொடுத்து பாத்திரம் செய்யும் தொழிலும் ஈடுபட்டு தொழில் செய்கின்றனர். ஏன் அரேபியாவிற்கு நாம் பல்வேறு வேலைக்காகவும்-புனித கடமை நிறைவேற்றுவதற்காகவும் சென்று விதவிதமான பேரீத்தம் பலங்களை வாங்கி வந்து உற்றார்-உறவினருக்குக் கொடுத்து மகிழ்கிறோம். ஆனால் அதே பேரீத்தம் பழத்தினை இறக்குமதி செய்து தரம் பிரித்து பாக்கட்டிலும்-ஜூசாகவும் விற்பனை செய்யும் தொழிலையும் நாம் கண்கூடாகப் பார்க்கிறோம்.
 
      நான் அதிராம்பட்டிணக் கல்லூரியில் வேலையில் இருக்கும் போது எங்கு திரும்பினாலும் தென்னைத் தோப்புகளைக் காண்பேன். அதில் விளையும் தேங்காயை லாரிலாரியாக பல்வேறு நகரங்களுக்கு விற்பனைக்காக அனுப்புவர். ஆனால் தென்னை மரம் அதிகல்லாத தூத்துக்குடியில் தேங்காய் எண்ணெய் தயாரித்து பாட்டிலில் அடைத்து விற்பனை செய்யும் வி.வி.டி.தொழிற்சாலைகள் அதிகம். அதே தென்னை நாறுகளை கயிறுகளாகத் திரித்தும்-விரிப்புகளாவும்;-கால் மிதிகளாகவும் செய்யும் தொழில் ஈரோடில் அதிகம். அவைகளையே ஏன் அதிராம்பட்டிணத்தில் தென்னந்தோப்பு அதிபர்கள செய்து அங்குள்ள மக்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கக்கூடாது? கடற்கரை ஊர்களில் மீன்-கருவாடு விற்கும் வியாபாரிகளாகத்தான் உள்ளனர். அந்த மீன்களை வெளிய+ர்களுக்கும்-கேரளா மாநிலம் போன்று அனுப்பாமல் அந்தந்த ஊர்களிலே ஏன் மீன் பதனிடும் ஆலை ஏற்படுத்தி அங்குள்ள மக்களுக்கு வேலை வாய்ப்புக் கொடுக்கக்கூடாது. சீனாவில் ஒரு பழமொழி உண்டு. �பசித்தவனுக்கு வறுத்த மீனைக் கொடுக்காதே-மாறாக அவன் மீன் பிடித்து அதன் மூலம் வாழ்வு நடத்த ஒரு தூண்டில் முள் கொடுத்து மீனைப் பிடிக்கக் கற்றுக் கொடு� என்று. ஆகவே பண்டிகை காலங்களில் தானம், தர்மம் செய்வதினை விட இது போன்ற தொழில்களில் அவர்களுக்கு வேலை கொடுத்து ஏழைகளுக்கு நிரந்தர வருமானத்தினைத் தரலாம்.
 
      கோவை தொழில் அதிபர் ஜி.டி. நாயுடு ஒரு சாதாரண விவசாயி. அவர் எப்படி கார் மெக்கானிக் வேலை பார்த்து பலவேறு கார்-மோட்டார் உதிரிப்பாகங்கள் தயாரிக்கும் தொழில் அதிபரானார் என்று அனைவரும் அறிந்ததே. ஆனால் அவர் ஒரு மருந்துக் கம்பெனி அதிபரானது பெரும்பாலானோருக்குத் தெரிந்திராது. ஒரு தடவை அவர் வயலில் உழுது கொண்டு இருந்தபோது லேபிலோடு கூடிய ஒரு மருந்து காலி பாட்டிலினைக் கண்டார். நாமாக இருந்தால் அதனை தூர எறிந்து விடுவோம். ஆனால் அவர் அதை எடுத்து அந்த மருந்துக் கம்பெனி விலாசத்திற்கு கடிதம் எழுதி அதனை தயாரிக்கும் உரிமமும் பெற்றார். ஏன் ஜப்பானியர் பொம்மை வியாபாரத்திற்கு பெயர் பெற்றவர்கள் என்றால்-தூக்கி வீசப்பட்ட காலி டப்பாவைக் கூட விடாமல் அதில் தங்கள் கை வண்ணங்களால் அவைகளை அனைவரும் ரசிக்கும் பொம்மைகளாக ஆக்கி விற்று விடுகின்றனர்.
 
      எங்கள் ஊரைச்சுற்றி ஏராளமான அரிசி ஆலைகள் அதிகம். ஆனால் நெல்லிலிருந்து பிரிக்கப்படும் தவிடு-உமியினைக் கொண்டு ஈரோடு, சேலம், நாமக்கல், கோவை போன்ற மாவட்டங்களில் மாட்டுத் தீவணம், கோழித் தீவணம், ஆயில், சோப், வனஸ்பதி தயாரிக்கிறார்கள் என்பதினை சில காலங்களுக்கு முன்னர் தானே அறிவர். இருந்தாலும் இன்னும் தாங்களே அந்தத் தொழிலைத் தொடங்காது அவர்களுக்கு தவிடு, உமிகளை விற்கும் வியாபாரியாகவே உள்ளனர் என்றால் ஆச்சரியமாக இல்லையா?

      முஸ்லிம்கள் வாழும் ஊர்களில் எழைகள். வுpதவைத் தாய்மார்கள் இட்லி, இடியாப்பம் சுட்டு விற்பதினையும், தோசை, இட்லி மாவாட்டி அதனை விற்வதினையும் அறிவோம். அதேபோன்று நமது தாய்மார்கள் மீன் மசாலா, கரி மசாலா, அப்பளம், ஊறுகாய் தயாரிப்பதில் சிறந்தவர்கள். ஆனால் அவர்களையெல்லாம் ஒருங்கிணைத்து சக்தி மசாலா போன்ற நிறுவனம் ரெடிமிக்ஸ் உணவு பண்டங்களைத் தொடங்கி ஏன் நமது பெண்களுக்கு வேலையினைக் கொடுக்கக் கூடாது. சுய தொழில் தொடங்கக்கூட அரசு மானியம் அளிக்கப் படுகிறதே.
 
