Tamil Islamic Media

முஹம்மது(ஸல்) எனக்கு நடுநிலையானவர்


அனைத்துப் புகழும், நன்றியும், மரியாதையும், மகத்துவமும், ஒருவனும், ஒருவன் மட்டுமேயான அல்லாஹ்வுக்கே. காரணம் அல்லாஹ்வே கூறுகிறான், ‘நிச்சயமாக கண்ணியமெல்லாம் அல்லாஹ்வுக்கே’ என்று.  மேலும், அனைத்து சலவாத்தும், சலாமும் அல்லாஹ்வினால், ‘மிகச்சிறந்தகுணமுடையவர்’ (குலுகுன்அசீம்) என்றும்,  முழு பிரபஞ்சத்திற்கும் மிகச் சிறந்த முன்மாதிரி’ (உஸ்வதுன் ஹஸனா) என்று புகழப்பட்டவருமான,  நம்முடைய நபி முஹம்மது(ஸல்) அவர்களுக்கே.


பின்பற்ற வேண்டிய உள்ளுணர்வு


பிறந்த குழந்தைக்கு தாயிடமிருந்து அன்பும், அரவணைப்பும், பாசமும் அதிகம் கிடைக்கிறது.  இக்குழந்தை தாயின் கைகளில், மிகச் சுகமாகவும்,  முற்றிலும் பாதுகாப்பாகவும், பத்திரமாகவும் உணருகிறது; இது தான் எல்லா இனத்திற்கும் பொதுவாக ஏற்படக்கூடிய மிக இயற்கையான உள்ளுணர்வு.

படிப்படியாக, அவனோ, அவளோ வளர்கையில், சுற்றுப்புறத்திலிருந்து கற்றுக்கொள்ள  முயலும்போதும், அறிவை தாராளமாக வழங்கும் தன் ஆசிரியர்களால் தூண்டப்படுகிறார்கள். குழந்தை ஆசிரியரை தழுவி, அவருடைய வழிகாட்டுதலை பின்பற்றுகிறது.  இதுவும் ஒரு இயற்கையான நிகழ்வு தான் – தன் பெற்றோர் அல்லது ஆசிரியர்கள் அல்லது தன் சுற்றுப்புறத்தில் உள்ள அல்லாஹ்வின் அத்தாட்சிகளை முன்மாதிரியாக ஏற்றுக்கொண்டு அவரைப்பின்பற்றுவது ஒரு ஆரோக்கியமான சமூக  உள்ளுணர்வாகத் தான் கருதப்படுகிறது.


ஒவ்வொரு குலத்தினருக்கும் ஒரு தூதர்


தூயோனான அல்லாஹ் வெறுமனே மனிதர்களைப் படைத்து அவர்களை வாழ்வின் சத்தியப்பாதையை தானாகவே கண்டுபிடிக்கும்படி உலகில் விட்டுவிடவில்லை; அவ்வப்போது தன் வேத வெளிப்பாடுகளை அனுப்பிக்கொண்டிருந்தான். அவற்றை விளக்குவதற்கும், நமக்கு நேரான சத்தியப்பாதையை காட்டுவதற்கும் நபிமார்களை அனுப்பினான்.

அதனால், அல்லாஹ்வே,தான் ஒரு வழிகாட்டியை ஒரு உண்மையான தூதரின் வடிவில் உலகில் வாழ்ந்த ஒவ்வொரு குலத்தினருக்கும் அனுப்பியதாக குர்ஆனில் கூறுகிறான் (லி குல்லி கௌமின் ஹத் – ஒவ்வொரு கூட்டத்தாருக்கும் ஒரு வழிகாட்டி’).

ஒவ்வொரு குலத்தினரின் தேவைகளுக்கு பதிலளிக்கும் வகையில் அவர்களுடைய குறைவான அறிவு, அவர்களுடைய கற்கும் திறன் இவைகளுக்கு பொருந்துமாறு அல்லாஹ் உண்மையான நபியை அனுப்பினான். நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ் உலகிற்கு 1,24,000 நபிமார்களை அனுப்பியதாக கூறினார்கள்.  இருப்பினும் அல் குர்ஆனில் அல்லாஹ் 25 நபிமார்கள் மற்றும் ரசூல்களின் பெயர்களை மட்டும் குறிப்பிட்டிருக்கிறான்.


மனித சமுதாயத்திற்கு ஒரு ரசூல்


பல நபிமார்கள் வந்து தங்கள் குலத்தினருக்கும், குழுவினருக்கும் வழி காட்டிய பின், மக்கள் சொற்ப அறிவையே பெற்றார்கள்.  இறுதியாக, முழு மனித சமுதாத்திற்கும் ஒரு ஒரு நபியின் வருகை தேவைப்பட்ட்து.  இறுதி நபி, கல்வியறிவற்ற,  பழங்குடியரான அரபிகள் வாழ்ந்த அரேபிய தீபகற்பத்திற்கு அனுப்பப்பட்டார்.

அப்போது அரபிகள் அவர்களுக்கு முன்னால் இருந்த ஒவ்வொரு சக்தி வாய்ந்த பொருளையும் வழிபட்டார்கள்.  அவர்கள் எந்த அளவிற்கு மிருகத்தனமாகவும், கொடூரமாகவும் இருந்தார்கள் என்றால், அவர்களுடைய பெண் குழந்தைகளை கொலை செய்வதோடு, பிறந்தவுடன்  உயிரோடும் புதைத்தார்கள். இப்படிப்பட்ட நீதியற்ற சமூகத்திற்கு, அல்லாஹ் ‘இறுதி முத்திரை’ (காத்தமுன் நபி) என்று குறிப்பிட்டுள்ள தன் இறுதி ரசூல் நபி முஹம்மது (ஸல்) அவர்களை அனுப்பினான்.

அல்லாஹ் (சுபஹானஹுத்தாலா) அத்தனை சிறந்த குணங்களையும் நம்முடைய நபி முஹம்மது  (ஸல்) அவர்கள் மீது அருளியுள்ளான். அவர் ‘காமில்’(முழுமையானவர்) மட்டுமல்ல, ‘அக






No articles in this category...