Tamil Islamic Media

அறிவைத் தேடுவோம்!

-  ஆக்கம் : மெளலவி கீழை ஜஹாங்கீர் அரூஸி

 

இறைவனின் படைப்புகளில் எத்தனை விதமான அதிசயங்களும், ஆச்சரியங்களும் நிகழ்கின்றன.

விலங்குகள், பறவைகளை ஐந்தறிவாகவும், மனிதனை பகுத்தறிவென்னும் ஓர் அறிவை அதிகப்படுத்தி ஆறறிவு படைப்பாகவும் படைத்துள்ள இறைவன் அறிவையும், அனுபவத்தையும் தேடும் விஷயத்தில் மட்டும் மனிதனை விட விலங்குகள், பறவைகளை சிறப்பித்தே வைத்திருக்கிறான்.

மனிதன் பிறந்து வளர்ந்து வரும் பருவத்திலேதான் கொஞ்சம், கொஞ்சமாய் அறிவையும், அனுபவத்தையும் பெறுகிறான். அதுவும் அவனாக முயற்சி செய்யும் பொருட்டே அவனுக்கு அது வசமாகிறது. ஆனால் விலங்குகள், பறவைகளுக்கு அப்படியல்ல அவைகள் பிறக்கும் போதே அடிப்படை அறிவையும், அனுபவத்தையும் கொண்டே பிறந்து விடுகின்றன.

உதாரணத்திற்கு ஒன்றை சொல்லலாம் ! பசி என்ற உணர்தல் உயிருள்ள எல்லாவற்றிற்கும் பொதுவானது.

தாவரங்களுக்கும் கூட பொருந்தும். சரியான முறையில் தாவரங்களான செடி, கொடிகளுக்குரிய உணவு ஆதாரமான நீரை சரிவர கொடுக்கவில்லை யென்றால் அது தானாகவே வாடி கருகி அழிந்துவிடும்.

ஆக பசியென்பது உயிருள்ளவைகளுக்கு பொதுவானதே ! இதனடிப்படையில் பசி என்ற உணர்தல் ஏற்படும்போது பிறந்த குட்டிகளை தேடிப்போய் விலங்குகள் பாலூட்டுவதில்லை. குட்டிகளே தாயின் மடுவில் வாய் வைத்து பால் குடித்து பசி போக்கிக்கொள்ளும்.

ஆனால் மனிதனின் நிலையோ தலைகீழ் ! பசியை உணரும் குழந்தை தாயின் மடுவை தேடிப்போய் குடிப்பதில்லை. பசியால் அழும் குழந்தையை ஓடிப்போய் தூக்கி கொள்ளும் தாய் தன் மடியில் போட்டு பாலூட்டுகிறாள்.

தன் மடுவை குழந்தையின் வாயில் வைப்பது கூட தாய்தான் ! மடுவை தேடிப்போய் வாய் வைக்கும் அறிவை மனிதனாய் பிறந்த குழந்தைக்கு இறைவன் கொடுக்கவில்லை !

இன்னொரு விஷயத்தையும் இங்கே குறிப்பிடுவது மிகவும் பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன் !

விலங்குகளில் பூனை தனி ரகமாகும். பூனை மலம் கழிக்கும் முன்பே மண்ணில் குழிதோண்டி விட்டு அந்தக் குழிக்குள் தான் மலம் கழிக்கும் பிறகு அந்தக் குழியை தோண்டிய மண்ணைக் கொண்டே மூடி விடும்.

மூடிய பிறகு அந்த இடத்தை முகர்ந்து பார்க்கும். மலக்கழிவின் வாடை வந்தால் மீண்டும் கொஞ்சம் மண்ணை அள்ளிப் போடும். வாடை வராவிட்டால் போய்விடும் !

இந்த அறிவையும் அனுபவத்தை யும் எந்த தாய் பூனையும் குட்டிகளுக்கு சொல்லிக் கொடுப்பதில்லை. விலங்குகள் தானாகவே அந்த அறிவைப் பெற்று விடுகின்றன.

ஆனால் மனிதன் குழந்தையாய் தவழும் பருவத்தில், தான் கழித்த மலத்தை தானே எடுத்து வாயில் வைக்கும் காட்சிகளை பார்த்து தான் மனிதன் பிறக்கும் போது அறிவில்லாதவனாகவே பிறக்கிறான். என்னும் அசைக்க முடியாத நம்பிக்கையை பெற்றுள்ளோம்.

மனிதன் வளரும் போது தான் அறிவைப் பெறுகிறான். மலம், ஜலம் கழிக்கும் விஷயத்தில் சாதாரண ஒரு பூனைக்கு இருக்கும் நாகரீகம் கூட இன்று ஆறறவுக்கு சொந்தமான மனிதனிடம் இருப்பதில்லை. என்பதை நினைக்கும் போது விலங்குகளை விடவா மனிதன் கேவலமாக போய் விட்டான்? என வெட்கப்பட வேண்டியுள்ளது.

 அதனால் தான் மனிதன் தெருக்களிலும், நடைபாதைகளிலும் மலம் ஜலம் கழித்து விட்டு அதை அப்படியே போட்டு விட்டு போய் விடுகிறான் !

பொது இடங்களில் மலம் ஜலம் கழிக்கும் கேவலத்தை மனிதன் எங்கிருந்து கற்றானோ? தெரியவில்லை?

 நிச்சயம் விலங்குகளிடமிருந்து கற்றிருக்க மாட்டான் ! காரணம் பூனை போன்ற நாகரீக விலங்குகள் அதற்கு இடம் கொடுக்காது !

இன்னொரு விஷயத்தையும் நாம் யோசிப்போம் ! விலங்குகள், பறவைகள் தான் ஈன்ற குட்டிகளையோ, குஞ






No articles in this category...