      நம்மில் சிலர் பம்பாய், குஜராத், டெல்லி போன்ற நகரங்களில் ரெடிமேட் துணிகளை வாங்கி ஏற்றுமதியில் ஈடுபடுகின்றனர். ஏன் அவர்களே துணிகளாக வாங்கி தையல் இயந்திரங்களால் பெண்கள் உதவியால் தைத்து வெளிநாட்டுக்கு அனுப்பக் கூடாது. அதுபோன்று உற்பத்தியில் ஈடுபட்ட திருப்ப+ர் இன்று செல்வும் கொழிக்கும் நகரமாகத் திகழ்கிறதே. மும்பையில் ஆயல் தொழிலில் ஈடுபட்ட தன் தந்தையினை விட பல படிக்கு மேல் சென்று மின்பொருள் தயாரிக்கும் விப்ரோ நிறுவனத்தினை ஆஸிம் பிரேம்ஜி நிறுவி 2008-2009 ஆம் ஆண்டு 19 சதவீத லாபத்தினை ஈட்டி ரூபாய்1162 கோடி சம்பாதித்திருக்கிறார் என்றால் பாருங்களேன்.. என் கல்லூரி நண்பர் அமீர் அப்துல் காதர் கடந்த வாரம் தன் சொந்த ஊரான கீழக்கரை சென்று வந்தார் அவரை நலம் விசாரிக்கும் போது, அவர் சொன்னார.; தனதூரில் அறிவித்த மின்வெட்டு இரண்டு மணிநேரம்-அறிவிக்காத மின்வெட்டு பல தடவை என்றார். கடற்கரை நகரங்கள் காற்றும் வெயிலும் அதிகமாக இருக்கும். ஆகவே மின் பற்றாக் குறையினைப் போக்க ஏன் சோலார் கருவிகளை உற்பத்தி செய்து மின் விசிறி. வுpளக்கு, ஏன் மோட்டாரில் தண்ணீர் இறைக்கக் கூட வழிவகுக்கக் கூடாது. அரசே மானியம் வழங்குகிறதே. கடலூர் மாவட்டத்தில் காரியமங்கலம் என்ற ஊர் பஞ்சாயத்தின் மின் தேவைகளை சோலார் எனர்ஜி ழூலம் கிடைக்கப் பெற்ற இந்தியாவில் முதல் கிராம பஞ்சாயத்தாகத் திகழ்ந்து ஜனாதிபதியின் பரிசையும் தட்டிச்சென்றதே. பணம் படைத்தவர்கள் தான் மட்டும் இன்வெர்ட்டர், ஜென்ஜெட் போட்டுக் கொண்டு வாழ்வதினை விட்டு ஏழைகளுக்கும் உதவுமாறு செய்யலாமே1
 
      நமதூரில் மாட்டு வண்டிகளிலும், தள்ளு வண்டுகளிலும் சுத்திகரிக்காத தண்ணீர் சப்ளை செய்வதைப் பார்க்கலாம். அதனால் பயோரியா போன்ற தண்ணீர் சம்பந்தமான நோய்கள் பரவ வழிகள் ஏற்படும். ஆகவே வாட்டர் சுத்திகரித்து பொதுமக்களுக்கு சப்ளை செய்யும் ஆலைகளை நிறுவலாம். நம்மில் சிமிண்ட் தொழில் அதிபர்கள் மானாமதுரை யாசின் சிமிண்ட்ஸ் போன்ற ஒரு சிலர் இருக்கலாம். ஆனால் அந்தத் தொழிலைத் தொடங்கிய ராம்கோ, இந்தியன் சிமிண்ட்ஸ், சங்கர் சிமிண்ட்ஸ் போன்றவர்களெல்லாம் சாப்ட்வேர் தொழில் இறங்கியள்ளனர். ஏன் அரசியல் வாதியாக இருந்து கல்வியாளராக மாறிய ஜேப்பியார் ரெடி கிராவல் மிக்ஸ் தொழில் செய்கிறார். நான் அதிராம்பட்டிணம் கல்லூரியில் வேலை பார்த்தபோது இருந்த தமிழ் பேராசிரியர் நாகர்கோவிலைச்சார்ந்தவர் அசன் அவர்கள் ஓய்வு பெற்ற பின்பு என்னைச் சந்திக்க வந்தார். அவரிடம் இப்போது என்ன செய்கிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர் கன்யாகுமரி பகுதியில் மீன் பிடிப்பதிற்கான வலைகள் சென்னையிலிருந்து தான வாங்கினார்கள். ஏன் நாமும் அதேபோன்ற மீன் பிடி வலையினை தயாரிக்கக் கூடாது என்று யோசித்து மீன் வலை தயாரிககும் தொழில் நாகர்கோவில் பார்வதிபுரத்தில் தொடங்கியுள்ளேன்-அதில் அந்தப் பகுதியினைச் சார்ந்த 20 நபர்களுக்கு வேலை கொடுத்துள்ளேன்-அங்கிருந்து சென்னைக்கு விற்பனையும் செய்கிறேன் என்றார். அதேபோன்று சென்னை மின்ட் அரசு பிரஸ் எதிர்புறம் நர்சரி செடிகள் உள்ளதாக அறிந்து அங்கு செனறேன். அதனை நடத்தி வருபவர் முபீன் ராஜா என்ற 30வயது இளைஞர். அவரிடம் எப்படி இந்த தொழிலுக்கு வந்தீர்கள் என்றேன். தான் தேனியைச் சார்ந்தவன் என்றும், நர்சரிச் செடிகள் வாங்கி விற்று வருந்ததாகவும், அதன் பின்பு அவை பெங்களுரிலிருந்து வரகிறது என்று அங்கே சென்றதாகவும். அங்கே சென்றால் நரசரி செடிகளெல்லாம் தமிழ்நாட்டில் ஒசூரிலிருந்து வருகிறது என்றும் அறிந்தேன். ஆககே ஒசூருக்கு சென்றதாகவும் அங்கே தளி என்ற இடத்தில் நர்சரி செடிகள் பயிடப்பட்டதினை அறிந்து அங்கேயே இரண்டு ஏக்கரை லீஸ் எடுத்து தானே நர்சரிச் செடிகள் பயிருட்டு இன்று மதுரை, தேனி, பெங்களுர், சென்னை போன்ற இடங்களில் நர்சரி கார்டன்கள் நடத்துவதாகச்சொன்னார்.(தளியினை லிட்டில் இங்கிலாந்து என்று ஆங்கிலேயர் அழைத்தார்கள் என்று நான் அங்கு எஸ்.பியாக இருந்தபோது அறிவேன்). இதனை ஏன் இங்கு குறிப்பிடுகிறேனென்றால் எந்தத்தொழிலும் கேவலமில்லை-அது சொந்தத்தொழிலாக அமைய வேண்டும். கருவாடு விற்ற காசு நாறாது என்பதினை அனைவரும் அறிவர். அதேபோன்று மாந்தோப்புகளை வைத்திருப்பவர்கள் மாம்பழங்களை விற்கும் வெறும் வியாபாரிகளாக அல்லாது-மாம்பழ ஜூஸ்-மாங்காய் ஊறுகாய் போன்றவைகள் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தயாரிப்பது போல தயாரிப்பில் ஈடுபடலாம். ஏன் வெறும் கார்ட்வேர் வியாபாரத்தினை காலங்காலமாக செய்யாது அந்தக் கார்டுவேர்-பெயின்ட் போன்றவைகளைத் தயாரிக்கும் தொழிலும் ஈடுபடவேண்டும்.
 
      ஏன் வறண்ட மாவட்டங்களில் காட்டுக் கருவை முள்மரத்தினை வெட்டி கரிமூட்டம் போட்டு அதனை விற்பனைக்கு வெளிய+ர்களுக்கு அனுப்புவது அந்த மாவட்டத்தினைச் சார்ந்தவர்கள்  அறிவர். ஆனால் அந்தக் கரியினை பயன்படுத்தி மின்சாரம்;, கிராபைட,; பென்சில் எழுதும் பொருளுக்கும,; மில்களுக்கு எரி பொருளாகவும் உபயோகிக்கிறார்கள் என்பதினை அறிந்தவர் சிலரே. மதுரையினைச்சார்ந்த ஓருவர் தெர்மல் எனர்ஜி சொலுசன் டிரங்க் பெட்டி போன்ற கரி அடுப்பினை கண்டு பிடித்துள்ளார். அதில் புகையே வராது என்ற தகவலும் உள்ளது. ஏன் அந்தப் பகுதியினைச்சார்ந்த நம்மவர் அதேபோன்ற தொழில்களில் ஈடுபடக்கூடாது? சிறிய தொழில் தொடங்குவதிற் டிக்(தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம்) சிட்பி(சிறு தொழில் முன்னேற்ற வங்கி) போன்ற நிறுவனங்கள் பொருள் உதவி செய்கின்றனர். சில தொழில்களில் சப்சைடி என்ற அரசு சலுகைகளும்-ஏற்றுமதி பொருள்களுக்கு டிராபேக் என்ற சலுகைகளும் உள்ளன. உலகிலேயே சீனா நாடு 12 சதவீத ஏற்றுமதியினை எட்டி முதல் இடத்திலும் அதற்கு அடுத்த படியாக இந்தியா 10.8 சதவீத ஏற்றுமதியினையும் தொட்டு விட்டது.
 
      இறைவன் நமக்கு இரண்டு கைகளை மட்டும் கொடுக்கவில்லை-மாறாக அந்தக் கைகளில் பத்து விரல்களையும் கொடுத்தது போல-மனிதன் முன்னேற்றம் அடைவதிற்கு பல வழிகள் உள்ளன. அவைகளில் பலருக்கு உதவக்கூடிய தொழில்களை அந்தந்த பகுதிற்கேற்ப ஆரம்பித்தால் நிச்சயமாக நாளை நமதாகாதா?






1 மன அமைதிக்கான மிக முக்கிய காரணங்கள்:

ஓர் இறைநம்பிக்கையாளரின் மன அமைதி என்பது உண்மையான ஈமான், அல்லாஹ் மீதான உறுதி, அவனது விதியை ஏற்றுக்கொள்ளுதல், அவனை அதிகமாக நினைவுகூருதல் மற்றும் அவனுக்குக் கீழ்ப்படிதல் ஆகியவற்றின் கனியாகும். உள்ளத்தில் அல்லாஹ்வுடனான தொடர்பு எந்தளவுக்கு வலுப்பெறுகிறதோ, அந்தளவுக்கு மன அமைதி அதிகரித்து கவலைகள் குறையும்.

2 இஸ்லாம் என்பது சட்டங்களும் விதிகளும் அல்ல...!

தண்டனைகள் மட்டுமே குற்றச்செயல்களை ஒழிக்கும் அதிமுக்கிய காரணி என்பது இஸ்லாத்தின் பார்வை அல்ல. குற்றம் உருவாகும் காரணங்களை தடுத்து குற்றங்கள் நிகழாமல் காப்பதே மிக முக்கியம்.

3 அவளுக்காக நான் இதை மறக்கவே மாட்டேன்

ஆறுதல் என்பது சில நேரங்களில் உலகத்திலுள்ள அனைத்து செல்வங்களை விடவும் மேலானதாக இருக்கும்

4 அவர்கள் என்னைத் துரத்திவிடுவார்களா?

மொழியின் மூலைமுடுக்கெல்லாம் தேடினாலும், இதைவிட வலிமிகுந்த ஒரு கேள்வியை நீங்கள் காண முடியாது: "அவர்கள் என்னைத் துரத்திவிடுவார்களா?"

5 திருக்குர்ஆனின் அற்புதம் - வானமும் பூமியும் அழவில்லை - பிர்அவ்ன்

முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பே இச்சம்பவங்கள் நிகழ்ந்துவிட்டன. அக்காலகட்டத்தில் எகிப்தின் மொழி அறபி அல்ல. கி.பி. ஏழாம் நூற்றாண்டில், கலீபா உமர் (ரலி) அவர்களின் காலத்தில் எகிப்து இஸ்லாமிய ஆட்சியின் கீழ் வந்த பிறகே அங்கு அறபு மொழி பரவத் தொடங்கியது.

6 ஒரு ஆறுதல் வார்த்தை, ஒருவரின் மறுமை வாழ்வையே மாற்றக்கூடும்.
7 ரமலானை வரவேற்கும் துஆ
8 ரமலான் நோன்பின் 10 முக்கிய நோக்கங்கள்
9 அவர்களும் சதித் திட்டங்களை தீட்டினார்கள். அல்லாஹ்வும் திட்டங்களை தீட்டினான் - 2 அற்புத உதாரணங்கள்
10 அல்லாஹ் நம்மை நேசிக்கிறானா இல்லையா என்பதை நாம் எப்படி நிர்ணயிப்பது?
11 எல்லா பிரச்சனைக்கும் தீர்வு - நடமாடும் குர்ஆனாக நாம் மாறவேண்டும் -
12 காசா! ஒரு துன்பம் மகிழ்ச்சியானது
13 தடுமாறாத குதிரை இல்லை. சறுக்காத பாதம் இல்லை.
14 ︎நேர்மை என்பது...
15 செய்யும் உதவிகளுக்காக, மனிதர்களின் பாராட்டை எதிர்பார்க்க வேண்டாம்
16 போட்டோ: பாலஸ்தீன குழந்தைகள் மீது இஸ்ரேலின் போர்
17 பாலஸ்தீனத்தின் பெருமை
18 திருச்சி சகோதரர்களின் கவனத்திற்கு: சோழ இளவரசி குந்தவை நாச்சியார்
19 இஸ்லாமிய வங்கி இயலின் தந்தை மறைந்தார்!
20 உணரப் படாத தீமை சினிமா
21 நான் ஏன் முஸ்லிம் ஆனேன்? - முன்னாள் கன்னியாஸ்திரி!
22 ஆறுதல் சொல்லச் சென்றோர் ஆறுதல் பெற்றுத் திரும்பிய அதிசயம்!
23 விரக்தி விஷத்தை விட கொடியது
24 பொறுத்தோம்! ஆனால் பொறுக்கமாட்டோம் யா ரஸூலுல்லாஹ்!
25 வாழ்க்கைக்கான பாடம் பாடப்புத்தகத்தில் அல்ல; போதிப்பவர்களின் வாழ்க்கையில் இருக்கிறது.
26 நரக மாளிகை - தாய் மண்ணின் மீது பற்று கொண்ட ஒவ்வொரு இந்தியனும் கட்டாயம் படிக்க வேண்டிய நூல்!
27 இங்கிலாந்தில் தப்லீக் ஜமாத் அனுபவங்கள்
28 அந்தப் பெண்களாக நாம்...
29 தன்னிகரற்ற தமிழகத்து உலமாபெருமக்கள் வரிசையில்
30 2021 ல் தமிழகம் இழந்த ஆலிம்கள்:
31 இமாம் அபுல் ஹஸன் நத்வி ரஹிமஹுல்லாஹ்
32 நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்ட 10 துஆக்கள்,
33 நோன்பும் மனக்கட்டுப்பாடும்
34 இவ்வளவு முரண்பாடுகளுடன் இறைவனிடம் கையேந்த வெக்கமாயில்ல!?
35 ஐரோப்பாவின் பிரபல்யமான அறிவுத் திருட்டுகள்.....
36 திருமணப் பதிவேடு எழுதுவதில் அக்கறையின்மை......!
37 நீ வரைந்த பாதை வழியே வாழ்க்கை ஓடுவதில்லை
38 முதியோர் பராமரிப்பு – இஸ்லாமிய கண்ணோட்டம்
39 இளையான்குடியில் உருது மக்கள்
40 கொண்டாடப்பட வேண்டிய ஆளுமைகள் : ஈரோடு மீ. கிபாயத்துல்லாஹ் பாகவி
41 மரணம் நோக்கி...
42 ஸிமம் தஃப்தரி (ZIMEM DEFTERI) - ஏழைகளின் கடனையடைத்தல்
43 மௌலானா சாத்(தா.ப) அவர்களுக்காக ஜரோப்பாவிலுள்ள ஒருதாயியின் அன்பான செய்தி
44 பேசாமல் இரு, கதவை அல்லாஹ் எப்படித் திறக்கிறான் என்று பார்
45 (புத்தாண்டு) கொண்டாட்டங்களை விட மனித உயிர்கள் அற்பமானவையா..?
46 அதுவென்ன சுன்னத் வல் ஜமாஅத்?
47 இறந்த பின் வாழ சந்தர்ப்பம்.
48 இங்கிலாந்து மசூதி வீடியோ சொல்லும் உண்மைகள்!
49 பாரதியும் இஸ்லாமும் - மாலன்
50 பயணியின் வாழ்க்கை - பேரா. ஹஸனீ
51 கண்ணாடி வாழ்கை - பேரா. ஹஸனீ
52 ஆடை அவிழ்ப்பு அழகாகுமா......
53 நபிகளாரும் காட்சிப்படுத்துதலும் (Visualization)
54 அன்றாட வாழ்வில் இஸ்லாம் - 02
55 அன்றாட வாழ்வில் இஸ்லாம் - 01
56 பெண்களிடம் மாற்றம் வேண்டும்
57 எம் சமூகம் இந்த உலகை ஆளும்
58 தவிர்ப்போம் நாற்காலி தொழுகைகளை...
59 வாய்ப்புகளை நழுவ விடாதீர்கள்!
60 பிரான்சால் நாடுகடத்தப் பட்டு பின்னர் பாராட்டப்பட்ட போராளி
61 மனம் திறந்த மடல் - மனம் திருந்திய தொண்டன்
62 ரமளானில் சமூக நலனுக்காக நாம் செய்ய வேண்டிய துஆ
63 புனித மிஃராஜ் இரவு அமல்கள்!
64 புனிதமான ரஜப் மாதத்தின் மிஃராஜ் இரவின் சிறப்புகள்
65 மனைவிக்காக துஆ செய்வதும் ஒரு சுன்னத்!
66 மனித உடம்பின் 99 இரகசியங்கள் !
67 தஹஜ்ஜூத் தொழுகையின் சிறப்பு
68 ஒவ்வொரு முஸ்லீமும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை
69 எது வணக்கம்..?
70 விஞ்ஞானிகளுக்கெல்லாம்- விஞ்ஞானி.... அல்ஹாசன்விஞ்ஞானி!
71 அன்பு மனைவிகளுக்கு ! அருமையான உபதேசங்கள்!!
72 தமிழ்க் கலாச்சாரத்தை ஆதரிப்போம்.இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பாதுகாப்போம்.
73 இமாம் அபூ ஹனீஃபா (ரஹ்)
74 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 5)
75 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 4)
76 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 3)
77 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 2)
78 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 1)
79 தாயாருக்கு மருந்து வாங்க பணமில்லை ஆனாலும் வேண்டாம் இந்த நான்கு கோடி - ஜுனைத் ஜம்சேத்
80 மீலாது விழா கொண்டாடுவது கூடுமா?
81 இஸ்லாத்தில் பெண்களின் சிறப்பு:
82 நாட்டங்கள் நிறைவேற ஸலாத்துன் நாரிய்யா ஓதுவோம்
83 வைரங்கள் நாங்கள்! - பொது சிவில் சட்டம் பற்றி ஓர் இஸ்லாமிய பெண்
84 அறிவமுதூட்டிய எங்கள் ஆன்மீக ஆசான் கமாலுத்தீன் ஹள்ரத் கிப்லா அவர்கள்......பற்றிய ஒர் மலரும் நினைவு
85 ஆண் மகனின் வாழ்வியல் சோதனை !!!
86 மனைவியை_நேசிங்கள்..
87 தாயுடன் வாழும் வாய்ப்புப் பெற்றவர்களே!
88 அம்மா! அம்மா!
89 அந்த_ஏழைப்_பெண்ணின்_ஜகாத்‬!
90 இந்திய சுதந்திர போராட்ட நாயகர்கள்
91 செருப்புத் தொழிலாளியின் ஹஜ் பயணம்
92 இமாம்களும் மத்கபுகளும்.
93 பெற்றோர்க்கு மரியாதை செய்யுங்கள்.
94 சொர்க்கத்தில் முதலில் நுழையும் ஏழைப் பெண்மணி..!
95 பராஅத் இரவின் சிறப்புகள்
96 வாப்பா!
97 ஆண்ட்ராய்டு போனும் அண்ணலாரின் உம்மத்தும்!
98 கிராமமோ... நகரமோ... அவர்களை கண்காணித்த​படி இருப்பதே பாதுகாப்பது
99 கருத்துக்குக் கருத்தால் பதிலளிப்போம்!
100 என் கேள்விக்கு இறைவனின் பதில்!
101 அரிய பண்புகளைக் கொண்ட அல்கமா (ரலி)வின் குழு
102 இதிலென்ன வெட்கம்?
103 தாய் மடி தேடும் குழந்தைகள்: (வல்லூரின் கரங்களில் நாம்)
104 பழையன கழிதலும் புதியன புகுதலும்
105 நொண்டிக் குதிரைக்குச் சறுக்கியதே சாக்கு !
106 கற்பில் கவனம் தேவை
107 வம்புக்கு இழுப்பதில் என்ன சுகம் இவர்களுக்கு?
108 புக்கூரும் (காலை நேரமும்) இறையருளும்
109 இஸ்திஃகாராவின் சிறப்பு
110 தஜ்ஜால் பற்றிய முன்னறிவிப்பும் பாதுகாப்பிற்கான வழிமுறையும்.
111 இஸ்லாத்தின் பார்வையில் கோபம்!!!
112 உங்களையும் தாக்கலாம் இந்த நோய்!
113 தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-3/3)
114 தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-2/3)
115 தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-1/3)
116 ஏழு குணங்களை தவிர்ந்து கொள்ளுங்கள்! நிம்மதி பெறுங்கள்!
117 கணவன் மனைவி – அற்புதமான விஷயங்கள்.
118 வீட்டுப் பெண்களின் வீடியோ போஸ்
119 எச்சரிக்கை: இப்போதாவது விழித்துக்கொள்வோம்.
120 இறுக்கமும் இரக்கமும்
121 இஷா தொழுகையும் இரவு உணவும்
122 கழிவறைகளில் கிப்லா முன்னோக்கப்பட கூடாது
123 மனிதன் உயிர்வாழ இன்றியமையாதது
124 தினமணி தலையங்கம்: 'இறைவா, எங்கே போகிறோம்?'
125 இறைவணக்கமும் இயலாமையும் (சேரில் அமர்ந்து தொழலாமா?)
126 மரணம் நம் கண்களை தழுவட்டுமே
127 முஸ்லிம் சமூகத்தின் வீட்டுமொழியாக வேண்டிய மொழி அறபு மொழி
128 பெயர்களை நினைவில் வைப்போம்
129 ஊடகங்கள் பரப்பிவரும் முன்ஜென்மபித்தலாட்டம்
130 இறை பிரியத்தோடு உலகில் தலைநிமிர்ந்து வாழ
131 ஹிஜ்ரீ பிறந்த வரலாறு
132 மனிதனுக்கான சுவனத்தை பரிந்துரைக்கும் இரண்டு விடயம்
133 சீனாவில் இஸ்லாம் அறிமுகம்
134 ஆட்சியை நாம் தேடவேண்டுமா? அல்லது ஆட்சி நம்மைத் தேடவேண்டுமா? (பாகம் 2/2)
135 முஸ்லீம் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் தொண்டு நிறுவனங்கள் !...
136 ஒரு 2.5 கதை
137 ஆட்சியை நாம் தேடவேண்டுமா? அல்லது ஆட்சி நம்மைத் தேடவேண்டுமா? (பாகம் ½)
138 இம்ரானா விவகாரம் மீடியாக்கள் நடத்திய மானபங்கம்
139 உலகத்தில் யாருமே ஏழை இல்லை
140 பராஅத் இரவு –நாம் பெற வேண்டிய படிப்பினைகள்பகைமையை முடிவுக்கு கொண்டு வருவோம்
141 வ.உ.சி க்கு 10 லட்சம் ரூபாய்க்கு கப்பல் வாங்கி கொடுத்த பக்கீர் முஹம்மதுவை தெரியுமா?
142 நம் துஆக்கள் ஏன் கபூலாவதில்லை?
143 நபிமொழியை மெய்ப்பித்தது இன்றைய விஞ்ஞானம்!!!
144 குறைகளை மறைத்தல்
145 உலகத்தூதர் கூறிய உண்மை சகோதரத்துவம்!
146 நல்ல பெண்மணி
147 பிஸ்மில்லாஹ் சொல்லியாச்சா...? பாரம்பரியமும் நாகரீகமும்
148 💥 யார் அந்த மாமனிதர்..?
149 ஈர்ப்பை விதைப்போம்!
150 ஒரே ஒரு கேள்வி 10 விதமான அற்புதமான பதில்கள்
151 யார் இந்த துலுக்கன்?
152 ஷஹீத் இமாம் ஹஸனுல் பன்னாவின் 10 அறிவுரைகள்
153 இவ்வுலகிலும் மறு உலகிலும் தன்னிறைவு தரக்கூடிய விஷயங்கள்
154 முஸ்லிம் உலகம் இஸ்லாத்தை தொலைத்து விட்டதா ?
155 உலமாக்களின் தகுதி… அந்தக் காலம் எப்போது வரும்
156 நிம்மதி - சிறுகதை
157 வாழும் இறைநேசர்களிடம் வாழ்த்துப் பெறுவோம் !
158    ஓ...மானிடனே,என்னை தெரிகிறதா?
159 சுலைஹாவின் தவறை உணர்த்திய கணவனின் கடிதம்!
160 நபி வழி வெற்றிக்கு வழி இஸ்லாத்தில் தெரிந்து கொள்ளவேண்டியவை.
161  வாழ்க்கை வாழ்வதற்கே !
162 உம்மதினரின் மீது பெருமானாரின் அளவு கடந்த அன்பு
163 விற்கப்படும் மார்க்கம்
164 அழகிய ஐம்பெருங் குணங்கள் !
165 தன்னம்பிக்கை கொள்ளுங்கள் !
166 பார்வைகள் பலவிதம் !
167 நேர மேலாண்மை / திட்டமிடல்
168 பள்ளிக்கு அருகில் வாழ்வோம்
169 எச்சரிக்கை: தொலைக்காட்சியில் போட்டி என்ற பெயரில் மோசடி
170 அந்நியப் பெண்ணுடன் ஆண் - அந்நிய ஆணுடன் பெண் கைகுலுக்கலாமா?
171 தந்தைகளே! கவனியுங்கள்
172 வரலாறு புகட்டும் பாடம்
173 அல்குர்ஆன் என்னும் மதுரம்
174 முஸ்லிம்கள் செய்ய வேண்டியது என்ன?
175 ஊருக்குள் விடாதீர்..விளம்பரமல்ல விபரீதம்!!
176 கஸ்டம்ஸில் எச்சரிக்கையாக இருங்கள்!
177 நாம் தான் முயல வேண்டும்.
178 குழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள்!
179 காசாகும் குடும்ப அந்தரங்கங்கள். எச்சரிக்கை!!
180 கற்பா? கல்லூரியா?
181 கசாப்புத் தொழில் சிறந்தது....
182 சுவர்க்கத்தை பரிசாக பெற்றுத் தரும் நற்கிரியைகள்
183 நான் ஏன் முஸ்லிம் ஆனேன் ?
184 ரகசிய கேமராக்கள்: பெண்களே எச்சரிக்கை!
185 இருளை நோக்கிச்செல்லும் வெளிச்சமுள்ள சமுதாயம்! தீர்வு என்ன? எப்படி செயல்படுத்துவது?
186 செல்வந்தர் மகனுக்கு கூறிய மரண சாசனம். (சிறுகதை)
187 மேற்கத்திய கலாச்சாரம் TO இஸ்லாம்- முஸ்லிம் பெண்ணியவாதியின் பயணம்
188 என் ஹிஜாப் என் உரிமை!!!
189 சபைகளில் கண்ணியம் தவறும் கணவர்கள்
190 முகமாகும் பெண்கள்!!
191 நற்குணமே இஸ்லாத்தின் அடையாளமாகும்!
192 இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்
193 உங்கள் தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுகிறது?!
194 அன்புச் செல்வங்களுக்கு....(நமக்கும்) - கேள்வி பதில்கள்
195 செல்போன்கள்... ஜாக்கிரதை!
196 இணையதளத்தில் கனவன்-மனைவி அந்தரங்க உரையாடல் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்
197 வெற்றியடைய 10 சுலபமான வழிகள் !
198 ஒரு வழிப்போக்கனின் வாழ்க்கைப் பயணம்!
199 மிஸ்டு காலா... பெண்களே எச்சரிக்கை!
200 ஈமானே-உன் விலையென்ன?
201 இஸ்லாமியரும்-எதிர் நீச்சலும்
202 அமைதியாக இருந்தால் அமைதி வருமா ?
203 அமர்ந்தது போதும் எழுந்து வாருங்கள் பயணிப்போம்
204 பயங்கரவாதிகள் எல்லாம் முஸ்லிம்களா?
205 ஒளிரட்டும் பண்மைமிகு மீலாது விழாக்கள் ! ஒழியட்டும் வன்மையிலிருந்து மீளாத விழாக்கள் !!
206 கட்டாய மத மாற்றத்திற்கு இஸ்லாத்தில் இடமில்லை
207 மக்தப் மதரஸா ... ஒரு அமைதிப் புரட்சி
208 யுக முடிவின் இறுதிக்கட்டமா நெருங்கிவிட்டது?
209 "ஜம் ஜம்” தண்ணீர் தோன்றிய வரலாறு
210 மெட்ராஸ் ஐ - குறித்த உண்மைகள் :
211 ஹிஜ்ரீ பிறந்த தியாகங்களின் வரலாறு !
212 தாமிரபரணியை உறிஞ்ச வரும் 'பெப்சி' நிறுவன ஆலை
213 பிள்ளைகளை பாதுகாப்பாக வளர்க்க பெற்றோர்களுக்கு சில அழகிய வழி முறைகள்:
214 அறிவைத் தேடுவோம்!
215 தமிழ் மண்ணில் வேர் கொள்ள முடியவில்லை!
216 ஒரு மகன் தன் அப்பாவைப்பற்றி என்ன நினைக்கிறான்?
217 பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா? ஏதிர்த்தாரா?
218 இந்திய முஸ்லிம்களின் முதல் எதிரி அல் காய்தா:
219 பிள்ளையாரப்பா பெரியப்பா,புத்திமதியை சொல்லப்பா
220 அவ்வளவு ஈமானா? அல்லாஹ்வின் மேல் அவ்வளவு நம்பிக்கையா?
221 என் மகனிடம் சொல்லுங்கள்:-ஒரு தாயின் மனக்குமுறல்!
222 சமூக நலத்திற்கு உகந்த சட்டம் எது?
223 “வேர்கள்” வரலாறு!
224 கருத்து வேறுபாடு சம்பந்தமாக சட்டங்கள்
225 என் மகனிடம் சொல்லுங்கள்:-ஒரு தாயின் மனக்குமுறல்!
226 கலீல் அஹ்மத் கீரனூரி (ரஹ்) அவர்களின் அல்அஃப்லாக் வல்அவ்காத் நூல் அறிமுகம்
227 மனிதனின் தேவை ! – மன அமைதி
228 யா அல்லாஹ் ரஜப் ஷஃபான் மாதங்களில் எங்களுக்கு அருள் புரிவாயாக. இன்னும் ரமளானை அடையச் செய்வாயாக
229 அண்ணல் நபிகளாரின் பொன் மொழிகள்-மெளனம் கொள்ளுங்கள்.
230 அல்லாஹ் அறிவுறுத்தும் அமுதமொழிகள்
231 பிரார்த்தனைகள் ஏன் ஏற்கப்படவில்லை?
232 மஸ்ஜித் (பள்ளிவாசல்)
233 பேச்சு,மெளனம்
234 ஜனாஸா - மைய்யத்
235 கிலாஃஃபா மறைவு: இந்தியா தடுமாறியது.. எகிப்து கவலையுற்றது
236 ஹஜ் யாத்திரை - சில சிந்தனைகள் !!!
237 ஜெனரல் எர்வின் ரோமல் கண்ட காலித் இப்னு வலீத் (ரலி )
238 முஸ்லிம்களை ஏன் பயங்கரவாதிகளாக சித்தரிக்க முற்படுகிறார்கள்?
239 வெளிநாடுகளில் வேலை செய்யும் என் சகோதரர்களே!
240 அரிஸ்டாட்டில் முதல் நியூட்டன் வரை
241 இறை நேசர்கள்- தொடரும் விளக்கம்
242 வலிமார்கள் என்பவர்கள் யார்?
243 காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயீல் ஸாஹிப் அவர்களின் பதில் சொல்லும் பாங்கு
244 அமைதியாக இருந்தால் அமைதி வருமா ?
245 மனித குல விரோதி
246 எனது பெயர் ஜனாஸா!
247 பாபரா ராமர் கோயிலை இடித்திருப்பார்???
248 கடன் கொடுப்போரும் வாங்குவோரும் நடந்து கொள்ள வேண்டிய முறை
249 மோடியை விட்டு 2002 ஏன் விலகாது?
250 இஸ்லாம் வாள் முனையில் பரப்பப்பட்டதா?
251 வதைக்கும் விவாகரத்து வழக்குகள்
252 ஹிந்து - குறித்து இஸ்லாம்!
253 தமிழரும் இசுலாமியரும்
254 குர்ஆன் மக்தப் - காலத்தின் தேவை!
255 இஸ்லாம் மிருக வதையை தூண்டுகின்றதா?
256 மில்லர் கண்ட குர்ஆனின் அதிசயங்கள்
257 முஹம்மது(ஸல்) எனக்கு நடுநிலையானவர்
258 முஸ்லிமல்லாதவர்களுக்கு ஒரு கடிதம்
259 அயோத்தி ராமன் அழுகிறான் -கவிஞர் வைரமுத்து
260 துருக்கி மன்னரின் விலை 10 பொற்காசுகளே!
261 கற்பனைகளும் இஸ்லாமும்
262 வணங்கி மகிழ்கிறோம் - ஆச்சிரியம் ஆனால் உண்மை.
263 சுத்தம் பேணுவோம்,நுரையீரலை காப்போம்!
264 நபிகள் நாயகத்தை வசைபாடிப் படம் எடுத்தவர்....
265 மது ஒரு பெரும் பாவம்
266 மகாத்மா காந்தி, பெரியார் சந்திப்பு
267 பெற்றோர்களைப் பேணுவோம்!
268 யார் இவர்? பேச்சாளர்..போர் வீரர்..இராணுவ தலைவர்..
269 சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-3)
270 உடல் உறுப்புகளை தானம் செய்வதுபற்றி இஸ்லாம்
271 தவ்பா என்னும் பாவமன்னிப்பின் சிறப்புகள்!
272 சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-2)
273 சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-1)
274 இதயத்தை கவனமா பாத்துக்கங்க!
275 இமாம்களை கண்ணியம் செய்வோம்!
276 உமர் (ரலி) அவர்களுக்கு நண்பர்கள் எழுதிய கடிதம்.
277 மறுமை வாழ்வை நேசிப்போம்!
278 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 8 - முடிவு)
279 சொல்லின் செல்வர் எம்.எம். பீர் முஹம்மது சாகிப்
280 சுதேசி சிந்தனைகள்.......
281 உள்ளத்தை தூய்மை படுத்துவோம்!
282 கல்வி நல்லோர்களின் சொத்து!
283 மனிதர்களுக்கு மீன்கள் சொல்லும் பாடம்!
284 வாழ்க்கைக்கு உதவும் வாய்மைமொழிகள்! (தொடர்- 1)
285 வாழ்க்கைக்கு உதவும் வாய்மைமொழிகள்! (தொடர்- 2)
286 பாராளுமன்ற தேர்தலும் முஸ்லிம்களின் நிலைபாடும்!
287 தொடர்பூடக ஒழுக்கவியல்: அல்குர்ஆனின் வழிகாட்டல்
288 உண்ணுவதிலும்,குடிப்பதிலும் தூய்மையை பேணுவோம்!
289 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 7)
290 செயற்கைக் கருத்தரிப்பும் வாடகைத் தாயும்!
291 அறிவைத் தேடுவோம்!
292 ஆக்காதீர் ஆசனங்களாக
293 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 5, 6)
294 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 3)
295 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 4)
296 மோதினார் அப்பாவின் கதை அல்ல நிஜம்
297 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 1)
298 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 2)
299 ஸுபுஹ் தொழுகையும் நாமும் ???
300 ஆஸாத் விசாவா?உஷார்,உஷார்!
301 அதிகாலை நேரமும் சுபுஹுத் தொழுகையும்
302 தன்பக்கமா? தன்னிகரற்ற கொள்கையின் பக்கமா?
303 சமுதாய தலைவர்களே சிந்தியுங்கள்!
304 படிப்பினையூட்டும் ஒரு நிகழ்வு!
305 உபதேசம் என்பது உலமாக்களின் தனி உடைமையா?
306 பெண் குழந்தை ஒரு பாக்கியம்
307 டாக்டர் ஜாகீர் ஹுசைன் – கல்வியுடன் சுகாதாரத்தையும், ஒழுக்கத்தையும் கற்றுத்தந்தவர்
308 வெப்கேமிரா...எச்சரிக்கை...!
309 நான் ஒருத்தனிடம் ஏமாந்தேன் நீ என்னிடம் ஏமாறு என்பதே மல்டி லெவல் மார்கெட்டிங் - AMWAY Products
310 மனமகிழ் குடும்பம்:நல்லதோர் குடும்பத்தலைவி!
311 மனமகிழ் குடும்பம்: நல்லதோர் குடும்பத் தலைவன்
312 விசுவரூபம் ஒரு விளக்கம்
313 விஸ்வரூபமும் முஸ்லீம்களும்.
314 மதுவை ஒழிப்போம்,மாதுவை காப்போம்!
315 வாழ்க்கைக்காக ஒரு மரணம்
316 கண்ணாடிகள் கவனம்
317 360 மூட்டுக்கள் (எலும்பு இணைப்புக்கள்) Bone Joints..! ( 7-ம் நூற்றாண்டு முன்னறிவிப்பு )
318 ஷைத்தானின் விரோதிகளும், நண்பர்களும்
319 ஹஜ்ரத் அலி (ரலி) அவர்களின் அறிவுரைகள்
320 துஆக்கள் ஏன் ஒப்புக்கொள்ளப் படுவதில்லை?
321 சிந்திக்க தவறும் ஆண்களுக்கு மட்டும்
322 கருத்து வேறுபாடுகள்.
323 நபியவர்கள் எங்கள் உயிருக்கு மேல்
324 ஹிஜாபுக்குப்பின் கண்ட வாழ்க்கை
325 யூத கிருத்துவ வக்கிரப்படமும் விமர்சனங்களை வென்ற விண்புகழ் வேந்தரும்
326 தஜ்ஜால் Vs டெலிவிஷன்
327 ஓ! என் இளைய சமுதாயமே!
328 இதயத்தை பாதுகாக்க யோசனைகள்!
329 வீண் செலவு வேண்டாமே